Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்ட கருணாநிதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிராமத்து பழமொழிக்கேற்ப நமது முன்னாள் முதல்வர் நடந்து கொண்டுள்ளார். கலைஞர் கருணாநிதியின் ” இலவசங்களில்” பிரபலமானது, ” இலவச வண்ண தொலைக் காட்சி”.அதை ஈலோருக்கும் அதாவது முதலில் அறிவித்ததுபோல, வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு என்பதை மாற்றி துணை முதல்வர் ஸ்டாலின் மூலம் என்றால் அவர்தான் அன்றைய உள்ளாட்சித துறை அமைச்சர் எல்லா “ரேஷன் அட்டைதாரர்களுக்கும்” என்று அறிவித்து வழங்கினார்கள். ஏற்கனவே டி.வி. வைத்திருப்பவர்கள் பலரும் பெற்று கொண்டனர். கொடுபடாமல் இருந்த அய்யோப்பாவங்களும் உண்டு. அவர்களது குடும்ப அட்டைகளை நகல் எடுத்துக் ஒண்டு, வண்ண தொலைக் காட்சிகளை சுருட்டிய திமுக மாமன்ற, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றிய, ஊராட்சி உறுப்பினர்களும் உண்டு. ஆனாலும் அதிகம் பேருக்கு போய் சேர்ந்தது.

அந்த காட்சி ஊடகங்களில் தங்கள் ஊடகத்தின் ” மானாட, மயிலாட” பார்ப்பார்கள் என்று தலைவர் நினைத்ததில் தவறில்லை. ஆனாலும் கையில் திருப்பு கருவியை வைத்துக் கொண்டு ஒவ்வொரு தமிழனும், மற்ற காட்சி ஊடகங்களையும் பார்க்க தொடங்கி விட்டார்கள். அதுவும் குடும்பத்திற்குள்ளேயே இருந்து கொண்டு ” போட்டி டி.வி. நடத்தும் ” சகோதரர்கள் தாங்கள் எதிர்காலத்திலும் ” நடுநிலை” டி.வி. என்று பெயர் வாங்குவதற்காக ” ஜெயலலிதா, வைகோ, விஜயகாந்த்” என்று எதிர்க்கட்சி காரர்களின் நேர்காணல்களையும் வெளியிடத்தொடங்கினார்கள். அதன் விளைவாக மக்களுக்கு எல்லா செய்திகளும் போய் சேர்ந்தது. அதிலும் ” ஸ்பெக்ட்ரம் ஊழல், குடும்ப அரசியல், ஈழத் தமிழின அழிப்பு, இன அழிப்புக்கு கலைஞர் கொடுத்த ஆதரவு அல்லது மௌனமான ஆதரவு, விலைவாசி உயர்வு, மின்வெட்டு, இப்படி எல்லாமே அன்றாடம் மக்களிடம் போய் சேர்ந்தது.

தீர்ப்பு எழுதும் போது, இதுவரை ஐந்து ஆண்டுகளாக அவர்கள் கேள்விப்பட்டதை, கண்ணால் கண்டதை, அதற்கான காரணத்தை எப்படி மக்கள் மறந்து போக முடியும். எல்லாமே அந்த இலவச வண்ண தொலைக் காட்சிகள் மூலம்தானே போய் சேர்ந்தது? இதைத்தான் கிராமத்தில் ” சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்டவன்” என்று குறிப்பிடுகிறார்கள்.

— TSS.MANI

Short URL: http://meenakam.com/?p=25448

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் ரொம்ப ஓவர்.. எவனும் இவனுங்களுடைய தொல்லை காட்சிகளை பார்த்து விழிப்படைய போவது இல்லை.. உண்மையில் விஜய் டி.வி ஒன்று நடுநிலமையானது என்று சொல்லலாம்.. இவன் அவன் பே சேனல் ஆக்கிவிட்டால் கிராம புறங்களில் எவனுக்கு தெரியும்.. இங்கு உண்மை நிலை.. முதற்படி

1) தமிழன அழிப்பு

2) மின்வெட்டு

3) காந்தி கணக்கு இலவசங்கள்...

தமிழின அழிப்பு எந்த தொல்லை காட்சிகாரனும் அவ்வளவு நேர்மையாக சொல்ல வில்லை எல்லாம் டீக்கடையில் பேசிகொள்வது.. மற்றும்... உணர்வாளர்களின் பிட் நோட்டிசுதான் காரணம்..

இரண்டாவதான மின் வெட்டு ஊருக்குள் 5 மணி நேரம் எவந்தான் இருப்பான் என்ற நிலைமைக்கு இட்டு செண்டு விட்டது.. மின் துறையில் கேசியராக இருந்தவன் கிட்ட எல்லாம் நம்பி பொறுப்ப ஒப்படைச்சா இப்பத்தான் இருக்கும்.. செவுட்டு ராம சாமி ஆளும் கட்சி பிரமுகர்களுக்கு நடிகைகளை .. பெண்களை சப்ளை செய்வதோடு நிறுத்தி யிருக்க வேண்டும் இவனை போய் கரண்டு சப்ளை செய்ய சொன்னால் புதியதாக த்தானெ இருக்கம்?

3)இலவசங்கள்:

காந்தி கணக்கு என்றால் குடுத்த இனாம் திரும்ப வருமோ வராதோ.. ஆனாலும் நம்பிக்கையாக க்டுப்பது(இலவசங்கள்) :)

இலவசங்கள் எவனுக்கும் இங்கு முழுமையாக வழங்கபடவில்லை.. எல்லாம் பாதி பாதி.. நிலமற்றோருக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கியதை போல ஒரு பிராடுத்தனம்.. அதில் டிரிக்கு என்னவெண்டால் அவர்களுக்கு டிவி பொட்டி கொடுத்து விட்டார்களே நீங்கள் இன்னும் வாங்கவில்லையே என கவலை கொள்ளவேண்டாம்... கலீஞ்சரின் நல்லாட்சி தொடர (அதாவது உங்களுக்கும் இலவசங்கள் கிடைக்க)வாக்களியுங்கள் என்ற பார்முலாவையே தேர்தெடுத்தனர்..

ஆனால் பழையப்டி 1 ரூபாய் அரிசிக்கு இன்னும் தமிழர்கள் பிச்சையெடுப்பார்கள் என்று கணித்தது மிகத்வறு.... :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.