Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழப் பிரச்சனையின் ஜெ. மெடத்தின் மாஸ்டர் பிளானும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இருந்தான ஒரு பார்வை..................

ஈழப் பிரச்சனையை கையிலெடுக்கும் அதிமுக...சும்மா இருக்குமா திமுக?

சென்னை: காட்சிகள் வேக வேகமாக மாறிக் கொண்டிருக்கின்றன. போர் என்றால் மக்கள் சாவது சகஜம் என்ற ஜெயலலிதா, இப்போது தமிழக முதல்வர். ஈழப் படுகொலைகளுக்காக ராஜபக்சேவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முயற்சிப்பேன் என முதல் நாளே அறிவித்துள்ளார்.

தமிழுணர்வாளர்கள் அகமகிழ்ந்து போயிருக்கிறார்கள்!

ஈழப் படுகொலைகளுக்கு உற்ற துணைவர்களாக இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியாவும் பிரதமர் மன்மோகன் சிங்கும் இதற்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடத் தயாராக இல்லாத நிலையில், இதில் மாநில முதல்வரான ஜெயலலிதா முயற்சி என்னவாக இருக்கும்... எந்த அளவு பலன் தரும்... எந்த அளவு உண்மையாக இந்த முயற்சிகளில் அவர் இறங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

திமுகவை காங்கிரஸ் கழற்றிவிட நெருக்கடி தருவதற்காகவே ஆட்சிக்கு வந்தவுடனேயே ஈழப் பிரச்சனையை ஜெயலலிதா கையில் எடுத்ததாகத் தெரிகிறது.

ஈழப் பிரச்சினையை ஜெயலலிதா முழுவீச்சில் கையிலெடுக்கும் போது, ஈழத் தமிழர்களுக்காக ஆட்சியையே இழந்தவன் நான் என அடிக்கடி சொல்லி வரும் திமுக தலைவர் கருணாநிதி மட்டும் சும்மா இருக்க முடியுமா?.

இனி ராஜபக்சேவை தூக்கிலேற்றவேண்டும் என்ற குரல் அறிவாலய முகாமிலிருந்து சற்று பலமாகவே கேட்க ஆரம்பிக்கும். அதற்கு அச்சாரமாக, தந்தை செல்வா காலத்திலிருந்து இலங்கைப் பிரச்சினையைத் தீர்க்க திமுக மேற்கொண்ட முயற்சிகள் தொடங்கி சகோதர யுத்தம் வரை என கருணாநிதி தரப்பிலிருந்து தொடர்ந்து அறிக்கைகள் வெளியாகும்.

மீண்டும் மனித சங்கிலி, உண்ணாவிரதங்கள், மீனவர்களுக்காக கனிமொழி நடத்திக் காட்டியது போன்ற ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் அரங்கேறும்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டு காங்கிரஸ் கட்சி சும்மா இருக்குமா? கூட்டணிக்குள் இருந்து கொண்டே ஈழப் பிரச்சினையில் திமுக தீவிரம் காட்டுவதை அமைதியுடன் வேடிக்கைப் பார்க்குமா?. திமுகவுக்கு சிபிஐ உள்ளிட்ட பல வகைகளில் நெருக்கடிகளை காங்கிரஸ் அதிகரிக்கும். இதைத் தான் எதிர்பார்க்கிறார் ஜெயலலிதா.

தான் ஈழப் பிரச்சனையை கையில் எடுத்தால் பதிலுக்கு திமுகவும் அதை கையில் எடுக்கும். இதன்மூலம் திமுக-காங்கிரஸ் உறவை காலி செய்யலாம் என்பது அவரது திட்டம். அதில் அவர் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றுவிட்டதாகவே தெரிகிறது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால் நாடு முழுவதும் கெட்ட பெயர் வாங்கிவிட்ட காங்கிரஸ், திமுகவை வெட்டி விட தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் அடுத்து கைகோர்க்க வேண்டிய இடம் அதிமுக தான். இந் நிலையில் அந்தக் கட்சி ஈழப் பிரச்சனையை பெரிதாக்கி, தனக்கு எதிராக திரும்புவதற்குள், அதிமுகவை கூட்டணிக்குள் கொண்டு வந்துவிடுவது என்ற முடிவுக்கு வந்துவிட்டார் சோனியா. இதனால் தான் யாரும் எதிர்பாராத வகையில் டீ பார்ட்டிக்கு ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இப்படி காங்கிரஸால் வெட்டிவிடப்பட்டாலும் திமுக கையில் எடுக்கப் போகும் பிரச்சனை ஈழ விவகாரமே.

நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவு படு வீழ்ச்சியைச் சந்தித்துள்ள திமுகவுக்கும் இப்போதைக்கு இளைப்பாறக் கிடைத்திருப்பது ஈழப் பிரச்சினை என்ற நிழல்தான் என்கிறார்கள் நடுநிலையாளர்கள

http://thatstamil.oneindia.in/news/2011/05/16/why-jaya-shows-great-interest-eelam-aid0090.html

எம்மைப்பொறுத்தவரை எமக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்கவேண்டும். அதற்கு இந்தியா ஒரு முக்கிய பங்காற்ற வேண்டும். அது நடக்க, தமிழகத்தில் எமது பிரச்சனை உயிர்ப்புடன் இருக்க வேண்டும்.

தோல்வியில் இருந்து தான் மீள தி.மு.க. எமது பிரச்சனையை பாவிக்க நினைத்தால் அது எமக்கு நன்மையே. அ.தி.மு.க., தி.மு.க. வின் நகர்வுகளுக்கு கவனம் செலுத்த வேண்டி இருக்கும். அத்துடன் மத்தியும் (டெல்லி) இந்த உணர்வுகளுக்கு மதிப்பளித்தே ஆக வேண்டும் என நம்பலாம்.

கள்ளனிடம் தப்பிக் கொள்ளையர் கூட்டதில் மாட்டிக் கொண்ட கதைதான் இது. இருந்து பாருங்கள் எதுவும் நடக்காது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழகத்தில் இருந்தான ஒரு பார்வை..................

ஈழப் பிரச்சனையை கையிலெடுக்கும் அதிமுக...சும்மா இருக்குமா திமுக?

சென்னை: காட்சிகள் வேக வேகமாக மாறிக் கொண்டிருக்கின்றன. போர் என்றால் மக்கள் சாவது சகஜம் என்ற ஜெயலலிதா, இப்போது தமிழக முதல்வர். ஈழப் படுகொலைகளுக்காக ராஜபக்சேவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முயற்சிப்பேன் என முதல் நாளே அறிவித்துள்ளார்.

தமிழுணர்வாளர்கள் அகமகிழ்ந்து போயிருக்கிறார்கள்!

ஈழப் படுகொலைகளுக்கு உற்ற துணைவர்களாக இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியாவும் பிரதமர் மன்மோகன் சிங்கும் இதற்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடத் தயாராக இல்லாத நிலையில், இதில் மாநில முதல்வரான ஜெயலலிதா முயற்சி என்னவாக இருக்கும்... எந்த அளவு பலன் தரும்... எந்த அளவு உண்மையாக இந்த முயற்சிகளில் அவர் இறங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

திமுகவை காங்கிரஸ் கழற்றிவிட நெருக்கடி தருவதற்காகவே ஆட்சிக்கு வந்தவுடனேயே ஈழப் பிரச்சனையை ஜெயலலிதா கையில் எடுத்ததாகத் தெரிகிறது.

ஈழப் பிரச்சினையை ஜெயலலிதா முழுவீச்சில் கையிலெடுக்கும் போது, ஈழத் தமிழர்களுக்காக ஆட்சியையே இழந்தவன் நான் என அடிக்கடி சொல்லி வரும் திமுக தலைவர் கருணாநிதி மட்டும் சும்மா இருக்க முடியுமா?.

இனி ராஜபக்சேவை தூக்கிலேற்றவேண்டும் என்ற குரல் அறிவாலய முகாமிலிருந்து சற்று பலமாகவே கேட்க ஆரம்பிக்கும். அதற்கு அச்சாரமாக, தந்தை செல்வா காலத்திலிருந்து இலங்கைப் பிரச்சினையைத் தீர்க்க திமுக மேற்கொண்ட முயற்சிகள் தொடங்கி சகோதர யுத்தம் வரை என கருணாநிதி தரப்பிலிருந்து தொடர்ந்து அறிக்கைகள் வெளியாகும்.

மீண்டும் மனித சங்கிலி, உண்ணாவிரதங்கள், மீனவர்களுக்காக கனிமொழி நடத்திக் காட்டியது போன்ற ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் அரங்கேறும்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டு காங்கிரஸ் கட்சி சும்மா இருக்குமா? கூட்டணிக்குள் இருந்து கொண்டே ஈழப் பிரச்சினையில் திமுக தீவிரம் காட்டுவதை அமைதியுடன் வேடிக்கைப் பார்க்குமா?. திமுகவுக்கு சிபிஐ உள்ளிட்ட பல வகைகளில் நெருக்கடிகளை காங்கிரஸ் அதிகரிக்கும். இதைத் தான் எதிர்பார்க்கிறார் ஜெயலலிதா.

தான் ஈழப் பிரச்சனையை கையில் எடுத்தால் பதிலுக்கு திமுகவும் அதை கையில் எடுக்கும். இதன்மூலம் திமுக-காங்கிரஸ் உறவை காலி செய்யலாம் என்பது அவரது திட்டம். அதில் அவர் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றுவிட்டதாகவே தெரிகிறது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால் நாடு முழுவதும் கெட்ட பெயர் வாங்கிவிட்ட காங்கிரஸ், திமுகவை வெட்டி விட தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் அடுத்து கைகோர்க்க வேண்டிய இடம் அதிமுக தான். இந் நிலையில் அந்தக் கட்சி ஈழப் பிரச்சனையை பெரிதாக்கி, தனக்கு எதிராக திரும்புவதற்குள், அதிமுகவை கூட்டணிக்குள் கொண்டு வந்துவிடுவது என்ற முடிவுக்கு வந்துவிட்டார் சோனியா. இதனால் தான் யாரும் எதிர்பாராத வகையில் டீ பார்ட்டிக்கு ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இப்படி காங்கிரஸால் வெட்டிவிடப்பட்டாலும் திமுக கையில் எடுக்கப் போகும் பிரச்சனை ஈழ விவகாரமே.

நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவு படு வீழ்ச்சியைச் சந்தித்துள்ள திமுகவுக்கும் இப்போதைக்கு இளைப்பாறக் கிடைத்திருப்பது ஈழப் பிரச்சினை என்ற நிழல்தான் என்கிறார்கள் நடுநிலையாளர்கள

http://thatstamil.oneindia.in/news/2011/05/16/why-jaya-shows-great-interest-eelam-aid0090.html

வெறும் "ரீ" பாட்டிக்கு இந்த அளவுக்கு அநுமானங்கள் தேவையானதுதானா?

உப்புச் சப்பில்லாத எழுத்து. அ தி மு க வெற்றியை காங்கிரஸ் என்ன, அ தி மு க வே அறிந்திருக்கவில்லை. அப்படியிருக்கும்போது காங்கிரஸ் கட்சியோடு உடனடிக் கூட்டமைப்பிற்கு அ தி மு க அறவே விரும்பாது.

தி மு க அவ்வளவு இலகுவாக ஈழப் பிரச்சனையையும் போர்க்குற்ற விசாரணையையும் கையிலெடுக்க முடியாது. அப்படி எடுத்துக் கொண்டாலும் இன்னும் இரண்டு வருடங்கள் நீடிக்க வேண்டிய மத்திய ஆட்சிக்கு தி மு க ஆதரவு தேவை. இந்தக் காலத்திற்குள் வெறும் சலசலப்பே தவிர வேறொன்றும் நடக்காது.

உலக அரங்கில் நிழலாடிக் கொண்டிருக்கும் இந்தப் போர்க்குற்றம் இலகுவில் மறைக்கப்படுவதற்கான சாத்தியங்களும் தென்படவில்லை. இலங்கைக்கு இவ்விடயத்தில் நேரடி ஆதரவுகளை வழங்கிவந்த சீனா, ரஷ்யா ஆகியன ஒருவித மௌன நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளன.

இதற்காகக் குரல் கொடுத்து ஆட்சி மாற்றத்தில் வெற்றிகண்ட ஈழத்தமிழ் ஆதரவாளர்களின் செயற்பாடுகள் காங்கிரஸ் கூட்டணியை விரும்பும் அ தி மு க விற்கு எதிராக மாற்றமடையும் என்பதை அவர்கள் அறிவார்கள்.

இதில் ஒன்றுமட்டும் உண்மையாகலாம். காங்கிரஸையும் தி மு க வையும் தனிமைப்படுத்துவது நோக்கத்தில் ஒன்றாக இருக்கலாம். அதவும் இப்போதைக்குச் சாத்தியப்படாது.

காங்கிரஸ் தி மு க இரண்டுமே பிரச்சனைகளுக்குள் சிக்கியுள்ள கட்சிகள்.

ஜெயலலிதாவை சோனியா விருந்துக்கு அழைத்ததன் எதிரொலி- திமுக மத்திய அமைச்சரவையிலிருந்து விலகுகிறது?

முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து கூறி தேநீர் விருந்துக்கு வருமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்ததால் பெரும் அதிருப்தி அடைந்துள்ள திமுக, மத்திய அமைச்சரவையிலிருந்து விலகி வெளியிலிருந்து ஆதரவு தருவது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் பச்சோந்தித்தனம் உலகம் அறிந்த ஒன்றுதான். இருப்பினும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக பெரும் வெற்றியையு்ம், திமுக பெரும் தோல்வியையும் சந்தித்ததைத் தொடர்ந்து அப்ப்டியே அந்தர்பல்டி அடித்தது காங்கிரஸ்.

திமுகவின் தோல்விக்கு காங்கிரஸும் ஒரு காரணம் என்பதை வசதியாக மறந்து விட்ட அந்தக் கட்சி, அவசரம் அவசரமாக ஜெயலலிதாவுக்கு வாழ்த்து கூறியது. மேலும் சோனியா காந்தியோ, ஜெயலலிதாவுடன் 2 முறை போனில் பேசி வாழ்த்து கூறினார். தேநீர் விருந்துக்கும் வருமாறு அழைப்பும் விடுத்தார்.

இதுகுறித்து ஜெயந்தி நடராஜனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது இன்னும் திமுக எங்களது கூட்டணிக் கட்சிதான். ஜெயலலிதாவுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்ததும், வாழ்த்து கூறியதும் ஜனநாயக நடைமுறைதான் என்று கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் இந்த செயலால் திமுக கடும் அதிருப்தி அடைந்துள்ளது. மேலும், மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள மு.க.அழகிரி உள்ளிட்ட திமுக அமைச்சர்களும் இனிமேல் டெல்லிக்கு சென்று என்ன பயன் என்று கூறி வருவதாக தெரிகிறது.

இதையடுத்து மத்திய அமைச்சரவையிலிருந்து மட்டும் வெளியேறி வெளியிலிருந்து ஆதரவு தரும் முடிவை எடுப்பது குறித்து திமுக சிந்தித்து வருவதாக கூறப்படுகிறது. அதேசமயம், கூட்டணியை விட்டு வெளியேறாது திமுக என்று தெரிகிறது. குறிப்பாக கனிமொழி விவகாரத்தில் ஒரு முடிவு தெரியும் வரை காங்கிரஸுடனான கூட்டணியை திமுக தானாக முறிக்காது என்றும் கூறப்படுகிறது.

தேர்தல் முடிவால் சோர்ந்து போய் வீட்டோடு முடங்கியுள்ள கருணாநிதியை, திமுக முன்னணித் தலைவர்கள் கடந்த 2 நாட்களாக சந்தித்துப் பேசி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் போக்கு குறித்து அவர்கள் கருணாநிதியிடம் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

வேண்டும் என்றே திமுகவை சீண்டுவது போல காங்கிரஸ் நடப்பதாக மூத்த தலைவர்கள் கருணாநிதியிடம் கூறியதாக தெரிகிறது.

இருப்பினும் தற்போது ஆட்சி அதிகாரம் கையில் இல்லாத நிலையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் கருணாநிதி வீடு வரை வந்து விட்ட நிலையில் அவசரப்பட்டு முடிவெடுக்க திமுக தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. எனவே அமைச்சரவையிலிருந்து மட்டும் விலகிக் கொண்டு, வெளியிலிருந்து ஆதரவு தருவதாக அறிவிக்கலாமா என்பது குறித்து திமுக தரப்பு யோசித்து வருவதாக தெரிகிறது.

தற்போது மத்திய அமைச்சரவையில் அழகிரி உள்பட 6 அமைச்சர்கள் திமுகவுக்கு உள்ளனர்.

மேலும் 2014 ல் நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலுக்குள் கட்சியை வலுப்படுத்த வேண்டிய அவசியம், அதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கருணாநிதி, கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து திமுக தரப்பில் கூறுகையில், பிரதமர் மன்மோகன் சிங், ஜெயலலிதாவை வாழ்த்துவது என்பது வேறு, சோனியா காந்தி வாழ்த்து கூறுவது என்பது வேறு. சோனியாவுக்கும், ஜெயலலிதாவுக்கும் எப்போதும் நல்லுறவு இருந்ததில்லை. மேலும் திமுகவின் பரம விரோதி அதிமுக என்பது சோனியா காந்திக்குத் தெரியாததல்ல. திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில் அதிமுக தலைவரை அவர் வாழ்த்துவது என்பது சீரியஸான ஒரு விஷயம்.

அதிமுகவுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தயாராகி விட்டதாகவே தலைவர் கருதுகிறார். அவரது கருத்தே எங்களது கருத்தும். 2014 லோக்சபா தேர்தலை இணைந்து சந்திக்க காங்கிரஸும், அதிமுகவும் முடிவு செய்துள்ளதாக நாங்கள் கருதுகிறோம் என்றனர்.

http://news.lankasri.com/view.php?22GpXbc3BI34eW29303jQqdd3QjF20t922e4mLBcb3pGO2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.