Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“தமிழர்களின் நிலம் என்று ஒன்று கிடையாது”: சிறீலங்கா தூதர் திமிர் பேச்சு(Video in)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Friday, June 24, 2011, 23:23இந்தியா, உலகம்

2ஆம் இணைப்பு. இன்று (24.6.2011-வெள்ளிக்கிழமை) மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், மலேசிய செனட் சபை உறுப்பினரும் இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து கோரிக்கை மனு ஒன்றை இலங்கை தூதரிடம் சமர்ப்பித்தனர்.ஜுன் 1ஆம் தேதி முதல் 6ஆம் தேதிவரை இலங்கைக்கு ஆய்வு பயணம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோகரன் மாரிமுத்து, ஜோகாரி அப்துல் மற்றும் செனட்டர் இராமகிருஷ்ணன் தங்களது நேரடி அனுபவங்களின் தாக்கத்தை அடிப்படையாக கொண்டு இந்த மனு தாயாரிக்கப்பட்டதாக செய்தியாளர்களிடம் கூறினார்கள்.

இதுநாள் வரை இலங்கை அரசாங்கம் மலேசிய அரசாங்கத்திடமும், மலேசியர்களிடையே கூறிவந்த கருத்துக்களில் பலத்த முரண்பாடுகள் உள்ளதாக தங்களது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

“2009ஆம் ஆண்டு மே18ல் முடிவடைந்த போருக்கு பிறகு தமிழர்களும் முஸ்லிம் மக்களும் மறுசீரமைப்பு புரிந்துணர்வு, மறுகுடியேற்றம், புனர்வாழ்வு, கல்வி, மருத்துவம், குடிநீர், உணவு, உடை, மனநிலை, தொழில் இப்படி வாழ்க்கையை பின்னிப்பிணைத்துள்ள அனைத்திலும் இலங்கை அரசாங்கம் அக்கறை காட்டி வருவதாகவும் அதற்கான நடவடிக்கைகளை கொண்டுள்ளதாகவும் கூறி வருகிறது.

ஆனால், தங்களது ஆய்வுப் பயணத்தின்போது அப்படி எதையும் காணமுடியவில்லை என்றும் தாங்கள் பார்த்ததும், கேட்டதும், விசாரித்ததும் இலங்கை கூற்றுக்கு எதிர்மறையாகவே இருந்தன” என்றார் மனோகரன்.

“மக்கள் பயத்தில் வாழ்கிறார்கள். அதேவேளை சிங்களவர்கள் தங்களது வெற்றியை மார்தட்டி கொண்டாடுகிறார்கள். அடிப்படை நீர், மலசலக்கூட வசதிகூட அற்ற நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் அவதிப்படுவதை பார்க்கும்போது, இதுநாள் வரை இலங்கை அரசாங்கம் கூறி வந்ததில் உண்மை இருப்பதாக தெரியவில்லை” என்கிறார் செனட்டர் இராமகிருஷ்ணன்.

சிங்களவர்களின் ஆதிக்கம் கூடி வருவதையும் தமிழர்களின் நிலங்களில் சிங்களவர்களின் குடியேற்றம் பற்றி வினவியபோது “தமிழர்களுக்கென்று நிலம் கிடையாது” என்று மலேசியாவிற்கான இலங்கைத் தூதர் டாக்டர் டி.டி.ரணசிங்க திட்டவட்டமாக கூறியதாக குறிப்பிட்டார்.

மாண்புமிகு ஜொகாரி மற்றும் யுஸ்மாடியும் சிறீலங்காவின் நடவடிக்கைகள் மனித உரிமை அத்துமீறல்களாக உள்ளதால் அவை இரண்டு நாட்டிற்கும் இடையிலான உறவை பாதிக்கும் தன்மை கொண்டவை, எனவே இதை நாம் மேலும் விரிவாக கவனிக்க வேண்டும் என்றார்.

முந்தைய இணைப்பு.

இலங்கை தமிழ், முஸ்லிம்கள் குறித்து மலேசிய தூதுவருக்கு மனு

http://youtu.be/xUCDbV0thOs

http://www.tamilthai.com/?p=20176

தமிழர்களின் நிலம் என்று ஒன்று கிடையாது”: சிறீலங்கா தூதர் திமிர் பேச்சு
சிங்கள்வனின் இந்தப்பேச்சாலும்,செயல்பாட்டாலும்தானே தமிழன் புலியாக மாறிப்போராடவேண்டி வந்தது என்பதை மலேசிய அரசியல்வாதிகள் ஏற்றுக்கொள்வார்களா???????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.