Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மக்களுக்கு முகங்கொடுக்க அஞ்சிய கொன்சவேட்டிவ் கட்சி வேட்பாளர் விவாத மேடையிலிருந்து ஓட்டம்

Featured Replies

வியாழன், 28 ஏப்ரல் 2011 20:51 .கனடியத் தேர்தல் களத்தில் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பி விட்டிருக்கும், கனடாவின் ஸ்காபரோ தென்மேற்குத் தொகுதியின் கொன்சவேட்டிவ் கட்சி வேட்பாளரான ”கவன்” (ராகவன் பரஞ்சோதி), நேற்று மாலை நடைபெற்ற அனைத்துக் கட்சி வேட்பாளர் விவாத மேடையிலிருந்து ஓட்டமெடுத்தார் என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து தெரியவருவதாவது:

அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்ட பெண் போல், கட்சிக்காகவும், கட்சியின் தவறான கொள்கைகளுக்காகவும், தமிழீழ தேசியத்தையும், தமிழினத்தையும் மறுதலித்ததன் மூலம் எதிர்வரும் 2ஆம் திகதி நடைபெறவிருக்கும், கனடியத் தேர்தல் களத்தில் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பி விட்டிருக்கும், முன்னாளில் கனடியத் தமிழ்த் தேசிய ஊடகங்கள் என்று அழைக்கப்பட்ட சி.எம்.ஆர், ரி.வி.ஐ ஆகியவற்றின் பணிப்பாளரும், கனடாவின் ஸ்காபரோ தென் மேற்குத் தொகுதியின் கொன்சவேட்டிவ் கட்சி வேட்பாளருமான “கவன்”, நேற்று மாலை நடைபெற்ற அனைத்துக் கட்சி வேட்பாளர் விவாத மேடையிலிருந்து ஓட்டமெடுத்தார் என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவரது உண்மையான பெயர் ராகவன் பரஞ்சோதி தேர்தலுக்காகத் தனது பெயரை கவன் என்று மாற்றிக் கொண்டுள்ளார்.

இது பற்றி எமது செய்தியாளர் மேலும் தெரிவிப்பதாவது

கனடாவின் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தேர்தல் பற்றிய தமது கட்சிகளின் கொள்கைகளை விளக்குவதற்காகவென்று சீனக் கனடியர் தேசியக் கவுன்சில் மற்றும் கனடியத் தமிழர் பேரவை ஆகியன கூட்டாக ஒழுங்கு செய்திருந்த மேற்படி விவாதத்தில் கலந்து கொள்ளுவதென்று அழைப்பை ஏற்றுவிட்டு மண்டப வளவிற்குள் வந்த இவர், நேரடியாக மண்டபத்திற்குள் செல்லாமல், 20 நிமிடங்கள் வரை தனது வாகனத்திற்குள் இருந்துவிட்டு, அவரது பிரச்சார முகாமையாளர் வந்த பின்பே அவரது துணையுடன் மண்டபத்திற்குள் சென்றுள்ளார்.

இவர் பற்றி கனடாவின் பிரதான ஊடகங்கள் அண்மைக் காலமாகக் கிளப்பிவரும் சர்ச்சைகள் காரணமாகக் கனடியத் தமிழ் மக்கள் பெரும் அதிர்ச்சிக்கும் அதிருப்திக்கும் உள்ளாகி வந்துள்ளனர்.

இந்நிலையில் மேற்படி கூட்டத்தில் கலந்து கொள்ளாவிட்டாலும் பிரச்சினைகள் உருவெடுத்துவிடும் என்ற காரணத்தினால், இவரது நிலைப்பாட்டை அறிய மக்கள் ஆவலாக இருந்த மேற்படி கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த அதே நேரத்தில் தந்திரமாக முதியவர்களுக்கென்றொரு கூட்டத்தை ஒழுங்கு செய்து விட்டு அரங்கத்திற்கு வந்த இவர், விவாத அரங்கு ஆரம்பமாகி வேட்பாளர்கள் தம்மைத் தாம் அறிமுகம் செய்யும் நேரம் வந்ததும், தனது அறிமுக உரையிலேய தன்னுடையதும் ஏனைய வேட்பாளர்களதும் அறிமுக உரை முடிவுற்றவுடனேயே முதியோர் கூட்டத்திற்காகத் தான் மண்டபத்தை விட்டு அகலவிருப்பதாகத் தெரிவித்ததாகவும், தொடர்ந்தும் மேடையில் அமர்ந்திருந்தால், மக்களின் கேள்விகளுக்கு முகங்கொடுக்க வேண்டி வரும் என்ற பயத்தின் காரணமாகத் தான் ஏற்கனவே கூறியபடி மண்டபத்தை விட்டு ஓடிவிட்டதாகவும், இவர் அரங்கத்தை விட்டு வெளியில் வரும் வரை இவரது பாதுகாப்பிற்காகக் காவல்துறை வாகனம் ஒன்றும் மண்டபத்திற்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

தேர்தலில் நிற்கும் இவர் இவ்வாறு மக்களுக்கு அஞ்சி மண்டபத்தை விட்டு ஓடவேண்டி வந்துள்ளமைக்குக் காரணம், இம்மாத ஆரம்பத்தில், கனடாவின் பிரதான ஆங்கில ஏடான த குளோப் அன்ட் மெயில், ”விடுதலைப் புலிகள் மீது கனடிய அரசு விடுத்துள்ள தடையை ஆதரிக்கிறாரா?” என்று இவரிடம் கேட்டபோது அதற்கு ”ஆம்” என்று இவர் பதிலளித்தமையே என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

படங்களை பார்வையிட:-http://tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=21303:2011-04-28-15-30-38&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410

செய்திகளை இணையத்தில் திருடி வெட்டி ஒட்டுகின்ற, பிரபல சர்வதேச ஊடகத்தின் பெயரின் மூலம் விளம்பரம் தேடிய ஓர் திருட்டு வலைத்தளம் ராகவன் பரஞ்சோதியை துரோகி என முத்திரை குத்துவது வேடிக்கையானது. கடவுள் வரம் கொடுத்தாலும் கள்ளப்பூசாரிகள் விடமாட்டார்கள் என்பதற்கு ராகவன் தொடர்புபட்ட செய்திகள் சான்றாக உள்ளன. ராகவன் அவர்கள் தான் போட்டியிடுகின்ற தொகுதியில் வெற்றிபெற வாழ்த்துகள்.

  • தொடங்கியவர்

படங்கள்Tuesday, 26 April 2011 13:20 மண்ணையும் மனங்களையும் நேசிக்கும் வானொலி வலதுசாரி பழமைவாதக் கட்சிக்கு சாமாரம் வீசும் திருப்பணியில் இறங்கியுள்ளது

Print E-mail

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சி வேறுபாடின்றி நேர்காணல் காணுகிறோம் என்ற போர்வையில் பழமைவாதக் கட்சிக்கு ஆதரவாக இந்த வானொலி நடந்து கொள்கிறது.

கடந்த வாரம் (செவ்வாய்) வணக்கம் கனடாவில் பிரம்டன் மேற்கில் போட்டி போடும் பழமைவாதக் கட்சி வேட்பாளர் Kyle Seeeback யை ஒலிபரப்பாளர் பொன்னையா விவேகானந்தன் நேர்காணல் கண்டார். அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. கேள்விகளை குழைந்தும் நோகாமலும் விவேகானந்தன் கேட்டார். ஆனால் இரண்டு முக்கிய கேள்விகiளை வேண்டும் என்றே கேட்காமல் விட்டுவிட்டார்.

பழமைவாதக் கட்சித் தலைவர் ஸ் ரீபன் கார்ப்பர் தனது பரப்புரையில் பல விடயங்களை முதன்மைப் படுத்துகிறார். வேலைவாய்ப்பு, வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறை நிரப்பு, குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை போன்றவை அதில் அடங்கும். குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை என்பதில் சட்ட வரைவு சி-49 முக்கியமானது. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சி-49 சட்ட வரைவைக் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதுதான் தனது முதல் வேலையாக இருக்கும் என கார்ப்பர் தேர்தல் பரப்புரைக்குச் செல்லுமிடம் எல்லாம் சொல்லி வருகிறார்.

எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும் இந்தக் கேள்வியைக் கேட்காது விட்டது ஏதோ நினைவுக் கோளாறு அல்ல. அந்தக் கேள்வி பழமைவாதக் கட்சியின் உண்மையான வேடத்தைக் கலைத்துவிடும் என்ற பயம்தான் கேட்காமல் விடப்பட்டதற்குக் காரணம்.

ஞாயிறு உதிக்கத் தவறினாலும் கனடிய வானொலிக் காற்றலையில் காலை, மாலை, மதியம் இரண்டொரு நேயர்கள் (கோயில் மேளங்கள்) வானொலி ஒலிபரப்பாளர்களோடு ஒத்தூதுகிறார்கள். அதற்கான நேரம் ஒதுக்கப்படுகிறது. மற்ற நேயர்களுக்கு ஒரு மணித்துளி. இவர்களுக்கு கால் மணி அரை மணி நேரம் ஒதுக்கப்படுகிறது.

"தமிழர் ஒருவருக்கு லிபரல் கட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கொடுக்கவில்லை. ஆனாபடியால் தமிழர்கள் எல்லோரும் லிபரல் கட்சிக்கு வாக்குப் போடக் கூடாது" என்று காற்றலையில் ஒரு நேயர் புலம்பினார். சும்மா சொல்லக் கூடாது. இப்படி உப்புப் புளி இல்லாமல் பேசுபவர்கள் தங்களை அரசியல் ஞானிகள் என மெய்யாகவே நினைக்கிறார்கள். முன்னர் ஒருமுறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் விழல் கேள்வி கேட்டுவிட்டு "தமிழ்மக்களுக்கு தலைமைதாங்க சம்பந்தனுக்கு தகுதியில்லை" என்று தீர்ப்புக் கூறிவிட்டு இதே அரசியல் ஞானி போனார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த வானொலி ஒலிபரப்பாளர்களும் தலை ஆட்டினார்கள்.

தமிழ்த் தொலைக் காட்சி வெளிச்சம் நிகழ்ச்சியில் தமிழர்கள் தமிழ் வேட்பாளர்களுக்குத் தான் வாக்களிக்க வேண்டுமா என்ற கேள்விக்கு கட்சி அடிப்படையில்தான் வாக்களிக்க வேண்டும் என்றும் தமிழர் என்பதற்காக வாக்களிப்பது என்றால் இராசபக்சேகட்சி நிறுத்தும் தமிழ் வேட்பாளருக்கும் வாக்குப் போட வேண்டும் எனப் பேராசிரியர் சேரன் பதில் அளித்தார். இதை வைத்துக்கொண்டு பேராசிரியரை காற்றலையில் அரசியல் ஞானி ரொம்ப ரொம்ப ரொம்பத் திட்டித்தீர்த்தார்.

பாம்புக்குப் பால் வார்த்தாலும் அது கடிக்கத்தான் செய்யும். தண்ணீருக்குள்ள விழுந்த தேளைப் பாபம் பார்த்து தரைவில் எடுத்து விட்டாலும் அது கொட்டத்தான் செய்யும். அவற்றின் சுபாபம் அது. அதே போல் பழமைவாதக் கட்சிக்கு வாக்களிப்பது என்பது பாம்புக்கு பால் வார்த்த கதையாகத்தான் இருக்கும். தேளை தண்ணீரில் இருந்து காப்பாற்றித் தரையில் விட்ட கதையாகத்தான் இருக்கும்.

இதில் உள்ள சோகம் என்னவென்றால் இந்த வானொலி நரியைப் பரியாக்கப் பார்க்கிறது. பழமைவாதக் கட்சி சார்பான ஒரு நிலைப்பாட்டை தனியார் வானொலி எடுக்கலாம். ஆனால் சமூக வானொலி என்று கூறிக் கொள்ளும் ஒரு வானொலி அதே சமூகத்தின் நலன்களுக்கு எதிராகவும் மாறாகாவும் நடந்து கொள்வது ஏமாற்றத்தை அளிக்கிறது.

பழமைவாதக் கட்சி என்பது பழைய சீர்திருத்தக் கட்சியின் மறுவார்ப்பு என்பதை எம்மில் சிலர் மறந்துவிடுகிறார்கள். சீர்திருத்தக் கட்சி தேசிய முன்னணி என்று மறுபிறப்பு எடுத்து முற்போக்குப் பழமைவாகத் கட்சியோடு இரண்டறக் கலந்த போதுதான் பழமைவாதக் கட்சி உருவானது. பெயர் மாறினாலும் சீர்திருத்தக் கட்சியைச் சார்ந்த பிரதமர் கார்ப்பர் அந்தக் கட்சியின் கொள்கை, கோள்ப்பாடுகளையே நடைமுறைப்படுத்துகிறார்.

.

மன்னிப்பு சபை, மனிதவுரிமை காப்பகம் போன்ற மனித உரிமை அமைப்புக்களும் சமூக ஆர்வலர்களும், தேவாலயங்களும் சி -49 சட்ட வரைவுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றன.

பழமைவாதக் கட்சிக்கு தமிழர்கள் வாக்களிப்பது என்பது சி-49 வரைவு சட்டத்தை நாடாளுமன்றத்தில் தோற்கடித்த லிபரல், புதிய மக்களாட்சிக் கட்சி, புளக் கியூபெக்குவா கட்சி ஆகிய கட்சிகளுக்கு இரண்டகம் செய்தது போலாகிவிடும்

1991 இல் சீர்திருத்தக் கட்சி நீலத் தாள் (Blue Sheet) என்ற கொள்கை அறிக்கையை வெளியிட்டது. குடிவரவு தொடர்பாக அந்தக் கட்சியின் கொள்கை விளக்கப்பட்டது. சீர்திருத்தக் கட்சிக்காரர்கள் "இனம் மற்றும் இனக்குழு அல்லது கனடாவின் இனவாரியான கட்டமைப்பை பாரதூரமாக அல்லது உடனடியாக மாற்றும் முயற்சியை" எதிர்க்கிறார்கள் என அந்த கொள்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

பழமைவாதக் கட்சி சட்டவரைவு சி - 49 யை அடுத்த நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து தீருவேன் என்று பிரதமர் கார்ப்பர் அடம்பிடிப்பதற்குக் காரணம் குடிவரவு பற்றிய சீர்திருத்தக் கட்சியின் கொள்கையே காரணமாகும்.

கனடிய பழமைவாதக் கட்சி வெள்ளை நிறத்தவர்களது வாக்குகளைக் கவர சன் சீ கப்பலில் வந்த 492 தமிழ் ஏதிலிகளை மையமாக வைத்து அவர்களை "ஆட்கடத்தல்காரர்கள்" "குற்றவாளிகள்" (Criminals) "பயங்கரவாதிகள்" "புலிகள்" எனச் சித்திரிக்கும் காணொளி விளம்பரம் ஒன்றை செய்து வருகிறது. இதனை எடுக்குமாறு விடுத்த வேண்டுகோளை அந்தக் கட்சி நிராகரித்துவிட்டது!

கனடாவில் புகழ்பெற்ற குடிவரவு வழக்கறிஞர்கள், வழக்காடுவோர் மற்றும் அறிஞர்கள் கூட்டாக விட்ட ஊடக அறிக்கையில் பழமைவாதக் கட்சியானது குடிவரவாளர்களுக்கும் சிறுபான்மை இனங்களிற்கும் எதிரான கட்சியென்றும் அதற்கு புதிய கனடியர்கள் வாக்களிக்கக் கூடாது எனவும் கேட்டுள்ளனர்.

பல சான்றுகளை முன்வைத்து ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை இதுவரை பொதுமக்களால் அறியப்படாத பல விடயங்களை உள்ளடக்கியுள்ளது.

இந்த 48 வழக்கறிஞர்களில் கனடாவின் தமிழ் ஏதிலிகள் சார்பாக மிகுந்த ஈடுபாட்டோடும் காத்திரமாகவும் வாதாடிவரும் பார்பரா யக்மன், லோன் வோல்ட்மன் ஆகியோர் அடங்குவர். கனடியத் தேர்தலில் பழமைவாதக் கட்சி ஏதிலிகள் மற்றும் குடிவரவாளர்களுக்கு எதிரான கட்சியென ஒரு கட்சியை சுட்டிக் காட்டியது இதுவே முதல்முறையாகும்.

பெற்றோர்கள் பேரர்களை அழைக்கும் நடைமுறையில் 2005ம் ஆண்டில் 20,000 பேர் அழைக்கப்பட்டதாகவும் இந்த தொகை ஏறுமுகமாகச் செல்லாமல் 44 விழுக்காட்டால் குறைக்கப்பட்டு கடந்த ஆண்டு வெறும் 11 ஆயிரம் பேர் மாத்திரமே அனுமதிக்கப்பட்டதாகவும், கப்பல் கடத்தல்காரர்களைத் தண்டிப்பதாகக் கூறிக் கொண்டு வெறுமனே அகதிகளை மாத்திரம் தண்டிக்கும் வகையிலான சட்டங்களைக் கொண்டுவருவதாகவும் இக் கொடிய சட்டமூலத்தின் மூலம் சிறுவர்களையும் பெண்களையும் சிறைகளில் நிபந்தனையின்றி அடைக்க வழி செய்துள்ளதாகவும் குடிவரவாளர்களிற்கு உதவிபுரியும் நிறுவனங்களிற்கான நிதியுதவு குறைக்கப்பட்டுள்ளதாகவும்

நிதியுதவியில் பாகுபாடு காட்டப்படுவதாகவும் ஏதிலிகளுக்குத் தாங்கள் ஆதரவானவர்கள் எனக் காட்டும் அதேவேளை அகதிகள் தாங்கள் பிறந்த நாட்டிலிருந்தே இனி அகதிக்கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்றும் திருமணமாகி வருபவர்கள் கட்டாயம் இரு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்ற நடைமுறையை திட்டமிட்டே கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டு எனவே சிறுபாண்மை இனங்களைச் சார்ந்தோரும் புதிய குடிவரவாளர்களும் பழமைவாதக் கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது என மேற்படி வழக்கறிஞர்கள் மற்றும் அறிஞர்கள் அறிவுறுத்தியுள்ளனர்

- திருமகள்

sangkathi.com

Edited by BLUE BIRD

கனடாவின் எதிர்காலம் என்று பார்க்கும்போது… தற்போதைய நிலமையில், பொருளாதார இக்கட்டான நிலையில்.. Conservative அரசாங்கம் தொடர்ந்து ஆட்சியில் நிலைப்பதே ஆரோக்கியமானது. Conservative அரசாங்கம் த.வி.புவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லை என்பதற்காக Conservative அரசாங்கத்தை கனேடிய மக்கள் எதிர்க்கவேண்டும் என்கின்ற தேவை இல்லை.

மறுபுறத்தில்.. லிபரல் கட்சிகூட த.வி.புவிற்கு ஆதவான நிலைப்பாட்டை கொண்டுள்ளது என்று கூறுவதற்கு இல்லை. தற்செயலாக முன்பு கோலோட்சிய லிபரல் கட்சி தோற்கடிக்கப்படாமல் தொடர்ந்து நிலைத்து காணப்படினும் கனடாவில் த.வி.பு தடை செய்யப்பட்டிருக்க மாட்டாது என்பதற்கு எதுவித உத்தரவாதமும் இல்லை.

த.வி.பு கனடாவில் தடைசெய்யப்பட்டமைக்கு பின்னால் Conservative கட்சியே முக்கிய பங்குவகித்தது என்பது ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒன்று அல்ல. கனேடிய புலனாய்வுத்துறை, RCMP, அமெரிக்க உளவு நிறுவனங்கள், அமெரிக்க அரசு, இதர சர்வதேச நிறுவனங்கள் மற்றும் HRW என்பனவற்றின் தாக்கங்கள் பாரிய அளவில் காணப்பட்டன.

தவிர, என்.டி.பி கட்சியும் கூட த.வி.புவிற்கு ஆதரவானது என்று கூறுவதற்கு இல்லை. எந்தவொரு அரசியல் கட்சியும் சர்வதேச அளவில் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்ட ஓர் அமைப்பிற்கு பின்பலம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கமுடியாது. கனடாவை பொறுத்தமட்டில்.. கனேடிய தமிழ் மக்களிற்கு ஓர் தலைமை தேவை. கனேடிய தமிழ் மக்களில் உண்மையான அக்கறை இருப்பின்.. இந்த தலைமை தாயகத்திலும், கனடாவிலுமாக இரண்டு தோணிகளில் கால்வைத்து இயங்கமுடியாது என்பதே யதார்த்தம்.

எடுத்ததற்கெல்லாம் தாயகத்தை தொடர்புபடுத்தி அரசியல் செய்தால்.. கனடாவில் தமிழ்ச்சமூகம் அரசியல் அநாதைகளாக ஒதுக்கப்படுவது தவிர வேறு மார்க்கங்கள் இல்லை. வளர்த்த கடா மார்பில் பாய்வது என்று கூறுவார்கள். த.வி.புவின் பின்புலத்தில் உருவாகிய கனேடிய தமிழ் ஊடகங்கள் ஓர் கட்டத்தில் த.வி.புவின் சித்தாந்தங்களிற்கு ஆதரவாக இயங்கமுடியாமை..

1. ஓர் இராச தந்திரமா..?

2. அல்லது புதியதோர் சிந்தனையா..?

காலம்தான் பதில்கூறவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

த.வி.பு கனடாவில் தடைசெய்யப்பட்டமைக்கு பின்னால் Conservative கட்சியே முக்கிய பங்குவகித்தது என்பது ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒன்று அல்ல. கனேடிய புலனாய்வுத்துறை, RCMP, அமெரிக்க உளவு நிறுவனங்கள், அமெரிக்க அரசு, இதர சர்வதேச நிறுவனங்கள் மற்றும் HRW என்பனவற்றின் தாக்கங்கள் பாரிய அளவில் காணப்பட்டன.

அப்படி எனில் அமெரிக்கா புலிகளை 1997 ல் தடை செய்த போது கனடாவில் லிபரல் கட்சியும்(அப்போது ஆட்சியில் இருந்த) தடை செய்திருக்க வேண்டும்.ஆனால் 2006ல் ஆட்சி அமைத்த தற்போதைய கொன்சவேற்றிவ் கட்சி தான் புலிகளை தடை செய்தது.9 வருடங்களாக உளவு ஸ்தாபனங்களின் தகவல்களை திரட்டிய பின்னர் புலிகளை தடை செய்தார்கள் என்பது ஏற்கக்கூடியதாக இல்லை.

லிபரல் கட்சி த.வி.புவிற்கு ஆதவானது என்றால்…

த.வி.புவின் தடையை நீக்குவதற்காக இவர்கள் என்ன செய்தார்கள்?

தற்போது கனேடிய ஊடகங்களை நீங்கள் உன்னிப்பாக அவதானித்தால் த.வி.புபற்றி லிபரல் கட்சி எவ்வளவு காட்டமான கருத்துக்களை கொண்டுள்ளது என்பதை காணலாம். ராகவன் பரஞ்சோதி த.வி.புவிற்கு ஆதரவாக செயற்பட்டார் எனும் குற்றச்சாட்டு மூலம் குட்டையை கிளப்பியதே லிபரல் கட்சி, மற்றும் அதன் ஆதரவு ஊடகங்கள்தான்.

த.வி.புவிற்கு எவ்வாறான வரவேற்பு, மரியாதை லிபரல் கட்சி மத்தியில் உள்ளது என்று லிபரல் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறுகின்றார், கேளுங்கள்:

Michelle Simson, the Liberal MP in Scarborough-Southwest, said more thorough criminal checks need to be conducted before political candidates are nominated.

"To be a volunteer at say, the Boys and Girls Club, the background check they undergo is quite vigorous. I think it would be in our best interest to do the same if they are seeking office, whether it's municipal, provincial or federal," Simson said.

http://www.torontosun.com/news/decision2011/2011/04/14/17996901.html

  • கருத்துக்கள உறவுகள்

இதே கொன்சவேட்டிவ் கட்சி தான் புலிகளுடன் ஸ்ரிவ் மாட்டின் பேச்சுவார்த்தை நடாத்துகிறார் என்று பிரச்சாரம் செய்ததை மறந்து விடாதீர்கள்.அதே பாணியை தான் இன்று லிபரல் கொன்சவேட்டிவ் மீது எதிர்ப்பிரச்சாரத்தை மேற்கொள்கிறது.

எனது கருத்து அமெரிக்காவின் ஆப்கான் மீதான தாக்குதலாக இருக்கட்டும் அல்லது அண்மைய லிபிய நாட்டின் மீதான் தாக்குதலாக இருக்கட்டும் கனடா பாய்ந்து விழுந்து அமெரிக்காவுக்கு ஒத்தடம் கொடுத்தவர்கள் அமெரிக்கா புலிகளை தடை செய்தவுடன் ஏன் கனடா தடை செய்யவில்லை என்பது தான்.அந்நேரம் லிபரல் கட்சி ஆட்சியில் இருந்ததையும் நினைவு கூருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

not steve martin. paul martin :)

பல்லின கலாச்சார நாட்டைக்கொண்ட கனடாவில் இன்னும் வெள்ளை இன மக்களே நாட்டின் அரசியல் தலைவிதியை நிர்ணயிக்கும் பலம் கொண்டவர்களாக உள்ளனர். சிறுபான்மை இனத்தவர்கள் சில தொகுதிகளில் 'யார் வெல்லுவார்கள்?' என்பதினை நிர்ணயிக்க கூடிய பலம் கொண்டவர்களாக உள்ளனர்.

அந்த வகையில் பழமைவாத கட்சி மீண்டும் வெல்ல வாய்ப்புள்ளது என கருத்துக்கணிப்புக்கள் கூறுகின்றன. ஆனால் மீண்டும் அதற்கு பெரும்பான்மை கிடைக்காது எனவும் கூறுகின்றன. அதேவேளை புதிய ஜனநாயக கட்சி இரண்டாவது இடத்தில் உள்ளது, மக்களும் பழமைவாத கட்சி பெரும்பான்மை ஆட்சி அமைக்க கூடாது என விரும்புகிறார்கள்.

தமிழரை பொறுத்தவரையில் போட்டியிடும் இரு வேட்பாளர்களையும் வெல்ல வைக்கவேண்டும், ஆதரவு அளிக்க வேண்டும். அதன் மூலம் வரும் தேர்தல்களிலும் தமிழர்கள், முக்கியமாக இளையோர், போட்டியிடும் ஆர்வம் அதிகரிக்கும். எமதினம் இங்கு பலமுடன் வாழ எமக்கு பொருளாதார அரசியல் செல்வாக்குகள் முக்கியமாகின்றன.

பொதுவாக வாக்களிப்பவர்களில் பலரும் பலவித, தமக்கு எதில் கூடுதல் தேவை உள்ளது என்பதை தெரிவு செய்கிறார்கள். உதாரணத்திற்கு, சுகாதார துறை, பொருளாதரம், வேலைவாய்ப்பு, பாதுகாப்பு, ஓய்வூதியம், பிள்ளைகளின் படிப்பு, உயரும் வாழ்க்கை செலவு என பட்டியலிடலாம். இதில் ஒன்றை அல்லது ஒன்றுக்கு மேலான தெரிவுகளை தனிப்பட்ட ரீதியிலும் ஒரு சமூகமாகவும் கூட அவரவர் நலன்கள் அடிப்படையில் தெரிவுசெய்கிறனர்.

அண்மையில் தொலைக்காட்சியில் மக்களை கேட்டபோது சொன்ன சில கருத்துக்கள் :

- நான் ஒரு மாணவன், எனக்கு அதிகரிக்கும் கட்டணங்கள் பற்றிய கொள்கை முக்கியம்

- நான் ஒரு யூதன். எனக்கு வெளிவிவகார கொள்கையும் இஸ்ரேலின் பாதுகாப்பும் முக்கியம்

- நான் ஒரு இளைப்பாறியவர். எனக்கு சுகாதார துறையும், ஓய்வூதியமும் முக்கியம்

- நான் ஒரு ஒற்றைதாய். எனக்கு சிறு பிள்ளைகளை விடும் தொகைக்கு அரச மானியம் முக்கியம்

தமிழரை பொறுத்தவரையில் நாங்கள் எமது தனிப்பட்ட - சமூக விருப்பு வெறுப்புக்களை உள்ளடக்கியதாக தெரிவுகளை மேற்கொள்ள வேண்டிய கடமை உள்ளது.

  • தொடங்கியவர்

முதலில் இதை கவனியுங்கள் முக்கியமானது சி 49 சட்டம்

கனடாவில் புகழ்பெற்ற குடிவரவு வழக்கறிஞர்கள், வழக்காடுவோர் மற்றும் அறிஞர்கள் கூட்டாக விட்ட ஊடக அறிக்கையில் பழமைவாதக் கட்சியானது குடிவரவாளர்களுக்கும் சிறுபான்மை இனங்களிற்கும் எதிரான கட்சியென்றும் அதற்கு புதிய கனடியர்கள் வாக்களிக்கக் கூடாது எனவும் கேட்டுள்ளனர்.

பல சான்றுகளை முன்வைத்து ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை இதுவரை பொதுமக்களால் அறியப்படாத பல விடயங்களை உள்ளடக்கியுள்ளது.

இந்த 48 வழக்கறிஞர்களில் கனடாவின் தமிழ் ஏதிலிகள் சார்பாக மிகுந்த ஈடுபாட்டோடும் காத்திரமாகவும் வாதாடிவரும் பார்பரா யக்மன், லோன் வோல்ட்மன் ஆகியோர் அடங்குவர். கனடியத் தேர்தலில் பழமைவாதக் கட்சி ஏதிலிகள் மற்றும் குடிவரவாளர்களுக்கு எதிரான கட்சியென ஒரு கட்சியை சுட்டிக் காட்டியது இதுவே முதல்முறையாகும்.

பெற்றோர்கள் பேரர்களை அழைக்கும் நடைமுறையில் 2005ம் ஆண்டில் 20,000 பேர் அழைக்கப்பட்டதாகவும் இந்த தொகை ஏறுமுகமாகச் செல்லாமல் 44 விழுக்காட்டால் குறைக்கப்பட்டு கடந்த ஆண்டு வெறும் 11 ஆயிரம் பேர் மாத்திரமே அனுமதிக்கப்பட்டதாகவும், கப்பல் கடத்தல்காரர்களைத் தண்டிப்பதாகக் கூறிக் கொண்டு வெறுமனே அகதிகளை மாத்திரம் தண்டிக்கும் வகையிலான சட்டங்களைக் கொண்டுவருவதாகவும் இக் கொடிய சட்டமூலத்தின் மூலம் சிறுவர்களையும் பெண்களையும் சிறைகளில் நிபந்தனையின்றி அடைக்க வழி செய்துள்ளதாகவும் குடிவரவாளர்களிற்கு உதவிபுரியும் நிறுவனங்களிற்கான நிதியுதவு குறைக்கப்பட்டுள்ளதாகவும்

நிதியுதவியில் பாகுபாடு காட்டப்படுவதாகவும் ஏதிலிகளுக்குத் தாங்கள் ஆதரவானவர்கள் எனக் காட்டும் அதேவேளை அகதிகள் தாங்கள் பிறந்த நாட்டிலிருந்தே இனி அகதிக்கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்றும் திருமணமாகி வருபவர்கள் கட்டாயம் இரு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்ற நடைமுறையை திட்டமிட்டே கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டு எனவே சிறுபாண்மை இனங்களைச் சார்ந்தோரும் புதிய குடிவரவாளர்களும் பழமைவாதக் கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது என மேற்படி வழக்கறிஞர்கள் மற்றும் அறிஞர்கள் அறிவுறுத்தியுள்ளனர்

கோழி முதல் மின்சார எல்க்ரோனிக் சாதனம் வரை சீனாவிலிருந்து தான் இறக்குமதி.

இதனால் உள்ளூர் உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதித்துள்ளார்கள்

85% மான தொழிற்சாலைகள் மூடிவிட்டார்கள்

வங்கிகளின் வட்டியை தந்திரமான முறையில் குறைத்து மக்களிடம்(வந்தேறுகுடிகளிடம்) இருந்த கறுப்பு வெள்ளை பணங்களை வெளிகொண்டு வரபண்ணி அதே நேரம் வீடுகளின் விலையையும் செயற்கையாக கூட்டி அரசின் வருமானத்தை பெருக்கினார்.

இதனால் இப்போ பலர் பாதிக்கபட்டுள்ளார்கள்.கடனட்டையின் வட்டி 22% ௨8 % வரை

இப்போ வங்கிகள் மக்களை பணத்தை செலவு செய்யாதீர்கள் என்று அறிக்கை விட்டுகொண்டிருக்கிறார்கள்

இவையாவும் இந்த ஆட்சியில் அரங்கேறிய நாடகம்

- சர்வதேச அளவில் கனடா ஒரு கூடிய பொருளாதரா பலம் கொண்ட நாடு, அரசியல் பலத்தை விட

- 6.5 பில்லியன்கள் மக்களை கொண்ட பூமிப்பந்தில், கிட்டத்தட்ட 34 மில்லியன்கள் மக்களை கொண்டது

- 0.05 சதவீத மக்களை கொண்ட கனடா 2 வீத உலக பொருளாதார வலுக்கொண்ட நாடு

- கனடா ஜி8 என்ற பொருளாதரா அமைப்பில் உள்ள நாடு, அதிகமான இயற்கை வளங்களுடன் தொழில்நுட்ப ரீதியாகவும் வளர்ந்த நாடு

சர்வதேச அரசியலில் கனடா ஒரு பலம்பொருந்திய நாடல்ல. கனடா அமெரிக்கா / நேட்டோ சொல்லுவதை செய்யும் ஒரு நாடு. அந்த வகையில் மேற்குலகில் அதிகளவு தமிழ் மக்களை கொண்ட நாட்டில், எமது கனேடிய அரசியல் ஒரு பொருளாதார அரசியலாக இருந்து, அமேரிக்கா, இந்தியா உட்பட்ட முக்கிய நாடுகளில் எமது கொள்கை முன்னேற்ற / பரப்புரைகளுக்கு முதலீடு செய்யக்கூடிய பலமுள்ளவர்களாக வரவேண்டும்.

Conservative கட்சியிலான அரசாங்கம் செய்யும் செயற்பாடுகள் எல்லாம் பொருத்தமானவை என்று கூறுவதற்கு இல்லை. ஆனால்… தற்போதைய நிலமையில் பல்வேறு அம்சங்களின் அடிப்படையில், பல்வேறு விடயங்களை சீர்தூக்கி பார்க்கும்போது லிபரல், அல்லது என் டீ பி அல்லது ( லிபரல் + என் டீ பி ) கூட்டாச்சி கனடா திருநாட்டிற்கு அதிகளவு பாதகமான நிலமையையே நீண்டகால நோக்கில் ஏற்படுத்தும்.

ஆகக்குறைந்தது இன்னமும் மூன்று வருடங்களிற்காயினும் Conservative கட்சி ஆட்சியில் நிலைக்கவேண்டும். இதுவே கனடாவிற்கு நல்லது. ஏனைய கட்சிகள் அரசாளக்கூடிய அரசாங்கங்களினோடு ஒப்பிட்டு பார்க்கையில் Conservative கட்சியின் ஆட்சி தற்போது அமைவதே சிறப்பானது என்பதே எனது அபிப்பிராயம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.