Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துரியோதன துணிச்சலில் இலங்கை அரசாங்கம்

Featured Replies

துரியோதன துணிச்சலில் இலங்கை அரசாங்கம்

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-06-11 08:32:19| யாழ்ப்பாணம்]

ஒருமுறை இவ்விடத்தில் ‘பலாப்பழப் பண்பாடு’ என்பது பற்றி எழுதியிருந்தோம். அதனை வாசித்த வாசகர்கள் ‘பலாப்பழப் பண்பாடு’ என்று ஒன்று உண்டா? என்று எம்மிடம் கேள்வி எழுப்பினர். பலாப்பால் படாமல் பலாப்பழம் சாப்பிட முடியாதல்லவா? எந்த காலத்திலும் அந்த தொந்தரவு இருக்கவே செய்யும். அது போன்ற சில தொந்தரவுகளை பலாப்பழப் பண்பாடு என்று கூற விளைந்தோம். அது போன்றதுதான் துரியோதன துணிச்சல்.

துரியோதன துணிச்சல் என்றால் என்ன? அழிவு நிச்சயம் என்று தெரிந்தும் தாம் செய்வது அநீதி என்று உணர்ந்தும் எவரையும் கனம் பண்ணாமல் எல்லாம் எனக்கே தெரியும் என்ற இறுமாப்பும், ஆணவமுமே துரியோதன துணிச்சலாகும். துரியோதன துணிச்சல் எவருக்கு ஏற்பட்டாலும், அவர்கள் உறவு, நட்பு என்று எதனையுமே பாராமல் கொண்ட கோலத்தின்பால் திட்டித் தீர்த்து, திசைவழி தெரியாது அழிவைத் தேடிக்கொள்வர்.

யார் அறிவுரை கூறினாலும் அது பகையாகிப் போகின்ற நிலையில் தனக்காக நிற்கின்றவரை கூட சந்தேகித்து அவரையும் வெறுக்கும் பரிதாப நிலையை ஏற்படுத்தக் கூடியதே துரியோதன துணிச்சலாகும். இத்தகையதோர் துணிச்சலே இலங்கை அரசிடம் காண முடிகின்றது.

ஐ.நா.சபையை எதிர்ப்பது, அமெரிக்காவை அதட்டுவது, பொதுவில் உலகையே சீண்டுவது என்ற பாங்கு அவ்வளவு புத்திசாலித்தனமானதல்ல. இத்தகைய அதட்டல்கள், வெருட்டல்களுக்கான தண்டனைகள் ஒட்டுமொத்தமாக வழங்கப்படுவதென்பதை துரியோதன துணிச்சல் கொண்டோர் மறந்துவிடுவர். இதற்கு மேலாக பிரித்தாளும் தந்திரமும் இத்துணிச்சலின் ஒரு வடிவமே. இந்திய மத்திய அரசுடன் மட்டுமே நாங்கள் தொடர்பு கொள்வோம். தமிழ்நாடு பற்றி எமக்குக் கவலையில்லை. இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.

இலங்கை மீது பொருளாதார தடைவிதிக்க வேண்டும் என தமிழக சட்டசபை தீர்மானம் நிறைவேற்றியதையடுத்து, இலங்கையின் அமைச்சரவை பேச்சாளர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இந்திய அரசுடன் மட்டுமே பேசுவோம். தமிழக அரசு பற்றி எமக்குக் கவலையில்லை என்று கூறுவதன் ஊடாக இந்தியா வேறு தமிழகம் வேறு என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த இலங்கை முற்படுகின்றது.

இலங்கைக்கு தமிழகம் பற்றி அக்கறை இல்லாமல் இருக்கலாம். ஆனால் இந்திய மத்திய அரசு அவ்வாறு இருக்க முடியாது. அவ்வாறாயின் தமிழகத்தின் நட்பு இலங்கைக்கு அவசியமல்லவா? இதைப் புரிந்துகொள்வதைக் கூட துரியோதன துணிச்சல் தடை செய்து விடுகின்றது.

பரவாயில்லை. முடிபு அப்படித்தான் ஆக வேண்டுமென்றிருந்தால் அதனைத் தடுப்பது எங்ஙனம்? பொறுத்திருந்து பார்ப்போம்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=20079

  • கருத்துக்கள உறவுகள்

துரியோதனனுக்குத் துணிச்சலைத் தந்தது, கர்ணன், பீஷ்மர், துரோணர் போன்ற மகா பாரதத்தின் மகா வீரர்கள்! அவனது துணிச்சலுக்கு ஒரு பின்-பலம் இருந்தது! அவ்வளவு பலமும் ;கண்ணன் என்ற ஒரு மாயாவியால், நீதிக்குப் புறம்பான முறையில் உடைக்கப் பட்டது!

தமிழனுக்குத் துணிச்சலைத் தந்தது, அவனது படைப் பலம், அவனது பக்கமிருந்த நியாயம் என்பன! படைப் பலம், இந்தியா என்ற மாயாவியால் உடைக்கப் பட்டது! ஆனால், நியாயம் இன்னும் எம்மோடு இருக்கின்றது!

சிங்களத்திற்கு என்ன பின் பலம் இப்போது இருக்கின்றது? இந்தியா, சீனா,ரஷ்சியா என்ற மும் மூர்த்திகள்!

இவர்கள் சிங்களத்திற்காக உயிர் விடக் கூடியவர்களல்ல!

போர்க் குற்ற ஆயுதம் சரியாகப் பயன்படுத்தப் படுமிடத்து, செத்த மாட்டில் இருந்து நத்தை களர்வது போல் கழன்று விடுவார்கள்!

[color="#9932CC"]சில பேரைச்சொல்லித்திருத்தலாம்.சில பேரை அடித்துத்திருத்தலாம்.சில பேரை அழித்து[அழிந்து] திரு?????????????????>>>>><<<<<</////,,,,,<<,........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.