Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய மீனவர் சித்திரவதை செய்யப்பட்டே கொலையுண்டார் என்பதற்கு சாத்தியக்கூறுகள் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Friday, 22 April 2011 02:14

இந்திய மீனவர் சித்திரவதை செய்யப்பட்டே கொலையுண்டார் என்பதற்கு சாத்தியக்கூறுகள் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிப்பு

நெடுந்தீவுக்கும் நயினாதீவுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் கடற்படையினரால் கடந்த 6ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட இந்தய மீனவர் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டமைக்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன என்று அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த சேவியர் விக்ரர்ஸ் (வயது41) என்ற இந்திய மீனவரின் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் மேற்கண்டவாறு விவரிக்கப்பட்டுள்ளது.நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை வருமாறு:

தமிழகத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்த இறந்தவரின் சகோதரரான சேவியர்லூமன் சடலத்தை அடையாளம் காட்டியிருந்தார்.இறந்தவரின் சேட், உள்ளாடை, இடுப்பு நாடா ஆகியவற்றையும் அவரது வலது பெருவிரலின் மேலாகக் காணப்பட்ட குருசு அடையாளம் போன்றவற்றைக்கொண்டு சகோதரர் சடலத்தை இனம் காட்டினார்.தண்ணீரில் மூழ்கி இறந்தமைக்கான அறிகுறிகள் உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரிந்தபோதும் உடலின் மேற்பரப்பில் காணப்பட்ட காயங்கள் (முதுகில் காணப்பட்ட அடி காயங்கள்) மற்றும் இடது காலின் பெரு விரலில் செலுத்தப்பட்ட ஆணி வகையான இரும்பு (பெரும்பாலும் குண்டூசி) சேட்டின் பின்புறம் காணப் பட்ட கிழியல் அதில் காணப்பட்ட கறுப்பு நிறமான கை அடையாளங்கள் என்பன இவரை யாரேனும் அடித்த பின்னர் சுயநினைவு அற்ற நிலையில் கடலில் தூக்கி வீசியிருக்கலாம் என்று தோன்றுவதாலேயே உடற்பாகங்கள் சில பகுப்பாய்வுக்கு கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன. அந்தப் பெறுபேறு உடற்கூற்றுப் பரிசோதனை முடிவுக்கு உதவியாக இருக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.நீரில் மூழ்கி மூச்சுத் திணறலால் மரணமாகியிருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சடலத்தை இனங்காட்டுவதற்காக வந்த அவரது சகோதரர் மரண விசாரணையின் போது;

கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி மு.ப. 11 மணியளவில் 300 400 படகுகள் தொழிலுக்குப் புறப்பட்டுச் சென்றன. இவற்றுடன் சேர்ந்து எனது அண்ணனின் படகும் சென்றிருந்தது.இரவு 10.45 மணியளவில் எனது அண்ணனின் படகு தனியாக தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. அப்போது இலங்கைக் கடற்படையின் பெரிய படகு அண்ணனின் படகுக்கு அருகில் மிக நீண்ட நேரமாக இருந்ததை அவதானித்தேன் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

sankathi

  • கருத்துக்கள உறவுகள்

இதனைக்கூட தட்டிக் கேட்க முடியாமல், தமிழர்களை சோம்பேறி ஆக்கி வைத்திருக்கும்.... அரசியல்வாதிகளின் வேட்டியை உரிந்து, உள்ளுக்கு என்ன போட்டிருக்கிறாங்கள் எண்டு பாக்க வேண்டும்.

இருந்தால் தானே பார்க்கிறதுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

இருந்தால் தானே பார்க்கிறதுக்கு

:):D:wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.