Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட போதும் தொடரும் தமிழர் துயரக் கதை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[ ஞாயிற்றுக்கிழமை, 26 யூன் 2011, 09:34 GMT ] [ நித்தியபாரதி ]

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த வெய்ஸ் சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் இறுதிக்கட்டத்தை அடைந்த போது கொழும்பிற்கான ஐ.நாவின் பேச்சாளராகவும், தொடர்பாடல் ஆலோசகராகவும் செயற்பட்ட காலத்தில் உண்மையில் சிறிலங்காவின் யுத்த களத்தில் என்ன நடந்ததென்பதற்கு சாட்சியமாக 'கூடு' என்ற இந்த நூலை உருவாக்கியுள்ளார்.

இவ்வாறு The Australian இணையத்தளத்தில் அதன் மூத்த கட்டுரையாளர் John Zubrzycki எழுதியுள்ள நூலாய்வில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைகக்காக [www.puthinappalakai.com] மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

ஒரு பத்தாண்டுகாலப் போரின் பின்னர் இராணுவ வழிமுறை மூலம் எந்தவொரு தீர்வையும் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில், அரசியல் ரீதியான தீர்வொன்றைப் பெற்றுக் கொண்டதன் மூலம் தலிபான் ஒரு நிலையான அமைதியை நிலை நாட்ட முடிந்ததுடன், மேற்குலக நாடுகள் தமது படைகளை ஆப்கானிலிருந்து எடுக்கவும் வழிசமைத்தது.

ஆனால் நடு நிலையாளர்கள் மற்றும் சமரசவாளர்கள் இல்லாத நாடுகளில் என்ன நடக்கிறது? பெரும்பான்மை ஆட்சியாளர்களின் மேலாதிக்கத்திற்கு ஒரு புறமுறமும், மிக ஆழ வேரோடியுள்ள புறக்கணிப்புகள் மறுபுறமும் என இனக்குழுமங்கள் தமக்கிடையே பிளவுபட்டுக் காணப்படுகின்றன.

சிறிலங்காவின் உள்நாட்டு யுத்தமானது 26 ஆண்டுகளிற்கும் மேலாக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்துள்ளன.

பெரும்பாலானோர் சாத்தியப்பாடற்ற விடயம் என நினைத்திருந்த போது சிறிலங்கா இராணுவப் படைகள் உள்நாட்டுப் போரில் வெற்றி கொண்டனர்.

இவர்கள் தமக்கான வெற்றியைப் பெற்றுக் கொள்வதற்கு முன்னர் 70,000 மக்கள் நீண்ட காலமாக இடம்பெற்ற போரின் போது கொல்லப்பட்டுள்ளனர்.

20 ம் நூற்றாண்டில் மிகப் பலம் பொருந்திய அமைப்புக்களில் ஒன்றாக விளங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததன் மூலம் சிறிலங்கா இராணுவப் படையினர் தமக்கான வெற்றியைப் பெற்றுக் கொண்டனர்.

மே 2009 ல், சிறிலங்காவின் வடகிழக்கில் இடம்பெற்ற இறுதிக்கட்ட குருதி தோய்ந்த யுத்த களத்தில் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் உயர் மட்டத் தளபதிகள் பலர் கொல்லப்பட்டனர்.

மிகப் பலம் பொருந்திய அமைப்பாக விளங்கிய புலிகளைத் தோற்கடித்து அதன் மூலம் வெற்றியைத் தனதாக்கிக் கொண்ட சிறிலங்கா அரசாங்கம் இந்த மாதத்தின் முற்பகுதியில் அனைத்துலக இராணுவ மாநாடு ஒன்றை கொழும்பில் மேற்கொண்டதுடன், இராணுவத்தினர் எவ்வாறு புலிகளைத் தோற்கடித்து இந்த வெற்றியைப் பெற்றுக் கொண்டனர் என்பது தொடர்பான விளக்கங்களையும் இதில் வழங்கியது.

தமிழ்ப் புலிகள் எவ்வளவு தான் வன்முறையான வெறித்தனமான எதிரியாக இருந்த போதிலும், இதனைத் தோற்கடிப்பதற்காக சிறிலங்கா இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட உத்திகள் எதிர்மறை விளைவை ஏற்படுத்தியுள்ளன.

சிறிலங்காவின் உள்நாட்டுப் போரில் பங்கு கொண்ட இரு தரப்பினராலும் பொதுமக்களிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான அறிக்கை ஒன்று கடந்த ஏப்ரல் மாதத்தில் ஐ.நாவால் வெளியிடப்பட்டது.

ஒரு பக்கம் சமூத்திரத்தாலும் மறுபக்கம் நீரேரியாலும் சூழப்பட்டிருந்த ஒரு குறுகிய சதுப்பு நிலப்பகுதியில் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் அகப்பட்டுக் கொண்டனர்.

இவ்வாறு அகப்பட்டுக் கொண்ட மக்களைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 40,000 இற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.

330,000 மக்கள், சிறிலங்காப் படையினருக்கும், தமிழ்ப் புலிகளிற்கும் இடையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மனிதக் கேடயங்களாக்கப்பட்டனர்.

வைத்தியசாலைகள், உணவு வழங்கும் விடுதிகள் போன்ற பாதுகாப்பு வலயங்கள் மீது சிறிலங்கா இராணுவப் படைகள் மீண்டும் மீண்டும் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டனர் என ஐ.நாவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமது கட்டுப்பாட்டின் கீழிருந்த மக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்தியமை, சிறுவர் ஆட்சேர்ப்பு மற்றும் தமது கட்டுப்பாட்டிலிருந்து தப்பியோட முயன்ற மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகங்கள் மேற்கொண்டமை ஆகியன தமிழ்ப் புலிகளிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களாகும்.

'கூடு: சிறிலங்காவுக்கான யுத்தமும் தமிழ்ப் புலிகளின் இறுதி நாட்களும்' [The Cage: The Fight for Sri Lanka & the Last Days of the Tamil Tigers] என்ற தலைப்பில் கோர்டன் வெய்ஸ் எழுதியுள்ள நூலில் சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தமும் அதனால் ஏற்பட்டுள்ள விளைவுகளும் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த வெய்ஸ் சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் இறுதிக்கட்டத்தை அடைந்த போது கொழும்பிற்கான ஐ.நாவின் பேச்சாளராகவும், தொடர்பாடல் ஆலோசகராகவும் செயற்பட்ட காலத்தில் உண்மையில் சிறிலங்காவின் யுத்த களத்தில் என்ன நடந்ததென்பதற்கு சாட்சியமாக 'கூடு' என்ற இந்த நூலை உருவாக்கியுள்ளார்.

சிறிலங்காவில் இடம் பெற்ற யுத்தத்தின் விளைவால் தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் தமது சொந்த இடங்களில் தொடர்ந்தும் வாழ முடியாத சூழலில் படகுகள் மூலம் 2009, 2010 காலப்பகுதியில் அவுஸ்திரேலியாவிற்குச் தப்பிச் சென்றுள்ளனர்.

இவர்களிற்கான அரசியல் தஞ்சத்தை மறுப்பதற்கான ஒரு கொள்கையை தற்போது அவுஸ்திரேலியா அரசாங்கம் உருவாக்கியுள்ளதுடன், இது தொடர்பான பல விவாதங்களும் இடம்பெற்று வருகின்ற இந்நிலையில், உண்மையில் தமிழ் மக்கள் தமது சொந்த இடங்களை விட்டு வேற்று நாடுகளில் அரசியல் தஞ்சம் கோருகிறார்கள் என்பது தொடர்பாக விரிவாக அறியவேண்டுமாயின் வெய்சால் எழுதப்பட்டுள்ள 'கூடு' என்ற இந்த நூலை முதலில் வாசிக்க வேண்டும்.

சிறிலங்காவில் காலாதி காலமாக இடம்பெற்று வரும் துன்புறுத்தல்கள் மற்றும் தமிழர் பிரச்சினைகள் தொடர்பாக வெய்சின் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிலோன் என அழைக்கப்பட்ட சிறிலங்காத் தீவானது, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிடமிருந்து பெற்றுக் கொண்ட அனுபவத்தின் வாயிலாக எந்தவொரு குருதி சிந்தும் போரையும் நடாத்தாது 1948ல் தனக்கான சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டது.

இத்தீவு சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர், டி.எஸ். சேனநாயக்காவின் தலைமையில் பெரும்பான்மைச் சிங்களவர்களை அதிகம் கொண்டு உருவாக்கப்பட்ட முதலாவது அரசாங்கத்தில் தமிழ், முஸ்லீம், பறங்கியர் போன்ற ஏனைய சிறுபான்மை இனங்களின் பிரிதிநிதிகளும் உள்வாங்கப்பட்டனர்.

ஆனால் பொற்காலம் எனக் கூறக் கூடிய இந்தக் காலப்பகுதி 1955 ல் பெரும்பான்மை மக்களின் நலனை முக்கியப்படுத்தி அரசியல் இலாபம் அடையத் தக்க வகையில் சிங்களம் மட்டும் என்ற சட்டம் அமுலாக்கப்பட்டதிலிருந்து முடிவிற்கு வந்தது.

சிங்களம் மட்டுமே சிறிலங்காத் தீவின் அரச கருமமொழி என பிரகடனப்படுத்தப்பட்டதானது இனங்களுக்கிடையில் கலகங்களை உருவாக்கியது. இதனால் சில நூறு தமிழர்கள் இனக்கலவரங்களின் முடிவில் கொல்லப்பட்டனர். இதன் தொடர்ச்சி சிறிலங்காத் தீவில் இரத்தக் களரி ஏற்பட்டு இன முரண்பாடு தோன்றவும் வழி சமைத்தது.

பின்னர் 1972 ல் தமிழர்களின் உரிமைகளைப் பறிக்கும் விதமாக ஒரு புதிய அரசியலமைப்பு ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அகிம்சை வழிப் போராட்டம் பயனற்றது என்றுணர்ந்த தமிழ் இளையோர் தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி என்ற அமைப்பின் கீழ் அணிதிரண்டதுடன், சிறிலங்காவின் வடகிழக்குப் பகுதியில் தமக்கான தனிநாடு வேண்டி ஆயுத வழிப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

நிலக்கண்ணிவெடி ஒன்றில் 13 சிங்கள இராணுவத்தினர் கொல்லப்பட்டதையடுத்து, 1983 யூலையில், கொழும்பில் வாழ்ந்த தமிழர்களின் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட காடைத்தனமான தாக்கதல்களின் போது 3000 வரையான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன், ஆயிரக்கணக்கானோர் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழிருந்த முகாங்களில் தஞ்சம் புகுந்ததுடன் இன்னும் சிலர் வெளிநாடுகளுக்குத் தப்பியோடினர்.

இவ்வாறு வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற தமிழ் மக்களின் உதவியுடன் தமிழ்ப் புலிகள் உலகில் அச்சத்தை விளைவிக்கின்ற வல்லமை பொருந்திய கெரில்லா அமைப்பாக வளர்ச்சியுற்றது.

புலிகளைத் தோற்கடிப்பதற்காக சிறிலங்காவிற்கு இநதிய அமைதி காக்கும் படையை அனுப்பிய இந்தியாவின் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டார். தற்கொலைக் குண்டுத்தாக்குதலானது தமது எதிரிகளை அழிப்பதற்காகப் புலிகளால் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஒரு முறைமையாகும்.

இவ்வாறு வளர்ச்சியைப் பெற்ற புலிகள் அமைப்பு தமக்கான கடற்படை, விமானப்படை மற்றும் தற்கொலைக் குண்டுதாரிகளை கொண்ட ஆழ ஊடுருவும் பிரிவு போன்ற பல பிரிவுகளை உருவாக்கிக் கொண்டனர்.

புலிகளால் மேற்கொள்ளப்பட்ட அராஜகங்களை வெய்ஸ் தனது நூலில் விரிவாகக் குறிப்பிடவில்லை. ஆனால் தமிழ் சிறுபான்மை இனத்தின் அரசியல் அவாவுக்கான தீர்வை வழங்குவதில் சிறிலங்கா அரசாங்கம் தவறிழைத்துள்ளது என்பது தொடர்பாகவும், புலிகளைத் தோற்கடிப்பதில் சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்டுள்ள மிருகத்தனமான பல தந்திரோபாயங்கள் தொடர்பாகவும் வெய்ஸ் தனது 'கூடு' என்ற நூலில் மிகவும் விரிவாக ஆராய்ந்துள்ளார்.

யுத்த வலயத்திற்குள் அகப்பட்ட பொதுமக்களைக் காப்பாற்றுவதற்காக ஐ.நா அதிகாரிகளைக் கொண்ட குழுவால் எடுக்கப்பட்ட துணிச்சல்மிக்க சில முயற்சிகள் தொடர்பாகவும் வெய்ஸ் தனது நூலில் விளக்கியுள்ளார்.

ஆனால் சிறிலங்கா அரசாங்கமானது பாதுகாப்பு வலயங்களை உருவாக்கியுள்ளதாகவும், இதனால் பொதுமக்களிற்கு எந்தவொரு இழப்புக்களுமின்றி அவர்கள் பாதுகாக்கப்படுவர்கள் என்றும் பரப்புரை மேற்கொண்டது. சிறிலங்கா இராணுவப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பான போதியளவான சாட்சியங்களை வெய்ஸ் முன்வைத்துள்ளார்.

ஆனால் ஐ.நா இது தொடர்பான தீர்மானத்தை இன்னமும் முன்வைக்கவில்லை. இஸ்ரேலால் காசா மீது மேற்கொள்ளப்பட்ட முற்றகை நடவடிக்கையைக் கண்டித்து ஐ.நாவின் மனித உரிமைகள் சபை சில பரிந்துரைகளை முன்வைத்திருந்தது.

ஆனால் சிறிலங்கா விடயத்தில் முன்வைக்கப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான நம்பகமான தீர்வுகள் இன்னமும் எட்டப்படவில்லை.

சிறிலங்கா அரசாங்கத்தால் இழைக்கப்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்களால் சாகடிக்கப்பட்ட பொதுமக்கள் தொடர்பாக ஒரு வெளிப்படையான பேச்சுக்களை இது தொடர்பான சரியானதொரு தீர்வை எட்டுவதில் ஐ.நா செயலாளர் நாயகம் பான்கி மூன் தவறிழைத்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரமடைந்ததன் பின்னர் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்புக்கள் மற்றும் பொருளாதார சமூக அபிவிருத்திகளில் தமிழர் நலன்களும் பிரதிநிதித்துவப்பட்டிருந்தால் இவ்வாறானதொரு நீண்ட இனப் போர் ஒன்று உருவாகாமல் தடுக்கப்பட்டிருக்குமா? என்ற வினாவிற்கு, ஆம். நிச்சயம் தடுக்கப்பட்டிருக்க முடியும் என்பது வெய்சின் பதிலாகும்.

போர் ஆரம்பித்த பின்னரும் கூட, மேற்கொள்ளப்பட்ட சமரச முயற்சிகள் சிறிலங்கா அரசாங்கத்தின் விட்டுக்கொடுப்பற்ற செயலாலும், பிரபாகரனின் வன்முறை மற்றும் பிடிவாதப் போக்காலும் பயனற்றுப் போயின.

புலிகளைத் தோற்கடித்ததால் மட்டும் சிறிலங்காத் தீவில் அமைதி ஏற்பட்டுவிடாது. தமிழர்களால் எதிர்பார்க்கப்படுகின்ற தீர்வானது எட்டப்பட்டு அவர்களின் அரசியல் அவாக்கள் பூர்த்தியாக்கப்படும் பட்சத்தில் மட்டுமே சிறிலங்காத் தீவில் அமைதியும் சமாதானமும் நிலைபெறும் என்பதே வெய்சின் இறுதித் தீர்வாக உள்ளது.

சிறிலங்காவில் இடம்பெற்ற துன்பகரமான உள்நாட்டுப் போர் தொடர்பாகவும், இந்தப் போர் எவ்வாறு மேலும் வளரவிடாது தடுக்கப்பட்டிருக்கலாம் என்பது தொடர்பாக ஆராய்வதற்கான பெறுமதி மிக்க ஒரு நூலாக வெய்சின் 'கூடு' அமைந்துள்ளது என்பதே உண்மையானதாகும்.

http://www.puthinappalakai.com/view.php?20110626104152

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.