Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகள் குடாநாட்டில் இருக்க மாட்டாது

Featured Replies

இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகள் குடாநாட்டில் இருக்க மாட்டாது - யாழ். கட்டளைத் தளபதி திட்டவட்டம்

குடாநாட்டில் மக்களுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் படை முகாம்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்படுகின்றன. ஆனால் இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகள் என எவையும் இருக்காது. இவ்வாறு யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துரு சிங்க தெரிவித்தார். குழப்ப நிலை உள்ள எந்த இடத்திலும் இராணுவப் பிரசன்னம் அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ். நகர வர்த்தகர்களுக்கான விஷேட கூட்டமொன்றை படைத்தரப்பு நேற்று யாழ். கத்தோலிக்க மண்டபத்தில் நடத்தியது. இக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே யாழ். கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஹத் துருசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தனது உரையில் அவர் தெரிவித்ததாவது, யாழ். குடாநாட்டில் படையினரின் அள வைக்குறைத்து பொது மக்களுக்கு பாது காப்பு கெடுபிடிகளை இலகுவாக்கினோம். எனினும் கடந்த டிசம்பர் மாதம் யாழ். மாவட்டத்தில் அதிகரித்த குற்றச்செயல்களால் படையினரை மீண்டும் நான் வீதிக்கு அனுப்பினேன். சோதனைச் சாவடிகள், வீதி ரோந்து நடவடிக்கையை ஆரம்பித்தோம்.

இதனாலேயே குடாநாட்டில் இடம் பெற்ற குற்றச் செயல் களை என்னால் கட்டுப்படுத்த முடிந்தது. நாட்டின் ஏனைய பிரதேசங்கள், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது குடாநாட்டில் குற்றச் செயல்கள் மிகக் குறைவு. குற்றவாளிகள் இருக்கும் வரை குற்றச் செயல்களும் இடம் பெறும்.இராணுவத்திலும் ஒரு சில குற்றவாளிகள் உள்ளனர். அவர்களும் குற்றச் செயல் களில் ஈடுபடுவர். ஆனால் பொது மக்கள் அது தொடர்பில் அறிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்போம்.

யாழ். நகரில் தனியார் கட்டிடங்களில் இயங்கிய படைத்தளங்கள் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்காத இடங்களுக்கு மாற்றப்பட்டுவிட்டன.அத்துடன் கட்டிடங்களும் உரிமையாளர் களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. மேலும் பல உயர் பாதுகாப்பு வலயப் பகுதிகள் விடுவிக்கப்படுகின்றன. எனவே பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் படை முகாம்கள் நகர்த்தப்படுகின்றன. எனினும் யாழ். குடாநாட்டில் இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதி என எவையும் இருக்காது. குழப்பமான நிலையுள்ள இடங்களில் படையினரின் பிரசன்னம் அவசியம். இது இங்கு மட்டுமல்ல எல்லா நாடுகளிலும் உள்ள நிலை.

போர் முடிந்து விட்டது தானே இனி எதற்கு இராணுவம் எனக் கேட்பது தவறு. போர் முடிந்தாலும் இராணுவத்தினர் மக்களின் சமாதா னப் பாலமாக அமைவர். யாழ்.மாவட்டத்தில் கப்பம் கேட்கும் நட வடிக்கையை இல்லாது ஒழிப்பதற்கு படையினர் விழிப்பாக இருக்க வேண்டும் என ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சின் செயலாள ரும் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளனர். எனவே கப்பம் கேட்பது சலுகைகளை பெற்றுத் தருவதாக லஞ்சம் கேட்பது போன்ற அச்சுறுத்தல்கள் இருந்தால் உடனடியாக யாழ். வர்த்தகர்கள் படையினருக்கு தகவலை வழங்குங்கள். மாறாக கப்பம் வழங்குவதோ, இலஞ்சம் கொடுப்பதையோ செய்யாதீர்கள். காங்கேசன்துறை சீமெந்து உற்பத்தி நிலையத்தை மீண்டும் இயங்க வைப்பதற்கு அரசாங்கம் முயற்சித்து வருகிறது. ஆனால் அங்கு வெளியேறும் சுண்ணாம்புக் கலவைகளால் குடிநீருக்குப் பாதிப்பு ஏற்படுமாயின் அத்திட்டத்தை கைவிடவேண்டிவரும்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=18937

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.