Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓய்வுபெறும் பொலிஸ்மா அதிபர் பொன்சேகாவிற்கு பக்கத்து சிறையில்?

Featured Replies

Workflow: Public

வவுனியா நிருபர்

வியாழக்கிழமை, யூன் 2, 2011

சேவை முடிவுறும் காலத்துக்கு முன்னராகவே கட்டாய ஓய்வுப் பெற்றுச் செல்லும் சிறிலங்காவின் பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படலாம் என நம்பகமான தகவல்கள் எமது இணையத்தளத்துக்குக் கிடைத்துள்ளன.

கட்டுநாயக்கவில் இடம்பெற்ற தொழிலாளர் ஆர்ப்பாட்டத்தின் போது சட்டத்துக்குப் புறம்பான வகையில் பொலிஸார் நடந்து கொண்டமை தொடர்பில் தற்போது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மிருகத்தனமாகத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை, ஆர்ப்பாட்டத்தைக் கலைக்கும் வகையில் இறப்பர் குண்டு சூடு நடத்தியமை போன்றனவற்றுக்கு உத்தரவிட்டமை தொடர்பிலேயே இவர் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார் என அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் சிறிலங்கா அரசின் யுத்தக் குற்றங்கள் சூடு பிடித்திருக்கும் நிலையில் சிவிலியன்கள் மீது பொலிஸார் நடத்திய இந்தத் தாக்குதல் சிறிலங்கா அரசை நிலைகுலையச் செய்து தலைய குனிய வைத்துள்ளது.

தென்னிலங்கைச் சிங்களவர்கள் மீதே பாதுகாப்புத் தரப்பினார் இவ்வாறானதொரு தாக்குதலை நடத்துவார்களானால் வன்னி நிலவரம் மிலேச்சனத்தனமாகவே அமைந்திருக்கும் என்பதனையே இந்தச் சம்பவம் சான்று பகர்கிறது என மனித உரிமை ஆர்வலர் ஒருவர் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

இதேவேளை, இச்சம்பவம் குறித்து விசேட விசாரணைகளை முன்னெடுப்பதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. கட்டுநாயக்க மோதல்கள் தொடர்பில் குறித்த பிரிவுகளுக்கு ஆணைக்குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சம்பவத்தின்போது பொலிஸ் அதிகாரிகள் நடந்து கொண்ட முறைகள் தொடர்பிலும் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் அனைத்து பொறுப்புகளையும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவே ஏற்றுக் கொள்ள வேண்டுமென முன்னாள் இராணுவத் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பொலிஸார் மீது குற்றம் சுமத்தக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை,சிறிலங்கா பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை இன்று சந்தித்துக் காலவரையறை கொண்ட தனது ராஜினாமாக் கடிதத்தைக் கையளித்துள்ளார். எனவும் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி, திகதிக் காலவரை கோரிக்கையை நிராகரித்ததுடன் உடனடியாகவே விடுமுறையில் செல்லுமாறு உத்தரவிட்டுள்ளார்.

ஜுன் மாதம் 18 ஆம் திகதி வரையில் தான் பதவியிலிருக்க அனுமதிக்குமாறு அவர் விடுத்த வேண்டுகோளையே ஜனாதிபதி நிராகிர்த்துள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உண்மையிலெயே கோத்தபாய இராஜபக்‌ஷா அவர்களே கீழ் நிலை பொலிஸ் அதிகாரிகளுக்கு கட்டு நாயக்க மக்கள் எழுச்சியினை அடக்குமாறு கட்டலை இட்டதாகவும் கூறப்படுகின்றது. கோத்தபாய கீழ் நிலை பொலிசாருக்கு கட்டலை பிறப்பிப்பது இது முதற் தடவை அல்ல ஐக்கிய நாடுகள் சபை வளாக ஆர்ப்பாட்டத்தின் போதும் பொலிசார் கோத்தபாயவின் கட்டளைப்படியே களத்தில் செயற்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.eelanatham.net

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.