Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"இந்தியாவின் நிலைப்பாடு என்ன?"

Featured Replies

"இந்தியாவின் நிலைப்பாடு என்ன?"

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பத்திரிகைகளில் கசிந்துள்ள ஐ நா நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து இந்தியா தனது நிலைமையை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு கோரியுள்ளது.

இலங்கையில் இடம் பெற்ற இறுதிகட்டப் போரின் போது இடம் பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தனக்கு ஆலோசனை வழங்க ஐ நா வின் தலைமைச் செயலர் பான் கீ மூன் அவர்களால் அமைக்கப்பட்ட மூவர் குழுவினரின் அறிக்கை இன்னமும் அதிகாரபூர்வமாக வெளியாக நிலையில், அதன் சில பகுதிகள் இலங்கை ஊடகங்களில் கசிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் பின்புலத்தில் இந்தியா தனது நிலைப்பாடு என்ன என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஹ்யூமன் ரைட்ஸ் வாட்சின் தெற்காசியப் பிராந்திய இயக்குநர் மீனாக்ஷி கங்கூலி கோரியுள்ளார்.

“இந்தியா தற்போது ஐ நா வின் பாதுகாப்புச் சபையில் உறுப்பினராக இருக்கிறது. எனவே இந்த அறிக்கை தொடர்பாக எதிர்காலத்தில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் எடுக்கப்படும் முடிவில் இந்தியாவுக்கும் ஒரு பங்கு இருக்கும் என்று நாங்கள் எதிர்பாக்கிறோம்” என்று அவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடாக விழையும் இந்தியா, தனது வெளியுறவுக் கொள்கைகளை அதற்கு ஏற்ற வகையில் வகுத்துக் கொள்ள வேண்டும் எனவும் மீனாக்ஷி கங்கூலி கூறுகிறார்.

இந்தியா தலையிட வேண்டும்

இலங்கையில் போரினால் பாதிக்கபப்ட்டுள்ள மக்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் இந்தியா அது தொடர்பில் தலையிட வேண்டும் எனவும் அவர் மேலும் கூறுகிறார்.

இலங்கை அரசால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிடம், போர் குற்றங்கள் இடம் பெற்றனவா என்று கண்டறிந்து தவறிழைத்தவர்களை சட்டத்தின் முன் கொண்டுவருவதற்கான போதிய வழிமுறைகள் இல்லை என்றும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.

இலங்கையில் இடம் பெற்ற இறுதிகட்ட போரின் போது அரச தரப்பினர் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்புமே பெரிய அளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என்பதற்கான சான்றுகள் தற்போது வெளியாகத் தொடங்கியுள்ளன என்றும் மீனாக்ஷி கங்கூலி தெரிவிக்கிறார்.

மோதலற்றப் பகுதிகள் என்று அரசால் அறிவிக்கப்பட்ட இடங்களில் அரச தரப்பால் ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், போர் பகுதிகளிலிருந்து வெளியேற முயன்றவர்களை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்றார்கள் என்பதும் இப்போது தெரிய வந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

தமக்கு முன்னர் வைக்கப்படும் ஆவணங்கள் நம்பகத்தன்மையற்றவை என்று அரசு கூறுமாயின், எது உண்மை என்பதை ஒரு வெளிப்படையான விசாரணை மூலம் தெரிவிக்க வேண்டியது இலங்கை அரசின் பொறுப்பாகும் எனவும் மீனாக்ஷி கங்கூலி வலியுறுத்துகிறார்.

சீனா, ஜப்பான் போன்று இலங்கையுடன் நட்புடன் இருக்கும் நாடுகளும் இலங்கை அரசு ஒரு நியாயமான விசாரணையை நடத்த அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதே தமது அமைப்பின் நிலைப்பாடு எனவும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2011/04/110420_hrw_meenakshiganguly.shtml

  • தொடங்கியவர்

1. ஹ்யூமன் ரைட்ஸ் வாட்சின் தெற்காசியப் பிராந்திய இயக்குநர் மீனாக்ஷி கங்கூலி : http://www.hrw.org/en/bios/meenakshi-ganguly

2. இந்த அறிக்கையின் ஆங்கில மூலம் ( முகநூலில், டிவிட்டரில் இணைக்கலாம், மூலத்தை அனுப்பலாம்) :

India needs to make public its position on Lanka's war crimes: Rights group

http://www.indianexpress.com/news/india-needs-to-make-public-its-position-on-lankas-war-crimes-rights-group/778642/

3. ஒரு கடிதம் அவருக்கு எழுதலாம்

to: Gangulym@hrw.org

Subject: India needs to make public its position on Lanka's war crimes: Rights group

Dear Ms. Meenakshi Ganguly,

South Asia director of Human Rights Watch.

I would like to thank for the above mentioned interview regarding India and the war crimes in Sri Lanka. As a regional powerhouse, India should also lead in Human Rights and cannot remain silent.

HRW continues to do its part in protecting rights in this region where it is a long way ahead before we could rest.

Please continue your efforts.

Truly,

Xxx Yyyyyyy

  • தொடங்கியவர்

போர்க்குற்றம் பதில் சொல்ல எரிக் சோல்கெய்ம் எங்கே ?

சிறீலங்கா அரசு . விடுதலைப் புலிகளிடையே நடைபெற்ற சமாதானப் பேச்சுக்களில் மத்தியஸ்த்தராக பணியாற்றியவர் எரிக் சோல்கெய்ம் ஆகும். இப்போது வன்னியில் நடைபெற்ற போரில் பொதுமக்களுக்கு நிகழ்த்தப்பட்ட அவலம் ஐ.நாவினாலேயே ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கை குறித்த தார்மீக கருத்தை வெளியிட வேண்டிய பாரிய பொறுப்பு எரிக் சோல்கெய்ம் அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் அவருடைய கருத்து இதுவரை வெளிவரவில்லை.

சர்வதேச ரீதியாக இதை பலரும் எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அதுபோல இந்தியா தனது தார்மீகக் கருத்தை இதுவரை வெளியிடவில்லை. நிருபாமாராவ் யாதொரு கருத்தையும் கூறாமலே காலம் கடத்தி வருகிறார். நாராயணன், சிவசங்கர் மேனன், விஜய் நம்பியார், இந்து ராம், துக்ளக் சோ உட்பட பலர் உறைநிலை மௌனம் காத்து வருகிறார்கள்.

ஐ.நாவின் கருத்தையும், சர்வதேச சட்டங்களையும் மதித்து கருத்துரைக்க வேண்டிய தார்மீக பொறுப்பு இவர்களுக்கு இருப்பதை மக்கள் வலுவாக உணர்கிறார்கள். மேலும் தமிழக முதல்வர் மு.கருணாநிதி, செல்வி. ஜெயலலிதா போன்றவர்களும் வாய் திறக்காதிருப்பது கவனிக்கத்தக்கது.

http://www.alaikal.com/news/?p=66045

  • தொடங்கியவர்

இலங்கை போர்க்குற்றம் இந்தியா அமைதி காப்பது ஏன்? டி.ராஜா கேள்வி

இலங்கையில் தமிழர்களை கொன்று அந்நாட்டு அரசு போர்க்குற்றம் புரிந்துள்ளது என்று ஐ.நா. குழு அறிக்கை குறித்து இந்தியா அமைதி காப்பது ஏன் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்று ஐ.நா. சபை பொதுச்செயலாளர் பான் கி மூன் அமைத்த நிபுணர் குழு பரிந்துரை அளித்துள்ளது. இந்த அறிக்கை அனைத்து பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியாகி உள்ளது. இவ்வாறு வெளியாகியும் அது பற்றி இந்தியா இன்னும் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் கடைப்பிடிக்கிறது. இறுதிக் கட்டப் போரில் இலங்கையுடன் இந்தியா இணைந்து செயல்பட்டதே இதற்குக் காரணமாகும்.

இலங்கைக்கு ஆயுத பலம், பண பலத்தை அளித்தது இந்தியா. அதன் மூலம் இலங்கை அரசு அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்து போரில் வெற்றி பெற்றது. இதனால், இந்தியா இப்போது சர்வதேச அரங்கில் குற்றவாளி கூண்டில் நிற்கிறது. ஐ.நா. சபைக்குழு அறிக்கை மீது இந்தியா இதுவரை கருத்துத் தெரிவிக்காதது ஏன்?

விடுதலைப்புலிகளுக்கு எதிரானப் போரில் இலங்கைக்கு உதவிய இந்தியா, இப்போது தனது நிலையை வெளிப்படுத்தாதது ஏன்? இலங்கையில் 30 ஆண்டுகளாக நடந்த இந்த உள்நாட்டுப் போரில் இறுதிக் கட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இந்தியாவின் ஆதரவில்லாமல் வெற்றி பெற்றிருக்க முடியாது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே ஒப்புக்கொண்டிருந்தார்.

இலங்கை போர்க்குற்றம் புரிந்துள்ளது என்ற அறிக்கைக்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனது நிலையைத் தெரிவிக்க வேண்டும். டுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இந்தியா ஆதரவு அளிக்கிறது என்று வெளியான செய்தியை இந்தியா எந்த சமயத்திலும் மறுத்தது இல்லை. தமிழர்களுக்கு எதிரான இந்த போரில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. இலங்கையில் இவ்வளவு அதிக அளவில் பொதுமக்கள் இறப்பதற்கு இலங்கை அரசும், விடுதலைப்புலிகளுமே காரணம் என்றும், அங்கு மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன எனவும் ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது. இதில் இந்தியாவின் நிலை என்ன என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டது படுகொலை சம்பவம் என பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால் இலங்கையின் இந்தச் செயலை இந்தியா ஒருபோதும் கண்டிக்கவில்லை. காரணம், இந்த கொடுமையில் இந்தியாவும் உடந்தை என்பதுதான்.

அரசியல் சட்ட மசோதா இலங்கையில் தமிழர்களை ஒடுக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகித்தது என்று விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது. இலங்கைப் பிரச்சனையில் சர்வதேச நாடுகளின் கருத்தை இந்தியா எந்த சமயத்திலும் ஏற்றுக்கொண்டதில்லை. மாறாக இலங்கைத் தமிழர்களுக்குத் துரோகம் செய்து வந்துள்ளது.

இலங்கை பிரச்சனையில் தீர்வு காண இந்தியா எந்த சமயத்திலும் பொறுப்புடன் முயற்சி செய்யவில்லை. இலங்கை தமிழர் பிரச்சனை தீர அரசியல் சட்ட மசோதா தாக்கல் செய்ய இலங்கையிடம் தனது செல்வாக்கை இந்தியா பயன்படுத்தவில்லை. இலங்கை தமிழர் மறுவாழ்வுக்காக இந்தியா அளித்துள்ள உதவியை முறையாக செயல்படுத்த இலங்கையை இந்தியா உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

http://www.alaikal.com/news/?p=66129

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.