Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் ஒருவர் உண்ணா விரதம்- வீடியோ இணைப்பு

Featured Replies

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்க்கக் கோரி யாழ். துரையப்பா விளையாட்டரங்களில் ஒருவர் இன்று உண்ணாவிரதம் ஆரம்பித்துள்ளார்.

'போரினால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் அமைப்பின் 'பிரதிநிதியான வவுனியாவைச்

சேர்ந்த என். சகாதேவன் என்பவரே இவ்வாறு உண்ணாவிரதம் மேற்கொள்கிறார்.

கடந்த கால போரின் காரணமாக, இழக்கப்பட்ட உயிர் உடமைகளுக்கு இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை எனவும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐ.நா. உதவி வழங்க வேண்டுமெனவும் கோரியும் போரில் உயிரிழந்த மக்களுக்கென நினைவுத்தூபிகள் அரசாங்கத்தினால் அமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் உண்ணாவிரதம் ஆரம்பித்துள்ளார்.

இம்மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லையெனில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வீடியோ: http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=1931:2011-06-04-09-52-10&catid=1:latest-news&Itemid=18

Edited by சிறிலிங்கம்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் திடீரென உண்ணாவிரதம் :

06 ஜூன் 2011

2ஆம் இணைப்பு:- சகாதேவனும் சர்ச்சையை ஏற்படுத்திய உண்ணாவிரதமும் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று முன்தினம் ஆரம்பித்த சகாதேவனின் உண்ணாவிரதம் இன்று ஏகமனதாக முடித்து வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு உள்ளுர் ஊடகங்களுக்குச் சென்ற படை அதிகாரிகள் காலை 7 மணிக்கு அரச அதிபர் இமெல்டா குகுமார் உண்ணாவிரதத்தை முடித்து வைப்பார் என அறிவித்திருந்தனர்.

இந்த சகாதேவன் தமிழர் விடுதவைக் கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரியுடன் முன்னர் நெருங்கி செயற்பட்டவர்;. பின்னாளில் அரச விசுவாசியாக மாறியிருந்தார். வவுனியாவில் அண்மைக்காலமாக அரசியல் பண்ணிக் கொண்டிருந்த இவர் தமிழகத்தின் சுப்பரமணிய சுவாமியின் சகோதரர் என பலரால் வர்ணிக்கப்படுபவர் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையிலேயே இவர் கடந்த 2 தினங்களுக்கு முன் யாழ்ப்பாணத்தில் சாகும் வரையிலான உண்ணாவிரப் போராட்டத்தினை ஆரம்பித்திருந்தார். ஊடகங்களும் அவரது உண்ணாவிரதத்திற்கு முக்கியத்துவம் வழங்கியிருந்தன.

வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனக் கோரியே அவர் தனது உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்தார். ஆனாலும் நேற்று முன்தினம் காலை உண்ணாவிரதம் தொடர்ந்த வேளை திடீரென ஐ.நாவின் அறிக்கைக்கெதிரான சுலோகங்களைத் தாங்கிய பனர்களும் கட்டவிடப்பட்டிருந்தன. திடீரென இந்த பதாகைகளுடன் களத்தில் முளைத்தவர்கள் தொடர்பில் சர்ச்சைகளும் சந்தேகங்களும் எழுந்தன. ஊடகங்கள் மூலம் தனக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஏற்படுத்துவதும் அதன் அடுத்த கட்டமாக ஐநாவின் அறிக்கையை அப்பட்டமாக தமிழ்தரப்புகள் எதிர்ப்பதாக காண்பிப்பதே இவரது உத்தியாக இருக்கலாம் என குளோபல் தமிழ் செய்தியாளர் சந்தேகம் வெளியிட்டு உள்ளார.;

உண்ணாவிரதத்தின் ஆரம்பத்தில் காணப்படாத இந்த பனர்கள் இரவோடிரவாக முளைத்திருந்தன. படைத்தரப்பு இவருக்கான பாதுகாப்பை வழங்கியிருந்தது. அவரது உண்ணாவிரதம் தொடர்பாக குளோபல் தமிழ்ச் செய்திகள் மட்டுமே சந்தேகத்துடன் செய்தியை வெளியிட்டிருந்தது.

குடாநாட்டுப் பொதுமக்களின் வேண்டுகோளின் அடிப்படையில் இன்று அவர் உண்ணாவிரதததை கைவிட உள்ளதாக படைத்தரப்பு நேற்று ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருக்கின்றது. திட்டமிட்ட வகையில் இந்த உண்ணாவிரதத்தை முடித்த அவர் இன்று வவுனியா அவர் செல்கின்றார்.

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் திடீரென உண்ணாவிரதம் :குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

04-06-2011 - 16-39

வடக்குக் கிழக்குப் பகுதிகளில் யுத்த நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடுகள் கிடைக்கப்பெறவில்லையென குற்றஞ்சாட்டி உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார் வி. கே சகாதேவன் என்பவர். வவுனியாவைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகின்ற இவர் தனது சகபாடிகள் ஐவர் சகிதம் இந்த உண்ணாவிரதப்

போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார்.

gtbc

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.