Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீயுசிலாந்து செல்லும் இலங்கையணி

Featured Replies

நீயுசிலாந்து செல்லும் இலங்கையணி

சென்ற மாதம் இந்தியாவுடன் நடந்த ஒருநாள் போட்டியில் மிகவும் மோசமாக விளையாடிய இலங்கையணி உலக தர வரிசைபட்டியலில் 7வது இடத்தை அடைந்திருக்கிறது இந்த நிலைணில் நான்கு ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்த வாரம் நீயுசிலாந்து பயணமாகிறது வரும் 31ம் திகதி போட்டி ஆரம்பமாகிறது இவ்வணியில் சனந் ஜெயசூரியா மிகுந்த சர்ச்சைக்கு மத்தியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார் இந்தியாவுடனான ஒருநாள் போட்டியில் இவர் சரியாக விளையாடதால் டெஸ்ட் தொடரில் நீக்கப்பட்டிருந்தது தெரிந்ந விடயம் இதைப்பற்றி அவர் கூறும் கருத்து

s-1.jpg

நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில், ரசிகர்கள் பெருமைப்படும்படியான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். இனிமையான நாடு நியூஸிலாந்து. அங்கு தான் 15 ஆண்டுகளுக்கு முன் எனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினேன். மறக்கமுடியாத அனுபவம் அது.

நியூஸிலாந்து அணிக்கு எதிரான முந்தைய ஒருநாள் தொடரில் பல வெற்றிகளைப் பெற்றுள்ளோம். அதே மாதிரியான முயற்சி இப்போதும் தொடரும் என நம்புகிறேன்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நீக்கப்பட்டேன். அணியிலிருந்து வெளியேறுவதை யாரும் விரும்பமாட்டார்கள். என்றாலும், அந்த இடைவெளி, எனது திறமையை மேம்படுத்திக் காட்ட உந்துதலாக அமைந்துள்ளது. அணிக்குத் திரும்பியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றார் ஜயசூரியா.

கடந்த ஆண்டு இலங்கையை கடல்கோள் தாக்கியபோது இலங்கை அணியினர் நியூஸிலாந்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். பேரழிவை அறிந்ததும், போட்டியை கைவிட்டு உடனடியாக நாடு திரும்பினர்.

நியூஸிலாந்து தொடர் முடிந்ததும் அவுஸ்திரேலியா செல்கிறது இலங்கை அணி. அங்கு, ஜனவரி 13 முதல் முத்தரப்பு தொடரில் பங்கேற்கிறது. தென் ஆபிரிக்கா அத்தொடரில் பங்கேற்கும் மற்றொரு நாடு.

thinakkural

அட நாங்க இருக்கிற இடத்திற்கு வருகினம்...

சனத் என்னக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரார். :lol::D:D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அணியில் மீண்டும் இணைந்துள்ளார் என்று நினைக்கின்றேன்.

சகோதரம் :twisted: :twisted: :twisted: :twisted:

:twisted: :D:lol::lol::D:lol::lol::lol::lol:

நானும் அப்பிடித்தான் நினைக்கிறன்

:wink: :wink: :wink: :wink:

  • கருத்துக்கள உறவுகள்

நானும் அப்பிடித்தான் நினைக்கிறன்

:wink: :wink: :wink: :wink:

என்னத்தை அப்படி நினைக்கின்றீர்கள்?? :wink: :lol:

  • தொடங்கியவர்

நியுசிலாந்து Vs இலங்கை - 1வது போட்டி

நீயுசிலாந்து 7 விக்கட்டுகளால் வெற்றி

இலங்கை நீயுசிலாந்து அணிகளுக்கிடையிலான 1வது ஒருநாள் போட்டி இன்று Queentown Event centre நடைபெற்றது நாணய சுழச்சியில் வெற்றி பெற்ற நீயுசிலாந்து அணி இலங்கையை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது இதன் பிரகாரம் துடுப்பெடுத்து ஆடிய இலங்கையணி மிகப் பரிதாபமாக 47.2 ஓவர்களில் சகலவிக்கட்டுகளை இழந்து 164ஓட்டங்களை மாத்திரமே பெற்றது அணி சார்பாக

TM Dilshan - 42 Runs

MS Atapattu- 35 Runs

இதுக்கு பதிலளித்தாடிய நீயுசிலாந்து அணி 37.2 ஓவர்களில் 3 விக்கட்டுகளை மாத்திரமே இழந்து 166 ஓட்டத்தைப் பெற்றது நீயுசிலாந்து அணி சார்பில்

PG. Fulton - 70 Runs *

JM.How - 58 Runs

ஸ்கோர் விபரம்

இலங்கை -164 ஓட்டங்கள் (47.2ஓவர்)

நீயுசிலாந்து -166 ஓட்டங்கள் (37.2ஓவர்)

ஆட்ட நாயகன் - PG Fulton (70*)

57275.jpg

Peter Fulton and Jamie How put on solid performances as New Zealand raced to victory

http://usa.cricinfo.com/db/NEW/LIVE/frames..._31DEC2005.html

  • தொடங்கியவர்

நியுசிலாந்து Vs இலங்கை - 2வது போட்டி

நீயுசிலாந்து 5 விக்கட்டுகளால் வெற்றி

இலங்கை நீயுசிலாந்து அணிகளுக்கிடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று Jade Stadium Christchurch ல் நடைபெற்றது நாணய சுழச்சியில் வெற்றி பெற்ற நீயுசிலாந்து அணி இலங்கையை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது இதன்படி துடுப்பெடுத்து ஆடிய இலங்கையணி நிர்ணைக்கப் பட்ட 50ஓவர்களில் 7விக்கட்டுகளை இழந்து 255ஓட்டங்களை பெற்றது அணி சார்பாக

WU.Tharanga - 103 Runs

MS Atapattu - 52 Runs

இதுக்கு பதிலளித்தாடிய நீயுசிலாந்து அணி 48 ஓவர்களில் 5 விக்கட்டுகளை இழந்து 256 ஓட்டத்தைப் பெற்றது நீயுசிலாந்து அணி சார்பில்

NJ.Astle - 90 Runs*

L Vincent - 46 Runs

ஸ்கோர் விபரம்

இலங்கை -255/7 ஓட்டங்கள் (50 ஓவர்)

நீயுசிலாந்து -256/5 ஓட்டங்கள் (48ஓவர்)

ஆட்ட நாயகன் - NJ.Astle - 90 Runs*

57359.jpg

Astle guides New Zealand to victory

http://usa.cricinfo.com/db/NEW/LIVE/frames..._03JAN2006.html

4 ஆட்டங்களை கொண்ட இந்தத் தொடரில் நீயுசிலாந்து அணி 2 : 0 என்ற நிலையில் முன்னணியில் உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்

அடடா வருடம்பிறந்து முதல் போட்டியிலேயே இலங்கை வாங்கிகட்டிடிச்சா? குணவர்ட்டனே ஏனய்யா இறக்கினியள்,, ஜெயசூர்யாவுக்கு என்ன நடந்தது? ஜெயசூர்யாவை யாரோ நாவுறு பார்த்திட்டினம் போல... சரி சரி சிறிலங்கா வேண்டிக்கட்டுறதும் ஒரு விதத்தில நன்மைதான்,,, வாழ்த்துக்கள் நியுசிலாந்து,,,, 6-1 எண்ட கனக்கில இந்தியா அடிச்சமாதிரி 3-1 எண்ட கனக்கில அடிச்சு கலைச்சுவிடுங்க,,, :idea: :idea:

அடடா வருடம்பிறந்து முதல் போட்டியிலேயே இலங்கை வாங்கிகட்டிடிச்சா? குணவர்ட்டனே ஏனய்யா இறக்கினியள்,, ஜெயசூர்யாவுக்கு என்ன நடந்தது? ஜெயசூர்யாவை யாரோ நாவுறு பார்த்திட்டினம் போல... சரி சரி சிறிலங்கா வேண்டிக்கட்டுறதும் ஒரு விதத்தில நன்மைதான்,,, வாழ்த்துக்கள் நியுசிலாந்து,,,, 6-1 எண்ட கனக்கில இந்தியா அடிச்சமாதிரி 3-1 எண்ட கனக்கில அடிச்சு கலைச்சுவிடுங்க,,, :idea: :idea:

அப்ப தேசிக்காய் வெட்டி போடுமேன் டன், ஜெயசூரியாவுக்கு. :P :P :P

  • கருத்துக்கள உறவுகள்

அட அதை வெட்டிப்போட்டு நாவுறு கழிக்கிறதுக்குத்தான் அவுஸ்ரேலியாவில ஆக்கள் இருக்கினம்,, ஜெயசூர்யா ரொம்ப நல்லவர்,, கிட்டத்தட்ட குடும்ப நண்பர் வேற,, அவையள் பார்த்திப்பினம்,,, கவலைப்படாதேங்கப்பா.... :wink: :P :P

  • தொடங்கியவர்

அட அதை வெட்டிப்போட்டு நாவுறு கழிக்கிறதுக்குத்தான் அவுஸ்ரேலியாவில ஆக்கள் இருக்கினம்,, ஜெயசூர்யா ரொம்ப நல்லவர்,, கிட்டத்தட்ட குடும்ப நண்பர் வேற,, அவையள் பார்த்திப்பினம்,,, கவலைப்படாதேங்கப்பா.... :wink: :P :P

தம்பி இப்ப தூ. ...பையன் வந்தால் உம்மடைபாடு இதுதான்banghead.gifbanghead.gifbanghead.gif

  • கருத்துக்கள உறவுகள்

அடச்சா,, ஜெயசூர்யாவை யாரோ நாவுறு பார்த்திட்டினம் எண்டு சொன்னது உண்மைதான் போல.. ஏனெண்டால், ஜெயர்சூர்யா நேற்று குளிக்க போகக்கை வழுக்கி விழுந்து தோளில நல்ல அடி,,, அதால விளையாட முடியல்லையாம்,,, அடுத்த 2 போட்டியிலும் விளையாடமாட்டார் எண்டு அறிவிக்கப்பட்டிருக்கிறது,,, :roll: :roll:

சா,, ஜெயசூர்யா நியுசிலாந்து போட்டியில விளையாடப்போறார் எண்டு சொன்ன உடன சில சனம் இல்லாத பொல்லாத பொய்களைச்சொல்லி நாவுறு பார்த்துப்போட்டாங்களப்பா.... :evil: :evil: :evil:

நாட்டுக்கு ரொம்ப முக்கியமான செய்தியை தொகுத்து வழங்கியவர் டன்,,,, :lol:

  • தொடங்கியவர்

நியுசிலாந்து அணி இன்னொரு வெற்றியையும் 21 ஓட்டங்களினால் பெற்றது3வது போட்டி

நியுசிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான 3வது ஒருநhள் போட்டி Westpac Stadium, Wellington ல் இன்று நடைபெற்றது நாணய சுழச்சியில் வெற்றிபெற்ற நியுசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்து ஆடியது 50 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 224 ஒட்டங்களை பெற்றது இலங்கையணி சார்பான சமிந்தா வாஸ் 39 ஓட்டங்களை கொடுத்து 5 விக்கட்டுகளை வீழ்த்தியிருந்தார் நியுசிலாந்து அணி சார்பில்

PG Fulton -- 50

HJH Marshall - 50

இதுக்கு பதிலளித்தாடிய இலங்கையணி மிகவும் கடுமையாக போராடியும் 46.4 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 203 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது

J Mubarak - 53

+KC Sangakkara -52

ஸ்கோர் விபரம்

நியுசிலாந்து - 224 ஓட்டங்கள் (50 ஓவர்)

இலங்கை ஓட்டங்கள் (46..4ஓவர்)

http://usa.cricinfo.com/db/NEW/LIVE/frames..._06JAN2006.html

57482.jpg

Hamish Marshall cuts during his half-century

4போட்டிகள் கொண்ட தொடரில் நியுசிலாந்து 3 : 0 என்ற நிலையில் தொடரைக் கைப்பற்றியது இன்னும் ஒரு போட்டி பாக்கியிருக்கு வாங்கிக்கட்டுறத்துக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுண்டல்! :?

நாம் இருவரும் சானியாவுக்கு எண்டு ஒரு பக்கத்தை திறந்து வைப்பமா? :wink: :?: :!:

  • கருத்துக்கள உறவுகள்

அய்ய்ய்ய்ய்ய்ய்,, ஜாலிலிலிலி... இலங்கை அணியின் தொடர் தோல்விக்கு வாழ்த்துக்கள்...... போற போக்கைப்பார்த்தால் இலங்கை அணி சிம்பாப்வே அணியின் உலக சாதனைகளை முறியடிக்கபோகுது போல....

எனி இலங்கை அணியை பலம் வாய்ந்த உலக அணியாக கணிப்பிடுவது ரொம்ப கஸ்ரம்,, காரணம் ஜெயசூர்யாவுக்கு வயசு போய்ட்டு, அவரின் தொடக்க அதிரடி விலாசல் தான் மற்றைய வீரர்களுக்கு உட்சாகத்தை அளித்து வந்தது, அதைவிட தற்போதைய இலங்கை அணி முரளி வாஸ் சங்கக்காரா, ஜெயவர்த்தனா ஆகியோரை மட்டுமே நம்பி ஆடுகிறது,, அட்டப்பத்து, தரங்கா, குணவர்ட்டனா, ஆர்னோல்ட் ஆட்டம் எனி எடுபடாது என்பதே எனது கருத்து,,,

உலகத்தின் மற்றைய அணிகளில் சகல துறை ஆட்டக்காரர்கள் உருவாகி வருகிறார்கள்,, ஆனால் இலங்கை அணியில்????? ஆரம்ப துடுப்பாட்டவீரர்களையே தெரிவு செய்ய முடியாமல் குத்து மதிப்பில் இறக்கி (இலங்கை புலனாய்வு துறையின் அறிவுறுத்தலின் அடிப்படையிலோ என்னமோ) அணியின் ஓட்ட எண்ணிக்கையை 200 ஓட்டங்களுக்குள் தாங்களே சுருட்டிக்கொள்கிறார்கள்,,

1996ம் ஆண்டு இருந்த அணியில் ஜெயசூர்யா, களுவித்தரானவின் தொடக்க அதிரடி விலாசல் மூலம் அணியின் எண்ணிக்கையை குவிக்க முற்படும், அந்த ரன் றெற்றை அடிப்படையாக வைத்து அடுத்து வரும் அட்டப்பட்டு, அரவிந்தா, அர்ஜூனா, உப்பிள்சந்தான, வாஸ் போன்றோர்கள் அதிரடியாக விளையாடி அணியின் எண்ணிக்கையை 250க்கு மேல் கொண்டு போய்விடுவார்கள்,, கடைசியா வரும் முரளி விக்கட்டுக்கு 1 மீற்றர் இடது பக்கம் தூரத்தில் நிண்டுகொண்டு பறந்து பறந்து பற்றை சுழற்றுவார், சுழற்றும் பொழுது ஓரிரு பந்துகள் குறுட்டுலக்கில் பட்டு 4,6 என்று எண்ணிக்க்கையை உயர்த்தி பல முறை ரெக்கோட் வைத்தும் இருக்கிறார்கள்,,

ஆனால் தற்பொழுது? 4த் டவுனா இறங்கும் ஜயவர்த்தனாவில் இருந்துதான் இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கை உயர்கிறது,, ஜயவர்த்தனாவுக்கு சரியான சோடி இல்லாத பொழுது அவர் நீண்ட நேரம் தாக்குபிடிக்கமாட்டார்,,,அடுத

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல்! :?  

நாம் இருவரும் சானியாவுக்கு எண்டு ஒரு பக்கத்தை திறந்து வைப்பமா? :wink:  :?:  :!:

அதான் மனசுல எப்பவோ திறந்திட்டோம்ல......... :(:( :P :oops: :oops:

இலங்கை அணியின் ஒரு நாள் போட்டி தந்திரமான முதல் 15 ஓவர்களில் ரன் குவிக்கும் செயற்பாட்டைச் செய்ய ஆரம்ப சோடி வலுவாக இருக்க வேண்டும். களுவும் ஜெயசூரியாவும் தான் அதை இலங்கை அணிக்கே வலுவான முறையில் அறிமுகப்படுத்தினர் என்றாலும் மிகை இல்லை...! ஆனால் இன்று ஜெயசூரியாவுக்கு இணையாக களு போல களமிறங்க ஆளில்லை..! களுவைக் கூட வற்புறுத்தலின் பேரில் தான் அணியில் இருந்து நீக்கியதாக எங்கோ வாசித்திருக்கிறோம்..அப்படியு

  • தொடங்கியவர்

நிர்வாக சீர்கேட்டை விட தலைக்கனம் எண்டுதான் சொல்லவேணும் பின்னை என்ன...........கொஞ்சநாள் இந்தியா போற இடமெல்லாம் தோத்திச்சு.........இப்ப அவங்கள் உசாராகியிட்டாங்கள் இலங்கை படுத்திட்டுது........இந்த லட்சணத்திலை 13ம் திகதி அவுஸ்ரேலியாவுக்கு போகினமாம் தென் ஆபிரிக்கா அவுஸ்ரேலியா வுடனான முத்தரப்பு போட்டியொண்டுக்கு அதோடை ரேட்டிங்கிலை கடைசியிடத்தை எப்பிடியும் பிடிச்சு விடுவினம்

  • தொடங்கியவர்

இலங்கையின் நியுசிலாந்து தொடரில் முதலாவது வெற்றி - 4வது போட்டி

20 ஓட்டங்களால் வெற்றிபெற்றது இலங்கையணி

நியுசிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான 4வதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று McLean Park, Napiery நடைபெற்றது நாணய சுழச்சியில் வெற்றிபெற்ற இலங்கையணி முதலில் துடுப்பெடுத்து ஆடியது நிர்ணைக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கட்டுகளை இழந்து 273ஒட்டங்களை பெற்று ஒரு திடமான நிலையில் இருந்தது இலங்கையணி சார்பான சார்பில்

MS Atapattu - 69

+KC Sangakkara - 58

இதுக்கு பதிலளித்தாடிய நியுசிலாந்து அணி மிக சிறப்பாக விளையாடிய போதிலும் அவர்களால் 48.2 ஓவர்களில் 253ஒட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது அணியின் சார்பில் PG Fulton(112) மிக திறமையாக விளையாடிய போதிலும் அவர் ரண் ஆவுட் முறையில் அவுட் ஆனது நியுசிலாந்து அணியின் துர்அதிஷ்ட்டம் என்று கூடச் சொல்லாம்

PG Fulton run out (Dilshan) - 112

ஸ்கோர் விபரம்

இலங்கை - 273/6 ஓட்டங்கள் (50 ஓவர்)

நியுசிலாந்து - 253ஓட்டங்கள் (48.2 ஓவர்)

http://usa.cricinfo.com/db/NEW/LIVE/frames..._08JAN2006.html

57563.jpg

Marvan Atapattu congratulates Ruchira Perera on the wicket of Lou Vincent

4போட்டிகள் கொண்ட தொடரில் நியுசிலாந்து 3 : 1 என்ற நிலையில் தொடரைக் கைப்பற்றியது

  • கருத்துக்கள உறவுகள்

பகிடி ஒண்டு தெரியுமோ!

சனத் ஜயசூரியா ஏன் வழுக்கி விழுந்தவர் என்று. நீச்சல் தடாகத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது "சாம்போ" தேவை எண்டு போய்த் தான் சறுக்கி விழுந்தவராம்.

என்ன கேள்வி எண்டால் அவரின் தலைமயிர் "சாம்போ" போடும் அளவுக்கோ கிடக்குது :wink: :)

  • கருத்துக்கள உறவுகள்

பகிடி ஒண்டு தெரியுமோ!

சனத் ஜயசூரியா ஏன் வழுக்கி விழுந்தவர் என்று. நீச்சல் தடாகத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது "சாம்போ" தேவை எண்டு போய்த் தான் சறுக்கி விழுந்தவராம்.

என்ன கேள்வி எண்டால் அவரின் தலைமயிர் "சாம்போ" போடும் அளவுக்கோ கிடக்குது :wink: :)

ஜோவ்வ் தூயவா லொள்ளா? யார் சொன்ன சம்போ எடுக்க போகக்கை வழுக்கி விழுந்ததாக? சவர்ல குளிச்சுக்கொண்டு இருக்கும் பொழுது சோப் எடுக்க போனவராம்,,, அப்பக்கதானாம் மெகராத் வீசின பந்தில விக்கட்டை பறி கொடுத்தவர்,,,(அட விழுந்தவர் எண்டு சொல்லவந்தனானப்பா) :evil: :evil: :evil:

அதுசரி எங்க ஜெயசூர்யாவிண்ட நண்பர்கள், குடும்ப நண்பர்கள் இதைப்பற்றி ஒண்டும் சொல்லக்காணயில்லை? சிலவேளை இப்படி சொல்லீட்டு அவுஸ்ரேலியாவில இருக்கிற தண்ட குடும்ப நண்பர்களை காண அவுஸ்ரேலியாவுக்குக் போய்ட்டாரோ?? :? :roll:

  • கருத்துக்கள உறவுகள்

ஜோவ்வ் தூயவா லொள்ளா? யார் சொன்ன சம்போ எடுக்க போகக்கை வழுக்கி விழுந்ததாக? சவர்ல குளிச்சுக்கொண்டு இருக்கும் பொழுது சோப் எடுக்க போனவராம்,,, அப்பக்கதானாம் மெகராத் வீசின பந்தில விக்கட்டை பறி கொடுத்தவர்,,,(அட விழுந்தவர் எண்டு சொல்லவந்தனானப்பா) :evil: :evil: :evil:

அதுசரி எங்க ஜெயசூர்யாவிண்ட நண்பர்கள், குடும்ப நண்பர்கள் இதைப்பற்றி ஒண்டும் சொல்லக்காணயில்லை? சிலவேளை இப்படி சொல்லீட்டு அவுஸ்ரேலியாவில இருக்கிற தண்ட குடும்ப நண்பர்களை காண அவுஸ்ரேலியாவுக்குக் போய்ட்டாரோ?? :? :roll:

மெக்ராத்துக்கு கிரிக்கட் மீது பாசம் இருக்கலாம். அதுக்காக சனத் குளிச்சுக் கொண்டு இருக்கின்ற இடத்திலேயே பந்து வீசிப்பழகுகின்றது? :wink: :)

இல்லையே. இப்ப நீயுசிலாந்தில் தானே இலங்கையணி நிக்கின்றது? :roll:

  • கருத்துக்கள உறவுகள்

மெக்ராத்துக்கு கிரிக்கட் மீது பாசம் இருக்கலாம். அதுக்காக சனத் குளிச்சுக் கொண்டு இருக்கின்ற இடத்திலேயே பந்து வீசிப்பழகுகின்றது? :wink: :)

இல்லையே. இப்ப நீயுசிலாந்தில் தானே இலங்கையணி நிக்கின்றது? :roll:

ஜோவ்வ் நான் சொல்ல வந்தது,,, சவுத் ஆபிரிக்காவுக்கு எதிரான 3வது ரெஸ்ற்றில மெகராத் வீசின பந்து நியுசிலாந்தில குளிச்சுக்கொண்டு இருந்த ஜெயசூர்யா சோப் எடுக்க போற நேரம் பார்த்து அவரை போய் தாக்கிட்டுதாம்,,, (அட அவுஸ்ரேலியாவும் நியுசிலாந்தும் பக்கத்த பக்கத்த தானே):? :roll:

அட இந்த அரும்பெரும் செய்தியை டன்னிண்ட புலனாய் சொல்லல,, நம்மட புளுகர் பொண்ணய்யாதான் சொன்னார்,,, :idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஜோவ்வ் நான் சொல்ல வந்தது,,, சவுத் ஆபிரிக்காவுக்கு எதிரான 3வது ரெஸ்ற்றில மெகராத் வீசின பந்து நியுசிலாந்தில குளிச்சுக்கொண்டு இருந்த ஜெயசூர்யா சோப் எடுக்க போற நேரம் பார்த்து அவரை போய் தாக்கிட்டுதாம்,,, (அட அவுஸ்ரேலியாவும் நியுசிலாந்தும் பக்கத்த பக்கத்த தானே):? :roll:

அட இந்த அரும்பெரும் செய்தியை டன்னிண்ட புலனாய் சொல்லல,, நம்மட புளுகர் பொண்ணய்யாதான் சொன்னார்,,, :idea:

பாத்திங்களா!!

முந்தி முரளி மீது அவுஸ்ரேலியாக்காரன் வெறுப்பில இருந்தவங்கள். இப்ப சனத் ஜயசூரியாவில் கண் வைச்சிருக்கின்றாங்கள்! :wink: :)

அது சரி. புலநாயை காக்கா தூக்கிக் கொண்டு போட்டுதோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.