Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் ஈழத் தமிழர்களுக்கான ஓர் அன்பான வேண்டுகோள்! -அனைத்திலங்கை அரசியல் கைதிகள்

Featured Replies

சனி, 09 ஏப்ரல் 2011 02:41 .புலம்பெயர் ஐரோப்பிய செய்தி ஊடகமென்றிற்கு அனைத்திலங்கை தமிழ் அரசியல் கைதிகள் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

குறித்த தமிழ் செய்தி ஊடகமானது, இலங்கை அரசுடன் இணைந்து தமிழ் அரசியல் கைதிகளுக்கு வழங்கப்படுகின்ற உதவிகளை தடுக்கும் நோக்குடன் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் உதவிகள் செய்கின்ற புலம்பெயர் ஈழத் தமிழர்களின் தன்னார்வ உதவி நிறுவனத்திற்கு எதிராக குறித்த ஐரோப்பிய செய்தி ஊடகம் அவதூறான செய்திகளை வெளியிட்டு வந்துள்ளது.

இதனைக் கண்டித்தே அனைத்திலங்கை அரசியல் கைதிகளால் இக்கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் முழுவடிவம் இங்கே,

அனைத்திலங்கை அரசியல் கைதிகளாகிய நாங்கள் புலம்பெயர் ஈழத் தமிழர்களுக்கு விடுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள்!

இலங்கை அரசின் அடக்குமுறைக்குள் அகப்பட்டு பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு சிறையில் வாடும் ஈழத் தமிழர்களாகிய எங்களுக்கு உதவி செய்வதை தடுக்கும் நோக்குடன் செயற்படும் ஐரோப்பிய (பிரித்தானியா) தமிழ் ஊடகத்திற்கு எங்களின் கண்டனத்தைத் தெரிவிக்கின்றோம்.

பல தசாப்த காலமாக இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தமிழர்களுக்கெதிரான அடக்குமுறைக்குள் அகப்பட்டு சித்திரவதைக்குள்ளாகி பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு, ஈழத் தமிழர்களாகிய சிறையில் வாடுகின்றோம்.

எங்களுக்கும் எங்களது குடும்பங்களுக்கும் உதவி வழங்கிக் கொண்டு இருக்கின்ற புலம்பெயர் ஈழத் தமிழர்களின் தன்னார்வ உதவி நிறுவனத்திற்கு எதிராக ஐரோப்பிய தமிழ் செய்தி ஊடகம் ஒன்று (வானொலி) அண்மைய நாட்களில் அவதூறான செய்திகளை வெளியிட்டு வருகின்றது.

எங்களுக்கு உதவி புரிகின்ற குறித்த தன்னார்வ தொண்டு நிறுவனமானது இலங்கை சிறைகளிலுள்ள 600 இற்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கு அன்றாட அத்தியாவசியப் பொருட்களையும் வழங்குகின்றது.

அத்துடன் எங்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகளையும் வழங்கி வருகின்றது. இதேபோன்றதொரு உதவியை எந்தவொரு நிறுவனமும் இதுவரை காலமும் எங்களுக்கு வழங்கியதில்லை.

இதனடிப்படையில் தற்போது நியூமகசின், வெலிக்கடை பெண்கள் பரிவு, யாழ்பாணம், அனுராதபுரம், மட்டக்களப்பு, வவுனியா போன்ற சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் பொருட்கள் வழங்கப்படாமல் இருக்கின்ற ஏனைய சிறைச்சாலைகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாக்கப்பட்டுள்ள.

இந்த நேரத்தில் குறித்த செய்தி ஊடகமானது தமிழ் அரசியல் கைதிகளுக்கு வழங்கப்படுகின்ற உதவிகளை தடுக்கும் நோக்குடன் செய்தி வெளியிட்டதானது எம்மையும் எமது மக்களை மிகவும் கவலை அடையச் செய்துள்ளது.

வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவி செய்வதற்கு உள்நாட்டு வெளிநாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்வந்த போதிலும் இலங்கை அரசானது இதற்கு அனுமதி வழங்காமல் மறுத்து வருகின்றதை யாவரும் அறிவோம்.

இந்த நேரத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவான முறையிலும் ஈழத் தமிழர்களுக்கு எதிராகவும் செயற்படுகின்ற இந்த தமிழ் ஊடகத்தை புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் முற்றாக நிராகரிக்க வேண்டும்.

ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்குகின்ற செயற்பாடுகளில் இலங்கை அரசின் முகவர்களாக செயற்படுகின்ற சில புலம்பெயர் ஈழத் தமிழர்களையும் அவர்களின் அமைப்புக்களையும் இனம் கண்டு அவர்களின் போலியான பிரச்சாரங்களை புறந்தள்ள வேண்டியது ஒவ்வொரு புலம்பெயர் ஈழத் தமிழர்களினதும் கடமையாகும்.

எனவே எப்போது எமக்கு விடுலை கிடைக்குமென்று கூட தெரியாமல் எமது வாழ்க்கையே அழிந்துபோன நிலையில் எதுவித உதவியும் இன்றி பலவிதமான மன அழுத்தங்களுடன் இருக்கின்ற எமக்கு உதவி செய்கின்றவர்களை அல்லது உதவி செய்ய முன்வருபவர்களைத் தடுக்கும் விதமான செயற்பாடுகளில் அங்குள்ள செய்தி ஊடகங்கள் செயற்படுவதை ஒருபோதும் அனுமதிக்க வேண்டாம் என்பதனை மிகவும் தாழ்மையுடன் கேட்டக்கொள்கின்றோம்.

இப்படிக்கு

அனைத்திலங்கை தமிழ் அரசியல் கைதிகள்

இலங்கை

tamilcnn.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதை சொல்லுகினம், TBCயையா, IBC யையா BBCயையா?

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சவமோ... தெரியாது.

நீங்களே... உங்களுக்குள்ளை அடிபடி பட்டு செத்து.... ...

ஒரு, முடிவுக்கு வாங்கோ......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன சவமோ... தெரியாது.

நீங்களே... உங்களுக்குள்ளை அடிபடி பட்டு செத்து.... ...

ஒரு, முடிவுக்கு வாங்கோ......

செத்தா பிறகு எங்க முடிவுக்கு வாறது எல்லாருக்கும் ஒரே முடிவுதான் ,,சங்குதான்.

அவயல்தான் அங்க இருக்கினம் பயத்தில சொல்ல மாட்டினம் தமிழ் சி என் என் காறர், புலத்தில இருக்கிற சிங்கிள் சிங்கம்தானே அவர்களாவது தெளிவா சொல்லி இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

செத்தா பிறகு எங்க முடிவுக்கு வாறது எல்லாருக்கும் ஒரே முடிவுதான் ,,சங்குதான்.

அவயல்தான் அங்க இருக்கினம் பயத்தில சொல்ல மாட்டினம் தமிழ் சி என் என் காறர், புலத்தில இருக்கிற சிங்கிள் சிங்கம்தானே அவர்களாவது தெளிவா சொல்லி இருக்கலாம்.

சித்தப்பு......

எல்லாருக்கும்...... எல்லா... நியுஸும் இழுக்காது,

யாழ் கள , செய்திகளைப் பார்ர்த்துத்தான்.. மிச்ச முடிவு,

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கும் எங்களது குடும்பங்களுக்கும் உதவி வழங்கிக் கொண்டு இருக்கின்ற புலம்பெயர் ஈழத் தமிழர்களின் தன்னார்வ உதவி நிறுவனத்திற்கு எதிராக ஐரோப்பிய தமிழ் செய்தி ஊடகம் ஒன்று (வானொலி) அண்மைய நாட்களில் அவதூறான செய்திகளை வெளியிட்டு வருகின்றது.

எந்த ஊடகம்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.