Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இழுத்தடிப்பு இராஜ தந்திரம் ஐ.நா வரை கை கொடுகுமா?

Featured Replies

ஐ.நா.வின் போர்க்குற்ற அறிக்கையின் அடுத்த கட்டம் என்னவாக இருக்கப் போகிறது என்ற கேள்வி இப்போது அனைவடத்திலும் வலுவாக எழுந்துள்ளது.இந்த அறிக்கை வெளியாகி நாட்கள், வாரங்களாகி, அது இப்போது மாதங்களாகத் தொடங்கி விட்டன.

ஆனால் அது சார்ந்த எந்தவொரு உருப்படியான நகர்வும் ஐ.நா. தரப்பில் மேற் கொள்ளப்படவில்லை.

இந்த அறிக்கை வெளியான போது அதுபற்றி இருந்த எதிர்பார்ப்பு இப்போது மெல்ல, மெல்ல வலுவிழக்கத் தொடங்கியுள்ளது. அதற்குக் காரணம், இந்த அறிக்கை மற்றும், ஐ.நா. தொடர்பாக ஏற்பட்ட மிகையான எதிர்பார்ப்பு என்பன மட்டும் அல்ல.

அதற்கும் அப்பால் இலங்கை அரசின் இழுத்தடிப்பு இராஜதந்திரம், ஐ.நாவின் உறுதியற்ற தன்மையும் தான் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் இந்த அறிக்கையைப் பெற்றுக் கொண்ட பின்னர், அதை இலங்கை அரசுக்கு அனுப்பி வைத்து அதன் கருத்தைப் பெற முயன்றார்.

ஆனால் இலங்கை அரசின் பதில் கிடைக்காத நிலையில் இரண்டு வாரங்கள் கழித்து இந்த அறிக்கையை வெளிப்படுத்தினார்.

அப்போது அவர், இந்த அறிக்கை மீதான தனது நடவடிக்கைகள் அத்தோடு சரி என்பதையும் சூசகமான முறையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

தொடர்ந்து இந்த அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது ஐ.நா.வின் ஏதாவதொரு அமைப்புத்தான்.

அப்படி அந்த அமைப்பு கோரினால் அல்லது இலங்கை அரசு கோரினால் தான் விசாரணைகளை முன்னெடுக்க முடியும் என்றும் கூறியிருந்தார் பான் கீ மூன்.

ஒரு கட்டத்தில் இது பான் கீ மூனின் கையாலாகாத்தனம் என்று விமர்சனங்கள் எழுந்தாலும், இது அவரது ஒருவித நழுவல் பாணி என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் இந்த நிபுணர்குழுவை நியமித்த போது காட்டிய இறுக்கமான போக்கைத் தொடர்ந்தும் கடைப்பிடித்து வருகிறாரா என்ற கேள்வி இப்போது அனைத்து மட்டங்களிலும் இருக்கிறது.

ஏனென்றால் இந்த அறிக்கையை வெளியிட்டதோடு தனது பணிகள் முடிந்து விட்டது போன்ற பாணியில் தான் அவரது செயற்பாடுகளை அவதானிக்க முடிகிறது.அடுத்து மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி இன்னும் தீர்மானிக்கவில்லை.

மேல் நடவடிக்கைக்காக அதை ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கோ, பொதுச்சபைக்கோ அல்லது மனித உரிமைகள் பேரவைக்கோ அனுப்பி வைக்கவில்லை.

இதுபற்றி ஐ.நா. பொதுச்சபைத் தலைவரிடம் கேட்கப்பட்ட போது, அந்த விவகாரங்களை யெல்லாம் பான் கீ மூன் தான் கையாண்டு வருகிறார் என்று நழுவல் பாணியில் கூறி விட்டுத் தப்பித்துக் கொண்டுள்ளார்.

ஆக ஐ.நா.வின் இந்த நிபுணர்குழு அறிக்கை மீதான நடவடிக்கை என்பது பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற பாணியில் தொடர்கின்றது. இதற்கு இலங்கை அரசின் ஒரு வித இராஜதந்திரம் தான் காரணம் என்பதைக் கவனத்தில் கொண்டாக வேண்டும்.

இந்த அறிக்கை இலங்கை அரசுக்கு மோசமான அழுத்தங்களைக் கொடுத்துள்ள போதும், அதை எதிர்கொள்கின்ற விடயத்தில் அது கையாளும் இழுத்தடிப்பு இராஜதந்திரம் ஓரளவுக்கு கைகொடுக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

பதில் தருகிறோம் என்று கூறிக் கூறியே ஒருவித இழுத்தடிப்பு நாடகம் அரங்கேற்றப்படுகிறது. இன்னொரு பக்கத்தில் ஐ.நா.பொதுச் செயலரை சந்தித்த பாலித கொஹன்னவும் சரி, மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய மகிந்த சமரசிங்கவும் சரி ஒரே விதமான கோக்கையையே முன் வைத்துள்ளனர்.

அவசரப்பட்டு முடிவெடுத்து விடாதீர்கள், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வரும் வரை காத்திருங்கள், உள்ளக பொறிறையொன்றின் மூலம் பிரச்சினையைத் தீர்க்கலாம் என்பதே இவர்கள் கேட்டுள்ள கால அவகாசம்.

ஐ.நா. அறிக்கைக்கு உரிய பதிலை அரசாங்கம் அனுப்பாது போனாலும், அதை அனுப்புகின்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளதா என்பதே சந்தேகத்துக்குரியதாக உள்ளது.ஐ.நா. பொதுச்செயலர் இந்த அறிக்கையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் அதைச் சமர்ப்பிக்காமல் இழுத்தடிப்பது ஒருவித இராஜதந்திரம் தான். இந்த அணுகுறையை இலங்கை அரசு தமிழர் தரப்புடனான பேச்சுக்களில் கையாளத் தொடங்கியது.

தீர்வுத்திட்டத்தை முன்வைக்கிறோம் என்று கூறிக் கூறிப் பேச்சுக்களை இழுத்தடித்து அதனை வலுவற்றதாக்குகின்ற ஒரு பொறியை அவர்கள் நீண்டகாலமாகவே கையாண்டு வந்துள்ளனர். இப்போது ஐ.நா.வுக்கும் அந்த விளையாட்டைக் காட்ட ஆரம்பித்துள்ளனர்.

பான் கீ மூன் சலித்துப் போகும் வரை இந்த இழுத்தடிப்பு நாடகம் அரங்கேறும்.

எவ்வாறாயினும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வரும் வரை தான் இலங்கை அரசினால் இந்த விவாகரத்தை இழுத்தடிக்க முடியும்.

எனவே நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையும் கூட காலதாமதம் ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

இந்தநிலையில் இலங்கை பற்றிய விவகாரத்துடன் தான் ஐ.நா.

மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளது. இந்தக் கூட்டத்தொடல் இலங்கை விவகாரம் பற்றிய சூடான வாக்குவாதங்கள் வரும் என்பது அரசுக்கு நன்றாகவே தெரியும்.

அதற்கான முறியடிப்பு ஏற்பாடுகளை அது செய்து கொண்டே சென்றது. ஐ.நா. நிபுணர்குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டால் அதற்குய மாற்று நடவடிக்கைகள் பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியிருந்தது.

ஆனால் அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படாது என்று அறிந்து கொண்டதும் அரசுக்கு இருந்து வந்த நிம்மதி எல்லாம் சனல் 4 விவகாரத்தால் பறிபோய் விட்டது.

சனல்4 வீடியோ உண்மையானதே என்றும், அங்கு போர்க்குற்றங்கள் நடந்துள்ளதால் அதுபற்றி விசாக்க வேண்டும் என்றும் சட்டவிரோத படுகொலைகளுக்கான ஐ.நாவின் அறிக்கையாளர் அளித்துள்ள அறிக்கை உண்மையில் ஒரு புயலைத் தான் கிளப்பியுள்ளது.

ஏற்கெனவே சுதந்திரமான போர்க்குற்ற விசாரணைகளுக்கு ஐ.நா. மனிதஉமைகள் ஆணையாளர் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், இந்த அறிக்கை அவரது கருத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

பான் கீ மூனின் போக்கு நழுவல் பாணியில் அமைந்தாலும் நவநீதம்பிள்ளையின் போக்கு கொஞ்சம் இறுக்கமாகவே உள்ளது. ஐ.நா.வின் போர்க்குற்ற அறிக்கை அதிகாரபூர்வமாக இம்றை மனித உரிமைகள் பேரவைக்கு எடுத்துக் கொள்ளப்படாது போனாலும், அந்த அறிக்கையை சுட்டிக்காட்டி நவநீதம்பிள்ளை உரையாற்றியிருந்தார்.

ஏற்கனவே ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் கூட, அறிக்கையை பகிரங்கப்படுத்தியுள்ளோம். அதை எந்தவொரு தரப்பினரும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளலாம் என்ற வகையில் கருத்து கூறியிருந்தார். அந்த வகையில் கூட இந்த விவகாரம் மனித உரிமைகள் பேரவைக்கு வந்திருக்கலாம். தொடக்க நாளிலேயே இந்த விவகாரம் மனித உரிமைகள் பேரவையில் வந்தது அரசுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும்.

முடிந்து போனதாக கருதப்பட்ட பிரச்சினை பூதாகாரம் ஆக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த இலங்கை அரசுக்கு நவநீதம்பிள்ளை மீது பாய்வதை விட வேறு வழியிருக்கவில்லை.

அடுத்து சனல்4 விவகாரத்திலும் அந்த வீடியோ உண்மையானது என்று அளிக்கப்பட்ட சான்றுகளையும் அரசாங்கம் மறந்துள்ளது. ஆனால் அதை முற்றாக நிராகக்க முடியாத நிலையில் விசாரிக்கலாம் என்று கூறியுள்ளது. எப்படியும் அடுத்தடுத்த மனித உரிமைகள் பேரவைக் கூட்டம் என்பது இலங்கைக்கு இலகுவாகத் தாண்டி விட முடியாத கடுமையானதொரு பொறியாகவே இருக்கப் போகிறது.

இந்தக் கூட்டத்தொடரை இலங்கை அரசுக்கு வழங்கும் ஒரு கால அவகாசமாக மனித உரிமைகள் பேரவையை ஒதுக்கி விடலாம்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை அடுத்த கூட்டத் தொடருக்கும் முன்னதாகக் கிடைக்கும் வாய்ப்புகள் குறைவு என்பதால், அடுத்த ஆண்டில் நடக்கக் போகும் கூட்டத் தொடர்தான் மிகவும் சிக்கலான நிலையை அரசுக்கு ஏற்படுத்தும். அது அரசுக்கும் நன்றாகவே தெயும்.

இப்போதைய நிலையில் அது வரையாவது இழுத்தடித்தால் சரி என்ற நிலையில் தான் அரசாங்கம் உள்ளது.

இப்படியான நெருக்கடிகள் தமிழர் தரப்புடனான பேச்சுக்களின் போதும் அரசுக்கு வந்ததுண்டு. அப்போதெல்லாம் அதற்கு கைகொடுத்தது இந்த இழுத்தடிப்பு இராஜதந்திரம் தான். இதையே தான் ஐ.நா.வுடனும் கையாள்கிறது.

இந்த இழுத்தடிப்பு இராஜதந்திரம் இலங்கைக்கு உள்நாட்டில் கைகொடுத்தாலும், அது எந்தளவுக்கு சர்வதேச காய் நகர்த்தல்களில் கைகொடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

http://akkinikkunchu.com/new/

தமிழர் பிரச்சனைக்கான இழுத்தடிப்பிற்கும் சர்வதேசத்துடனான இழுத்தடிப்பிற்கும் வேறுபாடுகள் உண்டு. இலங்கை எவ்வாறேனும் சர்வதேசத்தின் வலைக்குள்ளும் அதன் தேவைகளுக்கும் தன்னை ஆட்படுத்தியே ஆக வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா. அறிக்கைக்கு உரிய பதிலை அரசாங்கம் அனுப்பாது போனாலும், அதை அனுப்புகின்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளதா என்பதே சந்தேகத்துக்குரியதாக உள்ளது.ஐ.நா. பொதுச்செயலர் இந்த அறிக்கையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

கால அட்டவணை(time frame) கொடுத்து தான் சிறிலங்காவின் இழுத்தடிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.ஐ.நாவும் சிறிலங்காவுடன் சேர்ந்து ஏமாற்றாத வரை இலங்கையின் ஏமாற்று நாடகம் அரங்கேறாது.

Edited by nunavilan

மிகவும் பலமான இஸ்ரேல் நாடு பாலஸ்தீனத்திற்கு எதிராக ஒரு நீண்ட இழுத்தடிப்பு அரசியலை செய்து வருகின்றது. அந்தளவுக்கு சிங்களம் பலம் கொண்டதாக இல்லை. மாறாக அதன் நட்பு நாடுகளே இந்த போர்குற்றம் சம்பந்தமாக தம்மை சற்று அந்நியப்படுத்த விரும்புகின்றன. பாலஸ்தீனம் கூட அவ்வளவு எதிர்ப்புக்களையும் தாண்டி ஒரு ஐ.நா. அங்கத்துவ நாடக இந்த செம்டெம்பர் மாதம் மலரலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.