Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குழப்பமே, உன் பெயர்தான் நாடுகடந்த அரசாங்கமா ? ஒருபேப்பர் கட்டுரை !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய்க்கிழமை, 28 ஜூன் 2011 09:07 |

ஓரு பேப்பரின் 142 வது இதழில் 'ஒரு வருட நிறைவுகாணும் நாடு கடந்த அரசின் மீதான ஓர் பார்வை' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில்... தெரிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு உறுப்பினர்களின் பின்னாலும் ஆயிரக்கணக்கில் அவர்களுக்கென வாக்களித்த மக்கள், இருப்பதை மறுத்துவிட முடியாது என குறிப்பிட்டிருந்தேன். அப்போது, நா.க. அரசாங்கமானது, தனிமனிதன் ஒருவருக்கு அதிகப்படியானதும், அளவிற்கு மீறியதுமான சக்தியை கொடுக்குமானால் அது ஜனநாயகத்தின் உயிர்ப்பை பாதிக்கும் எனக் காரணங்காட்டி அதனை ஏற்றுக் கொண்டு கையெழுத்திட உறுப்பினர்களில் கணிசமான தொகையினர் மறுத்தமை பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.

யாப்பில் மாற்றம் வேண்டி நின்ற மேற்படி உறுப்பினர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, யாப்பினை ஏற்றுக் கொண்டு கையெழுத்திட மறுத்தமைக்காக அவர்களை நாடுகடந்த அரசாங்கத்தின் உறுப்புரிமையிலிருந்து விலக்கிவிட்டதாக நா.க.அ 26.03.2011 அறிவித்தது. இவ்வாறு விலக்கப்பட்ட உறுப்பினர்கள் இணைந்து நாடுகடந்த அரசின் ஜனநாயக அணி என்ற பெயரில் இயங்கி வருக்கிறார்கள். அவர்களது தமது மூன்றாவது அமர்வை 03.06.2011 பாரிசில் உள்ள நந்தேர் நகரில் தொடர்ந்து மூன்று நாட்கள் நடாத்தினார்கள். நாடுகடந்த அரசாங்கம் தொடங்கி ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில், அதிலிருந்து விலக்கப்பட்ட, மற்றும் தாமாக விலகிக் கொண்ட உறுப்பினர்களின் இடத்தை நிரப்புவதற்கு, தற்போது முன்வந்துள்ளார்கள். அவர்களது இணையதளத்தில் இது பற்றி வெளியிட்ட செய்தியில் 29 (சரியான தொகை இதை விட அதிகம்) வெற்றிடங்கள் உள்ளதாகவும், அதை நிரப்புவதற்கு முன்பு தேர்தலில் போட்டியிட்டு தெரிவு செய்யப்படாதவர்களில் அடுத்த நிலையில் உள்ளவர்களை நியமிப்பதற்கும், பிரதமர் உருத்திரகுமாரன் போன்று போட்டியின்றி நியமிக்கப்பட்டவர்களில் யாராவது விலக்கப்பட்டிருப்பின் அவர்களது வெற்றிடங்களை நிரப்புவதற்குச் சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு வேட்பு மனு கோரப்படும் எனவும், அங்கு போட்டியிருப்பின் மீள்தேர்தல் நடாத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வறிவித்தலில் யாப்பினை ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்டு பின்னர் தாமாக விலகியவர்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.இந்தச் சந்தடியில் ஒருவருடத்திற்கு மேலாக மின்னஞ்சலுக்கு மேல் மின்னஞ்சல் போட்டும் பதிலே இல்லாமல், தேர்தலில் நடைபெற்றதாக கருதப்படும் சீர்கேட்டினால் முடிவுகள் அறிவிக்கப்படாத இடங்களிலும், மீளத்தேர்தல்கள் நடாத்தப்படும் என எதிர்பார்க்கலாம். அவ்வாறாயின் லண்டன் மாநகருக்கு வெளி மாவட்டங்களுக்கான பிரிவில் போட்டியிட்டவர்களுக்கும் இப்போதுதான் விடை கிடைக்கவுள்ளது. இப்பிரதேசத்தில் மூன்று உறுப்பினர் பதவிகளுக்கு, பின்வரும் ஜந்து பேர் போட்டியிட்டார்கள்:

திரு. வன்னியசிங்கம் குணசீலன், திரு. நவரத்தினம் பரமகுமாரன், திரு. லோகேஸ்வரன் சிவசுப்பிரமணியம், திரு.சின்னத்துரை சிறீரஞ்சன், திரு. ஆறுமுகம் விவேகானந்தராசா

வடகிழக்கு லண்டனில் ஒன்பது பேர் போட்டியிட்டு, முதல் ஜந்து பேருக்கு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இங்கு சசிதர் மகேஸ்வரன் யாப்பில் கையெழுத்திடாமையால் உறுப்புரிமையை இழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1. செல்வி. ஆர்த்தி ஆறுமுகம் (4.154 வாக்குகள்)

2. திரு. சசிதர் மகேஸ்வரன் (3.796)

3. திரு. சண்முகநாதன் கவிராஜ் (3.758)

4. திரு. செல்வராசா செல்லத்துரை (2.796)

5. டாக்டர். கரன் முருகவேல் (2.641)

6. திரு. மணிவண்ணன் பத்மநாபன் (2.608)

7. திருமதி. வாசுகி முருகதாஸ் (2.006) (தற்போது, நா.க.அ உள்துறை அமைச்சின் பிரித்தானிய செயலாளர்;)

8. திரு. ஆறுமுகம் கந்தையா மனேகரன் (1.956)

9. திரு. செந்திநாதன் சுந்தரம்பிள்ளை (990)

அதே போல தென்மேற்கு லண்டனில் ஒன்பது பேர்கள் போட்டியிட்டு ஜந்து பதவி வழங்கப்பட இருந்தது. ஆனால் தேர்தலின் இறுதிப்பகுதி வாக்குப்பெட்டி எண்ணும்போது அதில் உள்ள சீர்கேட்டினால் மீள் தேர்தல் வைப்பதாக இருந்தது. ஆனால் தேர்தல் செலவையும், நேரத்தை கவனத்தில் எடுத்து, உறுப்பினர்களை தமக்கிடையே ஒரு உடன்பாட்டுக்கு வருமாறு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இங்கு அதிகபடியான வாக்குக்களைப்பெற்ற திரு. டேவிட் ஜோசப், டாக்டர். நமசிவாயம் சத்தியமூர்த்தி ஆகிய இருவரும் தாமாகவே, விலகிக்கொண்டனர்.

இவர்களோடு ஜந்தாம் இடங்களுக்கு வெளியே நின்ற திரு. அப்பாதுரை வைரவமூர்த்தியும், திரு. வடிவேலு சுரேன்திரனும் விலகிக் கொண்டார்கள். மிகுதியாக இருந்த ஜவரும் நா.க.அரசின் உறுப்பினராக தெரிவாகினர். அதில் திரு. பரமசிவம் கார்த்திகேசன், திருமதி. வாசுகி சோமஸ்கந்தா ஆகிய இரு உறுப்பினர்களும் யாப்பின் மீது கையெழுத்திடாமையால் உறுப்புரிமையை இழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னொரு உறுப்பினரான திரு. ஜெயசங்கர் முருகையா, ஒருவருடகாலம் உறுப்பினர் பதவியை வகித்தபின், குறைவான மக்கள் வாக்குகளுடன் தாம் தெரிவு செய்யப்பட்டிருப்பதால், தொடர்ந்தும் பதவி வகிப்பது மனசாட்சிக்கு உறுத்தலாக உள்ளதாக மே 9ம் திகதி ஒரு பகிரங்கக் கடிதத்தினை வெளியிட்டுவிட்டு விலகிக்கொண்டார். இது பற்றி நா.க.அ ஒரு அறிக்கையோ, எதிர்வினையோ வெளியிடவில்லை.

இங்கு தெரிவு செய்யப்பட்ட மற்றய உறுப்பினர்களான திரு.உத்திராபதி சேகர்( துணைப்பிரதமர்), திரு. தணிகாசலம் தயாபரன் (அரசியல்,வெளிவிவகார அமைச்சர்) ஆகியோர் மாத்திரம் பதவியில் உள்ளனர். இங்கு தேர்தல் நடைபெறுமோ அல்லது முன்னர் தாமாக விலகிக் கொண்டவர்களை மீள இணைத்து கொள்வார்களோ என்பது பற்றி இங்கு தேர்தல் ஆணையாளர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களுக்கே தெரியவில்லை. சர்ச்சைக்குரிய யாப்பில் இதுவிடயமாக எதுவித தகவலும் காணப்படவில்லை.

தென் கிழக்கு லண்டனில் மூன்றுபேர் போட்டியிட்டு ஒருவர் விலகியதால் திரு. நிக்கலஸ் மனோரஞ்சன், திரு. ஜனார்தனன் புலேந்திரன் ஆகிய இருவரும் போட்டியின்றி தெரிவாகினர். இவர்கள் யாப்பினை ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்டதால் பதவியில் தொடர்வார்கள்.

வடமேற்கு லண்டனில் ஜந்து உறுப்பினர்களின் இடத்திற்கு பதினெரு பேர் போட்டியிட்டார்கள். அங்கு பின்வரும் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

1. திரு. சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி - (8.357)

2. திரு. டிலக்சன் மொரிஸ் (6.434)

3. திருமதி. பாலாம்பிகை முருகதாஸ் (5.879)

4. திருமதி. லலிதசொரூபினி பிரதீபராஜ் (5.521)

5. செல்வி. ஜெயவாணி அச்சுதன் - (5.446)

இவர்களில் திரு. ஜெயானந்தமூர்த்தி, செல்வி. ஜெயவாணி அச்சுதன் ஆகியோர் யாப்பினை ஏற்றுக்கொள்ளாதமையால் பதவி விலக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருமதி. லலிதசொரூபினி பிரதீபராஜ் யாப்பினை ஏற்றுக் கொண்டு கையொப்பமிட்ட பின்னர், தாமாக விலகிக் கொண்டார். ஏனைய இருவரும் நாடுகடந்த அரசாங்கத்தின் அமைச்சர்களாக உள்ளனர். ஆகவே தற்சமயம் மூன்று பதவிகள் வெற்றிடமாக உள்ளன.

இங்கு போட்டியிட்ட ஏனையவர்கள் வாக்குகளின் அடிப்படையில்:

6. திருமதி. சுகிர்தகலா கோபிஇரத்தினம் (4.959)

7. டாக்டர். சுகந்தமாலா ராதாகிருஸ்ணன் (3.988)

8. திரு. நிமலன் சீவரத்தினம் (3.675)

9. திரு. சொக்கலிங்கம் யோகலிங்கம் (2.739)

10. திரு. சிவபூசம் சுகுகுமார் (1.753)

11. திரு. சிவசம்பு சிவராசா (1.741)

இவர்களில் அடுத்த நிலையிலுள்ள மூவர் தெரிவு செய்யப்படவுள்ளதாக திரு. உருத்திரகுமாரனால் நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் எந்த அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது அவர்களிடம் கேட்டபோது, அதனை விளக்க அவர்களால் முடியவில்லை. 'விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் உள்ளது போன்று, கடந்த தேர்தல் பட்டியலில் இருந்து வெற்றிடங்களை நிரப்புவது, சர்வதேச சனநாயகக் கோட்பாடுகளுக்கு உட்பட்டது ஆகும்' என நா.க.அரசின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நா.க.அரசின் தேர்தல் சர்வதேச கோட்பாடுகளில் சொல்லப்படும் விகிதாசாரப்பிரதிநிதித்துவ முறையில் நடைபெறவில்லை. இங்கு எவரும் கட்சியின் அடிப்படையில் போட்டியிடவில்லை, இங்கு விருப்பு வாக்கு வழங்கும் முறையும் இடம் பெறவில்லை. ஒவ்வொரு வேட்பாளரும் சுயாதீனமான முறையில் போட்டியிட்டனர், அதிகப்படியான வாக்குகளை பெற்றவர்கள் First past the post voting முறையில் தெரிவானார்கள். அப்படியிருக்க விகிதாசார பிரதிநிதித்துவ முறை பற்றி குறிப்பிடுவது குழப்பகரமானது.

இவ்விடயத்தில் மக்களின் அபிப்பிராயத்தை அறிந்துகொள்ள எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் என்ற பெயர் மட்டும்தான் உள்ளது. தேர்தலில் மக்களால் அதிக வாக்குகள் வழங்கி தெரிவானவர்கள் விலக்கப்பட்டு, குறைந்த வாக்குகளைப்பெற்றவர்களுக்கு முக்கியத்துவம் வழங்குவது எந்த வகையான ஜனநாயகம் எனத் தெரியவில்லை. நா.க.அ ஆரம்பித்து ஆண்டு ஒன்று கழிந்த பிறகும் முதல் கட்டமாக இயற்றிய யாப்புப்பற்றிய விளக்கங்கள் தமிழிலிலும், ஆங்கிலத்திலும் மக்களிடம் முன்வைக்கப்படவில்லை. அதன் ஆங்கிலப்பிரதி எங்குமே காணப்படவில்லை. நா.க.அ கொஞ்சம் கொஞ்சமாக ஊடகங்களிலும், மக்களின் மனதிலும் பேசாப்பொருளாக ஆகிவரும் நிலையில் அதன் இருப்பை காட்டுவதற்கென இடையிடையே அறிக்கைகள் வந்துகொண்டிருக்கின்றன.

அத்தோடு மூன்றாம் அமர்வுக்கு காணப்படும் ஆள்பற்றாக்குறைக்கு, விமர்சனமில்லாமல் ஏற்றுக் கொள்பவர்களே தேவைப்படுகிறார்கள்போல் தெரிகிறது. இனி அரசவையில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லாமல் எல்லாமே ஏகமனதாய் நிறைவேற்றப்படும். ஆனால் நிறைவேற்றியவையை, நடைமுறைப்படுத்துவதற்கு மக்களின் பலம் வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டால் சரி.

நன்றி

ஒரு பேப்பர்.

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id

... ஒரு பேப்பருக்கு ஒரு வேண்டுகோள் ... தய்வுசெய்து ... இதனை/இவர்களைப் பற்றிக் எழுதி/கதைத்து ... இடத்தை விரயமாக்காதீர்கள்!

இப்படியெல்லாம் எழுதாவிட்டால் எப்படி அவர்கள் இடத்தைநிரப்புவது.

எனக்கு விளங்கவில்லை ஒரு சனநாயக அரசியலை ஏன் எல்லாரும் இல்லாமல் செய்ய நினைக்கிறார்கள்.

தவறுகள் இருக்கலாம்.

ஈழமுரசு பேப்பர் மதிப்பு இல்லாமல் போனதே இதனால் தான்.

ஏதோ வேறு நாட்டுகாரன் நாடு கடந்த அரசு போல் அதை இல்லாமல் பண்ணுகிற அளவுக்கு தலைகீழ் கட்டுரைகள்,நக்கல்கள்.

ஈழமுரசு புலிகளின் பேப்பர் என்று எல்லாருக்கும் தெரியும் அதுவே இப்படி ஒரு சனநாயக கட்டமைப்பை விமர்சிக்கும்போது

வெளியில் இருப்பவர் இலகுவாக சிந்திப்பார் இவைக்கேயே பிடுங்குபாடு பிறகேன் ஆதரவு என்று.

இதை ஒரு பேப்பரும் செய்ய கூடாது.

என்ன செய்ய வேண்டும் என்று சொல்லலாம். இல்லாமல் போ என்று கட்டுரை வரைவது அதை நக்கல் அடிப்பது தவறு.

தமிழருக்கான ஒரு கட்டமைப்பு விடுதலைப்போராளிகளின் பின் இல்லை.

சும்மா நாட்டுக்கு நாடு ஒவ்வொரு பேரவை.அதனால் பயன் இல்லை.

எல்லா தமிழரையும் ஒன்று சேர்க்கும் அரசியல் இடம் இந்த அரசு தான். அதை வளர்ப்போம். ஒன்றாவோம்..

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கின்ற கொஞ்சத்தையும் அழிக்க நினைக்கக் கூடாது. அதன் மேல் தவறுகள் இருக்கலாம். அவற்றைத் திருத்தி தொடர்ந்து வெற்றிகரமாக முன்னேற்றப்பாதையில் செல்லத் தூண்ட வேண்டும்.நா.க.அரசுக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் தாங்கள் நினைத்தபடி பதவி விலகுவதும் அணி சேர்ப்பதும் அவர்களுக்கு வாக்களித்த மக்களை முட்டாள்கள் என்று கருதுவதாலாகும்.தேர்தலுக்கு முன்பே அணி சேர்ந்து போட்டியிட்டிருந்தால் அது மக்களால் தெரிவு செய்யப்பட்ட அணி என்று சொல்லாம்.இத மக்களால் தெரிவு செய்யப்பட்ட அணியென்று எந்த அணியுமே இல்லை.உங்களுக்கு மக்கள் கொடுத்த ஆணை 3 வருடங்களுக்கு உங்கள் கடமையைச் செய்வதே.அடுத்த தேர்தலில் வேண்டுமானால் கட்சி சார்பில் போட்டியிடுங்கள் மக்கள் விரும்பினால் தெரிவு செய்யப் படுவார்கள்.நா.க.அரசைத் தொடர்சியாக விமர்சித்து வந்த ஈழமுரசு பதிவு சங்கதி போன்றவற்றுக்கு முன்பு போல் வாசகர்கள் இல்லை.அதே நிலை ஒரு பேப்பருக்கும் வர வேண்டுமா? என்பதை ஒரு பேப்பர் நிர்வாகம் சிந்திப்பது அவர்களுக்கும் நல்லது.தமிழர்களுக்கும் நல்லது.தமிழர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு ஜனநாயகக் கட்டமைப்பை உடைக்க நினைப்பது சிங்களத்துக்குச் செய்யும் பேருதவியாகவே அமையும்.

அது ஒரு பேப்பருங்கோ. :lol: :lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.