Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Stanley Cup - ஹொக்கிப் போட்டி

Featured Replies

Stanley Cup க்கான ஹொக்கிப் போட்டியில் பங்குபற்றுவதற்கு Vancouver Canucks அணி தகுதி பெற்றது.

Stanley Cup க்கான ஹொக்கிப் போட்டியில் பங்குபற்றுவதற்கு Vancouver Canucks அணி தகுதி பெற்றது. மேற்குப் பிராந்திய NHL சம்பியனாக அந்த அணி நேற்றுத் தெரிவாகியது.

சான் ஹோசே ஷார்க்ஸ் (San Jose Sharks) அணியுடன் நேற்று இடம்பெற்ற போட்டியில், மூன்றுக்கு இரண்டு என்ற கோல்களின் அடிப்படையில் வன்கூவர் அணி வெற்றி பெற்றது.

அதனையடுத்து, ஏழு போட்டிகளைக் கொண்ட இறுதிப் போட்டித் தொடரில், நான்குக்கு ஒன்று என்ற போட்டிகளின் அடிப்படையில் கனக்ஸ் அணி வெற்றி பெற்றது.

பதினேழு வருடங்களின் பின்னர், ஸ்ரான்லி கப்புக்கான இறுதிப் போட்டியில் கனக்ஸ் அணி பங்குபற்றவுள்ளது.

Boston Bruins மற்றும் Tampa Bay Lightning ஆகிய அணிகளுக்கு இடையில் நடைபெற்றுவரும் கிழக்குப் பிராந்திய NHL இறுதிப் போட்டித் தொடரில் வெற்றி பெறும் அணியை வன்கூவர் அணி ஸ்ரான்லி கப் இறுதிப் போட்டித் தொடரில் எதிர்கொள்ளும்.

http://www.cmr.fm/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=7956

  • தொடங்கியவர்

NHL கிழக்குப் பிராந்திய இறுதிப் போட்டித் தொடரின் நேற்றைய போட்டியில், Tampa Bay Lightning அணி வெற்றி

NHL கிழக்குப் பிராந்திய இறுதிப் போட்டித் தொடரின் நேற்றைய போட்டியில் Tampa Bay Lightning அணி, Boston Bruins அணியை ஐந்துக்கு நான்கு என்ற கோல்களின் அடிப்படையில் தோற்கடித்தது.

நேற்று இடம்பெற்ற ஆறாவது போட்டியின் முடிவில், இரண்டு அணிகளும் ஒவ்வொன்றும் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை பொஸ்டனில் இடம்பெறவுள்ள ஏழாவது போட்டியில் வெற்றி பெறவுள்ள அணி, கிழக்குப் பிராந்திய சம்பியனாகத் தெரிவாகும்.

மேற்குப் பிராந்திய சம்பியனாகத் தெரிவாகியுள்ள Vancouver Canucks அணியை வெள்ளிக்கிழமை வெற்றி பெறும் அணி, ஸ்ரான்லி கப்புக்கான இறுதிப் போட்டித் தொடரில் எதிர்கொள்ளும்.

http://www.cmr.fm/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=7974

  • தொடங்கியவர்

Vancouver Canuks - Boston Bruins

வான்கூவர் கனக்ஸ் - பொஸ்டன் புறுன்ஸ் முதலாவது ஆட்டம்

இன்று நடந்த முதலாவது ஆட்டத்தொடரில் பத்தொன்பதே வினாடிகள் போட்டி முடிய இருந்த வேளையில் Vancouver Canuks ஒரு கோலை போட்டு என்ற 1-0 வித்தியாசத்தில் வென்றது.

Stanley Cup க்கான இறுதிப் போட்டித்தொடரின் முதற் போட்டியில், வன்கூவர் கனக்ஸ் அணி வெற்றி

Stanley Cup க்கான இறுதிப் போட்டித்தொடரின் முதற் போட்டியில், வன்கூவர் கனக்ஸ் அணி, பொஸ்டன் புறுயின்ஸ் அணியை, ஒன்றுக்குப் பூச்சியம் என்ற கோல்களின் அடிப்படையில் தோற்கடித்தது.

ஏழு போட்டிகளைக் கொண்ட போட்டித் தொடரில் வெற்றி பெறும் அணி, Stanley Cup பைப் வெல்லும்.

நேற்று வன்கூவரில் இடம்பெற்ற முதலாவது போட்டியில், போட்டி முடிவடைவதற்கு 90 செக்கன்கள் இருந்த வேளையில், வன்கூவர் அணி கோல் ஒன்றைப் போட்டு வெற்றி பெற்றது.

இரண்டாவது போட்டி, சனிக்கிழமை வன்கூவரில் இடம்பெறும்.

1993 ஆம் ஆண்டு மொன்றியல் கனேடியென்ஸ் அணி Stanley Cup ஐ வென்றதன் பின்னர், கனேடிய அணிகள் எவையும் அதனை வெல்லவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=8059

Edited by akootha

  • தொடங்கியவர்

ஸ்ரான்லி கிண்ணத்திற்கான இறுதிப் போட்டித் தொடரின் மூன்றாவது போட்டி இன்று பொஸ்ரனில் நடைபெறவுள்ளது

ஸ்ரான்லி கப்புக்கான இறுதிப் போட்டித் தொடரின் மூன்றாவது போட்டி இன்று பொஸ்ரனில் நடைபெறவுள்ளது.

வன்கூவரில் இடம்பெற்ற முதல் இரண்டு போட்டிகளிலும் வன்கூவர் கனக்ஸ் அணியிடம் தோல்வியடைந்தபோதிலும், இன்றைய தினம் தமது அணியிலோ, தந்திரோபாயங்களிலோ மாற்றங்களைச் செய்யப்போவதில்லையென Boston Bruins அணியின் பயிற்றுனர் தெரிவித்தார்.

பொஸ்ரனில் போட்டி நடைபெறுதால், ரசிகர்களின் ஆதரவு தமக்கு உதவியாக இருக்குமென பொஸ்ரன் புறுயின்ஸ் அணி நம்பிக்கை கொண்டுள்ளது.

இறுதிப் போட்டித் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த 46 அணிகளில், நான்கு அணிகள் மட்டும் ஸ்ரான்லி கப்பை வென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=8109

  • தொடங்கியவர்

Stanley Cup க்கான இறுதிப் போட்டித் தொடரின் நான்காவது போட்டியில், பொஸ்ரன் புறுயின்ஸ் வெற்றி

Stanley Cup க்கான இறுதிப் போட்டித் தொடரின் நான்காவது போட்டியில், பொஸ்ரன் புறுயின்ஸ் அணி, வன்கூவர் கனக்ஸ் அணியை நான்குக்குப் பூச்சியம் என்ற கோல்களின் அடிப்படையில் தோற்கடித்தது.

நேற்று பொஸ்ரனில் இடம்பெற்ற போட்டியில் பொஸ்ரன் அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தற்போது இரண்டு அணிகளும் ஒவ்வொன்றும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.

ஏழு போட்டிகளைக் கொண்ட இறுதிப் போட்டித் தொடரில், நான்கு போட்டிகளில் வெற்றி பெறும் அணி, Stanley Cup ஐப் பெறும்.

ஐந்தாவது போட்டி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை வன்கூவரில் இடம்பெறும்.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=8137

  • தொடங்கியவர்

இன்னுமொரு வெற்றி மூலம் ஸ்டான்லி கிண்ணத்தை முதல்முறையாக வான்கூவர் அணி வெல்லும் சந்தர்ப்பத்தை எட்டியுள்ளது. தற்போதைய நிலவரம், பொஸ்ரன் புறுயின்ஸ் அணி, 2 - வன்கூவர் கனக்ஸ் 3.

நேற்று நடந்த ஐந்தாவது போட்டியில் வன்கூவர் அணி 1-0 என்ற வித்தியாசத்தில் பொஸ்டன் புரூன்ஸ் அணியை தோற்கடித்து உள்ளது. அடுத்த ஆட்டம் பொஸ்டன் நகரில் திங்கட்கிழமை நடக்கும். கிண்ணத்தை வெல்ல நாலு வெற்றிகளை பெறவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வன்கூவர் ஸ்ரான்லி கிண்ணத்தை வெல்வதற்கான சாத்தியக்கூறுகள் தான் அதிகம் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

வன்கூவர் ஸ்ரான்லி கிண்ணத்தை வெல்வதற்கான சாத்தியக்கூறுகள் தான் அதிகம் உள்ளது.

Boston Bruins 5

Vancouver Canucks 2 :lol: :lol:

நேற்று நடந்த விளையாட்டில் :lol:

  • தொடங்கியவர்

நேற்றைய போட்டியில் வான்கூவர் படுதோல்வியை சந்தித்தமைக்கு அதன் 'கோலி'யே காரணம். ^_^

புதன்கிழமை இறுதிப்போட்டி நடக்கும். அதில் வான்கூவர் அணி வெல்லும் :)

http://www.youtube.com/watch?v=xtSRDe7R6L4&feature=player_embedded

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி ஆட்டம் இரு அணிகளுக்கும் வாழ்வா சாவா போராட்டமாக இருக்கப் போகிறது..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

டங்கு பொறுத்து இருந்து பாருங்கோ Boston Bruins தான் வெல்லும்

எனக்கும் போஸ்டன் அணிதான் வென்றுவிடும் போலுள்ளது.வன்கூவர் நேற்று வெல்லும் என எதிர்பார்த்தேன்.

  • தொடங்கியவர்

ஸ்ரான்லி கப்பை பொஸ்டன் அணி வென்றது

ஸ்ரான்லி கப்புக்கான இறுதிப் போட்டி இன்று வன்கூவரில் இடம்பெற்றது. இதில் ஸ்ரான்லி கப்பை பொஸ்டன் அணி 4 -0 என்ற கோல் வித்தியாசத்தில் வென்றது.

1993 ஆம் ஆண்டு மொன்றியல் கனேடியன்ஸ் அணி ஸ்ரான்லி கப்பை வென்றதன் பின்னர், கனேடிய அணிகள் எவையும் ஸ்ரான்லி கப்பை வெல்லவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

  • தொடங்கியவர்

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொன்னான் Boston Bruins தான் வெல்லும் என்று :):D ... கொஞ்ச நாளா Vancouver Canuck விளையாட்டு நல்லாவே இல்லை... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிப்போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, மக்கள் செத்து வீழ்ந்தபோது, தமிழ்மக்களும்தான் ஆர்ப்பாட்டங்களில் இறங்கினார்கள். ஒரு சொத்துக்கும் சேதம் ஏற்படவில்லை. :unsure:

ஆனால், காவலுக்கு மேலதிக காவல்துறையினரைக் கொண்டுவருவதால் மில்லியன் கணக்கில் அரசுக்குச் செலவு என்று ஊடகங்களில் கட்டுரைகள் எழுதினார்கள். :wub: கார்டினர் விரைவுப் பாதையை முடக்கினார்கள் என்று குறைபட்டுக்கொண்டார்கள். அதில் சிறுவர்களையும் அழைத்துச் சென்றார்கள் என்று மனமொடிந்தார்கள். <_<

இதற்கும் மேல் ஆங்கில வானொலிகளில் தோன்றிய நேயர்கள் ஆர்ப்பாட்டங்களால் தமது பல்லு டாக்குத்தர்ட்டை நேரத்துக்குப் போகமுடியவில்லை என்று அங்கலாய்த்தார்கள். :wub:

இவ்வளவையும் செய்தது கனேடிய ஊடகங்களும், பெரும்பான்மை இனக் கனேடியகளும் தான்.. இந்தக் காணொளியில் ஒரு போட்டி முடிவுக்காக ஒரு நகரத்தையே துவம்சம் செய்வதும் அவர்கள் தான். தமக்கு விருப்பமான போட்டி என்பதனால் இதெல்லாம் ஒரு மாட்டரே கிடையாது.. :unsure:

ஆ.. அடுத்த போட்டி எப்பவாம்? :lol:

  • தொடங்கியவர்

இறுதிப்போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, மக்கள் செத்து வீழ்ந்தபோது, தமிழ்மக்களும்தான் ஆர்ப்பாட்டங்களில் இறங்கினார்கள். ஒரு சொத்துக்கும் சேதம் ஏற்படவில்லை. :unsure:

ஆனால், காவலுக்கு மேலதிக காவல்துறையினரைக் கொண்டுவருவதால் மில்லியன் கணக்கில் அரசுக்குச் செலவு என்று ஊடகங்களில் கட்டுரைகள் எழுதினார்கள். :wub: கார்டினர் விரைவுப் பாதையை முடக்கினார்கள் என்று குறைபட்டுக்கொண்டார்கள். அதில் சிறுவர்களையும் அழைத்துச் சென்றார்கள் என்று மனமொடிந்தார்கள். <_<

இதற்கும் மேல் ஆங்கில வானொலிகளில் தோன்றிய நேயர்கள் ஆர்ப்பாட்டங்களால் தமது பல்லு டாக்குத்தர்ட்டை நேரத்துக்குப் போகமுடியவில்லை என்று அங்கலாய்த்தார்கள். :wub:

இவ்வளவையும் செய்தது கனேடிய ஊடகங்களும், பெரும்பான்மை இனக் கனேடியகளும் தான்.. இந்தக் காணொளியில் ஒரு போட்டி முடிவுக்காக ஒரு நகரத்தையே துவம்சம் செய்வதும் அவர்கள் தான். தமக்கு விருப்பமான போட்டி என்பதனால் இதெல்லாம் ஒரு மாட்டரே கிடையாது.. :unsure:

ஆ.. அடுத்த போட்டி எப்பவாம்? :lol:

அடிப்படையில் கனேடிய பெரும்பான்மை இன மக்கள் அடிப்படையில் இனவாதிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.