Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் அமைச்சர்களின் அடாவடித்தனங்கள் அதிகரித்தால் எதிர்ப்புப் போராட்டங்கள் - கூட்டமைப்பு சூளுரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[Monday, 2011-06-06 06:44:00]

அமைச்சர்களின் அடாவடித்தனங்கள் அதிகரித்தால் அவர்களின் யாழ்ப்பாண வருகையை எதிர்த்து போராட்டங்களை மேற்கொள்ள வேண்டிவருமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தெல்லிப்பழை தந்தை செல்வா தொடக்கப் பள்ளியில் நேற்று நடைபெற்ற வலி.வடக்கு மக்களின் மீள்குடியமர்வு தேவைகள் குறித்து ஆராயும் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.

அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில்,

மீள்குடியேற்ற நடவடிக்கைக்காக வருகை தந்த அமைச்சர் ஒருவர் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலுக்கு முன்னால் போர்க்குற்ற விசாரணைக்கு எதிராக குரல் எழுப்பினார். அங்கு எம்மை பேசுவதற்கு அனுமதி வழங்க அரசாங்கத்தின் எடுபிடி அமைச்சர்கள் இடங்கொடுக்கவில்லை. இவ்வாறான அமைச்சர்கள்தான் அரச அதிகாரிகளையும் அடக்கி வைத்துள்ளனர். இதனால் அரசாங்க அதிகாரிகள் பயந்து சேவையாற்றுகின்றனர்.

வன்னி இறுதி யுத்தத்தில் 4 இலட்சத்து 20 ஆயிரம் மக்கள் அகப்பட்டுள்ளனர் என இப்போதைய யாழ்ப்பாண அரச அதிபர் இமெல்டா சுகுமார் அன்று தெரிவித்தார். ஆனால் அரசு 70 ஆயிரம் மக்களே இறுதி யுத்தத்தில் அகப்பட்டுள்ளனர் என ஐ.நா. வரை தெரிவித்தது.

எனினும் நாம் உலக உணவுத்திட்டத்தில் பதிவு செய்த 3 இலட்சத்து 50 ஆயிரம் மக்களின் விபரங்களை எடுத்துக்காட்டி அரசிடம் சுட்டிகாட்டினோம். எனினும் அதனை அரசாங்கம் மறுத்தது. இறுதியில் 3 இலட்சத்து 17 ஆயிரம் பேர் இடம்பெயர் முகாம்களில் பதிவு செய்திருந்தனர்.

இவ்வாறு மக்களின் தொகையை அரசு மறைப்பதற்கு காரணம் திட்டமிட்ட படுகொலை முயற்சியை எடுத்துக்காட்டுகிறது. இதற்கு மேலாக வன்னி இறுதி யுத்தத்தின் பின் ஒரு இலட்சம் மக்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் உள்ளது. அத்துடன் சிறைவாடும் அரசியல் கைதிகளின் விபரங்களை பகிரங்கப்படுத்துவதற்கு அரசு மறுக்கின்றது. காரணம் கொலை செய்யப்பட்டவர்களின் விபரம் தெரிய வந்துவிடும் என அரசு பயப்படுகிறது.

இந்திய அரசாங்கம் 50 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கு தலா இந்திய ரூபாயில் 2 இலட்சத்து 50 ஆயிரம் (இலங்கை ரூபாயில் சுமார் 7 இலட்சம்) நிதி வழங்க முன்வந்தது.

எனினும் இந்திய வீட்டுத்திட்டத்துக்கு இதுவரை ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுப்பதற்கான பயனாளிகளின் விபரம் கூட தமக்கு கிடைக்கவில்லை என இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே வெளி நாடுகளால் வழங்கப்படும் உதவித் திட்டங்கள் தெற்குக்கு கொண்டுசெல்ல முயற்சி எடுக்கப்படுகிறது. வெளிநாடுகளால் வழங்கப்படும் உதவித்திட்டங்களை வழங்கி வைத்து அமைச்சர்கள் படம் எடுத்து தமது பையிலிருந்து வழங்கியதாகக் காட்டிக்கொள்கிறார்கள்.

இதனாலே அரச ஊழியர்கள் அச்சப்படுகிறார்கள். இன்றைய கூட்டத்திற்கு பிரதேச செயலாளரோ, கிராம உத்தியோகத்தரோ வருகை தராததற்கு இதுதான் காரணம் என மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார்.

செய்தி.

Edited by தமிழ் அரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.