Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவின் நாடாளுமன்ற தெரிவுக்குழு யோசனை காலம் கடத்தும் முயற்சி!

Featured Replies

மகிந்தவின் நாடாளுமன்ற தெரிவுக்குழு யோசனை காலம் கடத்தும் முயற்சி! - கூட்டமைப்பு நிராகரிப்பு!

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்காக நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை அமைக்கப் போவதாக சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன், இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்குப் பதிலாக, இது காலத்தைக் கடத்துவதற்கான உபாயமாக மட்டுமே இருக்க முடியும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்புக்கு விஜயம் செய்திருந்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தலைமையிலான குழு சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நேற்று முன்தினம் (11.06.11) அலரி மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது.

இந்தப் பேச்சுவார்த்தையின் போது இனப்பிரச்சினைக்கு தீர்வினைக் காண நாடாளுமன்ற தெரிவுக் குழுவை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ரரிபக்ச இந்திய உயர்மட்டக் குழுவினரிடம் தெவித்திருந்தார்.சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பைத் தொடர்ந்து இந்திய உயர்மட்டக் குழுவினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்துக் கலந்துரையாடி இருந்தனர்.

இச்சந்திப்பின்போது, இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை அமைக்க சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாக இந்திய உயர்மட்டக் குழுவினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் தெவித்துள்ளனர். இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெவித்ததுடன், நாடாளுமன்ற தெரிவுக் குழு என்பது காலத்தை இழுத்தடிப்பதற்கான முயற்சி எனவும், இதனை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர். இவ்விகாரம் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெவிரித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் விசனம் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

'இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்காக நாடாளுமன்ற தெரிவுக் குழுவை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்திய உயர்மட்டக் குழுவினரிடம் தெவித்துள்ளார். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என நாம் திட்டவட்டமாக தெவித்துள்ளோம்.சிறிலங்காவின் மறைந்த ஜனாதிபதி பிரேமதாசாவின் ஆட்சிக் காலத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள முனசிங்கவின் தலைமையில் நாடாளுமன்ற தெரிவுக் குழு அமைக்கப்பட்ட போது, அதனால் பயனெதுவும் ஏற்படவில்லை.

இதேபோன்று, சிறிலங்காவின் தற்போதைய ஜனாதிபதியினால் நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது. இதனைவிட சர்வகட்சி பிரதிநிதிகள் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுக்கள் தமது அறிக்கையினை சமர்ப்பித்துள்ள போதிலும் அவை எதுவும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனைவிட, சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் அரசியல் தீர்வுப்பொதி தயாரிக்கப்பட்டது. அதுவும் நடைறைப்படுத்தப்படவில்லை. சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் ஜாதிக ஹெல உறுமய உட்பட பல கட்சிகள் அங்கம் வகித்திருந்தன. அந்த அறிக்கையும் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்துடன் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றது. அதிலும் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்த நிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு மீண்டுமொரு நாடாளுமன்ற தெரிவுக் குழு அமைப்பது என்பது காலத்தை வீணடிக்கும் முயற்சியாகும். இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டாது.

இதுகுறித்து இந்திய உயர்மட்ட குழுவினரிடம் தெரியப்படுத்தியுள்ளோம். இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலும், வடக்கில் இடம்பெற்று வரும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத விவகாரங்கள் தொடர்பாகவும் நாம் எடுத்துக் கூறிய விடயங்களை இந்திய உயர்மட்டக் குழு ஏற்றுக் கொண்டுள்ளது. எம்முடன் ஒத்துழைத்து செயற்படவும் இந்திய உயர்மட்டக் குழு உறுதியளித்துள்ளது' என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இதனிடையில், இந்திய உயர்மட்டக் குழுவினருடன் ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும், சிறிலங்காவின் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தொலைபேசி மூலம் கலந்துரையாடிய போது, இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைப்பது குறித்த ஆலோசனையை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={03AFCD11-B4C2-4216-88C6-AB6F4B235BC5}

  • கருத்துக்கள உறவுகள்

.............!

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இது தெரிவுக்கு குழு அமைத்தால் அவர்கள் மட்டும் கஸ்டபட நேரிடும் அவர்களுக்கு உதவிடும் வகையில் ஒரு

செயற்குழுவும் மற்றும் ஒரு செயல் குழுவும்

டிஸ்கி :

இங்கதான் நீங்க கவனமாக இருக்கணும் இங்க ஒண்ணும் 5ம் கிளாஸ் பாடம் சேர்த்து எழுதுக பிரித்து எழுதுக.... நடத்தவில்லை .அடிப்படையில் இரண்டும் வெவ்வேறானவையாகும்

போக தெரிவு குழுவுக்கு ஆலோசனை கூற ஒரு புத்தி சீவிகள் குழுவும் அந்த புத்திஜீவுகள் குழுவுக்கு ஆலோசனை செய்ய ஒரு சட்டதரணிகள் குழும் அந்த சட்டதரணிகள் குழுவுக்கு.

----

----

---

---

இன்பினிட்டி

தல சுத்தல?? அட இன்னுமா கதை கேட்டுகொண்டு இருக்கிறீர்கள் .. வீட்டுல சாப்பிட்டு தூங்கற வழியபாருங்கப்பூ

smiley-laughing-2.gifsmiley-laughing-2.gif

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.