Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ அரசை அங்கிகரிக்க இந்திய அரசை நிர்ப்பந்திக்க அஃனைத்து மக்களும் முன்வர வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் பெரும்பான்மை நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட திபெத்தின் நாடு கடந்த அரசு இந்தியாவின் வடக்கு மாநிலம் இமாசலப் பிரதேசத்தில் இயங்குகிறது. நாடு கடந்த அரசின் பாராளுமன்றம், நிர்வாக பீடம் என்பன இமாசலப் பிரதேசத்தின் தர்மசாலா நகரில் நிலைகொண்டுள்ளன. நாடு கடந்த திபெத் அரசின் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டம் 26.05.2011 வியாழக்கிழமை தொடங்கியது. திபெத் நாடு கடந்த அரசின் அரசியல், நிர்வாகத் தலைமைப் பதவியில் இருந்து அதன் நிறுவனரான தலாய் லாமா விலகியதால் எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. அரசியல் பொறுப்பில் இருந்து தலாய் லாமா விலகியதால் நாடு கடந்த அரசின் அரசியல் சாசனத்தில் செய்ய வேண்டிய திருத்தங்கள் பிரேரிக்கப்பட்டன. மார்ச் 2011ல் தலாய் லாமாமாவின் விலகலுக்குப் பிறகு தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களிடம் அரசுப் பொறுப்பு கையளிக்கப்பட்டது. ஏப்ரல் 27ல் நடத்தப்பட்ட திபெத் நாடு கடந்த அரசின் பிரதமர் தேர்தலில் அமெரிக்க ஹாவாட் பல்கலைக் கழகத்தின் மூத்த சட்டத்துறைப் பேராசிரியர் லொப்சான்ங் சாங்காய் (Lobsang Sangay ) தெரிவு செய்யப்பட்டார். பாராளுமன்ற உறுப்பினர்; கர்மா யேஷி (Karma Yeshi) சாசனத் திருத்தங்கள் பற்றித் தெரிவிக்கையில் 75 வயதினரான தலாய் லாமா இனிமேல் அரசின் ஆலோசகராக மாத்திரம் இருப்பார் என்றும் திபெத் நாடு கடந்த அரசின் பெயர் மாற்றப் படுவதாகவும்; குறிப்பிட்டார். திபெத் நாடு கடந்த அரசின் பெயர் திபெத் நிர்வாகம் என்று மாத்திரம் (Tibetan Administration) அழைக்கப்படும் என்றும் அது திபெத் நாட்டில் வாழ்வோரையும் உள்ளடக்கும் என்றும் தெரிவித்த யேஷி அதற்குரிய சானத் திருத்தங்கள் நிறைவேறியுள்ளன என்றார். திபெத்தின் அரசியல் மற்றும் மதத் தலைவரான 14ம் தலாய் லாமா 1959ல் திபெத்திலிருந்து தப்பி வந்த பின் தர்மசாலாவைத் தனது வாழ்விடமாகக் கொண்டுள்ளார். இவருடைய இயற்பெயர் தென்சின் கியாற்சோ (Tenzin Gyatso). இந்தியப் பிரதமர் நேரு அவருக்கு ஆதரவளித்தார். தமிழர்களுக்கான நாடு கடந்த அரசை எப்போது இந்தியா ஆதரிக்க போகிறது. தாய் தமிழக மக்களும் இந்திய சமய கலாச்சார ஒன்றலில் வாழும் தமிழீழ தமிழரை தமிழீழ அரசை அங்கிகரிக்க இந்திய அரசை நிர்ப்பந்திக்க அஃனைத்து மக்களும் முன்வர வேண்டும்

Thanks to Karikalan....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.