Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதாவை அழைக்கிறார் மகிந்த; ரணிலை அழைக்கிறார் ஜெயலலிதா

Featured Replies

போர் நடைபெற்ற வடகிழக்கு பகுதிகளுகு வருகை தந்து அங்கு பாதிக்கப்பட்ட தமிழர்களை சந்திக்குமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இலங்கை அரசு அழைப்பு விடுக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கருணாநிதியை விட திடமாக முடிவெடுக்கக் கூடியவர், தில்லாக செயல்படக் கூடியவர் ஜெயலலிதா என்பது அனைவரும் அறிந்தது. எந்தவிதமான நெருக்கடிக்கும் பணியாத ஒரு தலைவர் ஜெயலலிதா என்பதும், அவர் ஒரு முடிவெடுத்து விட்டால் விஜய் பாணியில் அவரே அதை மாற்றிக் கொள்ள மாட்டார் என்பதும் குறிப்பிடத்த்கது.

இலங்கை விவகாரத்தில் தற்போது ஜெயலலிதா தீவிர கவனம் செலுத்தி வருவதால் அந்த நாடு மட்டுமல்லாமல், இந்திய அரசும் கூட தர்மசங்கடத்திற்குள்ளாகியுள்ளது.

இதையடுத்து ஜெயலலிதாவை தங்களது வழிக்கு கொண்டு வரும் வேலையில் இரு தரப்பும் இறங்கியுள்ளதாக தெரிகிறது.

அதன் ஒரு பகுதிதான், கேபியின் அந்த திடீர் பேட்டி. ஜெயலலிதாவைக் கொல்ல விடுதலைப் புலிகள் திட்டமிட்டதாக, இத்தனை காலமாக இதுகுறித்துப் பேசாத கேபி கூறியிருந்தார்.

ஜெயலலிதாவைக் குழப்பி, ஈழத் தமிழர் பிரச்சினையிலிருந்து அவரை பின்வாங்கச் செய்யும் இலங்கையின் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக இலங்கையில் போர் நடந்த பகுதியான வடக்கு மாகாணத்திற்கு ஜெயலலிதாவை அழைக்க இலங்கை அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

இலங்கைக்கு ஜெயலலிதாவை வரவழைத்து, தமிழ் மக்களுடன் உரையாட வைத்து, தமிழர்கள் நலமாக இருக்கிறார்கள் என்பதைப் போல ஜெயலலிதாவுக்கு காட்டி, அதன் மூலம் ஜெயலலிதாவின் வேகத்தைக் குறைக்க இலங்கை அரசு நினைப்பதாக தெரிகிறது..

வடக்கில் யுத்தம் நிலவிய பிரதேசங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களைக் கேட்டறியவும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சந்தர்ப்பம் அளிக்க இலங்கை அரசு உத்தேசித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்க ஜெயலலிதாவின் ஒப்புதலையும் பெற்று, ஜெயலலிதாவின் இலங்கை எதிர்ப்புணர்வை அப்படியே மழுங்கடிக்கச் செய்து விடும் சதித் திட்டத்திலும் இலங்கை இருப்பதாக தெரிகிறது.

ஜெயலலிதாவை சந்திக்க ரணில் விக்கிரமசிங்கே வரவிருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின என்பது நினைவிருக்கலாம்,அதேவேளை எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரம சிங்க இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு நாளை திங்கட்கிழமை காலை புதுடில்லி பயணமாகிறார்.

அவர் புதுடில்லியில் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி உட்பட உயர்மட்டத்தலைவர்களையும், ஏனைய கட்சித்தலைவர்களையும் சந்தித்துப் பேச விருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலக வட்டாரம் தெரிவித்தது.

உள்நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க இந்தியத்தலைவர்களுடன் பேசவிருப்பதாகவும் அந்த வட்டாரம் தெரிவித்தது.

http://akkinikkunchu.com/new/

பலரும் மகிந்தர் கூட்டத்தை விட்டு இரணில் கூட்டத்தை பிடிக்கத்தொடங்கியுள்ளனர்.

செர்பியா கூட மக்கள் ஆதரவுடன் மிலோசவிச், கறாடீச், மிலடிச் அன்று இருந்தவர்கள். இன்று அந்த மக்களே கைவிட்டு விட்டார்கள். இதுவே நாளை சிங்களத்திலும் நடக்கும், மக்களே மகிந்தர், கொஹன்னா, கொத்தா என பிடித்துக்கொடுப்பர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பலரும் மகிந்தர் கூட்டத்தை விட்டு இரணில் கூட்டத்தை பிடிக்கத்தொடங்கியுள்ளனர்.

செர்பியா கூட மக்கள் ஆதரவுடன் மிலோசவிச், கறாடீச், மிலடிச் அன்று இருந்தவர்கள். இன்று அந்த மக்களே கைவிட்டு விட்டார்கள். இதுவே நாளை சிங்களத்திலும் நடக்கும், மக்களே மகிந்தர், கொஹன்னா, கொத்தா என பிடித்துக்கொடுப்பர்கள்.

யுத்தகாலங்களில் செர்பியாவுக்கு ரஷ்யா முழுஆதரவையும் வழங்கியிருந்தும் சேர்பியர்களால் இன்றுவரை அவர்கள் நினைத்ததை சாதிக்கமுடியவில்லை என்பதையும் கவனத்திலெடுக்க வேண்டும். குறிப்பாக ரஷ்ய கூட்டணிகளோடு தொடர்புடைய நாடுகள் சந்தோசமாக வாழ்ந்ததுமில்லை....வாழப்போவதுமில்லை....வாழவிடப்போவதுமில்லை.சரித்திரம் தெரிந்தவர்கள் பக்கங்களை புரட்டிப்பாருங்கள்.

அதிலும் எங்கள் அயல் நாடு சொல்லி வேலையில்லை :D

India invites Ranil for talks

Monday, 30 May 2011 01:08

Two weeks after Sri Lanka’s External Affairs Minister G.L. Peiris visited that country, India had invited Leader of the main Opposition United National Party (UNP) Ranil Wickremesinghe for talks on the situation that had arisen in the wake of the release of the United Nations Experts’ Panel report, party sources said yesterday.

They said Mr. Wickremesinghe was to leave for New Delhi yesterday and would hold talks with Indian leaders including Prime Minister Manmohan Singh and External Affairs Minister S.M. Krishna.

However, sources said he would not meet newly elected Tamil Nadu Chief Minister Jayalalithaa Jeyaram during this visit.

Shortly after her sweeping victory in Tamil Nadu, Mr. Wickremesinghe contacted Ms. Jeyaram and conveyed his good wishes. They agreed to meet on a suitable date.

After the release of UN Panel report described by the government as the ‘Darusman Report, the UNP appointed a committee headed by veteran Civil Servant Bradman Weerakoon to study it and recommend how the party should respond to it.

Though the committee report has been submitted to the UNP hierarchy, it is not yet in the public domain.

Prof. Peiris visited India on May 16 to brief the Indian leaders on the UN Advisory Panel Report which called for an investigation into human rights allegations during the final stages of the war. Subsequent to this visit, there was a joint statement in which India asked Sri Lanka to probe alleged human rights violations. India had also stressed the need to evolve a political solution based on the 13th Amendment plus and expedite the implementation of various projects being funded by India. These projects include the development of the Kankasanthurai Harbour, the Palali Airbase and the Sampur Coal Power Project.

After the visit to India, Prof. Peiris visit China and held talks with Chinese leaders in Beijing. (Kelum Bandara)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.