Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனச் சுத்திகரிப்பு மேற்கொண்டமைக்காக ருவண்டா இராணுவத் தளபதிக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை :

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனச் சுத்திகரிப்பு மேற்கொண்டமைக்காக ருவண்டா இராணுவத் தளபதிக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை :

06 ஜூன் 2011

ரூவண்டாவின் முன்னாள் இராணுவத் தளபதிக்கு இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர் அசோக டி சில்வா 30 ஆண்டுகால சிறைத்தண்டனை விதித்துள்ளார்.

யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டமைக்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதவான்களில் ஒருவராக அசோக டி சில்வா கடமையாற்றி வருகின்றார்.

ரூவண்டாவின் முன்னாள் இராணுவத் தளபதி அகஸ்டின் பிஸின்முகுவிற்கு இவ்வாறு 30 ஆண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 1994ம் ஆண்டு ரூவண்டாவில் இடம்பெற்ற இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2004ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டு, அண்மையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. ரூவண்டா தொடர்பில் நியமிக்கப்பட்ட மூன்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் ஒரு வழக்கு விசாரணை பூர்த்தியடைந்துள்ளது.

சம்பவங்களின் சிக்கல் தன்மை காரணமாக வழக்கு விசாரணை முடிவுறுத்த நீண்ட காலம் தேவைப்பட்டதாக முன்னாள் பிரதம நீதியரசர் அசோக டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் நிரந்தர நீதவான்களில் ஒருவராக அசோக டி சில்வா கடமையாற்றி வருகின்றார்.

இனச் சுத்திகரிப்பு மேற்கொண்டமைக்காக ருவண்டா இராணுவத் தளபதிக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை :

17-05-2011 -17:24

இனச் சுத்திரிகப்பு மேற்கொண்ட குற்றச்சாட்டிற்காக ருவண்டாவின் முன்னாள் இராணுவத் தளபதிக்கு 30 ஆண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ருவண்டாவின் முன்னாள் இராணுவத் தளபதி ஒகஸ்டின் பிஸிமுன்கு என்பவருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

1994ம் ஆண்டு ருவண்டாவில் இடம்பெற்ற இனச் சுத்திகரிப்பு சம்பவங்களில் முன்னாள் இராணுவத் தளபதிக்கு தொடர்பு இருப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும் இரண்டு உயர் இராணுவ அதிகாரிகளுக்கு தலா இருபது ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

1994ம் ஆண்டில் சுமார் 800000 டுட்டு இன மக்களும், மிதவாத கொள்கையுடைய ஹூட்டு இனத்தவர்களும் நூறு நாட்களில் படுகொலை செய்யப்பட்டனர். ருவண்டாவிற்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றினால் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2002ம் ஆண்டு முன்னாள் இராணுவத் தளபதி ஒகஸ்டின் பிஸிமுன்கு அங்கோலாவில் வைத்து கைது செய்யப்பட்டார். ருவண்டாவின் முன்னாள் காவல்துறை பொறுப்பதிகாரி அகஸ்டின் நிடின்லிமியாவிற்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தண்டனை விதித்து விடுதலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

டுட்சி இனத்தவரை படுகொலை செய்யுமாறு இராணுவத் தளபதி ஒகஸ்டின் பிஸிமுன்கு உத்தரவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

gtbc

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.