Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர் விடயம்: டெல்லி மாறப்போவதோ, திருந்தப்போவதோ இல்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sunday, June 12, 2011, 17:30கட்டுரைகள், சிறீலங்கா

டெல்லியில் பணமுதலைகளால் விழுங்கப்பட்ட,தமிழர் எதிர்ப்பு மலைப்பாம்புகளால் சுற்றிபின்னப்பட்ட காங்கிரஸ் எனும் ஆட்சிக்காரர்களின் மனதில் ஒரு சிறு துளி மாற்றம் கூட வரவில்லை என்பது நேற்றைய சந்திப்பில் இருந்து தெளிவாகியுள்ளது.

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சீவ்சங்கர் மேனன் தலைமையிலான உயர்மட்டக் குழு சிறிலங்கா வந்து விட்டுச் சென்றுள்ளது. ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பில் புதுடில்லி அடிக்கடி சிறிலங்காவுக்குக் குழுக்களை அனுப்புவது என்பது வாடிக்கையான விடயம்தான். அத்துடன் இவர்களின் விஜயங்களால் ஆகப்போவது ஒன்றும் இல்லை என்பதும் தெரிந்த விடயமே.

ஆனால், இம்முறை இவர்களின் வருகையானது காத்திரமாகவும் ஆக்கபூர்வமாகவும் அமையுமென எதிர்ப்பார்க்கப்பட்டது. அதற்கான அகப்புறக் காரணிகளும் நிறையவே காணப்பட்டன. உள்ளுரிலும் சர்வதேசத்திலும் ஈழத்தமிழர் விவகாரம் கடந்த சில வாரங்களாக சூடுபிடித்திருந்த நிலையில் இந்தியாவுக்கும் இது ஒரு தலையிடி நிலையை ஏற்படுத்தியிருந்தது. விசேடமாக, தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஜெயராமன் ஈழத்தமிழர் தொடர்பிலும் இலங்கை தொடர்பிலும் பல ஆக்கபூர்மான கருத்துக்ளைத் தெரிவித்திருந்ததுடன் சில தீர்மானங்களையும் சட்டசபையில் நிறைவேற்றியிருந்தார். இவைகளும் புதுடில்லிக்கு நெருக்கடியையே கொடுத்தன.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் இந்தியத் தூதுக் குழுவின் விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் ஆக்கபூர்வமாக அமையும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அத்துடன் அமைச்சர் ஜீ.எல்.பீரிசுடன் இடம்பெற்ற முதலாவது கலந்துரையாடலின் போது இந்திய தரப்பினர் கடுந்தொனியில் சில விடயங்களைத் தெரிவித்திருந்தமை நம்பிக்கை தருவதாக இருந்தது. ஆனால், இவர்கள் ஆரம்பத்தில் தட்டிக் கேட்டது பின்னர் தடவிக் கொடுக்கத்தான் என்பது இப்போது தெரிய வந்துவிட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட மேலும் சில தமிழ்க் கட்சிகளைச் சந்தித்து அவர்களின் கருத்துகளை இந்திய தூதுக் குழு உள்வாங்கிய நிலையில், சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்த பின்னர் அந்தக் குழுவினர் வெளியிட்ட கருத்துகள் இவர்களின் இந்த விஜயம் மீது கொண்டிருந்த நம்பிக்கையை சிதறடித்துவிட்டது.

சிறிலங்காவுக்கு வந்து கூறாமல் புதுடில்லியிலேயே வைத்துக் கூறக் கூடிய கருத்துக்களையே கொழும்பிற்கு வந்து கூறியுள்ளனர். மட்டுமன்றி இந்த கருத்துக்கள் ஏலவே இந்தியாவால் கூறப்பட்டதொன்றே.

அவர்கள் கூறிய கருத்துக்கள்;

1. “இலங்கையில் அரசியல் தீர்வு காணும் விடயத்தில் இந்தியா தலையிடாது. அது இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்த விடயம்” என அவர்கள் கூறியுள்ளமை தமிழ்க் கட்சிகளையும் தமிழ் மக்களையும் மீண்டும் ஒரு முறை ஏமாற்றமடையச் செய்துள்ளது. தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து மட்டுமே இவர்கள் கருத்துப் பரிமாற்றம் செய்துள்ளனர்.

2. ” நல்லிணக்க ஆணைக்குழு உள் நாட்டில் நல்ல முறையில் செயற்படுகின்றதனால் ஐக்கிய நாடுகள் சபை அறிக்கைபற்றி நாம் பேசவில்லை” என கூறியுள்ளார் சிவசங்கர் மேனன்.

3. ” இந்தியா ஒரு வெளி நாடு நாங்கள் அழுத்தத்தினை கொடுக்க முடியாது ஆனால் நீங்கள்தான் ( கூட்டமைப்பு) அரசாங்கத்துடன் பேசி இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும்.

மேற்கூறிய கருத்துக்களில் இருந்து டெல்லி மாறப்போவதோ, தமிழர்க்கு சாதகமாக ஏதாவது செய்யப்போவதோ என்று தென்படவில்லை.

மேலும், தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். அவர்களது அடிப்படைப்படைப் பிரச்சினைகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று எல்லாம் தமது தரப்பு சிறிலங்கா ஜனாதிபதியிடம் விநயமாக கேட்டுக் கொண்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைக் கூறிவிட்டு செல்லத்தான் இவர்கள் வந்தார்கள் என்றால் அது வேடிக்கையாகவே இருக்கும்.

இலங்கையில் அரசியல் தீர்வு காணும் விடயத்தில் இந்தியா தலையிடாது எனக் கூறும் இதே காங்கிரஸ் அரசுதான் 1987 களில் ஜே. ஆர். – ரஜீவ் ஒப்பந்தத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு எந்தவிதத்திலும் பயனளிக்காத 13 ஆவது திருத்தச் சட்ட மூலத்திலான மாகாண சபையைத் திணித்திருந்தது என்பதனையும் இங்கு தெரிவிக்க வேண்டும்.

இலங்கை ஓர் இறைமைமிக்க நாடு அதன் உள்விவகாரங்களில் தலையிட முடியாது என இப்போது அடிக்கடி கூறி தனது பொறுப்பைத் தட்டியும் கழிக்கப் பார்க்கிறது இன்றைய புதுல்லி அரசு. ஆனால், ரஜீவ்காந்தி காலத்தில் சிறிலங்கா வான்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து இந்திய விமானப்படைகள் வடமராட்சியில் பருப்புப் போட்ட போது இந்த உலக தர்மத்தை, இறைமையை இந்தியா ஏன் மறந்தது என்ற கேள்வியையும் இன்றைய நிலையில் புதுடில்லி அரசிடம் கேட்கவே வேண்டும். ஆனால் இவற்றையெல்லாம் மறந்த நிலையிலே இன்று உலக ஜனநாயகம், இறைமை என்றெல்லாம் பேசுகிறது.

.

இந்திய அரசின் இந்தப் போக்கானது ஈழத்தமிழர்களையும் முக்கியமாகத் தமிழ் அரசியல் கட்சிகளையும் மீண்டும் ஒரு பாரிய ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளது. வன்னி யுத்தத்தில் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களின் படுகொலைக்குத் துணைபோன இந்திய அரசானது இன்று ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கான அவர்களின் குறைந்தபட்சக் கோரிக்கைகளையேனும் பெற்றுக் கொடுக்கத் துணை நிற்காமல் உலக ஜனநாயகம் பேசுவது கவலை தரும் ஒரு விடயமே.

இது ஒருபுறமிருக்க, இந்திய அரசினால் ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வாகத் தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டு வருவது 13 ஆவது திருத்தச் சட்டமூலமே. தமிழர் தாயகத்தில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக பரீட்சித்துத் தோற்றுப் போன மாகாண சபைக்கு முழு அதிகாரமும் வழங்கினால் போதும் என்ற நிலைப்பாட்டிலேயே இந்திய அரசு உள்ளது. எந்த மக்களுக்காக எந்த மாகாணங்களுக்காக சிறிலங்காவில் மாகாண ஆட்சி முறை அமுல்படுத்தப்பட்டதோ அந்த மாகாணங்களில் இந்த ஆட்சிமுறை இன்று செயலற்றுக் கிடக்கிறது. அதிகாரம் அனைத்தும் மைய அரசிடமும் ஆளுநரிடமும் குவிந்து கிடக்க ‘ஜவுளிக் கடையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இறப்பர் பொம்மைகள்’ போன்று கிழக்கு மாகாண அமைச்சர்களின் நிலை இன்றுள்ளது. ஆகவே, தமிழ் மக்களின் பிரச்சினைக்காக 13 ஆவது திருத்தச் சட்டமூலத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று கோருவதும் அர்த்தமற்றது. அவ்வாறு ழுமுமையான அதிகாரம்தான் ஒருவேளை வழங்கப்பட்டாலும் அது நிச்சயமாக நிலைத்து நிற்க சிறிலங்கா சிங்கள அரசு விடப்போவதும் இல்லை என்பதனையும் இங்கு குறிப்பிட வேண்டும். அனைத்தும் காலச்சூழ்நிலைக்கு ஏற்ற தற்காலிகச் சமாளிப்பாகவே இருக்கும்

மேலும், இலங்கையில் அரசியல் தீர்வு காணும் விடயத்தில் இந்தியா தலையிடாது என்று புதுடில்லி அரசு தெரிவித்திருப்பதானது ஒரு வழியில் சிறிலங்கா அரசை உற்சாகப்படுத்தி அதற்கு வலுவூட்டுவதாகவே அமைகிறது. இதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சிறிலங்கா அரச தரப்புப் பேச்சுவார்த்தையும் கேள்விக்குறியாக்கப்படலாம். அத்துடன் தமிழ் மக்களின் ஒரே குரலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குரல்வளையையும் சிறிலங்கா அரசு நசுக்கவும் முயற்சிக்கலாம்.

இது இவ்வாறிருக்க, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சீவ்சங்கர் மேனன் தலைமையிலான இந்தி உயர்மட்டக் குழுவினைச் சந்திக்க வாய்ப்பு வழங்கப்படாத நிலையில் அவர் சீவ்சங்கர் மேனனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைப்பது குறித்த ஆலோசனையை முன்வைத்துள்ளார். அமைச்சர் டக்ளஸின் இந்தக் கோரிக்கையானது ஏற்றுக் கொள்ளப்பட்டால் நிச்சயமாகத் தமிழ் மக்களின் அடிப்படை மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் என்பது எட்டாக்கனியாக, சில வேளைகளில் அனைத்துப் பிரச்சினைக்கும் தீர்வே கிட்டாத நிலையையே அது உருவாக்கும். சிறிலங்கா அரசைப் பொறுத்த வரையில் டக்ளஸின் கோரிக்கையானது முழுமையான சாதகத்தன்மை கொண்டதே.

அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் அமைக்கப்பட்ட சர்வக்கட்சிக் குழு நூற்றுக்கும் மேற்பட்ட தடவைகள் கூடி இனப்பிரச்சினை தீர்வுக்காக உருவாக்கிய வரைவை சிறிலங்கா ஜனாதிபதியிடம் வழங்கியிருந்தது. ஆனால் அந்த அறிக்கை இன்று அனாதையாக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுகிறது. இவ்வாறானதொரு நிலையில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிக்கும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவும் நியமிக்கப்பட்டால் அதே நிலையே இந்தக் குழுவுக்கும் அதன் அறிக்கைக்கும் நேரும் என்பது மட்டும் நிச்சயம்.

கொழும்பிலிருந்து சித்தன்….

தமிழ்த்தாய்.

Edited by தமிழ் அரசு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர் விடயம்: டெல்லி மாறப்போவதோ, திருந்தப்போவதோ இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

1275059902_96513374_1-Pictures-of--MTS-HIGH-SPEED-INTERNET-1275059902.jpg

Uninor_Launches_GPRS_Services.jpg

RELIANCE.jpg

டவர் வைப்பதற்கான பேச்சு வார்த்தைக்கு வந்தவர்களை போய்... இப்படியெல்லாம் தீர்வு கீர்வு என்று பயமுறுத்தாங்கிப்ப்பூ... பச்சபுள்ளைக ஒன்னுமே தெரியாதுகண்ணா... :lol:

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 200,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

காரணமாக இருந்த பயங்கரவாதிகளின் பயங்கரவாதிகளுக்கு உதவுபவர்கள் அனைவரும் அழிவது திண்ணம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.