Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிள்ளையானின் கட்சியின் பெயரில் யாழ்;ப்பாணத்தில் கப்பம் பெறுவதற்காக சென்றிருந்த குழு யாழில்

Featured Replies

பிள்ளையானின் கட்சியின் பெயரில் யாழ்ப்பாணத்தில் கப்பம் பெறுவதற்காக சென்றிருந்த குழு ஒன்று பொதுமக்கள்வழங்கிய தகவல்களை அடுத்து கைது செய்யப்பட்டு உள்ளது. கைது செய்யப்பட்ட மூவரும் சிங்களவர்கள் ஆவர். துஸாரா என்வரை தலைவராகக் கொண்ட குழுவே கைது செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டத்தரிப்பலுள்ள வர்த்தகர் ஒருவர் வெளிநாட்டிலுள்ள சகோதரர் ஒருவருக்கு அகதி அந்தஸ்து கோருவதற்காக் பிள்ளையான் கட்சியின் நிர்வாகத்தின் கீழ் அவர் காணாமல் போனதாக தெரிவித்து கடிதம் ஒன்றினை பெற்றுக் கொள்வதற்காக திருகோணமலையிலுள்ள இவர்களைத் தொடர்பு கொண்டுள்ளர்.

அவர்கள் பிள்ளையானின் கட்சியின் கடித் தலைப்பில் குறித்த பண்டத்தரிப்பலுள்ள வர்த்தகரின் சகோதரர் தமது அமைப்பினால் அச்சுறுத்தலுக்கு உள்ளனதாக சிபார்சுக் கடிதம் ஒன்றினை வழங்கியுள்ளனர். கடித்திற்காக 30 ஆயிரம் ரூபா பணத்தினையும் செலுத்தியிருக்கின்றனர்.

இந்தக் கடிதம் சகிதம் அண்மையில் யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த வேளையில் ராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு இந்தக் குழு தகவல்களை வழங்கி விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள் தம்மிடம் தொடர்பு கொண்ட பின்னர் வவுனியா ஊடாக யாழ்ப்பாணம் செல்வதாக தகவல்களை வழங்கியுள்ளனர். இதனால் இவர்கள் வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டு மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். எனினும் தம்மிடம் அவ்வாறான கடிதம் எதுவும் இல்லை எனவும் தாங்கள் அச்சுறுத்தப்படுவது தொடர்பில் பண்டத்தரிப்பு காவற்துறையினருடன் தொடர்பு கொள்ளுமாறும் பண்டத்தரிப்பு காவற்துறையினர் தம்மைப் பற்றிய சிபார்சுகளை செய்வார்கள் எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர். எனினும் அவர்கள் கடிதம் உள்ளிட்ட எந்த ஆதாரங்களையும் கைப்பற்ற முடியாத நிலையில் காவற்துறையினரும் புலனாய்வுத் துறையினரும் மேற்கொண்டு பயணிக்க அனுமதித்துள்ளனர்.

பின்னர் ஓமந்தை சோதனைச் சாவடிக்கு வருவதற்குள் மீண்டும் அந்தக் குழு தொடர்பை ஏற்படுத்தி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. 5 லட்சம் கப்பம் வழங்கா விட்டால் ஓமந்தையை தாண்டிச் செல்ல முடியாதென இவர்கள் அச்றுத்தியுள்ளனர். இந்த நிலையில் நீண்ட கெடுபிடியின் பின்னர் இவர்கள் படையினருக்கு தம்மை அடையாளப்படுத்தாது யாழ்ப்பாணம் சென்றடைந்து விட்டனர். இந்நிலையில் தமது தொலைபேசி இணைப்பையும் துண்டித்து விட்டனர்.

இந்த நிலையில் இவர்களைச் தேடி கயர்ஸ் ரக வாகனம் ஒன்றில் மூவர் கொண்ட குழு ஒன்று சென்றிருக்கின்றது. இந்த நிலையிலேயே இவர்கள் அவர்கள் தொடர்பில் படைத்தரப்பிற்கு தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் மூவரையும் படைத்தரப்பு கைது செய்துள்ளது.

இன்றைய தினம் யாழ் நகரிலுள்ள படையினரது காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவிலாளர் மகாநாட்டில் இந்தத் தகவல்களை ராணுவ அதிகாரிகள் வெளியிட்டனர். எனினும் கைது செய்யப்பட்ட மூவரும் காவற்துறையினரிடம் கையளிக்கப்பட்டதாக தகவல்கள் இல்லை. ஆயினும் குடாநாட்டிலும் வவுனியாவிலும் ராணுவப் புலனாய்வுப்பிரிவு என்ற பெயரில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடனும் கப்பம் கோரும் நிகழ்வுகளின் பின்னணியிலும் இவர்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

www.globaltamilnews.net

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் இப்போது இருக்கும், நிலையில்.....

பிள்ளையானையோ, கருணாவையோ, டக்ளசையோ, ஆனந்தசங்கரியையோ..... அல்லது இன்னும் பெயர் விடுபட்ட ஒட்டுக்குழுக் கூட்டங்களோ சிங்களத்துக்கு தேவை இல்லை. இவர்களின் பெயரில் சிங்களவனே.... நேரடியாகச் செய்யலாம். இதனை திருப்பிக் கேட்டால் பிள்ளையான் நாளை உயிருடன் இருக்க மாட்டான் என்பது பிள்ளையானுக்கே வடிவாய்த் தெரியும். என்ன செய்யுறது.... ஒரு நல்ல விடுதலை இயக்கத்தைப் பிழந்த, குற்றத்துக்கும், காட்டிக் குடுத்த குற்றத்துக்குமான பழியை பிள்ளையான் சுமக்க வேண்டியது தான்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.