Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழினப் படுகொலை செய்த இலங்கை ராணுவத்திற்கு இந்தியா பயிற்சி: சீமான் கண்டனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினப் படுகொலை செய்த இலங்கை ராணுவத்திற்கு இந்தியா பயிற்சி: சீமான் கண்டனம்

சனிக்கிழமை, ஜூலை 2, 2011, 12:02 [iST]

சென்னை: இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவின் ராணுவ பயிற்சிக் கழகங்களில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பது என்று ஒப்புக்கொள்ளப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இலங்கை ராணுவப் படையினருக்கும், அதிகாரிகளுக்கும் இந்தியாவின் ராணுவ பயிற்சிக் கழகங்களில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க அதிக இடங்களை ஒதுக்கவும், தீவிரவாதத்திற்கு எதிரான சிறப்புப் பயிற்சி அளிக்கவும் இந்திய ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது மனிதாபிமானமற்ற, தமிழர் விரோத நடவடிக்கையாகும். இதனை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

இலங்கை ராணுவ செயலர் மேஜர் ஜெனரல் எச்.சி.பி. குணதிலக்கே தலைமையிலான குழுவுடன் இந்திய ராணுவத்தின் பன்னாட்டு ஒத்துழைப்பு பிரிவிற்கான கூடுதலை தலைமை இயக்குனர் மேஜர் ஜெனரல் ஐ.பி.சிங் தலைமையிலான குழு டெல்லியில் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையில் இவ்வாறு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதென இந்திய ராணுவ அதிகாரி கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு நடத்திய இனப் படுகொலைப் போர் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. நிபுணர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் இலங்கை அரசுக்கு எதிராக உலக நாடுகள் கடும் அழுத்தம் கொடுத்துவருகின்றன.

தமிழர்களை இனப் படுகொலை செய்த இலங்கை அரசை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்றும், அந்நாட்டிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க உலக நாடுகளுடன் இணைந்து இந்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதற்கு நேர் மாறாக, தமிழினப் படுகொலை செய்த இலங்கை ராணுவத்திற்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சியளிக்கப்படும் என்று இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு நடத்திய இனப் படுகொலையை ஆதரிக்கிறது என்பது மட்டுமின்றி தமிழர்களின் குரலாக எதிரொலித்த தமிழக சட்டசபையின் தீர்மானத்தையும் அவமதிப்பது ஆகும்.

இந்திய ராணுவத்தின் இம்முடிவு, அது தமிழினப் படுகொலையில் இலங்கை ராணுவத்திற்கு முழுமையாக உதவியுள்ளது என்பதற்கு மேலும் ஒரு அத்தாட்சியாகும்.

இலங்கை ராணுவத்தின், அந்நாட்டு அரசின் மனிதாபிமான முகம்தான் இன்றைக்கு உலகெங்கிலும் கண்டனத்திற்குரியதாக உள்ளது. ஐ.நா. அமைதிப் படையின் அங்கமாக ஹைட்டி நாட்டிற்குச் சென்ற இலங்கை ராணுவத்தினர், அந்நாட்டின் சிறுமிகளை பாலியல் வன்முறை செய்துள்ளனர் என்று குற்றம்சாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. ஆனால் இந்தியாவின் ராணுவமோ அந்நாட்டிற்கு மனிதாபிமான நடவடிக்கைகள் பற்றிக் கற்றுத் தரப்போகிறேன் என்கிறது. இதைவிடக் கேலிக் கூத்தும், கொடூரமும் வேறு என்ன இருக்க முடியும்?

பன்னாட்டு மனிதாபிமானப் பிரகடனங்களில் கையெழுத்திட்டுள்ள நாடான இந்தியாவின் ராணுவம், அந்தப் பிரகடனங்களின்படி குற்றமிழைத்துள்ளதாக ஐ.நா. நிபுணர் குழுவால் குற்றம்சாட்டப்பட்டுள்ள நாட்டிற்கு ராணுவ பயிற்சி அளிக்க முன்வந்திருப்பது, மனிதாபிமான பிரகடனங்களை அவமதிப்பது ஆகும்.

இந்திய இராணுவத்தின் இந்த நடவடிக்கை இலங்கைத் தொடர்பான இந்திய அரசின் தவறான போக்கு தடையற்று தொடருவதையே காட்டுகிறது. இதனை தமிழர்களும், தமிழக அரசும் புரிந்துகொள்ள வேண்டும். ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்திய அரசின் போக்கு நியாயமற்றதாகவே எதிர்காலத்திலும் இருக்கும் என்பதற்கு இந்திய ராணுவத்தின் இந்த முடிவு ஒரு அறிகுறியாகும் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

http://thatstamil.oneindia.in/news/2011/07/02/seeman-condemns-indian-military-decision-aid0128.html

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ராணுவப் படையினருக்கும், அதிகாரிகளுக்கும் இந்தியாவின் ராணுவ பயிற்சிக் கழகங்களில் பாலியல் வன்புணர்வு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க அதிக இடங்களை ஒதுக்கவும், ஒடுக்கபட்ட மக்கள் அமைப்புகளுக்கு எதிரான சிறப்புப் பயிற்சி அளிக்கவும் இந்திய ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது ^_^ ^_^

இலங்கை ராணுவப் படையினருக்கும், அதிகாரிகளுக்கும் இந்தியாவின் ராணுவ பயிற்சிக் கழகங்களில் பாலியல் வன்புணர்வு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க அதிக இடங்களை ஒதுக்கவும், ஒடுக்கபட்ட மக்கள் அமைப்புகளுக்கு எதிரான சிறப்புப் பயிற்சி அளிக்கவும் இந்திய ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது ^_^ ^_^

புரட்சி

நீங்கள் நக்கலுக்கு எழுதியிருந்தாலும் மிக உண்மை.

87 க்கு முன்னர் சிறிலங்காப் படையினர் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே பாலியல் வல்லுறவுகளில் ஈடுபட்டனர். இந்திய அமைதிப்படையினர் வந்துதான் மக்கள் கிளர்ச்சிகளை அடக்க 'பாலியல் வல்லுறவு' என்பது மிக முக்கியமான ஆயுதம் என்று செய்து காட்டினார்கள். வயது போன கிழவிகளைக் கூட IPKF விட்டு வைக்கவில்லை.

அது மாத்திரமல்ல, முள்ளிவாய்க்காலில் பங்கருக்குள் தஞ்சம் அடைந்திருந்த மக்களை புல்டோசர் கொண்டு மூடச் செய்ததும், Indian Peace Keeping Forces யாழில முன்பு கையாண்ட இராணுவ தந்திரோபாயத்தின் இன்னும் ஒரு வடிவே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.