Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நம்பிக்கை தரும் தமிழகம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத் தமிழருக்காக தமிழகத்தின் நிலைப்பாடு மாறியது எப்படி? நான்கு ஆண்டு கால நல்லெண்ண நடவடிக்கையால் கனிந்துள்ள வெற்றி ஒரே மேடையில் இரு தளங்களிலிருந்து எழுப்பப்படும் குரல்கள்ஒரே மேடையில் இரு தளங்களிலிருந்து எழுப்பப்படும் குரல்கள்

சோ.ஜெயமுரளி

இராணுவத்தின் கொடூரப்பிடிக்குள் நசியுண்டு தினமும் பிணவாடையிலேயே கண்விழிக்கும் தமிழர் தாயகம்இ தனக்காக குரல்கொடுக்க எவருமில்லையா என்ற ஏக்கத்துடனுள்ளபோதுஇ தாய்த் தமிழகத்தின் அண்மைய அரவணைப்பு சற்று ஆறுதலடைவேயே செய்துள்ளது.

இங்கு எம்மீது பேரிடியாய் பேரினவாதிகளால் கட்டவிழ்த்து விடப்படுகின்ற அராஜங்களுக்கான எதிர்ப்புகள் அல்லது இரத்தக்கொதிப்பு தற்போது தாய் நாட்டிலிருந்து உடனுக்குடனேயே வரத் தொடங்கியுள்ளதை அவதானிக்க முடிகிறது.

குறிப்பாகஇ கடந்த திங்கள் இரவு திருகோணமலையில் 5 அப்பாவி மாணவர்களை படைகளால் நடுத்தெருவில் படுக்கவைத்து ஈவிரக்கமின்றி காதுக்குள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை சென்னையில் நடைபெற்ற கண்டன பேரணியிலேயே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுவிட்டது.

ஹவிடுதலைச் சிறுத்தைகள்' அமைப்பு ஒழுங்கு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் "எங்கள் தங்கை தர்ஷிசினிக்கு வீர வணக்கம்"( புங்குடுதீவில் கடற்படைகளால் குதறப்பட்டு கொலை செய்யப்பட்ட பின் கிணற்றில் வீசப்பட்ட சகோதரி)இ " எங்கள் ஐயா பரராஜசிங்கத்திற்கு வீர வணக்கம்" இ "திருமலையில் கொல்லப்பட்ட மாணவர்களுக்கு வீர வணக்கம்" போன்ற கோஷங்கள் ஓங்கி ஒலித்ததுடன் "சிங்கள அரசுக்கு இந்தியா உதவிவழங்கக் கூடாது" இ "தமிழினத்தை அழிக்கும் சிங்கள இன வெறியர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்காதே" "மற்றும் தமிழீழத்தை அங்கீகரி " ஆகிய பதாகைகளையும் வைத்திருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தை நடாத்த சென்னை பொலிஸாரால் ஒரு மணி நேரமே வழங்கப்பட்டிருந்தது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் (வி.சி.) அமைப்பின் செயலாளர் தொல். திருமாவளவன்இ பாட்டாளி மக்கள் கட்சியின் ( பா.ம.க.) துணைத் தலைவர் சீ.ஆர். பாஸ்கரன்இ மறு மலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் ( ம.தி.மு.க) நிர்வாக உறுப்பினர் வழக்கறிஞர் அதியமான்இ கவிஞர் அறிவுமதிஇ இயக்குநர்களான சீமான்இ புகழேந்தி தங்கராசுஇ தமிழர் இயக்க தலைவர் தியாகுஇ தமிழ்த் தேசிய பொதுவுடைமைக் கட்சியின் நிர்வாகி சு.பத்மநாதன்இ தமிழ் மொழி அறக்கட்டளை நிர்வாகி முனைவர் தமிழன்பன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தமது ஆழ்மன உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

இவ்வாறான உணர்ச்சிக் குமுறல்கள் நவம்பர்இ டிசம்பர் காலப்பகுதியில்இ அதாவது மாவீரர் வாரத்தையொட்டியதாக ஆரம்பமாகியிருந்தது. ஆரம்பத்தில் சுவரொட்டிகளூடாக வெளிப்படத் தொடங்கிய இக் கொதிப்புகள்இ இந்திய அரசின் ஆட்சிப்பீடத்தை நோக்கிய ஆதங்க கடிதங்களாயும் பின்னர் மகாநாடாயும் மாறிஇ கருத்தரங்கமாகவும் கண்டனப் பேரணிகளாகவும் வந்துள்ளன. இவை ஒரு சில வாரங்களில் மாத்திரம் இடம்பெற்ற பரிணமிப்புகளே.

இதைவிடஇ " ஈழத்தமிழருக்காக குரல் கொடுப்பதற்கு ஒப்பான தமிழினப் பணி வேறெதுவுமில்லை " என அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் தமிழகத்தின் முதுபெரும் கல்வியாளருமான வா.செ. குழந்தைசாமி' ஈழத் தமிழர் பாதுகாப்பு மகாநாடு நடாத்தப்பட்டமைக்கு நன்றி தெரிவித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.

அக் கடிதத்தில்இ "ஈழப்பிரச்சினை தொடர்பாக தங்கள் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கூட்டம் பற்றிய செய்திகளை பார்த்தேன். மிகுந்த மகிழ்ச்சியும் மனநிறைவும் கொண்டேன். இலங்கைத் தமிழருக்கு நியாயம் செய்ய உதவுவதை ஒத்த தமிழினப்பணி வேறெதுவுமில்லை. அயல் நாட்டுடன் நல்லுறவு என்ற பெயரில் தமிழர்கட்கு எதிரான இலங்கை இனவாதிகளின் செயற்பாடுகளுக்கு இந்திய அரசு துணை போய்விடக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் தாங்கள் மேற்கொண்டிருக்கும் இம் முயற்சிக்கு தமிழினம் தலை வணங்கி நன்றி சொல்லும். இந்தத் தமிழர் நலம் விளையும் எண்ணற்ற தமிழ் உள்ளங்களோடு நானும் தங்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றேன்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன்இ சென்னையில் கடந்த வியாழனன்று ஹஈழத் தமிழர் உரிமை - சமாதான விழித்தீர்வு' என்ற தலைப்பில் கருத்தரங்கமொன்றும் நடைபெற்றது. அந்த நிகழ்வுக்கு தலைமைவகித்த தமிழ்நாடு அன்னையர் முன்னணியின் தலைவியும் மனிதவுரிமை செயற்பாட்டாளருமான பேராசிரியர் சரஸ்வதி கருத்துத் தெரிவிக்கையில்;

" சமாதான காலத்திலும் கூட ஈழத்தமிழர்களுக்கான மனிதவுரிமைகள் மறுக்கப்பட்டதுமின்றி அவர்கள் மீது வன்முறைகளும் திணிக்கப்பட்டுள்ளன. சமாதானத்தை கொண்டுவந்தவர்கள் தமிழர்கள்தான். 2001 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் நாள் தம்பி பிரபாகரன் போர்நிறுத்தத்தை அறிவித்தார். அப்போது அவர் வலுவற்ற நிலையில் ஒன்றும் இருக்கவில்லை.

வரலாற்று சிறப்புமிக்க ஆனையிறவுப் போரையும் கட்டுநாயக்க விமான நிலையத்தை தகர்த்த கையோடுதான் இராணுவ சமநிலை நின்றுஇ போர் நிறுத்தத்தை அறிவித்தார் தம்பி பிரபாகரன். 4 ஆண்டுகளாக சமாதான பேச்சுகள் நடைபெற்றன. ஆனால் இலங்கை அரசு எதையும் சரிவர நடைமுறைப்படுத்தவில்லை. மாறாகஇ தமிழர்கள்மீது வன்முறையையே அது கட்டவிழ்த்து விட்டுள்ளது" என அவர் முழங்கியுள்ளார்.

அதேபோல்இ அங்கு உரையாற்றிய கவிஞர் இன்குலாப்இ "இலங்கையில் புத்த மதம் என்பது சிங்கள மதம். அது இனங்களை ஒன்றிணைக்கப் பயன்படவில்லை. மத அடிப்படையில் பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிந்தது. அந்த பாகிஸ்தானிலிருந்துதான் வங்கதேசம் பிரிந்தது. மதத்துக்கு இனங்களை ஒன்றிணைக்கக் கூடிய சக்தியில்லை .

ஏகாதிபத்திய சக்திகள் திணித்த இந்தப் போருக்கு முதலில் தமிழர்கள் முகம் கொடுத்தார்கள். இனி சிங்கள மக்கள் முகம் கொடுப்பார்கள்." என்றார்.

இக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாட்டு செயலாளர் சி. மகேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையைப் பார்க்கும் போது தமிழகத்திலுள்ள அரசியல் தலைவர்கள் மாத்திரமன்றி கல்வியியலாளர்கள்இ பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்இ மனிதவுரிமை ஆர்வலர்கள்இ தமிழினப் பற்றாளர்கள்இ கலைஞர்கள் என அனைத்து துறைகளைச் சேர்ந்தவர்களிடமிருந்தும் ஈழத் தமிழர்களுக்கான ஆதரவு அல்லது அரவணைப்பு கருத்துக்கள் நீண்டகாலத்தின் பின் வரத் தொடங்கியுள்ளதை அறிந்துகொள்ள முடிகிறது.

தமிழ் நாட்டின் மூலை முடுக்கெங்கிலுமிருந்து கடந்த சில வாரங்களாக இத்தகைய உணர்வுகள் வெளிப்படுவதற்கான காரணத்தை அண்மையில் சென்னை சென்று திரும்பிய தகைசார் பேராசிரியர் கா. சிவத்தம்பி விளக்குகையில்இ

" ஈழத்திலே தமிழ் மக்களை சிங்கள அரசு அடக்குகிறது. தமிழர்களுக்கு பாதகமாக அது நடக்கிறது. சிங்கள அரசு இந்தியாவின் ஆதரவுடனேயே இவ்வாறு நடந்துகொள்கிறதென்ற எண்ணம் தமிழ்நாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ளதைக் காண முடிகிறது. அதாவதுஇ சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து இந்த எண்ணம் எழுந்துள்ளதைக் காண முடிகிறது.

இதற்கு பல காரணங்களிருப்பினும் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) யின் இந்திய விஜயம்இ அவர்கள் அங்கு வெளியிட்ட ஹ புலி விரோத' கருத்தக்களுமே தமிழ்நாட்டு மக்களின் கொதிப்புக்கு தூபமிட்டுள்ளது என்பது எனது கருத்து. இதையோர் பெரும் எழுச்சியெனக் கூற முடியாவிட்டாலும் தற்போது அங்கு ஏற்பட்டிருப்பது பிரக்ஞை (தமிழுணர்வு) என்று கூறலாம் இதில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வை.கோபாலசாமியின் தொழிற்பாடு முக்கிய பங்கு வகித்துள்ளது" என்றார்.

வை.கோ.இ இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதம் தமிழீழத்தின் பிந்திய நிலைவரத்தை தமிழ் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தியதுடன் அதிலுள்ள யதார்த்தம் மிக்கதும் உணர்வுள்ளதுமான கருத்துக்கள் அங்குள்ள ஏனைய தமிழின பற்றாளர்களை முழு மூச்சுடன் தமது கருத்துக்களை வெளிப்படுத்த உசுப்பி விட்டுள்ளதாக நோக்கர்களால் தெரிவிக்கப்படுகிறது.

டிசம்பர் 27 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதிவரை இந்தியாவுக்கு சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷஇ அங்கு தங்கியிருந்த போதும் சரிஇ அவர் தனது பயணத்தை ஆரம்பிக்க முன்னும்இ பயணத்தை முடித்து நாடு திரும்பிய பின்னும் சரி தமிழகம் அவரை விட்டு வைக்கவில்லை. பேரினவாதத்துக்கு எதிரான தனது ஆத்திரத்தை அது உறுதியாக வெளிப்படுத்தியது.

குறிப்பாகஇ மகிந்த இந்திய மண்ணில் கால் வைக்கக் கூடாதென தமது உச்சக்கட்ட கொதிப்பை வெளிப்படுத்தியதுடன் இலங்கைக்கு உதவினால் தமிழகம் இன்னோர் காஷ்மீராக மாறுமெனவும் எச்சரித்தது.

எமது பிரச்சினைகள் விடயத்தில் மிக நீண்டகாலமாகவே ஹ உறங்கு நிலை' யிலிருந்த தமிழகம்இ தற்போது விழித்துக்கொண்டுள்ளதன் தார்ப்பரியம் என்னவென விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் க.வே. பாலகுமாரனை கேட்ட போது:

"தமிழகத்துக்கும் தமிழீழத்துக்குமான தொப்புள்கொடி உறவு என்றுமே இருந்துதான் வருகிறது. இந்த உறவை அரசியல் சக்திகளே அடக்கியும் முடக்கியும் வந்துள்ளன. இதனால் அங்கு நீறு பூத்த நெருப்பாகயிருந்து கொண்டிருந்த உணர்வு தற்போது வெளிப்படத் தொடங்கியுள்ளது.

அதுவும் நீண்டகால வரலாற்று அவதானிப்பின் பின்னரேயே இவ்வாறன கருத்துக்கள் திரளுகின்றதை நீங்கள் பார்க்கலாம்.நாம் 4 ஆண்டு காலமாக கடைப்பிடித்த பொறுமைஇ பாரிய விட்டுக் கொடுப்புகள். மாறாகஇ இலங்கை அரசு எம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட வன் முறைஇ தற்போது மகிந்த எம் மீது பாரிய போரைத் திணிக்க முற்படுவது போன்ற பல்வேறு விடயங்களை பார்த்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மக்கள் தற்போது தமது தொப்புள் கொடி உறவுகளுக்காக குரல்கொடுக்க தொடங்கியுள்ளனர்.

அதே சமயம்இ டில்லியில் மாத்திரமன்றி இந்தியா முழுவதும் எமக்கு எதிரான பல குழுக்களும் இருக்கத்தான் செய்கின்றன. அவர்கள் யாரென்பது எமக்கு நன்றாக தெரியும்" என்றார்.

தமிழகத்தில் திரளுகின்ற ஈழத் தமிழர்கள் குறித்த கருத்துக்கள் இரு தளங்களிலுள்ளன. ஆனால் அவை ஒரே மேடையில் வெளிப்படுகின்றன.

கம்யூனிச கட்சிகளைச் சேர்ந்தவர்கள்இ ஈழத் தமிழர்களை சிங்கள அரசு துன்புறுத்துகிறது. எனவேஇ இந்தியா இலங்கைக்கு உதவக் கூடாதெனவும் சமாதான முயற்சிகளில் இந்தியாவை இழுத்து தமக்கேற்ற விதத்தில் தீர்வுகளை திணிக்க இலங்கை முற்படுவதாகவும் அந்தப் பொறிக்குள் இந்தியா சிக்கிவிடக் கூடாதுஇ ஈழத் தமிழர்களுக்கு விரோதமாக செயற்படக் கூடாதென குரல் எழுப்புகின்றனர்.

இக் கருத்துக்கு மேலதிகமாக திராவிடர் கழகங்களைச் சேர்ந்தவர்களும் தமிழுணர்வை உரத்த குரலில் கூறுபவர்களும் தமிழீழத்தை அங்கீகரிஇ விடுதலைப் புலிகளை அங்கீகரி எனத் தெரிவிக்கின்றனர்.

சிலர் சற்று அடக்கியும் மற்றவர்கள் உரத்தும் ஒரே மேடையிலேயே முழங்கி வருகின்றனர். தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ. நெடுமாறனுக்கு புலிகள் குறித்து பேசக் கூடாதென நீதிமன்ற தடையுள்ளது. மத்திய கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் இந்தியா இலங்கையின் சமாதான முயற்சிகளுக்குள் மூக்கை நுழைக்கக் கூடாதென்றிருக்கிறார்.

திராவிட முன்னேற்றக் கழக தலைவர் கருணா நிதி செய்தியாளர்கள் கேட்டதற்கு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைதான் தமது கொள்கை எனவும். ஆனால்இ ஈழத் தமிழர் பாதிக்கப்படக் கூடாதென்ற தமது கொள்கையில் எதுவித மாற்றமுமில்லையென மாற்றமில்லாமல் கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா' மகிந்த ராஜபக்‌ஷவை சந்திப்பதை தவிர்த்துக் கொண்டதன் மூலம் தனக்கு ஏற்படவிருந்த அரசியல் சிக்கலிலிருந்து தப்பித்துக் கொண்டிருந்தார் எனக் கூறப்படுகிறது. சில மாதங்களில் மாநில தேர்தல் அங்கு நடைபெறவுள்ளது.

தமிழீழ அரவணைப்பில் தனக்கெதிரான கட்சிகள் (தி.மு.க.தலைமையிலான கூட்டணி) முழு மூச்சாக ஈடுபட்டுள்ள வேளையில் இலங்கை ஜனாதிபதியை சந்தித்தால் தேர்தலில் அது தனக்கெதிரான ஆயுதமாகப் பயன்படுத்தப்படலாம். மக்கள் மனங்களில் ஹ தமிழின விரோதி' என்ற தோற்றம் ஏற்பட்டுவிடுமென்ற அச்சத்திலேயே ஜெயலலிதா இச் சந்திப்பை தவிர்த்தாரெனவும் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்குமிடையிலான முரண்பாடும் ( சோனியா - ஜெயலலிதா முரண்பாடு) இதற்கான நெருடலை ஏற்படுத்தியிருக்கலாமெனவும் தெரியவருகிறது.

இது இவ்வாறிருக்கஇ தமிழகத்தின் அடிப்படைப்பலம் கிடைத்தால் 2007 இல் தமிழீழம் மலர்வது சாத்தியமென அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு தெரிவித்திருக்கிறார்.

ஹ புலி ஆதரவு அரசியல் ' தமிழ் நாட்டில் இருந்தபோது பல குழப்பநிலை அங்கு ஏற்பட்டது என்பது உண்மை . ஆனால் தற்போது அங்கு ஏற்பட்டிருக்கும் நிலை வேறு. ஈழ விடுதலைப் போராட்டத்தை நீண்டகாலமாக அவதானித்து விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் குறித்த தர்க்கரீதியான வெளிப்பாடாகவே அங்கு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

இது எமக்கு பெரும் வெற்றியே. விடுதலைப் புலிகளின் கடந்த 4 ஆண்டுகால காய்நகர்த்தல் களிலிருந்து கனிந்த வெற்றியே இது.

" சிறிலங்கா நீ ஆனாஇ எல்.ரீ.ரீ.ஈ. நானான எனக் காதலி பாட "ஐயையோ வாயைக்கொஞ்சம் மூடு" என காதலன் ஹநடுங்கும்' சினிமா பாடல் தமிழகத்திலிருந்து வந்து சொற்பநாட்களுக்குள்ளேயே தமிழகம் தன் வாயைத் திறந்துவிட்டது.

திறந்துள்ள இவ் வாயை மூட பேரினவாதிகள் கடும் பிரயத்தனமெடுப்பார்கள் என்பது திண்ணம். அதற்கு வழமைபோல் இந்தியாவுக்கு ஹபுலிப் பேதி'யை கொடுப்பார்களென்பதும் தமிழகத்திலுள்ள ஹபுலி விரோதி' களுக்கு தூபமிடுவார்களென்பதும் வரலாறு சொல்லும் பாடம்.

எனவேஇ இந்தியாவுக்கு ஹ புலிப் பேதி ' கொடுத்து தமிழகத்தின் வாயை மூட பேரினவாதிகள் முற்படுகின்றபோது இந்தியாவுக்கு ஏற்படப்போகும் நோய்க்கான நிவாரணியை வழங்குவதற்கு தமிழர் தாயகத்திலுள்ள பொது அமைப்புகள் தயாராக வேண்டும்.

சிங்களம் டில்லிக்கு புலியைக் காட்டினால்இ நாம் ஹவலி'யைக் காட்ட வேண்டும்.

நன்றி தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.