Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்ச்சூழலிருந்து மீண்ட சிறுவர்களை அச்சுறுத்தும் சிறீலங்காப்படையினர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sunday, May 22nd, 2011 | Posted by பல்லவன்

போர்ச்சூழலிருந்து மீண்ட சிறுவர்களை அச்சுறுத்தும் சிறீலங்காப்படையினர்

இன்று காலை 9.00மணியளவில் சிறுவர் கழக தொண்டு நிறுவனம் எற்பாடு செய்திருன்த சுற்றுலா நிகழ்வு காட்டுவளவு வல்வெட்டித்துறையில் ஆரம்பமான வேளை சிங்கள சிப்பாய்கள் குறுக்கிட்டு நிறுத்தினர். பின்னர் சிறீலங்கா இராணுவ அதிகாரிகளும் விசாரணை செய்தார்கள். பிற்பாடு தங்களுக்கு ஏன் அழைப்பு தரவில்லையென கேட்டு மிரட்டியுள்ளனர்.

சிங்களப்படையினரின் மிரட்டலால் 100க்கு மேற்பட்ட சிறுவர்கள் பயத்தால் அஞ்சி நடுங்கினர். இத்தகவல் அரசியல் பிரமுகர்கள் புலனாய்வாளர்கள்; வல்வெட்டித்துறை பொலிஸ் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

சிறீலங்கா இரணுவ அடக்கு முறை உலகம் அறிந்த விடயம். சிங்கள இரணுவம் தமிழ்ச்சிறுவர்களை வேலை வாங்கியும் மிரட்டியும் வருகின்றனர். இது இன்றைய நிலைப்பாடாகும் ஜ.நாவின் போர்குற்ற விசாரணை அறிக்கையின் பின்னரும் சிங்களப்படையினரின் அதிகரித்து அடக்குமுறைகள் தொடர்கின்றது என்பது தெளிவாகின்றது.

ஜ.நா அவர் இனியும் என்ன செய்யப்போகிறது மீண்டும் சிறுவர்களை அழித்தொழிக்கும் வரை பார்த்துக்கொண்டிருக்கப்போகிறதா….?

Short URL: http://meenakam.com/?p=25144

ஞாயிற்றுகிழமை, மே 22, 2011

வல்வெட்டித்துறை, கொட்டியால் கடற்கரைப் பகுதியில் இன்று இடம்பெற்ற சம்பவமானது, சாதாரண ஒவ்வொரு விடயங்களில் கூட இராணுவத்தின் தலையீடு நிறைந்திருப்பதனையும் அவர்களின் முன் அனுமதி இன்றி எதனையும் செய்யக் கூடாது என்பதனையுமே வெளிக்காட்டுகிறது எனத் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம். கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

.

வல்வெட்டித்துறை, கொட்டியால் கடற்கரைப் பகுதியிலுள்ள நேதாஜி விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுனாமியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான நிகழ்வில் ஏற்றப்பட்டிருந்த கொடிகளை அகற்றுமாறு இராணுவத்தினர் உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

.

இந்தச் சம்பவம் தொடர்பில் எமது இணையத்தளத்துக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், இராணுவத்தினரின் இந்த வற்புறுத்தல் தொடர்பில் தன்னிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த விடயத்தை உடனடியாகக் கையாள முடியாத நிலை எனக்கு ஏற்பட்டது. இராணுவத்தினரின் உத்தரவுக்கு அமைய கொடிகளை அகற்றினால் அல்லது படையினரால் கொடிகள் பலாத்காரமாக அகற்றப்பட்டால் தனது கவனத்துக்கு மீண்டும் கொண்டு வருமாறு அவர்களை நான் கேட்டுக் கொண்டேன். அதன் பின்னர் அவர்கள் என்னுடன் இது குறித்து தொடர்பு கொள்ளவில்லை.

.

குறிப்பிட்ட கொடியில் சிகப்பு, மஞ்சள் போன்ற நிறங்கள் இடம்பெற்றிருப்பின் அதனை சிறிலங்கா படையினர் புலிகள் ஆதரவுக் கொடி என நினைத்துக் கொண்டார்களோ தெரியவில்லை.

.

எது எப்டியிருப்பினும் வடக்கு, கிழக்கில் இராணுவ நிர்வாகமே இன்று செயற்படுகிறது என்பது மட்டும் இதன் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது. அத்துடன் ஒவ்வொரு சின்ன விடயங்களிலும் படைத்தரப்புத் தலையீட்டையும் இது சுட்டி நிற்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

.

வல்வெட்டித்துறை கொட்டியால் கடற்கரைப் பகுதியில் நேதாஜி கழக விளையாட்டு மைதானத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட சிறு குழந்தைகளுக்கென ஏற்படு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கழக கொடியினை அகற்றுமாறு இராணவத்தினர் வற்புறுத்தியதாக இளைஞர்கள் தன்னிடம் முறைப்பாடு செய்ததாக எம் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

.

இந்த சிறார் விளையாட்டிற்கு இராணுவத்திற்கு எந்தவித அழைப்பும் கொடுக்கப்படவில்லை எனபது குறிப்பிடத்தக்கது.

Bookmark/Search this post with:http://www.eelanatham.net/story/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D

  • கருத்துக்கள உறவுகள்

முற்று முழுதான இராணுவ அச்சுறுத்தல்களுக்கூடாகவே அங்குள்ள மக்களின் வாழ்வு நகர்ந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு சிறு விடயங்களிலும் வேண்டா விருந்தாளியாக இராணுவம் மூக்கை நுழைக்கிறது. இராணுவம் மூக்கை நுழைக்கிறது என்பதற்காக எதிர்கால சந்ததிக்கான ஆரோக்கியமான வளர்ச்சியையும் வழிகாட்டலையும் நிறுத்திவைக்கமுடியாது. முடிந்தவரை இந்த முட்டுக்கட்டைகளுக்குள்ளாலும் எம்மை வளர்ச்சிப்படுத்துவதே இன்றைய தேவை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.