Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உடைபடும் கனவுகள்

Featured Replies

M_Id_81200_MahindaRajapaksa_Hoarding.jpg

பெயர், புகழ் என்பவற்றை அடைவதற்கு எல்லோருக்குமே ஆசை இருக்கத்தான் செய்கின்றது. எனினும் அந்த ஆசை எல்லை மீறுகின்ற போது சில சந்தர்ப்பங்களில் எல்லாமே கெட்டுக் குட்டிச்சுவராகப் போகக் கூடிய நிலையும் ஏற்படுவதுண்டு. இப்படி எல்லோரிடமும் நல்லபெயர் எடுக்க வேண்டும் என்பது ஒருவனுடைய நீண்டகாலக் கனவு.

ஆனாலும் அதற்கான வாய்ப்புகள் அவனுக்கு எட்டாக் கனியாகவே இருந்து வந்தது. என்ன செய்யலாம்? என்ற யோசனையோடு பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்தான். அப்போது அவனுக்கு பக்கத்து சீற்றில் ஒரு குழந்தை, அதன் தாய் ஊட்டிவிட்ட உணவை மறுதலித்து, எனக்கு வேண்டாம் என முரண்டு பிடித்துக் கொண்டிருந்தது.உடனேயே ஒரு சகபயணி அந்தத் தாய்க்கு உதவமுன்வந்தார்."பிள்ளைக்கு சாப்பாடு வேண்டாமோ?'' அன்பு கலந்த அவரின் வார்த்தையைக் கேட்ட மாத்திரத்திலேயே குழந்தை தன் தலையைப் பலமாக அசைத்து, "எனக்கு ஒண்டும் வேண்டாம். போ!!!'' என தன் எதிர்ப்பைப் பதிவு செய்தது. ஆனாலும் பயணி விடுவதாயில்லை.

"ஓ! அப்பிடியே சங்கதி. அப்ப உங்கட சாப்பாட்டை நான் சாப்பிடப் போறன்'' என்று பயமுறுத்தும் குரலில் சொல்லியவாறு வாயைச் சற்று அகலத் திறந்தவாறு, உணவுக் கிண்ணத்தினருகே தன் தலையைக் கொண்டு சென்றார். தன் உணவு உண்மையிலேயே பறிபோய்விடப்போகிறதோ என்ற பயத்தில் குழந்தை அந்த உணவுக்கிண் ணத்தை எடுத்து தன்மடியில் வைத்துக் கொண்டு, "விறுவிறென" தன் பாட்டிலேயே உணவை உட்கொள்ளத் தொடங்கிவிட்டது. குழந்தையின் தாய் அந்தப் பயணியை நன்றியோடு பார்த்தாள்.அருகிலிருந்தவர்கள் அந்தப் பயணியின் சாதுரியத்தை பாராட்டினர். இது எங்களது நல்ல பெயர் வாங்க விரும்புபவனின் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது. "இப்படிச் செய்தால் நல்ல பெயர் வாங்கலாம்'' என்ற எண்ணம் அவனுள் ஏற்பட்டது. இன்னொரு நாளும் அவன் பஸ்ஸில் பயணிக்கவேண்டியேற்பட்டது. இம்முறையும் இவனுக்குப் பக்கத்து "சீற்றில் ஒரு கைக்குழந்தையும் தாயும் அமர்ந்திருந்தனர்.கொஞ்ச நேரத்தில் குழந்தை வீரிட்டு அழத்தொடங்கியது. அந்த அழுகையை நிறுத்துவதற்கு தாய்படாதபாடு பட்டாள். ம்கூம்! ஒன்றுக்கும் அந்தக் குழந்தை மசியவில்லை. வேறு வழியில்லாததால் தன் சேலைத் தலைப்பால் மறைத்தபடி தாய்ப்பாலை அந்தக் குழந்தைக்கு ஊட்டத் தொடங்கினாள் தாய். ஆனால் அதனையும் நிராகரித்தபடி அந்தக் குழந்தை அழத் தொடங்கியது.

ஏற்கனவே முன்னர் ஒரு பஸ் பயணத்தில் உணவை வெறுத்த குழந்தையின் மனதை மாற்றிய பயணியின் செயல் நல்லபெயர் விரும்பிக்கு நினைவில் வந்துவிட்டது. "இண்டைக்கு அப்படி நான் செய்து நல்லபெயர் எடுக்க வேணும்'' என்று எண்ணியவாறு, குழந்தையின் அருகே தலையை நீட்டினான்."உங்களுக்கு அம்மான்ர பால் வேண்டாமோ?'' செல்லமாகக் குழந்தையைக் கேட்டான்.ஆறுமாதக் குழந்தைக்கு இது புரியுமா என்ன? அது "திருதிருவெனெ முழித்து விட்டு மீண்டும் அழுகையைத் தொடர்ந்தது. எனவே எமது ஆள் அடுத்த கட்டத்துக்குத் தாவினான்."இப்ப நீங்கள் அம்மான்ர பாலைக் குடிக்காட்டி நான் குடிச்சிடுவன்!'' என்று குழந்தையைப் பார்த்துக் கூறியவாறு தாயை நோக்கி நகர்வது போல பாவனை செய்தான். அவ்வளவுதான்! பஸ்ஸில் இருந்தவர்கள் எல்லாம் ஒன்றுக்கு நூறு முறை அவனைப் "பதம் பார்த்த பின்பே, நொந்து நூலான நிலையில் அவனை வெளியே தூக்கிப்போட்டனர்.பெயரும், புகழும் வாங்க நினைத்து அவமானப்பட்ட இந்த நபரின் நிலையிலேயே இப்போது எங்கள் ஜனாதிபதியும் இருக்கிறார். கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்பார்கள். அதேபோல அடிக்கிற தெய்வமும் கூரையைக் கிழித்துக் கொண்டுதான் அடிக்கும் போலிருக்கிறது. இல்லாவிட்டால் எல்லாப்பக்கமும் தலையிடியைத் தருகின்ற விடயங்கள் ஒரேயடியாக ஜனாதிபதிக்கு வந்துசேர்ந்திருக்க முடியாது.

வெற்றிச் செய்தி ஒன்று தேவை

எகிறிவரும் விலைவாசிகளை மக்களிடம் இருந்து தந்திரமாக மறைப்பதற்கு மஹிந்தவுக்கு ஏதாவது ஒரு வெற்றிச் செய்தி அவசரமாகத் தேவைப்பட்டது. முன்னராவது யுத்தவெற்றி முழக்கங்களிடையே சத்தமின்றி பொருள்களின் விலைகளைக் கண்டபடி ஏற்றி விட்டு நிம்மதியாக இருக்க அதிகாரத்திலுள்ளவர்களால் முடிந்தது. ஆனால் இப்போது தெரியாத்தனமாக யுத்தத்தை முற்றாகப் பிடுங்கியெறிந்துவிட்டதால் அந்த வசதியும் இல்லாமல் போயிருந்தது. எனவே உலகக்கிண்ண கிரிக்கெட் வெற்றியை அரசு ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தது. முதலில் விளையாட்டாகவே ஆரம்பித்த இந்த எதிர்பார்ப்பு இலங்கை அணி வெற்றிக்கோட்டை அண்மித்துக் கொண்ட சமயத்தில் "அரையிறுதியில் நியூசிலாந்தை இலங்கை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்த கையோடு'' தன்சுயரூபத்தை வெளிப்படுத்திக் கொண்டது. விளையாட்டுக்கு அரசியல் சாயம் அடிக்கப்பட்டது. யுத்த வெற்றி போல் அது சித்திரிக்கப்பட்டது. அப்போதுதான் அந்த வெற்றிக்குள் மக்களை முழுமையாக முழ்கடித்து தாம் நினைத்தபடி சுமைகளை அவர்களின் முதுகில் ஏற்றமுடியும் என்பது அரசின் கணிப்பு. ஆனால் இறுதிப் போட்டியில் மஹிந்த சிந்தனைவாதிகளுக்கு விழுந்தது இரட்டை அடி. ஒன்று... இலங்கையணியின் தோல்வி.

இரண்டு... ஜனாதிபதிக்கு இந்தியா உரிய மரியாதையை வழங்காமை. (எனினும் ஏற்கனவே விலையேற்றத் தீர்மானித்திருந்த பொருள்களில் பெற்றோலின் விலையை மாத்திரம் அதிகரித்து ஒருவாறு சமாளித்துக் கொண்டது அரசு) தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு திரும்பிய ஜனாதிபதிக்கு அடுத்த அதிர்ச்சி வைத்தியம் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை வடிவில் காத்திருந்தது. மிகமோசமான மனித உரிமைமீறல்களில் இலங்கையரசு இறுதிப் போரில் ஈடுபட்டதால் அது குறித்த சர்வதேசப் பொறிமுறை ஒன்று அவசியம் என்று அந்த அறிக்கை மஹிந்தரின் மனதில் வாளைச் செலுத்தியது.இதுதான் சந்தர்ப்பம் என்று இலங்கை அரசுக்கு எதிரான சர்வதேச விசாரணை கள் நடத்தப் படவேண்டுமென எல்லாத் திசைகளில் இருந்தும் குரல்கள் எழத் தொடங்கின. நாட்டின் தலைவருக்கு இரத்தக் கொதிப்பு உச்சத்துக்குப் போனது.

எனவே பயங்கரமான கொதிப்பில் இருக்கும் ஜனாதிபதியைக் குளிர்விக்கும் முயற்சிகளில் அவரது அடிப்பொடி அதிகாரிகள் இறங்கினர்.அதில் முக்கியமானது அமெரிக்காவின் ரைம் சஞ்சிகையின் உலகின் சக்தி மிக்க மனிதர் யார்? என்ற கருத்துக் கணிப்பில் ஜனாதிபதி மஹிந்தவை வெற்றிபெறச் செய்து அதன் மூலம் சர்வதேச ரீதியில் மஹிந்தரின் புகழை நிலை நிறுத்தலாம் என அவர்கள் திட்டம் போட்டனர். ஏற் கனவே மகாவம்சத்தின் புதிய பதிப்பில் இறுதி மூன்று அத்தியாயங்களிலும் கதாநாயகராக மஹிந்தரை முன்னிலைப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் சர்வதேச ரீதியில் பெயர் வாங்கித் தரவல்ல இந்தத் திட்டத்துக்கும் ஜனாதிபதி மறுபேச்சின்றித் தலையசைத்தார்.

சர்வதேசக் கீர்த்தி பெறும் முயற்சி

அவரது ஆணைக்காகவே காத்திருந்த அதிகாரிகள் அடுத்த நொடியே காரியத்தில் இறங்கினர். கோடிக்கணக்கான பணம் உலகெங்கும் வாரியிறைக் கப்பட்டது. ஏற்கனவே கள்ளவாக்குப் போடுவதில் அதிசூரர்களான நம்மவர்கள் ரைம் சஞ்சிகைக் கருத்துக் கணிப்பிலும் தம் கைவரிசையைக் காட்டியதாகக் கூறப்படுகின்றது. இதன் பயன் ஜனாதிபதியின் தொலைந்து போன புன்னகையை மீட்டெடுக்க உதவியது. அமெரிக்க ஜானதிபதி ஒபாமாவையே பின்னுக்குத் தள்ளி விட்டு, அதிவேகமாக கருத்துக் கணிப்பில் மஹிந்த முன்னேறிக் கொண்டிருந்தார்."ஜனாதிபதி 6ஆம் இடத்தை நெருங்கி விட்டார்.'' "ஜனாதிபதி உலகெங்கும் உள்ள "ரைம்" வாசகர்களின் ஆதரவுடன் 4 ஆம் இடத்தை அடைந்து விட்டார். மிக விரைவில் அவர் முதலிடத்தைப் பிடிக்கப்போவது உறுதி''

கிரிக்கெட் போட்டியைப் போல் நேரடி வர்ணனைகள்களைகட்டின. 4ஆம் இடத்தை அடைந்த பின்னர் ஜனாதிபதிக்கும் நம்பிக்கை பிறந்தது."நீங்கள் போர்க் குற்றம் செய்ததாகக் கூறுகிறீர்கள். ஆனால் உலக மக்கள் நான் செய்த செயல் சரியானது என அங்கீகரித்து என்னைக் கருத்துக்கணிப்பில் முதலிடம் பெறவைத்து விட்டார்களே!'' எனத் திமிரோடு ஐ.நாவுக்கு முன்னால் மார்தட்டிக் கொள்ளமுடியுமெனவும் மஹிந்த கனவுகாணத் தொடங்கினார். ஆனால் விதி மீண்டும் மஹிந்தரோடு விளையாடியது.அமெரிக்கர்களையே அதிகளவில் வாசகர்களாகக் கொண்ட ஒரு சஞ்சிகையில் இலங்கை அதிபர் எப்படி முன்னணி பெற முடியும் என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழத்தொடங்கியது. அதன் பின்னர்தான் கோடிக்கணக்கான பணத்தை வாரியிறைத்ததன் விளைவே மஹிந்தரின் முன்னிலைப் பெறுபேற்றுக்குக் காரணம் என்ற தகவல் வெளியானது. அத்துடன் ஐ.நாவும் போர்க் குற்றவாளி எனத் துணிந்து மஹிந்தவை நோக்கிச் சுட்டுவிரலை நீட்டியிருந்த தால் "ரைம்" சஞ்சிகை நிர்வாகம் தமது கருத்துக் கணிப்பை மறுபரிசீலனை செய்யவேண்டியேற்பட்டது. விளைவு? கனவு சட்டென உடைந்தது.கருத்துக் கணிப்பின் இறுதிநாளில் மஹிந்தர் அந்தக் கருத்துக் கணிப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. சிறுவர்கள் விளையாடும் போது "அளாப்புகின்றவர்களை அந்த விளையாட்டில் இருந்து தள்ளி வைப்பது போல, தவறான முறையில் கருத்துக் கணிப்பை வெல்ல முனைந்த தாலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவின் பெயர் நீக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச ரீதியில் ஒப்பற்ற புகழ்பெற விரும்பிய ஜனாதிபதி கடைசியாகச் சர்வதேச ரீதியில் எவருமே சந்தித்தேயிராத அவமானத்தையே சம்பாதிக்க முடிந்துள்ளது. தன்னுடைய நலனுக்காக, புகழுக்காக எந்தக் குறுக்குவழியிலும் செல்லத் தயங்காத தலைவர் என்ற புகழ்தான் அவரை வந்துசேர்ந்துள்ளது. அத்தோடு கருத்துக் கணிப்பில் வெல்வதற்காகவே எதையும் செய்யத்துணிந்த இலங்கை ஜனாதிபதி போரில் வெல்வதற்காக என்னென்ன திருகுதாளங்களை எல்லாம் செய்திருப்பார் என்றெல்லாம் பலரும் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.இப்போது அதிகாரிகள் சிலரின் தவறான வழிகாட்டலே இத்தகைய அவமானத்தை ஏற்படுத்தி விட்டதாக ஜனாதிபதி குமுறியிருக்கிறார். தொடர்ந்து அடிமேல் அடிவாங்கி, எல்லாக் கனவுகளும் உடைபடுவதால் உண்மையிலேயே ஜனாதிபதிக்கு இது போதாத காலம்தான் போலும். இப்போதெல்லாம் கருத்துக் கணிப்பு என்ற சொல்லைக் கேட்டாலே ஜனாதிபதி "பிச்சை வேண்டாம். நாயைப் பிடி!" என்று சொல்லிக் கொண்டு ஓடு கிறாராம். யார் கண்டது, "ரைம்" கருத்துக் கணிப்பு போனாலென்ன நாங்கள் "சண்டே ரைம்ஸில்" இலங்கையில் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தி ஜனாதிபதியை வெல்ல வைப்போம் என மஹிந்தவாதிகள் காரியத்தில் இறங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=141

இது சூப்பர்ஸ் ரார் ரஜனி காந்தின் பஞ்சு டையிலாக் :

கடவுள் கெட்டவங்களுக்கு கூட குடுப்பார் ஆனா கொஞ்ச நாள் போக்க கை விட்டு விடுவார்..ஆனா நல்லவர்களை என்று மே கை விட மாட்டார்

Edited by புயல்

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் கிரக நிலையின்படி, இந்த வருடம் "ரைம்" சரியில்லை என்று சிங்கள ஜோதிடர் கூறியிருந்தார்.

அதன் படி பார்க்கும் போது.... இங்கிலாந்த்துக்கு வந்து, ஒக்ஸ்போட்டில் உறையாற்றாமல் அவமானப் பட்டு திரும்பி சென்றது, உலக கிரிக்கேட் போட்டியை பார்க்கப் போய் இந்தியாவில் அவமானப் பட்டது, "ரைம்" சஞ்சிகை நடத்திய போட்டியில் 4வதாக வந்தும், அவரின் பெயரை சேர்க்காமல் விட்டது போன்றவை உண்மையாகி விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்துவிட்ட பதிவு!!! இணைப்புக்கு நன்றிகள் நெல்லை!!!

  • தொடங்கியவர்

... மகிந்தவின் நல்லகாலம் பிறக்கத்தொடங்கியது, லண்டனில் ..... அதனை பல்நாட்டு ஊடகங்கள் "President Mahinda Rajapakse meets his Waterloo in London" என வர்ணித்திருந்தன ... அதில் தொடங்கிய மகிந்தவின் நல்ல காலம் என்பதிலும் பார்க்க சிங்களத்தின் நல்ல காலம் தொடர்ந்து கொண்டு செல்கின்றது ....

... "மகிந்த" என்பது ஓர் சிங்கள இனவாதத்தின் ஓர் எச்சம், ஆனால் மகிந்தவிற்கு விழும் அடியானது சிங்கள இனவாதத்துக்கு விழும் அடியே ... நாம் மகிந்தவின் waterloo வை தொடங்கினாலும் இன்று அதனை சரியாக கொண்டு செல்ல முற்படவில்லை, ஆனாலும் எம் நல்ல காலம் இதனை சர்வதேச ஊடகங்களும், மனித உரிமை அமைப்புகளும் தம் கைகளில் எடுத்துள்ளன ... அதனை அவர்கள் கொண்டு செல்ல துணை நிற்போம்!!

அதுபோக .... மகிந்தவின் Waterlooஇல் சரியாக அடிபட்டது என்ன எழ முடியாமல் போனவர்கள் ..... புலத்து கேபிக்களே!! ... இன்று இந்த வெளிப்படையாக புலத்து மக்களை உடைக்கவென சிங்களத்தால் தூண்டி விடப்பட்ட கூலிகள் சுருண்டு விட்டனரோ அல்லது தமது செயற்பாடுகளை மறைமுகமாக செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

புலத்திலிருந்து கும்பல் கும்பலாக சிறிலங்காவிற்கு அழைத்துச் சென்று, அங்கு புலத்து மக்களின் சரனடைதல் என்ற நிகழ்ச்சி நிரல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது, அதனை நிரந்தரமாக நிறுத்த நாம் தொடர்ந்து செயற்பட வேண்டும்!!!

  • தொடங்கியவர்

இந்த சரனடையும் நிகழ்ச்சி நிரலை புலத்து கேபிக்கள் செயற்படுத்திக் கொண்டிருந்தபோது ... இங்கிருந்த கேபியின் செயலாளர் நாயகம் சொன்னார், "என்னத்தை நீங்கள் செய்யப்போகுறீர்கள்??? ஒன்றும் செய்ய முடியாது??? நீங்கள் செய்யும் எதுவும் எடுபடாது???? போய் அவனது(மகிந்தவின்) காலில் விழுங்கோ??? ..." ... ஏழனச்ச் சிரிப்புடன் .... ... இந்த ஏழனத்தை நிரந்தரமாக இல்லாமல் செய்ய வேண்டும்!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.