Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொதிக்கிறது திருமலை...

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூதூரில் வயலுக்குச் சென்ற குடும்பஸ்தர் சிறிலங்கா பொலிசாரால் அடித்தக் கொலை!

மூதூர் மூன்றாம் கொலனி என்னும் இடத்தில் நேற்று முன்தினம் இரவு வேளாண்மை வயலுக்குக் காவலுக்குச் சென்ற தனபாலன் என்ற குடும்பஸ்த்தர் சிறிலங்காப் பொலிசாரால் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மேற்படி நபரை உறவினர்கள் தேடிச் சென்ற போது சடலம் அடி காயங்களுடன் வீதியில் கிடந்தது

இச்சம்பவம் தொடர்பாக தெயிவத்தப் பொலிஸ் நிலையத்தில் உறவினர்கள் முறைப்பாடு செய்வதற்காக சென்ற போது இவ்வாறான சம்பவம் இடம்பெறவில்லை இது தொடர்பாக எங்களுக்கு எதுவித தொடர்புமில்லையெனப் பொலிசார் கைவிரித்து விட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் தெயிவத்தை பொலிஸ் நிலையத்தை அண்டியுள்ள இடத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தனபாலனின் படுகொலைக்கு நீங்களே காரணம். இதற்கு நீதியான விசாரணை வழங்க வேண்டும். இல்லையேல் இப்பிரதேச்தை விட்டு வெளியே வேண்டும் என கோசங்களை எழுப்பி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் கந்தளாய்ப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு

  • Replies 107
  • Views 10.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசாரணைக்கு செல்லமுடியாமல் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் படுகொலையுண்ட மாணவரின் பெற்றோர்

திருகோணமலையில் படையினரால் படுகொலை செய்யப்பட்ட ஐந்து தமிழ் மாணவர்களதும் பெற்றோர், நீதிமன்ற விசாரணைகளுக்கு செல்ல முடியாதளவுக்கு கடும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றனர். வழக்கை வாபஸ் பெறுமாறும் இல்லையேல் குடும்பத்துடன் அழித்து விடுவோமெனத் தினமும் பல தொலைபேசி அழைப்புகள் வருவதாக, படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். மிரட்டல் காரணமாக ஏற்கனவே, இரு மாணவர்களது பெற்றோர் செவ்வாய்க்கிழமை ஆரம்பமான விசாரணைகளுக்குச் செல்லவில்லை. இனியும் தாங்கள் செல்லப் போவதில்லையெனவும் அவர்கள் கூறியுள்ளனர். கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதால் மட்டுமல்லாது இந்த நீதி விசாரணைகளில் தங்களுக்கு நம்பிக்கை எதுவுமில்லையென்றும் ஏற்கனவே நடைபெற்ற பல படுகொலைகளின் போது நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளைத் தாங்கள் அறிவோமெனவும் கூறியுள்ளனர். இதேநேரம் முதல் நாள் விசாரணைக்காக திருகோணமலை நீதிமன்றத்திற்குச் சென்றவர்களுக்கு, தினமும் பத்திற்கும் மேற்பட்ட தடவை சிங்களத்தில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர். அச்சுறுத்தல் காரணமாக தாங்கள் தொடர்ந்தும் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருப்பதாகவும் வெளியே எங்கும் செல்வதில்லையெனவும், கொல்லப்பட்ட மாணவர்களின் குடும்பத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் அலுவலகத்திற்கு விசாரணைக்காக கூடச் செல்ல முடியாத நிலையில் தாங்களிருப்பதாகவும் பெற்றோர் கூறினர்.

இதேநேரம், இந்தப் படுகொலை விசாரணையை தொடர்வதற்கு ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்கொள்ளத் தாங்கள் தயாராயிருப்பதாகவும் அச்சமின்றி இவர்கள் விசாரணைகளுக்கு சென்று படையினரின் இந்த அட்டூழியத்தை வெளியுலகுக்கு தெரியப்படுத்த வேண்டுமெனவும் பொது அமைப்புகள் தெரிவித்துள்ளன.

www.nitharsanam.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மல்லிகைத் தீவில் பலியான 2 தமிழரின் சடலங்களை ஐ.சி.ஆர்.சி. ஊடாக ஒப்படைக்க நீதிவான் பணிப்பு

மூதூர்-மல்லிகைத் தீவில் நடந்த படையினருடனான மோதல் சம்பவம் ஒன்றில் பலியான இரு தமிழர்களின் சடலங்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகள் ஊடாக, அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி மூதூர் பொலிஸாருக்கு மூதூர் நீதிவான் மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவிட்டார். இவ்விரு சடலங்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க மூதூர் பிரதிநிதிகளால் அடையாளங் காணப்பட்டன. கடந்த புதன்கிழமை மூதூர் பொலிஸார் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகள் முன்னிலையிலே மூதூர் நீதிவான் இவ்வுத்தரவைப் பிறப்பித்ததுடன் இது தொடர்பான மேலதிக அறிக்கையை நீதிமன்றத்துக்கு உடனடியாகச் சமர்ப்பிக்கும்படியும் மூதூர் பொலிஸாருக்கு உத்தரவிட்டார். கொல்லப்பட்ட இரு தமிழர்களும் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் என்றும் படையினர் தெரிவித்திருந்தனர்.

www.nitharsanam.com

உதுகளுக்கு எல்லாம் ஆதாரம் இல்லை. BBC CNN போட்டவங்களோ? இல்லாட்டி கண்காணிப்பு குழு அறிக்கை விட்டதோ?

விசாரணை ஆணைக்குழு வைத்திருக்கு அரசாங்கம். அவர்கள் அறிக்கைவிடமுதல் வெறும் ஊகத்திலை செய்தி எழுதி மக்களை குளப்பி குளிர்காய நிக்கினம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருமலையில் தமிழர்களின் வீடுகள் மீது சிங்களக் காடையர்கள் கல்வீச்சு

திருமலையில் சிங்கநகர் சந்தியிலிருந்து தமிழர் வாழும் பிரதேசங்களிற்கு முகங்களை கறுப்புத் துணிகளால் கட்டியவாறு கைகளில் தடிகள், பொல்லுகளுடன் வந்த சிங்களக் காடையர் குழுவொன்று வந்து தமிழர்களின் வீடுகள் மீது சரமாரியாக கல்வீச்சை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து உடனடியாக தமிழ் மக்கள் ஸ்ரீ லங்கா காவற்துறையினருக்கு அறிவித்திருந்த போதிலும் உடனடியாக அவ்விடத்திற்கு காவற்துறையினர் வரவில்லை. அதன் பின்னர் சுமார் இரண்டரை மணித்தியாலங்களின் பின்னர் அவ்விடத்திற்கு காவற்துறையினர் வந்திருந்தபோதும் காடையர் குழு அவ்விடத்திலேயே தரித்து நின்றுள்ளது. எனினும் இது தொடர்பாக காவற்துறையினர் அவர்களை விலகிச்செலலுமாறு கோரவோ, விசாரணைகளை நடத்தவோ இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழ் மக்கள் எவரும் வீதிகளுக்கு இறங்க முடியாத நிலையிலேயே இருந்துள்ளனர். தமிழ் மக்களின் போக்குவரத்தினை கட்டுப்படுததும் ஒரு உள்நோக்குடனே யே இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என தமிழ்மக்கள் கருதுகின்றனர்.

www.sankathi.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொங்கல் பொருட்கள் வாங்கச் சென்றவர்கள் படையினரால் கைது

திருமலை மாவட்டம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து பொங்கலுக்காக பொருட்கள் வாங்கச் சென்ற மூன்று பேர் சிறிலங்காப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசரெத்தினம் குணராஜா (31) கடங்கரைச்சேனை, சந்திரசேகரம் ஈஸ்வரன் (34), கடற்கரைச்சேனை கதிர்காமத்தம்பி ஆனந்தன் (27) களைமுந்தல் ஆகிய மூவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி நபர்கள் தைப்பொங்கலுக்கு பொருட்கள் வாங்கச் சென்ற போது இவர்களை படையினர் கைது செய்துள்ளனர்.

www.battieezhanatham.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருமலை மாநகர சபை விடுதி மீது கைக்குண்டு வீச்சு நால்வர் காயம்

திருமலையில் நேற்றுப் பிற்பகல் வீடொன்றின் மீது வீசப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் திருமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருமலை நகரிலிருந்து மூன்று மைல் தொலைவிலுள்ள காந்தி நகரிலுள்ள மாநகர சபை விடுதி கட்டிடம் மீதே இத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

திருமலையில் சிங்கள மக்களால் கடைப்பிடிக்கப்பட்ட ஹர்த்தால் விலக்கப்பட்டுள்ளதாக அரச படையினர் அறிவித்து சில மணித்தியாலங்களில் இந்தச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

நேற்று பொங்கல் தினம் என்பதால் வீட்டிலிருந்து பொங்கல் கொண்டாடிவிட்டு, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த போதே மேற்படி குடும்பத்தாரின் இருப்பிடத்தில் இந்த கைக்குண்டு விழுந்து வெடித்துள்ளது.

இச்சம்பவத்தினால், வீரசிங்கம் ராஜேந்திரகுமார் (35) என்ற உத்தியோகஸ்தர், அவரது மனைவி, ராஜேந்திரகுமார் ராஜேஸ்வரி (35), இவர்களின் பிள்ளைகளான ராஜேந்திரகுமார் வித்தியாகரன் (04), ராஜேந்திரகுமார் சாஜிவித்தியா (06) ஆகியோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி இடத்திற்கு யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழுவினர் பார்வையிடுவதற்கு வந்தபோது அவ்விடத்தில் நின்ற ஸ்ரீலங்கா விமானப் படையினரும், ஸ்ரீலங்கா இராணுவத்தினரும், அவர்களை விசாரணைகளை செய்யவிடாது தடுத்துள்ளனர். பின்னர் உப்புவெளி ஸ்ரீலங்கா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

www.battieezhanatham.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருமலை அன்புவழிபுர கைக்குண்டு வீச்சில் 4 பேர் காயம்.

திருகோணமலை அன்புவழிபுரத்தில் விமானப்படையினர் மீது இனம்தெரியாதோரால் கைக்குண்டு வீசப்பட்டுள்ளது. இதன்போது விமானப்படை வீரர் ஒருவர் படுகாயமடைந்ததோடு சம்பவத்தில் மூன்று

பொதுமக்களும் காயமடைந்துள்ளனர்.நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8.10 மணியளவில்

இக்கைக்குண்டு வீசப்பட்டுள்ளது.பலத்த காயங்களுக்கு இலக்கான விமானப்படையினர் மற்றும் பொதுமக்கள் திருகோணமலை அரசினர் பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உப்புவெளி பொலிசார் இது தொடர்பான விசாரணையினை மேற்கொண்டுள்ளனர்]size

தகவல் மூலம்-பதிவு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருமலையில் கைவிடப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம்

திருகோணமலை பொங்குதமிழ் சமூகம் நடாத்திவந்த பணிபுறக்கணிப்புப் போராட்டம் நேற்றுமுதல் கைவிடப்பட்டுள்ளது. வடக்கு - கிழக்கு மகாணத்திற்கான விசேட பிரதிப் பொலிஸ்மா அதிபருடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் பொங்கு தமிழ் சமூகம் முன்வைத்த ஐந்து கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டமையை அடுத்தே இப்பணிப் புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டது.

1. இராணுவத்தினர் காவல் நடவடிக்கை, ரோந்து நடவடிக்கை, தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடும் போது முகத்தை கறுப்புத் துணியால் மறைத்துக் கொண்டுசெயல்படுதல் தவிர்க்கப்படவேண்டும்.

2. தொழில்நுட்பக் கல்லூரியில் தங்கியிருக்கும் படையினரும், ஆலயங்களில், பாடசாலைகள், மற்றும் மதநிறுவனங்கள் என்பனவற்றில் நிறுத்தப்பட்டுள்ள படையினர் விலக் கப்பட வேண்டும்.

3. வீதித்தடைகள் என்பனவற்றில் பணிக்கு அமர்த்தப்படுகின்ற படையினருடன் பொலிசாரும் சேவையில் ஈடுபடுத்தப்படவேண்டும். பொலிசாரின் எண்ணிக்கை படையினரதும் எண்ணிக்கையிலும் பார்க்க அதிகமாக இருத்தல்வேண்டும்.

4. ஊர்காவல் படையினர் சீருடையுடன் மாத்திரம் பொலிசாருடன் இணைந்து பணியில் ஈடுபடுதல் வேண்டும்@ பொலிசார் இன்றி இவர்கள் தனித்து செயற்படமுடியது.

5. தேடுதல் நடவடிக்கை மற்றும் கைதுகளின்போது கைது செய்யப்படுவதற்கான காரணம், கைது செய்யப்படும் நபர், கைது செய்து கொண்டு செல்லப்படும் இடம் என்பன உறவினர்களுக்கு எழுத்து மூலம் கொடுக்கவேண்டும்.

இந்த கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய கோரிக்கைகளை தாம் அமுல்படுத்துவதாகவும் போராட்டத்தினை கைவிடுமாறும் வேண்டினார்.

நேற்றுக்காலை 11 மணி தொடக்கம் 1 மணி வரை பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் இந்து குருமார்கள், கத்தோலிக்க மதத் தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், சமூகநலன் விரும்பிகள், பொங்கு தமிழ்சமூகம், தமிழ் மக்கள் பேரவை என 42 பேர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

அதனை அடுத்து பொங்கு தமிழ் சமூகம் கலந்துரையாடல் நடாத்தி அவர்களது தீர்மானத்திற்கு அமைய இன்று முதல் கர்த்தால் நடை பெறமாட்டாது என தெரிவித்தன

தகவல் மூலம் - ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடற்படையினரின் வாகனம் மீது குண்டுத் தாக்குதல்: திருப்பித் தாக்கியதில் இரண்டு பொதுமக்கள் பலி!

திருகோணமலை நிலாவெளியில் சிறிலங்கா கடற்படையினரின் வாகனத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலை அடுத்து படையினர் மேற்கொண்ட கண்முடித்தனமான தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மக்களில் நால்வர் திருகோணமலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குண்டுத்தாக்குதலின் போது வாகனத்தில் பயணம் செய்த 13 படையினர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் திருகோணமலை கடற்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.05 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை துறைமுக படைத்தளத்துக்கு படையினரை ஏற்றிச்சென்ற வாகனத்தை இலக்கு வைத்து திருகோணமலை டிப்போவுக்கு அருகில்- மூன்றாவது மைல் கல்லுக்கு அருகில் - சைக்கிள் ஒன்றில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தததை அடுத்தே கண்மூடித்தனமான இந்தத்தாக்குதல் இடம்பெற்றது.

இந்த சைக்கிள் குண்டு தொலைவிலிருந்து ரிமோட் கொண்ட்ரோலர் மூலம் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது என்றும் ஆனால் இலக்கு தவறிவிட்டது என்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

திருகோணமலை படைத்தளத்திற்கு வந்த விசேட உலங்குவானூர்தி மூலம் காயமடைந்த படையினரில் சிலரை கொழும்புக்கு ஏற்றிச்சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

படையினரின் தாக்குதலில் ஒரு பொதுமகனுக்கு தலையில் சூடு பட்டுள்ளதாகவும் அவர் கொழும்புக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவித்தன.

தகவல் மூலம்-புதினம்.கொம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருமலையில் மடத்தடிப்பகுதியில் கைக்குண்டு வீச்சு! ஒருவர் படுகாயம்

இன்று முற்பகல் 11 மணியளவில் திருகோணமலை மடத்தடிப் பகுதியில், இனந்தெரியாத நபர்களின் கைக்குண்டு வீச்சினால் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மோட்டார் உதிரிப்பாகங்கள் விற்பனையாள ரான தேவதர்சன்(26) என்பவரே இதன்போது படுகாயமடைந்துள்ளார்.

இவர் முதலில் திருமலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கின்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருகோணமலையில் கடற்படையினரின் வாகனம் மீது குண்டுத் தாக்குதல்- திருப்பித் தாக்கியதில் இரண்டு பொதுமக்கள் பலி!

திருகோணமலையில் நிலாவெளியில் கடற்படையினரின் வாகனத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அடுத்து இராணுவத்தினர் திருப்பித் தாக்கியதில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் நால்வர் திருகோணமலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குண்டுத் தாக்குதலின் போது வாகனத்தில் பயனம் செய்த 13 கடற்படையினர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் திருகோணமலை கடற்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.05 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை துறைமுக படைத்தளத்திற்கு படையினரை ஏற்றிச் சென்ற வாகனத்தை இலக்கு வைத்து திருகோணமலை டிப்போவுக்கு அருகில் சைக்கிள் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்ததை அடுத்தே கண்மூடித்தனமான இந்தத் தாக்குதல் இடம் பெற்றுள்ளது.

சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த குண்டு றிமோட் கொன்றோல் மூலம் வெடிக்கவைக்கப்பட்டுள்ளது. எனவும் ஆனால் இலக்கு தவறிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வினித் இத் தகவலை எற்கனவே இணைத்தாலும், செய்திகளின் "பொதுத் தன்மை" கருதி

இங்கு மீளவும் இணைக்கிறேன்..

உறவுகள் பொறுத்தருள்க....

இன்று மாலையுடன் திருகோணமலையில் கண்காணிப்புப் பணிகளில் இருந்து யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழு விலகல்!

இன்று செவ்வாய்க்கிழமை மாலை நான்கு மணியுடன் திருகோணமலையில் கண்காணிப்புப் பணிகளில் இருந்து தாம் விலகிக்கொள்வதாக திருகோணமலை யுத்த நிறுத்தக் கண் காணிப்புக்குழுவினர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அறிவித்துள்ளதாக பிந்திக்கிடைத்த செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.

நாளுக்கு நாள் அதிகாரித்துவரும். வன்முறைச் சம்பவங்களும், கொலைகளும் இங்கு யுத்தநிறுத்தம் நடைமுறையில் உள்ளதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், கண்காணிப்புக்குழுவினரும் பாரிய அச்சுறத்தல்களை சந்திக்க வேண்டியுள்ளதாகவும் இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அத்தகவல் மேலும் தெரிவிக்கின்றது.

தகவல் மூலம்- சங்கதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருகோணமலையில் கண்காணிப்புக் குழு பணிகள் நிறுத்தம்

திருகோணமலையில் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பாக புதினம் செய்தியாளருக்கு விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்ததாவது:

திருகோணமலை மாவட்டத்தின் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் 3.30 மணிக்கு எமக்கு ஒரு அறிவுறுத்தல் விடுத்திருந்தார்.

அந்த அறிவிப்பில், இன்று செவ்வாய்க்கிழமை மாலை மாலை 4 மணியிலிருந்து போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பணிகளை நிறுத்தி அலுவலகத்தையும் மூடி வைக்குமாறு கொழும்பு தலைமையகத்திலிருந்து அறிவித்தல் வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கான காரணத்தை நாம் அவரிடம் வினவியபோது, அவர்கள் காரணத்தைத் தெரிவிக்கவில்லை. ஆனால் கொழும்புத் தலைமையகம் கட்டளை பிறப்பித்திருப்பதால் அலுவலகத்தை மூடி இருப்பதாகத் தெரிவித்தனர் என்றார் சி. எழிலன்.

தகவல் மூலம்-புதினம்.கொம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருமலையில் வன்முறைகள் தொடர்வதால் தமது பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளோம் - கண்காணிப்புக் குழு பேச்சாளர் ஹெலன்

திருகோணமலையில் தொடரும் வன்முறைச் சம்பவங்களையடுத்து அப் பகுதியில் தங்களது பணிகளை இடைநிறுத்தி வைப்பதாக இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு அறிவித்துள்ளது.

சமூக வன்முறைகள் மற்றும் கதவடைப்பு போராட்டங்கள், கடற்படையினருக்கு எதிராக தாக்குதல்கள் என்பவற்றை அடுத்து திருகோணமலை நிலைமைகள் மிகவும் மோசமடைந்து வருகின்றன.

இத்தகைய சூழலில் அங்கு எமது கண்காணிப்புப் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்துவது என்று நாம் முடிவு செய்துள்ளோம் என இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு பேச்சாளர் ஹெலன் தெரிவித்துள்ளார்.இந்த சம்பவமானது இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு திருமலையை விட்டு வெளியேறுகிறோம் என்று அர்த்தமல்ல, வன்செயல்களின் அதிகரிப்பு எமது அன்றாட கண்காணிப்பு நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றுதான் அர்த்தம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தகவல் மூலம்- பதிவு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருமலை தாக்குதலுக்கு பொங்கியெழும் மக்கள் படை உரிமை கோரல்

இன்று திருமலையில் கடற்படையினர் பயணித்த பேரூந்து மீதான கிளைமோர் தாக்குதலுக்கு திருமலை மாவட்ட பொங்கியெழும் மக்கள் படை உரிமை கோரியுள்ளது.

இது தொடர்பாக பொங்கியெழும் மக்கள் படையால் விடுக்கப்பட்ட அறிக்கை வருமாறு:

தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறையாளர்களே! இது உங்கள் கவனத்திற்கு!

இன்று திருகோணமலை மாவட்டத்தில், இடம்பெற்ற ஸ்ரீலங்கா படையணியினருக்கு எதிராக இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலை திருமலை பொங்கியெழும் மக்கள் படையணியினராகிய நாமே மேற்கொண்டோம்.

திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் மீது மேலும், மேலும், இராணுவத்தினர் மேற்கொண்டுவரும் அடாவடித்தனங்களை அவர்கள் உடனடியாக நிறுத்தவேண்டும். அவ்வாறு அவர்கள் செய்யத்தவறும் பட்டத்தில் நாமும் எமது தாக்குதல்களை விரிவுபடுத்துவோம்.

அகிம்சை வழியில் தமிழ் மக்கள் எத்தனையோ தடவைகள் இராணுவ வன்முறைகளை எதிர்த்து போராடியபோதும் அதற்கு சரியான எந்தவிதப்பதிலும் வழங்கப்படாமல், மாறாக தமிழ் மக்கள் மீது வன்முறைகள் கட்டவிழத்து விடப்பட்டன. இந்த நிலமைகளிலேயே இராணுவத்தினரின் மக்கள் மீதான இந்த தாக்குதலுக்கு பதிலாகவே எம்மால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல் மூலம்- சங்கதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாருங்க தலைப்பை மாற்றியது...

அதிகாரமுடையவர்களாக இருக்கக்கூடும்.....

"திருமலை கொதிக்கிறது" என்ற தலைப்பே இதுவரை இடம்பெற்ற செய்திகளுக்குப் பொருந்தும்...

இப்படி "திருமலைச் செய்திகள்" என்று போட்டால் "எல்லா திருமலைச்" செய்திகளும் இதனுள் அடங்க வேண்டியாதாகி விடுமே...

தயவு கூர்ந்து சம்பந்தப்பட்டோர் கவனிக்கவும்.....

(சிலர் தனித் தலைப்புக்களில் போட்டு

"இட்டு நிரப்பல்" செய்து

"முக்கிய" கருத்துகளைப் பின் தள்ளி விடக் கூடும் என்பதையும் கவனிக்கவும்...)

யாருங்க தலைப்பை மாற்றியது...

அதிகாரமுடையவர்களாக இருக்கக்கூடும்.....

"திருமலை கொதிக்கிறது" என்ற தலைப்பே இதுவரை இடம்பெற்ற செய்திகளுக்குப் பொருந்தும்...

இப்படி "திருமலைச் செய்திகள்" என்று போட்டால் "எல்லா திருமலைச்" செய்திகளும் இதனுள் அடங்க வேண்டியாதாகி விடுமே...

தயவு கூர்ந்து சம்பந்தப்பட்டோர் கவனிக்கவும்.....

(சிலர் தனித் தலைப்புக்களில் போட்டு

"இட்டு நிரப்பல்" செய்து

"முக்கிய" கருத்துகளைப் பின் தள்ளி விடக் கூடும் என்பதையும் கவனிக்கவும்...)

À¾¢ø þ§¾¡

http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=159407#159407

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் பரந்த மனதிற்கு நன்றி வினித்

உங்கள் பரந்த மனதிற்கு நன்றி வினித்

ܼ À¢Èó¾ ÌÉõ :P :P :P ¿ýÈ¢ìÌ ¿ýÈ¢ மேகநாதன் :wink: :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருமலையில் கண்காணிப்புக்குழு விலகியதையடுத்து அதன் அலுவலகத்தில் இருந்த கொடியை

விசமிகள் அரைக்கபம்பத்தில் பறக்கவிட்டுள்ளனர.

திருகோணமலை நகரில்

நேற்று மாலையில் இருந்து தமது பணிகளை

யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழுவினர்

விலக்கியுள்ள நிலையில் இன்று

அதன் அலுவலகத்தில் பறந்து கொண்டிருந்த

அவர்களின் கொடியினை

விசமிகள் சிலர் அரைக்கம்பத்தில் பறக்க விட்டிருந்தனர்.

இதனால் அப்பகுதிகளால் சென்ற மக்கள்

பெரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்த அலுவலகம் ஸ்ரீ லங்கா இராணுவத்தின் பலத்த பாதுகாப்பிற்கு மத்தில் உள்ளதென்பது இங்கு குறிப்பிடத்தக்கது

தகவல் மூலம்- சங்கதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான விசாரணையில் நேற்று இரண்டு பெற்றோர்கள் சாட்சியமளிதனர்.

திருகோணமலையில்; ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான விசாரணையில் நேற்று இரண்டு பெற்றோர்கள் சாட்சியமளித்துள்ளனர். அந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட சஜீந்தரனின் தந்தை சண்முகராஜா சாட்சியம் அளிக்கையில்சம்பவ இடத்தில் இருந்த அரச படையினருக்கு தனது மகனின் மரணம் குறித்து தெரியும் எனவும், தனது மகன் துப்பாக்கிச் சூட்டினால்தான் படுகொலை செய்யப்பட்டதாக பிரேத பரிசோதனை நடத்திய மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தனது மகனுக்கு அரசியலில் எதுவித தொடர்பும் இல்லை எதிரியும் இல்லை எனத் தெரிவித்துள்ள அவர் கட்டுமானப் பொறியியல் படிப்புக்கு தேர்வாகியிருந்தார் தன் மகன் சாலி கிராமத்தில் கணணி கற்பிக்கும் ஆசியராக இடைக்காலத்தில் பணியாற்றி வந்ததாகவும் சாட்சியம் அளித்துள்ளார்.

றொகன்த் என்ற மாணவரின் தாயார் லோகிதாசன் லோகநாயகி சாட்சியம் அளிக்கையில்சம்பவத்தில் தன் மூத்த மகன் கொல்லப்பட்ட சம்பவ இடத்திலிருந்த இராணுவத்தினருக்குகே தன் மகன் எப்படி இறந்தான் என்பது தெரியும் எனவும் தன் மகன் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டான் என்பதை மருத்துவ அதிகாரியின் பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் அறிந்துகொண்டதாகவும் சாட்சியம் அளித்துள்ளார்

தகவல் மூலம்- பதிவு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருகோணமலையில் 5 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்: மரண விசாரணையில் தீர்ப்பு

திருகோணமலை கடற்கரை பகுதியில் ஜனவரி 2 ஆம் நாள் 5 தமிழ் மாணவர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று திருகோணமலை நீதிபதி வீ.இராமகமலன் நேற்று புதன்கிழமை தீர்ப்பு அளித்தார்.

இது தொடர்பான மரண விசாரணை கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது.

துப்பாக்கி சூட்டினால் ஏற்பட்ட காயங்களினாலேயே அவர்கள் பலியானதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

எனவே இது தொடர்பான விசாரணையினை மேற்கொண்டு சந்தேக நபர்களை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்துமாறும் அவர் சிறிலங்கா காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

தகவல்மூலம்;- புதினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருமலையில் 3 தமிழ் இளைஞர்கள் கைது!

திருக்கோணமலை மாவட்டம் ஈச்சிலம்பற்று பிரதேசம் இலங்கைத்துறை என்னும் இடத்தில் இருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த 3 தமிழ் இளைஞர்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் கடந்த செய்வாய்கிழமை தோப்பூர் பட்டியடி இராணுவ காவலணில் இடம்பெற்றது.

கணேசமூர்த்தி நாகராசா வயது 18, தம்பிநாதன் லகேஸ்வரன் வயது 20 பாக்கியதுரை திலீபன் வயது 18 ஆகியோர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர். இவர்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளாக்கள் என்பது பற்றிய விபரங்ளைப் பெறமுடியாது உறவினர்கள் அலைந்து திரிகின்றனா

தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதனை உடனடியாக உறுதிப்படுத்துங்கள்

கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதனை உடனடியாக உறுதிப்படுத்துங்கள் எனக் கோரும் கடிதம் ஒன்றினை திருக்கோணமலை மாவட்ட கண்காணிப்புக் குழுவின் தலைவருக்கு திருக்கோணமலை மாவட்ட தமிழ் மக்கள் பேரவையினர் அனுப்பியுள்ளனர். இது பற்றி 18ம் திகதி அவசர கடிதம் ஒன்றினையும் அனுப்பி வைத்துள்ளனர். இதன் பிரதி யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

திருக்கோணமலை மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்கள் யுத்த காலத்தில் ஸ்ரீலங்கா இனவாத இராணுவத்தாலும் பெரும்பான்மையின வன்முறையாளர்களாலும் மிகம் மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் அரசினதும் அரச படைகளதும் பயங்கரவாத செயல்களுக்கு நீதித்துறையூடாக கூட நிவாரணம் பெற முடியாது தங்கள் வாழ்வின் பெரும்பகுதியை இழந்தவர்கள்.

சமாதான காலத்தில் யுத்த நிறுத்தம் ஏற்பட்ட பின்பு கண்காணிப்புக் குழு தனது பணியை ஆரமபித்த பின்னே தமிழ் மக்கள ஓரளவு நிம்மதி மூச்சு விட முடிந்தது. திருக்கோணமலை மாவட்டத்திற்கு பொறுப்பான கண்காணிப்புக் குழு தலைவரதும் அவரது குழுவினரதும் அர்ப்பணிப்பான சேவையின் காரணமாகவே மக்கள் இரவில் நித்திரை கொள்ள முடிகிறது. சமாதான ஒப்பந்தத்தை கண்காணிக்கவே கண்காணிப்ப்புக் குழு அமைக்கப்பட்டது.

ஆனால் இன்று அவசரகால விதிகளின் கீழ் சமாதான ஒப்பந்தத்தை இல்லாதொழித்து விட்டு அரச படைகளும் ஆயுத கும்பலும் இணைந்து தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தத்தை தொடுத்துள்ள நிலையில் எங்களுக்குரிய ஒரே ஒரு பாதுகாப்பு அரண் நீங்கள் மட்டுமே. இந்நிலையில் தங்கள் பணியை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு உரிய காரணங்களை நாங்கள் தெளிவாக அறிவோம். ஏத்தனையோ இடர்களுக்கும் துன்பங்களுக்கும் மத்தியில் எமக்காக தாங்கள் அர்ப்பணிப்பு மிக்க சேவையினை ஒவ்வொரு தமிழ் மக்களும் மறக்க மாட்டோம்.

எனவே இக்கட்டான சூழ்நிலையில் தங்கள் பணி மிகவும் அவசியமானதாகும். தாங்கள் இப்பணியில் இருந்து தற்காலிகமாக விலகிக் கொள்வது என்ற முடிவை உடனடியாக மறுபரிசீலனை செய்து சமாதான ஒப்பந்தம் பூரணமாக அமுல்படுத்துவதனை உறுதி செய்தால் மட்டுமே தமிழ் மக்கள் திருக்கோணமலையில் நிம்மதியாக வாழ முடியும். தங்களுக்கும் தங்கள் சேவைக்கும் தமிழ் மக்கள சார்பிலான சகல ஒத்துழைப்பையும் எப்போதும் தருவதற்கு தயாராக உள்ளோம் என்பதை தயவுடன் அறியத் தருகின்றோம். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.