Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்து அர்ச்சகரான சந்திரா ஐயர் இரகுபதி சர்மா இராணுவ சிப்பாயால் ஆடைகள் களையப்பட்டு, நிர்வாணமாக்கப்பட்டார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்து அர்ச்சகரான சந்திரா ஐயர் இரகுபதி சர்மா இராணுவ சிப்பாயால் ஆடைகள் களையப்பட்டு, நிர்வாணமாக்கப்பட்டார்: சிறிலங்கா சிறையில் சம்பவம்

[Friday, 2011-06-03 16:19:32]

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு கொழும்பு மகசின் சிறைச்சாலையில் கடந்த பத்து வருடங்களுக்கும் அதிகமாக விளக்கமறியல் கைதியாக வைக்கப்பட்டிருக்கும் இந்து அர்ச்சகரான சந்திரா ஐயர் இரகுபதி சர்மா இராணுவத்தினரால் அங்கு அவமானப்படுத்தப்பட்டதாக செய்திகள் வந்திருக்கின்றன.

இது குறித்து அவரைச் சந்தித்த, காணாமல் போனோர் மற்றும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பின் செயலாளரான சுந்தரம் மகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக கொண்டு சென்ற திரும்பும் போதே ஒரு இராணுவ சிப்பாயால், சர்மா அவர்கள் ஆடைகள் களையப்பட்டு, நிர்வாணமாக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டதாக அவர் தன்னிடம் முறையிட்டதாக மகேந்திரன் கூறியுள்ளார்.

சர்மா அவர்களின் மனைவியான வசந்தி சர்மாவும் இதே வழக்கில் கைது செய்யப்பட்டு தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், வசந்தி சர்மா ஒரு மன நோயாளி என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதுமாத்திரமல்லாமல், பெற்றோர் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில் இவர்களது இரு குழந்தைகளும் தமது சிறுவயது முதல் அனாதைகளாக ஒரு அனாதைகள் இல்லத்தில் தங்கியிருப்பதாகவும் மகேந்திரன் வருத்தம் தெரிவித்தார்.

இரகுபதி சர்மா அவர்கள் இவ்வாறு அவமானப்படுத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படுவது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட்ட ஆலோசகரான சிவலிங்கம் சதீஷ்குமார் உறுதியளித்துள்ளார்.

அத்துடன் இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாவண்ணம் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இலங்கை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கடந்த 2007 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஒரு பிரிட்டிஷ் பிரஜையின் நிலைமை குறித்தும் அவரது குடும்பத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் பிறந்த, 40 வயதான விஸ்வலிங்கம் கோபிதாஸ், அங்கிருந்து இடம்பெயர்ந்து தற்போது பிரிட்டிஷ் பிரஜா உரிமை பெற்று தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகின்றார். விடுமுறையில் இலங்கை சென்ற போதே இவர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இதுவரை எந்தவிதமான வழக்கும் தாக்கல் செய்யப்படாமல் மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்.

இவரது நிலைமை குறித்து பல தரப்பிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கோபிதாஸின் விவகாரம் தமது கவனத்துக்கு வந்திருப்பதாகக் கூறியிருக்கும் இலங்கைக்கான பிரிட்டிஷ் தூதரகம், அவருக்கு தூதரக மட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த விவகாரம் குறித்து தாம் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்புகொண்டிருப்பதாகவும் தூதரகம் கூறியுள்ளது.(பி.பி.ஸி)

seithy.com

தமிழர்களை நிர்வாணமாக்குவதை சிங்களம் ஒரு அறிவிக்காத உத்தியோகபூர்வ கொள்கையாக கொண்டுள்ளது.

- 1983 ஆம் கலவர படங்களுக்குள் கூட பலரின் கண்ணுக்குள் தெரிவது ஒரு நிர்வாணமாக்கப்பட்ட தமிழர். இவர் பின்னர் பெற்றோல் மூலம் உயிருடன் எரிக்கப்பட்டார்.

- பின்னர், 2009 ஆம் வெளிவந்த சனல் 4 இன் ஒளிப்பதிவுகள்.

இவை நமக்கு தெரிந்தவை, தெரியாதவை ஆயிரம் இருக்கும்.

Edited by akootha

இவைகளெல்லாம் எதற்காகச் செய்கிறோம் என்று அவர்களுக்கே தெரியாது.

எனக்கு மத/கடவுள் நம்பிக்கைகள் இல்லதபோதும், இந்து அர்ச்சகர்கள் கேலிக்கூத்தாக நடத்தப் படுவதில் சம்மதம் இல்லை. ஆனால் இந்து அர்ச்சகர்களாக ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டும் வருவதும் மாற்றப்பட வேண்டியதே.

நிற்க இவர் தமிழர் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் வதைக்கப்படுகிறார்.

Edited by கறுவல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.