Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்குப் பிடித்த பாடல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீ வருவாய் என்னும் படத்தில் இருந்து எஸ் ஏ ராஜ்குமாரின் இசையில் ஹரிகரன் பாடிய இந்தப் பாட்டு கேட்க எனக்கு மிகவும் பிடிக்கும்..

ஒரு தேவதை தேடி வந்தாள் உன்னை தேடியே

வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்கத் தேரிலே

.காதலிக்கும்,திருமணத்திற்கு காத்திருக்கும் எனது சகோதரங்கங்களுக்கு இந்தப் பாடலை அர்பணிக்கிறேன் :D

அழகான பாடல்

  • Replies 171
  • Views 27.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிநேகிதியே படத்தில் வித்தியாசாகர் இசையில்இடம் பெற்ற

"ஒத்தையடிப் பாதையிலே ஒத்தையிலே போறவளே

கரடி வந்து இடை வழி மறிச்சால் காட்டுக்குள்ள என்ன செய்வாய்"

என்ட பாட்டும் கேட்க வித்தியாசமாய் இருக்கும்.யார் பாடினது என்று தான் தெரியவில்லை. தெரிந்தவர்கள் எழுதவும்...இந்தப் பாட்டு வரிகள் கேட்க அர்த்தமுள்ளதாயிருக்குது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதல் படத்தில் ஜோஸ்வா சிறீதரின் இசையில் ஹரிச்சரண் பாடிய இந்த பாட்டை காதலித்தவர்களுக்கும்,காதலில் தோற்று அழுது கொண்டு இருப்பவர்களுக்கும்,இனி மேல் காதலிக்க போகிறவர்களுக்கும் அர்ப்பணமாக்குகின்றேன்.

உனக்கே என இருப்பேன்...உயிரையும் கொடுப்பேன்

உன்னை நான் பிரிந்தால் உனக்கு முன் இறப்பேன்

கண்மணியே கண்மணியே அழுவதேன் கண்மணியே.....

வழித் துணை நான் இருக்க...

.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இருக்கிறேன் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நானும் இருக்கிறேன் :D

உங்களைத் தான் ஒருவர் திருமணம் செய்து சுவையாக கடலையும் செய்யும் தாறது என்டு சொன்னாரே :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செல்வராகவன் இயக்கி ஜீவி பிர‌காஸ் இசையில் விஜய் ஜேசுதாஸ்,நித்தியசிறி,சிறிகிருஸ்னா ஆகியோர் பாடி உள்ளார்கள்...தாய் மண்ணை நேசிக்கும் அனைவருக்கும் இந்தப் பாட‌ல் சமர்ப்பணம்.

நெல்லாடிய நிலம் எங்கே?

சொல்லாடிய அவை எங்கே?

வில்லாடிய களம் எங்கே?

கள்ளாடிய சிலை எங்கே?

தாய் தின்ற மண்ணே...தாய் தின்ற மண்ணே...

கயல்விளையாடும் வயல் வெளி தேடி காய்ந்து கழிந்தன கண்கள்

காவிரி மலரின் கடிமணம் தேடி கருகி முடிந்தது நாசி

சிலைவழி மேவும் உளி ஒலி தேடி திருகி விழுந்தன செவிகள்

ஊண் பொதி சோற்றின் தேன் சுவை கருதி ஒட்டி உலர்ந்தது நாவும்....

புலிக்கொடி பொறித்த சோழ மாந்தர்கள் எலிக்கறி பொரிப்பதுவோ..ஓ......

காற்றைக் குடிக்கும் தாவரமாகி காலம் கழிப்பதுவோ...ஒ...........

மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை மன்னன் ஆளுவதோ! மன்னன் ஆளுவதோ...ஓ.....ஓ....ஓ....

http://www.youtube.com/watch?v=3KA5TD3Y8WI

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைத் தான் ஒருவர் திருமணம் செய்து சுவையாக கடலையும் செய்யும் தாறது என்டு சொன்னாரே :lol:

எவ அவா? :blink:

  • கருத்துக்கள உறவுகள்
காதலிக்கும்,திருமணத்திற்கு காத்திருக்கும் எனது சகோதரங்கங்களுக்கு இந்தப் பாடலை அர்பணிக்கிறேன்
:unsure::unsure:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செல்வராகவன் இயக்கி ஜீவி பிர‌காஸ் இசையில் விஜய் ஜேசுதாஸ்,நித்தியசிறி,சிறிகிருஸ்னா ஆகியோர் பாடி உள்ளார்கள்...தாய் மண்ணை நேசிக்கும் அனைவருக்கும் இந்தப் பாட‌ல் சமர்ப்பணம்.

நெல்லாடிய நிலம் எங்கே?

சொல்லாடிய அவை எங்கே?

வில்லாடிய களம் எங்கே?

கள்ளாடிய சிலை எங்கே?

தாய் தின்ற மண்ணே...தாய் தின்ற மண்ணே...

கயல்விளையாடும் வயல் வெளி தேடி காய்ந்து கழிந்தன கண்கள்

காவிரி மலரின் கடிமணம் தேடி கருகி முடிந்தது நாசி

சிலைவழி மேவும் உளி ஒலி தேடி திருகி விழுந்தன செவிகள்

ஊண் பொதி சோற்றின் தேன் சுவை கருதி ஒட்டி உலர்ந்தது நாவும்....

புலிக்கொடி பொறித்த சோழ மாந்தர்கள் எலிக்கறி பொரிப்பதுவோ..ஓ......

காற்றைக் குடிக்கும் தாவரமாகி காலம் கழிப்பதுவோ...ஒ...........

மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை மன்னன் ஆளுவதோ! மன்னன் ஆளுவதோ...ஓ.....ஓ....ஓ....

http://www.youtube.com/watch?v=3KA5TD3Y8WI

எனக்கு மனக்கவலை வரும்போது இந்த பாடலை அடிக்கடி கேட்பேன் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மனக்கவலை வரும்போது இந்த பாடலை அடிக்கடி கேட்பேன் .

நன்றி கு.சா அண்ணா...எனக்கும் இந்தப் பாட்டை நான் கவலையில் இருக்கும் போது போட்டுக் கேட்க பிடிக்கும்

பருத்தி வீரன் படத்தில் யுவன்சங்கர்ராஜாவின் இசையில் மாணிக்க விநாயகம்,கிருஸ்ணராஜ்,யுவன் அவர்களோடு ஸ்ரேயா கோஸ்ஸால் பாடிய இந்தப் பாட்டு சீனைப் பார்த்துக் கொண்டு கேட்கப் பிடிக்கும் :D

http://www.youtube.com/watch?v=GSwDJ2V2FxM

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டிஸ்யூம் படத்தில் விஜய் அன்ரனியின் இசையில் சங்கீதா ராஜேஸ்வரன்,விஜய் அன்ரனி பாடிய இந்தப் பாடலும் சுப்பர் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"உன்னாலே,உன்னாலே" படத்தில் ஹரிஸ் ஜெயராஜ் அவர்களின் இசையில் கார்த்திக்,கிரிஸ்,ஹரிணி ஆகியோர் பாடிய

"முதல் முதலாக,முதல் முதலாக பர‌வச‌மாக,பர‌வச‌மாக வா,வா என் அன்பே!

ஓ,ஓ தனித் தனியாக,தனித் தன்னந் தனியாக இலவச‌மாக வா வா அன்பே!

உன்னாலே,உன்னாலே விண்ணாளச் சென்றேனே

உன் முன்னே உன் முன்னே மெய் காண நின்றேனே"............

http://www.youtube.com/watch?v=rrsbAYN42vk

இந்தப் பட‌த்தில் விநய் பார்க்க சூப்பராய் இருக்கிறார்...ச‌தாவும் இந்தப் பாட்டில் நன்றாக நடித்திருக்கிறார் அதை விட‌ அழகாகவும் இருக்கிறார்...இசையும் நன்றாக இருக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தலை ராகம் பட‌த்தில் இடம் பெற்றது...பாடியவர் எஸ் பி பாலசுப்பிர‌மணியம்...இசை அமைத்தவர் டிஆர் என நினைக்கிறேன் சரியாகத் தெரியவில்லை.

"வாசம் இல்லா மலர் இது வசந்தத்தை தேடுது(2)

வைகை இல்லா மதுரை இது மீனாச்சியை தேடுது

ஏதேதோ ராகம் என் நாளும் பாடும்

அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்"

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தலை ராகம் பட‌த்தில் இடம் பெற்றது...பாடியவர் எஸ் பி பாலசுப்பிர‌மணியம்...இசை அமைத்தவர் டிஆர் என நினைக்கிறேன் சரியாகத் தெரியவில்லை.

இசை அமைத்தவர் கங்கை அமரன் என்றுதான் திரைப்படத்தின் டைட்டில்களில் உள்ளது. எனக்கு "இது குழந்தைபாடும் தாலாட்டு" மிகவும் பிடிக்கும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இசை அமைத்தவர் கங்கை அமரன் என்றுதான் திரைப்படத்தின் டைட்டில்களில் உள்ளது. எனக்கு "இது குழந்தைபாடும் தாலாட்டு" மிகவும் பிடிக்கும்!

இல்லை இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் ரி ஆர் தான்.

.My link

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இசை அமைத்தவர் கங்கை அமரன் என்றுதான் திரைப்படத்தின் டைட்டில்களில் உள்ளது. எனக்கு "இது குழந்தைபாடும் தாலாட்டு" மிகவும் பிடிக்கும்!

Cast : Shankar, Roopa, Chandrasekhar,Usha Rajendar,Ravinder,Thiagu

Guest appearance : T.Rajendar.

Music,Story, Direction : T.Rajendar

Release Year: 1980

Language: Tamil

ஒரு தலை ராகம் தமிழ்த்திரைப்படம்

Cast : Shankar, Roopa, Chandrasekhar,Usha Rajendar,Ravinder,Thiagu

Guest appearance : T.Rajendar.

Music,Story, Direction : T.Rajendar

Release Year: 1980

Language: Tamil

ஒரு தலை ராகம் தமிழ்த்திரைப்படம்

தமிழன் தமிழன் என்று சொல்லி சொல்லி கரடி இங்கிலிசில விளாசுது.... :lol:

கரடியின் காதுக்குள்ள தும்பு விட்டது யாரப்பா? :o:unsure:

கிருபன் அண்ணா நீங்கள் தானா அது? ^_^:lol:

Edited by குட்டி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த பாட்டு டடுக்கன்[DHADKAN] என்ட படத்தில் இடம் பெற்றது...இசை அமைத்தவர் நதீம் சாவான்...பாடியவர்கள் குமார் சானு,உதித் நாரயண்,அல்கா யாக்னே.

இந்தப் பாட்டு படமாக்க பட்ட விதம்...மூவரது அழகும்,நடிப்பும்...அவர்களது உடுப்பு...படம் பிடிக்கப்பட்ட இடம் எல்லாம் அழகு அநேகமாக வெனிஸ் ஆக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

காதலர்களுக்காக இந்த பாட்டை சமர்ப்பிக்கிறேன்...இந்தப் படத்தை யாரும் பார்த்தீர்களோ தெரியாது விரும்பினால் பாருங்கள் மிகவும் நல்ல படம் :D

  • கருத்துக்கள உறவுகள்

Cast : Shankar, Roopa, Chandrasekhar,Usha Rajendar,Ravinder,Thiagu

Guest appearance : T.Rajendar.

Music,Story, Direction : T.Rajendar

Release Year: 1980

Language: Tamil

ஒரு தலை ராகம் தமிழ்த்திரைப்படம்

சந்தேகத்தைத் தீர்க்க டிவிடியில் (சொந்தமாக வாங்கியதுதான்) படத்தைப் பார்த்தேன்.

மூலக்கதை - வசனம்: ராஜேந்திரன்

திரைக்கதை: மன்சூர் கிரியேஷன்ஸ் கதை இலாகா!

பாடல்கள், பாடல் இசையாக்கம்: இராஜேந்திரன்

பின்னணி இசை: A.A.ராஜ்

தயாரிப்பு - டைரக்க்ஷன்: E.M.இப்ராஹிம்

படத்தைத் தயாரித்த இப்ராஹிம் தனது பெயரை டைரக்டர் என்று போட்டால்தான் படத்தை வெளியிடவிடுவேன் என்பதால், ராஜேந்தர் விட்டுக்கொடுக்கவேண்டியதாகப் போய்விட்டது. ராஜேந்தரின் ஏதோ ஒரு படத்திற்கு "கங்கை அமரன்" இசையமைத்ததாக நினைவில் இருந்தது. பிழையாக இருக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் அண்ணா நீங்கள் தானா அது? ^_^:lol:

(கையை வேகமாகத் தூக்கி சுட்டுவிரலை சுழட்டியபடி) அளந்து பேசு!.. அளந்து பேசு! :lol: :lol:

(கையை வேகமாகத் தூக்கி சுட்டுவிரலை சுழட்டியபடி) அளந்து பேசு!.. அளந்து பேசு! :lol: :lol:

இதுக்கு கரடியே தேவலாம் போல இருக்கு... :lol: :lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிகரம் படத்தில் எஸ் பி பாலசுப்பிரமணியம் இசையில் கேஜே ஜேசிதாஸ் அவர்களது அற்புத குரலில் இடம் பெற்ற இந்த பாடல் கேட்க மிகவும் இனிமையானது.

அகரம் இப்போ சிகரம் ஆச்சு

தகரம் இப்போ தங்கம் ஆச்சு

காட்டு மீன்கள் பாட்டுப் பாடும் புல்லாங்குழல் ஆச்சு

சங்கீதமே சந்நிதி சந்தோசம் கொள்ளும் சங்கதி..

.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நோமலாய் எனக்கு பாலசுப்பிரமணியத்தின்ரை எல்லாப்பாட்டும் பிடிக்கும்.மனிசன் எண்டைக்கு நடிக்க வந்தானோ பாவி....அண்டு தொடக்கம் .......கண்ணிலையும் காட்டக்கூடாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆடுபுலி என்ட படத்தில் சுந்தர் சி பாபு என்னும் இசை அமைப்பாளரின் இசை அமைப்பில் ஹரிகரன் பாடிய இந்தப் பாடல் கேட்க நன்றாக இருக்கிறது.

உன்னை நினைத்ததுமே மனசுக்குள் மழைக் காலமே

உன்னைப் பார்த்ததுமே இடியுடன் புயல் தாக்குமே

http://www.youtube.com/watch?v=02Oms6B8gfU

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

7 ஜி ரெயின்போ காலணி படத்தில் யுவனின் இசையில் சுல்தான் கான்,மதுமிதா பாடிய

கனாக் காணும் காலங்கள் கலைந்தோடும் நேரங்கள் கலையாத கோலம் போதுமோ

விழி போடும் கடிதங்கள் வழி மாறும் பயணங்கள் தனியாக ஓடம் போகுமோ

இது இடைவெளி குறைகின்ற தருணம் இது இதயத்தின் மெல்லிய சலனம்

இனி இரவுகள் இன்னொரு நரகம் இளமையின் அதிசயம்

இது கத்தியில் நடந்திடும் பருவம் தினம் கதவினில் அவரவர் உருவம்

சுடும் நெருப்பினில் விரல்களும் விலகும் கடவுளின் ரகசியம்

உலகில் இது இனித்திடும் பாசை இதயம் இரண்டும் பேசிடும் பாசை

எதுவாயின் இது மழை வரும் ஓசை ஆஆஆ......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.