Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைப் பொலிஸான் 1500 சித்திரவதைச் சம்பவங்கள்-AHRC

Featured Replies

இலங்கையில் 1998 ஆம் ஆண்டிற்கும் 2011 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், பொலிஸாரால் மேற்கொள்ளப் பட்ட 1500 சித்திரவதைச் சம்பவங்கள் பற்றிய அறிக்கையொன்றை ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தொகுத்து வெளியிட்டுள்ளது. இவற்றில் 323 சித்திரவதைச் சம்பவங்கள் மிகவும் பாரதூரமானவை இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக சித்திரவதைக்குள்ளான அனைவரும் பொலிஸாரால் தான் தோன்றித் தனமான முறையில் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் பேரிலே கைது செய்யப்பட்டவர்கள் என்பதாகும்.

இத்தகைய சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் பெருந்தொகையானோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வருகின்றமை இலங்கையில் குற்றவியல் நீதி முறைமையில் அதிகளவு அதிர்ச்சியளிக்கும் அம்சமாகக் கருதப்படுகின்றது. குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ள வைப்பதற்காகவே இச் சித்திரவதைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

http://akkinikkunchu.com/new/

வெளிப்படுத்தப்பட்டவை 1% இலும் குறைவானவையே.

  • கருத்துக்கள உறவுகள்

சட்டவிரோத கைதுகள் மற்றும் சித்திரவதைகளில் காவல்துறையினர் ஈடுபடுகின்றனர் – ஏ.எச்.ஆர்.சீ :

26 ஜூன் 2011:

சட்டவிரோத கைதுகள் மற்றும் சித்திரவதைகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருவதாக ஆசிய மனித உரிமை ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது.

1998ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இவ்வாhறன 1500 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சட்டவிரோத கைது மற்றும் சித்திரவதைக்கு உட்பட்ட அநேகமானவர்கள் மீது காவல்துறையினர் போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

நாள் தோறும் இவ்வாறு காவல்துறையினரால் போலியாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களினால் நபர்கள் கைது செய்யப்படுவதாகவும் சில நேரங்களில் சித்திரவதைக்கு உட்படுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

சித்திரவதைகளின் மூலம் குறித்த சந்தேக நபர்களிடம் குற்றச்சாட்டுக்களுக்கான ஒப்புதல் வாக்கு மூலங்களை பெற்றுக் கொள்ளும் கலாச்சாரம் காணப்புடுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முறைப்பாடுகள் தொடர்பில் உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என தெரிவிக்கப்படுகிறது. குறைந்தளவு சமூகப் பொருளாதார பின்னணியை உடைய நபர்களே அதிகளவில் இவ்வாறு காவல்துறையினரின் நடவடிக்கைகளினால் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

காவல்துறையினர் சுயாதீனமான முறையில் செயற்படுவதற்கு சந்தர்ப்பம் கிடையாது எனவும், அரசியல்வாதிகளே அவர்களைக் கட்டுப்படுத்துவதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/63174/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.