Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீதி அமைச்சர் ஹக்கீம் அவர்களுக்கு குளோபல் தமிழ்ச் செய்திகள் ஊடாக ராஜா பரமெஸ்வரி எழுதுவது:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

14 ஜூன் 2011

அன்புடன் நீதி அமைச்சர் ஹக்கீம் அவர்களே நீங்கள் நலமா? நிட்சயமாக நலமாகவே இருப்பீர்கள். காரணம் இப்போ அரசாங்கத்தின் பக்கத்தில் சகல சௌபாக்கியங்களுடனும் இருக்கிறீர்கள் அல்லவா?

முன்னர் எதிர் கட்சி வரிசையில் நாட்டின் அடக்கு முறைக்கு எதிரான எதிர்க் கட்சிகளின் கூட்டமைப்பில் மனித உரிமைகளுக்காகவும், ஊடக சுதந்திரத்திற்காகவும் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்த போது பல அசௌகரியங்களை எதிர் நோக்கினீர்கள்.

காலம் எப்போதும் மனிதர்களை சௌகரியமாகவும் வைத்திருப்பதில்லை. அசௌகரியமாகவும் வைத்திருப்பதில்லை. அந்த சூத்திரத்தின்படி இப்போ உங்களுக்கு சௌகரியமான காலம்.

மகிந்த ராஜபக்ஸ அன் கொம்பனியின் சர்வாதிகார எதேட்சாதிகார அல்லது அடாவடித்தனமான ஆட்சியின் கீழ் நீண்ட நெடுங்காலமாக எதிர்க் கட்சி வரிசையில் தொடர்ந்தால் உங்களைத் தவிர அனைவருமே அரசாங்கத்தின் அடியில் சரணாகதி அடைந்து விடுவார்கள் கட்சி அழிவதனை தடுக்க முடியாது என்ற தத்துவார்த்த விளக்கத்தில் ஒட்டு மொத்த கட்சியாகவே சரணடைந்தீர்கள். யதார்த்த பூர்வமாக இதனைத் தவிர வேறு வழியில்லை என்ற அளவில் உங்கள் கௌரவ அரசியலை மதித்த என்போன்றவர்கள் அமைதியானோம்.

முஸ்லீம் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்த நீங்களும் உங்கள் நண்பரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசீர் சேகுதாவுத் உள்ளிட்டோரும், ஏனைய சிறுபான்மையினருக்கு எதிராக அரசாங்கங்கள் மேற்கொண்ட அடக்குமுறைகளுன் போது, நியாயமான முறையில் குரல் கொடுத்து வந்தீர்கள். முஸ்லீம் சமூகத்தை முன்னோக்கி கொண்டு செல்ல, அவர்களின் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய வேண்டுமானால், ஆளும் அரசாங்கங்களுடன் இணக்கப்பட்டு அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்ற உங்கள் சிந்தனைக்கு அமைவாக காலத்திற்கு காலம் ஆளும் அரசாங்கங்களுடன் சமரசம் செய்து ஆட்சியில் பங்கெடுத்தும் வந்தீர்கள். அப்போதும் கூட உங்களின் அந்த நிலைப்பாடு தவிர்க்க முடியாதது என என் போன்றவர்கள் அமைதியானோம்.

காரணம் அரசாங்க தரப்பில் இருந்த பல சந்தர்ப்பங்களில் கூட ஏனைய சிறுபான்மையினருக்கு எதிரான அல்லது மனித உரிமை மீறல்களை, அரச அடக்கு முறைகளை, நியாயமான முறையில் விமர்சனம் செய்து வந்தீர்கள். இதற்கு பல உதாரணங்களை சொல்ல முடிந்தாலும் மிக முக்கியமான ஒரு உதாரணத்தை சொல்ல விரும்புகிறேன்.

வன்னியை கைப்பற்றும் நோக்கில் இலங்கை அரச படைகள் கண்மூடித்தனமான தாக்குதல்களை ஆரம்பித்த போது ஆரம்பத்தில் அரசாங்க விமானப்படையின் தாக்குதலில் புலிகளின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச் செல்வன் கொல்லப்பட்ட போது இலங்கை நாடாளுமன்றத்தில் கவலை தெரிவித்து உரையாற்றி இருந்தீர்கள். அப்போது அரசாங்க தரப்பினர் அது குறித்து கடுமையாக உங்களை திட்டித் தீர்த்த போது 'சமாதானப் பேச்சுவார்த்தையில், ஒரே மேசையில், 6 சுற்றுப் பேச்சுவார்த்தைகளை அருகருகே இருந்து நடத்தியவர்களில் ஒருவர் என்ற வகையில் தமிழ்ச் செல்வனின் மரணத்தை நினைவுகூருவது எனது உரிமை மனிதத்துவமும் கூட என உறுதியாகக் கூறினீர்கள்'. இது உங்களது கனவான் அரசியல் என என்போன்ற பலரும் பெருமைகொண்டோம்.

அதுபோலவே தமிழ்க் கட்சிகள் உட்பட மாற்று கட்சிகளில் உள்ளவர்கள் பலரும், கனவான் அரசியல் செய்பவர்களின் பட்டியலில் உங்களையும் சேர்த்துக் கொள்வார்கள்.

பல்வேறு அரசியல் கருத்து முரண்பாடுகளுக்கு அப்பால் நாகரீகமான அரசியலைச் செய்து வந்த நீங்கள் உலகமே கொலைகாரர் என குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியுள்ள மகிந்த ராஜபக்ஸ அன் கொம்பனியில் சங்கமமானதனைக் கூட காலத்தின் கட்டாயம் என என் போன்றவர்கள் மனதைத் தேற்றிக் கொண்டோம்.

ஆனால் சட்டத்தரணியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் நீதி அமைச்சுப் பொறுப்பை வகிக்கக் கிடைத்தமை பெரும் பாக்கியம் என கருதுவதாக கடந்த ஜனவரி 8 2011 அன்று நீங்கள் நீங்கள் சொன்ன போது ஒரு கணம் அதிர்ந்து போனோம்.

உடனடியாகவே இந்தக் கடிதத்தை எழுத வேண்டும் என என்மனம் போராடியது. அப்போது கூட அது காலத்தின் கட்டாயமோ என நினைத்து சற்று அமைதியாகிவிட்டேன்.

ஆனால் இன்று 13.06.11 குளோபலில் வந்த

தமிழக சட்ட மன்ற தீர்மானத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் கண்டனம்

"தமிழக சட்ட மன்றில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கப்பட வேண்டுமென தமிழக சட்ட மன்றில் அண்மையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலங்கை அரசாங்கத்திற்கும் சிறுபான்மை கட்சிகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளை குழப்பும் வகையில் தமிழக சட்ட மன்றத்தின் தீர்மானம் அமைந்துள்ளதாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல்பிரிவுப் பொறுப்பாளர் எச்.எம்.எம். ஹாரீஸ் தெரிவித்துள்ளார்.

இந்தத் தீர்மானத்தை வடக்கு கிழக்கு முஸ்லிம்களும் வன்மையாகக் கண்டிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் முதலீடுகளை செய்துள்ள சில நிறுவனங்களின் நடவடிக்கைகளையும் இந்தத் தீர்மானம் பாதிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்."

இந்தச் செய்தியைப் பார்த்த பின்பும் உங்களுக்கான கடிதத்தை எழுதாவிடின் காலத்தை பயிர் செய்ய வேண்டும் என்ற முதுமொழியை உதாசீனம் செய்வதாகிவிடும் என்பதனால் உடனடியாகவே எழுதுகிறேன்.

காரணம் தமிழக சட்மன்றத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் கொண்டுவந்த சட்டமூலம் என்ன இலங்கையை இரண்டாகப் பிரித்து தமிழர்களுக்கு தமிழீழத்தை கொடுக்கச் சொல்லி இருக்கிறதா?

இல்லாவிடின் பிரிந்திருக்கிற வடகிழக்கை இணைத்து அதில் முஸ்லீம்களுக்கான அலகை நீக்கி தனித் தமிழ் மாகாண சபையை தமிழர்களுக்கு கொடுக்கச் சொல்லி இருக்கிறதா?

இல்லாவிடின் ஒன்றிணைந்த இந்தியாவின் கீழ் தமிழகத்திற்கு இருக்கும் அரைகுறை மாநில சுயஆட்சியை அல்லது சமஸ்டி முறையிலான தீர்வை கொடுக்கச் சொல்லி இருக்கிறதா?

இல்லாவிடின் முஸ்லீம்களை தவிர்த்து ஒரு அரசியல் தீர்வை தமிழர்களுக்கு கொடுக்கச் சொல்லி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளதா?

இல்லையே ஆற்ற முடியாத காயங்களாலும் றணங்களாலும் ஏதிலிகளாகவும் அனாதைகளாகவும் இருக்கும் தமது தமிழ் உறவுகள் ஏனைய இனங்களுக்கு சமமாக வாழும் கௌரவத்தை பெற்றுக் கொடுக்க இந்திய மத்திய அரசு உதவ வேண்டும் என்று தானே சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள். துடிக்கத் துடிக்க கொத்துக் கொத்தாக தமிழர்களை கொன்றொழித்த அரச படைகளை வழிநடத்திய மகிந்தரைத் தானே சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும், சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு அடி பணிய மறுத்தால் பொருளாதாரத் தடை விதிக்க வெண்டும் என்றுதானே சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள்.

இதற்கு போய் ஏனய்யா உங்கள் கட்சி இப்படித் துள்ளிக் குதிக்க வேண்டும்?

நீங்கள் முன்னர் துரோகிகளாக சொன்ன உங்கள் கட்சியில் இருந்து சென்ற அமைச்சர்கள் அத்தாவுல்லா, ரிசாத் பதியுதீன், கிஸ்புல்லா முன்னாள் அமைச்சர்கள் பேரியல் அஸ்ரப், சேகுஇஸடீன், பாயிஸ் முஸ்தபா, அமீர் அலி அல்லது இவர்களின் கட்சிகள் இப்படி ஒரு அறிக்கையை விட்டு இருந்தால் அதனை ஒரு விடயமாகவே என் போன்ற தமிழர்கள் எடுத்திருக்க மாட்டோம். ஆனால் விமர்சனங்களுக்கு அப்பால் அரசியலில் கனவான் எனச் சொல்லப்பட்ட உங்களாலும் உங்கள் கட்சியாலும் இப்படி குத்துக் கரணம் அடிக்க எப்படி முடிகிறது ஹக்கீம் அவர்களே.

நீங்கள் எதிர்கட்சி வரிசையில் இருந்தபோது இலங்கையில் ஒரு சுமூகமான தீர்வு எட்டப்பட வேண்டுமானால் அது இந்தியாவின் கைகளிலேயே தங்கியிருக்கிறது என பலதடவைகள் வெளிப்படையாகவே கருத்துகளை தெரிவித்திருக்கிறீர்கள். கிழக்கில் காணிப் பறிப்பு முஸ்லீம் மக்களுக்கு எதிராக ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள், உடத்தலவின்ன படுகொலைகள், மகிந்தரின் ஆட்சியில் ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள், ஊடக அடக்குமுறைகள் என்றபோதெல்லாம் சர்வதேசம் இலங்கையின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றீர்கள். முஸ்லீம் நாடுகள் இலங்கையில் முஸ்லீம்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து கவனத்தில் எடுக்க வேண்டும் என்றீர்கள். அப்பொதெல்லாம் இலங்கையின் இறையாண்மை பற்றி, பாதிப்புகள் பற்றி நீங்களும் உங்கள் கட்சியும் சிந்திக்கவில்லையா?

உங்களுக்கு தெரியுமோ? அல்லது ஞாபகம் இருக்கிறதோ தெரியாது. வடக்கில் இருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட போது விடுதலைப் புலிகளின் பல நெருக்குதல்களுக்கு மத்தியிலும் தமிழீழத்தின் தேசியத் தற்கொலை என சரிநிகர் என்ற பத்திரிகை கட்டுரை வடிவில் முதற்பக்கத்தில் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தது.

அன்று விடுதலைப் புலிகளைத் தவிர அனைத்து தமிழ்க் கட்சிகளும் அவற்றின் தலமைகளும் அதனை வன்மையாக எதிர்த்திருந்ததோடு கண்டன அறிக்கைகளையும் வெளியிட்டு இருந்தன. ஏன் சமாதான காலத்தில் விமர்சனங்களுக்கு அப்பால் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் கைகுலுக்கி புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்டபோது முஸ்லீம்களின் வெளியேற்றம் வலராற்றுத் தவறு என பிரபாகரன் உங்களிடம் மன்னிப்புக் கோரியதாக நீங்கள் தானே ஊடகங்களில் அறிக்கை விட்டு இருந்தீர்கள்?

முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டு 2 தசாப்பதம் முடிந்த பின்பும் இப்போ படிப்படியாக வடக்கில் மீழ் குடியேறி வருகின்ற நிலையிலும் கூட இன்றளவும் புலம்பெயர் தமிழ் ஊடகங்களில் இருந்து புத்திஜீவிகள் மனித உரிமையாளர்கள், ஜனநாயகவாதிகள் என தமிழ்த் தரப்பில் முஸ்லீம்களின் வெளியேற்றம் தவறு என பாவ மன்னிப்பு கேட்டுகொண்டு தானே இருக்கிறார்கள்.

விடுதலைப் புலிகளாலும் அல்லது ஏனைய போராட்ட இயக்கங்கள் சிலவற்றாலும், கிழக்கில் பள்ளிவாசல்களிலும் கிராமங்களிலும் முஸ்லீம்கள் கொல்லப்பட்ட போது சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகளையும் அவர்களின் இயக்கங்களையும் தவிர பெரும்பாலான தமிழ்க் கட்சிகள், புத்திஜீவிகள், மனித உரிமைவாதிகள் உள்ளிட்ட தமிழ்த் தரப்பினர் அவற்றிற்கு எதிராக குரல் கொடுத்ததோடு இன்றளவும் இத்தகைய அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் சுயவிமர்சனம் உள்ளிட்ட பாவ மன்னிப்புக்களை முஸ்லீம்களிடம் கோரிக்கொண்டு தானே இருக்கிறார்கள்.

ஆனால் கிழக்கில் திருகோண மலை மாவட்டம் மூதுர் முதல் அம்பாறை வரை எல்லைக் கிராமங்கள் உள்ளிட்ட பல கிராமங்களில் முஸ்லீம் ஊர்காவல் படையினர் மற்றும் அரசாங்க புலனாய்வுப் பணியில் ஈடுபட்ட முஸ்லீம் இளைஞர்களால் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொன்றொழித்தமை குறித்து இதுவரை முஸ்லீம் தலமைகள் வெளிப்படையாக வருத்தம் தெரிவித்திருக்கிறார்களா? ஹக்கீம் அவர்களே!

வன்னி இறுதி யுத்தத்தில் லட்சக்கணக்கில் தமிழர்கள் குரூரமாகக் கொல்லப்பட்டு பல்லாயிரக்கணக்கில் காணமால் போய், பல்லாயிரக்கணக்கில் அங்கவீனர்களாகி, ஒருலட்சம் வரையிலான பெண்கள் கணவன்மாரை இழந்து, ஆயிரக்கணக்கான சிறார்கள் பெற்றோரை இழந்து சொத்திழந்து, வாழ்ந்த நிலமிழந்து, அகதி முகாம்களிலும் சிறைகளிலும், முட்கம்பி வேலிகளின் பின்னாலும் ஒரு இனமே தனது அனைத்து அடையாளங்களையும் இழந்து நிற்கும் போது நீங்கள் ஈறாக முஸ்லீம் தலைமைகள் அனைத்துமே இந்த அரசாங்கத்துடனும் அதன் கொடூர ஆட்சியாளர்களுடனும் இணைந்திருந்தாலும் அவர்களுக்கு நற்சான்றிதழ் கொடுக்கவும், நியாயப்படுத்தவும், சாமரம் வீசவும் எப்படி முடிகிறது ஹக்கீம் அவர்களே எப்படி முடிகிறது?

அதுவும் உலகமே மகிந்தரையும் அவரது சகோதரர்களையும் கொலைகாரர் என்று சொல்ல சிங்களப் புத்திஜீவிகள், மனித உரிமைவாதிகள், பத்திரிகயாளர்கள் பலர் தமிழ் மக்களுக்கு நடந்த கொடூரங்கள் குறித்து இரத்தக் கண்ணீர் வடிக்கும் போது சட்டத்தரணியான ஜனாதிபதியின் ஆட்சியின் கீழ் நீதி அமைச்சராக கடைமையாற்ற பாக்கியம் செய்திருக்கிறேன் எனக்கூற உங்கள் மனம் எப்படித் துணிந்தது என கூறுவீர்களா? ஹக்கீம் அவர்களே.

சரி போகட்டும்! இத்தனை அழிவுகளையும் தாங்கிக்கொண்டு சர்வதேசத்தின் உதவியுடன் ஆட்சியாளர்கள் மீது அழுத்தங்களைப் பிரயோகித்து மிகக்குறைந்த அளவிலான அரசியல் தீர்வைத்தானும் பெற்றுவிடலாம் என்ற ஒரு நப்பாசையில் தமிழ்த் தரப்பு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்ற போது அதனைக் கூட நீங்களும் உங்கள் கட்சியும் குறிப்பாக தேசிய விடுதலைப் போராட்டத்தில் தன்னை முன்னர் இணைத்துக் கொண்ட பசீர் சேகுதாவுத்தும் தாங்கிக்கொள்ளாது துடிக்கிறீர்களே?

அண்மையில் உங்கள் கட்சியின் சார்பில் முஸ்லீம் காங்கிரசின் உயர் பீடத்தைச் சேர்ந்தவர் ஒரு அறிக்கை விட்டிருந்தார். அவரது பெயர் ஞாபகம் வரவில்லை. அதில் அவர் கூறுகிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவாத்தையில் முஸ்லீம் காங்கரசையும் முஸ்லீம்கள் தரப்பாக அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று. அந்தக் கோரிக்கையுடன் நின்றால் போதாதா? ஒரு படிமேல் சென்று அவ்வாறு பேச்சுவார்த்தையில் 3ஆம் தரப்பாக இணைப்பது அரசாங்கத்திற்குதான் லாபகரமானது என ஆலோசனையும் கூறியிருக்கிறார். இதில் என்னய்யா நியாயம் இருக்கிறது?

பெரும்பான்மை இனங்களால் ஒடுக்கப்படுகின்ற ஒவ்வொரு சிறுபான்மை இனங்களும் தமது உரிமைகளுக்காகவும் ஒடுக்கு முறைக்கு எதிராகவும் போராட வேண்டியது நியாயமானது. அதனை தமிழர் தரப்பினர் நிட்சயமாக ஏற்றுக் கொள்ளுவார்கள். அதன்படி முஸ்லீம்களின் உரிமைகளுக்காக முஸ்லீம்களின் ஏகோபித்த தலமை முஸ்லீம் காங்கிரஸ் எனவும் அதன் தேசியத் தலைவர் நீங்கள் என்றும் விடுதலைப் புலிகள் காலத்தில் இருந்து தெளிவாக கூறிவரும் நீங்களும் உங்கள் கட்சியும தானே; போராட வேண்டும் அவ்வாறு முஸ்லீம் மக்களின் உரிமைகளுக்காக தனித்து நின்று ஆளும் அரசுகளுக்கு எதிராக போராட திராணியற்று நீங்களும் ஏனைய முஸ்லீம் தலமைகளும் ஐக்கியதேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்தாலும் ஆளும் தரப்பில் பங்காளராக இருந்து கொண்டு தமிழர் தரப்பு தமக்கான அரசியல் தீர்வு குறித்து பேச முற்படும் போதெல்லாம் 3ஆம் தரப்பாக உங்களையும் இணைத்துக் கொள்ளச் சொல்வதில் என்ன நீதி இருக்கிறது நீதி அமைச்சர் அவர்களே?

ஐயா ஒருதரம் கூறுங்கள்அனைவராலும் அறியப்பட்ட முஸ்லீம் கட்சிகளில் எந்தத் தலைமை இப்போ அரசாங்கத்திற்கு வெளியில் இருக்கிறது? நீங்கள் (ஹக்கீம்) ரிஸாத் பதியுதீன், அத்தாவுல்லா, பௌசி, காதர், உள்ளிட்டவர்கள் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள்;. ஹிஸ்புல்லா, பைசல் முஸ்தபா, ஏனைய பெயர்கள் ஞாபகம் வரவில்லை இன்னும் பலர் பிரதி அமைச்சர்கள். அலவி மௌலானா - ஆளுனர், பேரியல் அஸ்ரப் சிங்கப்பூரின் தூதுவர், நாடாளுமன்ற உறுப்பினர் அஸவர் ஜனாதிபதிக்கு நெருக்கமான நம்பிக்கைக்கு உரியவர். இவற்றை விடவும் வெளிநாட்டு தூதுவர்கள் அரசாங்கத்தின் நம்பிக்கைக்கு உரிய உயர் பதவிகளில் உள்ளவர்கள் இருக்கிறீர்கள்.

அமச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் நாட்டின் ஆட்சி குறித்து கூட்டுப் பொறுப்பு உள்ளவர்கள் தானே? அப்படி ஆயின் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டால், மனிதர்கள் காணாமல் போனால், கொல்லப்பட்டால், ஊடக சுதந்திரம் மறுக்கப்பட்டால், சிறைச்சாலைகளில் காரணம் இன்றி ஆயிரக்கணக்கில் மனிதர்கள் அடைத்து வைக்கப்பட்டால், அம்பாறையில் முஸ்லீம்களின் காணிகளில் பெரும்பான்மையினர் அத்துமீறிக் குடியேறினால், முஸ்லீம்களின் காணிகளை பறித்தால், அவர்களின் பள்ளிவாசல்களில் தொழுகை நேரங்களில் ஒலிபெருக்கியில் சமய அனுஸ்டானம் ஒலிப்பதை தடுத்தால் அவற்றிற்கு முஸ்லீம் அமைச்சர்களும் கூட்டுப் பொறுப்புத்தானே? நீங்களே ஆளும் அரசாங்கங்களுடன் இருந்துகொண்டு உங்கள் மக்களின் உரிமைகளை குழிதோண்டிப் புதைத்துக் கொண்டு தமிழ்த் தரப்பு பேச முற்படும் வேளைகளில் எங்களையும் இணைத்தால் உங்களுக்கு லாபம் என அரசாங்கத்திற்கு ஆலோசனை கூறுவது நியாயம் தானா நீதி அமைச்சர் அவர்களே?

இவை யாவும் உங்கள் மனதைப் புண்படுத்துவதற்காக எழுதவில்லை. கடந்த 30 அண்டு கால அரசியலின் அனைத்து விதமான குரூரங்களையும் அனுபவபுர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் பார்த்த பின்பும் உங்களால் எப்படி முடிகிறது? என்ற தாங்க முடியாத வேதனையில் எழுதுகிறேன்.

நீங்கள் எதிர் கட்சி வரிசையிலே இருந்த போது வன்னி யுத்தம் கொடூரத் தன்மையை அடைந்த போது, நாடுபூராகவும் கடத்தல் கொலை, கப்பம் வாங்குதல் முதலான நடவடிக்கைகள் அரங்கேறியபோது, உங்கள் நண்பர்கள் ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் உள்ளிட்டவர்கள் அரசாங்க தரப்பினரால் கொல்லப்பட்ட போது நீங்கள் நாடாளுமன்றில் பேசியவை உங்கள் கட்சி அறிக்கைகளாக வெளியிட்டவற்றை நேரம் இருந்தால் மீண்டும் எடுத்து மீட்டுப் பார்த்தால் எப்படி இருந்த நீங்கள் இப்படியாகிப் போனிர்கள் என்பதனை புரிந்து கொள்ள முடியும் ஹக்கீம் அவர்களே. ஆனாலும் காலத்தின் கட்டாயம் எனக் கூறி பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவின் பாதுகாப்புத் துறையின் மேற்பார்வையில் செயற்படும் நீதித்துறைக்கு அமைச்சராக இருப்பதில் பெரு மகிழ்வு அடைவதாக மற்றும் ஒரு அறிக்கையை நீங்கள் வெளியிட்டால் இனிவரும் நாட்களில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை.

இப்படிக்கு தொலை தூரத்தில் இருந்து ராஜா பரமெஸ்வரி:-

பின் இணைப்புகள்

நீதித்துறையில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் - ஹக்கீம்

09 ஜனவரி 2011

சட்டத்தரணியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் நீதி அமைச்சுப் பொறுப்பை வகிக்கக் கிடைத்தமை பெரும் பாக்கியமாகக்..

நாட்டின் நீதித்துறையில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் வழக்கு விசாரணைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு காரணங்களுக்காக சில வழக்குகள் நீண்ட காலமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். பிரதம நீதியரசர், நீதவான்கள் மற்றும் நீதி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிடோரின் ஒத்துழைப்புடன் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதி அமைச்சிற்காக வரவு செலவுத் திட்டத்தில் 450 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், இதில் 150 மில்லியன் அபிவிருத்திப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் 65 நீதிமன்றங்கள் உருவாக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்தரணியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் நீதி அமைச்சுப் பொறுப்பை வகிக்கக் கிடைத்தமை பெரும் பாக்கியமாகக் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளினால் சமதான முனைப்புக்கள் தோல்வியடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

His Life & His Mission

He worked hard to lay the foundation for the development of the Muslims of the East and achieve a better life standard.

Discover more..

SLMC Propaganda Songs

Ashraff in Parliament books

Sri Lanka Muslim Information

..

National Leader

Nobody can destroy the SLMC

SLMC leader Rauff Hakeem called upon the Muslims in the North and East to rally round SLMC to safeguard their rights

Hon. Rauff Hakeem MP

Leader's Column

Tamil Tigers must honour agreement with Muslims to resettle them with security

Colombo, 17 February,

Hon. Rauff Hakeem, the Leader of the Sri Lanka Muslim Congress (SLMC), and Minister of Post and Telecommunications said that the LTTE should not refuse to respect the agreement it has with the SLMC in resettling the displaced Muslims who were driven out of Jaffna by the LTTE cadres.

Referring to the SLMC-LTTE meeting held on April 13, 2002 in Killinochchi he said it was a "milestone". At this meeting in Kilinochchi he had discussed in detail about the plight of the Muslims in North as well as in the East.

According to Rauff Hakeem problems confronting the Muslims of the North and East were resolved at that meeting. The Tiger leader Velupillai Prabhakaran had appealed to the displaced Muslims from the North and Vanni to come back and resettle in their original homes.

The SLMC and the LTTE agreed to resettle the displaced Muslim and give them their right to farm and fish in the north and the east. It was proposed to set up a joint committee which includes members of the Tigers and SLMC to examine the necessary arrangements and facilities needed for such resettlement programme.

"Any refusal to recognize the agreement and any failure to assist the Northern Muslims to resettle in North would justify what the Sinhalese leaders have done to the Tamils of reneging on agreements," he said. ”The Government of Sri Lanka, international community as well as the LTTE must come forward to assist in the resettlement of the Muslims from the North who are presently languishing in the refugee camps in Puttalam district, he added. He said the resettlement must be voluntary, sustainable, phased out and the Muslims must feel secure when they return to their homes.

He said that the Government too must initiate a compensation scheme for the displaced Northern Muslims who were forced to leave everything they owned and run away from Jaffna. These IDPs today live in camps and shelters mainly in Puttalam for no fault of their own, said Hakeem. .

The Minister said that during the peace talks with the Government and the LTTE it was agreed to set up a Sub Committee on Immediate Humanitarian and Rehabilitation (SIHRN) to discuss the immediate humanitarian needs. He said that he presented a paper to that subcommittee about the resettlement of the displaced Northern Muslims.

Rauff Hakeem lamented that as the peace talks did not proceed the matters put before the subcommittee did not see the light of the day.

He added so far a few Muslims have gone voluntarily and resettled in Mannar as well as the periphery areas of Vaviniya district. However he added that the Northern Muslims feels very much insecure to go back to their villages for resettlement as the environment is highly insecure.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/62576/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.