Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் பதிலுக்காக பான் கீ மூன் காத்திருப்பு

Featured Replies

இலங்கையின் பதிலுக்காக பான் கீ மூன் காத்திருப்பு

பொறுப்புக் கூறுதல் விடயமாகத் தான் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்து பேசவுள்ளதாகவும் நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் பதிலை இன்னும் எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாகவும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் கூறியதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.

நான் இலங்கை அரசாங்கத்தின் பதிலை எதிர்பார்த்துக்கொண்டுள்ளேன். அவர்கள் பதிலை விரைவாக அனுப்பினால் அதனடிப்படையில் புது விடயங்களை நான் தெரிந்துகொள்ளக் கூடும் என திங்கட்கிழமை நியூயோர்க்கில் நடந்த பத்திரிகையாளர்கள் மாநாட்டில் அவர் கூறினார்.

இதே கூட்டத்தில் தான் ஆசிய குழுவை சந்தித்ததாகவும் அவர்கள் இரண்டாம் தடவையும் தான், ஐ.நா. செயலாளர் நாயகமாக தெரியப்படுவதற்கு ஆதரவு வழங்குவதாகவும் கூறினார்.

நிபுணர் குழுவின் அறிக்கையின் சிபாரிசுகளில் அநேகமானவை இலங்கை அரசாங்கம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளாகும். இந்த நிபுணர் குழுவின் சிபாரிசுகளை பூரணமாக அமுல்படுத்த வைப்பதற்காக நான் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்து பேசுவேன் என அவர் கூறினார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/22635-2011-06-07-06-00-57.html

  • தொடங்கியவர்

On Sri Lanka, Ban Hasn't Moved to Review Actions of UN & Nambiar, Get Rajapaksa Support for 2d Term

In the past forty days, Ban Ki-moon has apparently done no review of Sri Lanka after he said on April 25 that he would act on the Panel of Experts' recommendation for a “review of the United Nations’ actions regarding the implementation of its humanitarian and protection mandates during the war in Sri Lanka – particularly in the last stages."

Inner City Press asked Ban if he supports the call by Navi Pillay for a independent probe into the war crimes alleges in the Panel of Experts report on Sri Lanka, and what action he has taken on the above quoted recommendation for a review of the actions of the UN and Ban's own chief of staff Vijay Nambiar, particularly in connection with assurances given to surrenderees who were then killed.

Ban said it is up to member states, and did not answer the second part of the question. He said he continues to wait for Sri Lanka's response, checking every day, he said.

These answers were given at a press conference in which Ban announced that he had met with the Asia Group and they support him for a second term as UN Secretary General.

After Ban's press conference, Inner City Press interviewed a Deputy Permanent Representative who attended the meeting. He said that no vote was taken, but rather “acclamation.” Inner City Press asked if Sri Lanka spoke, and the DPR said yes. So, the Rajapaksa government now supports Ban for a second term. Draw your own conclusions.

http://www.innercitypress.com/namban8sri060611.html

  • கருத்துக்கள உறவுகள்

Posted by சோபிதா on 07/06/2011 in செய்தி

நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் பதிலுக்காக தொடர்ந்தும் காத்திருப்பதாக ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் மீண்டும் அறிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பதவிக்காக மீளவும் போட்டியிடப் போவதாக அறிவிக்கும் நோக்கில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நிபுணர் குழு அறிக்கையின் பரிந்துரைகள் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நிபுணர் குழுவின் அநேக பரிந்துரைகள், இலங்கை அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட வேண்டியவை என பான் கீ சுட்டிக்காட்டியுள்ளார். இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் இலங்கை அரசாங்கமும் உறுப்பு நாடுகளுமே நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குவதன் மூலம் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நிபுணர் குழு அறிக்கை பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்துவது குறித்து இலங்கை அரசாங்கத் தலைமையுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்பாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாரமும் இலங்கை அரசாங்கத்திடமிருந்து பதில் கிடைத்ததா என்பதனை கவனித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

source:Eelam press.

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

பொறுமை என்னும் நகையணிந்து

பெருமை கொள்ள வேண்டும், பாங்கி!!!

பெண்ணாகப் பிறந்திருந்தால் உன்னை,என்

கண்ணிமைக்குள் வைத்துக் காத்திருப்பேன்!!!

எப்படியும் அடுத்த ஜனாதிபதிதான் பதில் கொடுப்பார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் பதிலுக்காக பான் கீ மூன் காத்திருப்பு

:D

டிஸ்கி: அடங்கொக்கா மக்கா சித்தா.. அதே வீடியோவை நானும் போட்டிருக்கிறன்..! :wub::lol:

  • கருத்துக்கள உறவுகள்

நானும் அதே பாடலைத்தான் போடவேண்டும். ஆனால் சித்தன்,இசைக்கலைஞன் இருவரும் போட்டு விட்டீர்கள், அதலால் யோசிக்கின்றேன்..........ஏதாவது ஞாபகம் வருகின்றதா என்று .....யாருக்காவது ஏதாவது ஞாபகம் வருகின்றதா ....?

Edited by தமிழ் அரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.