Jump to content

ஊடகங்களின் தாக்கத்தால் மாறிவரும் மட்டக்களப்பு தமிழர் பண்பாடு


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இக் கட்டுரையை இப்பதான்

ஈழநாதம்-மட்டக்களப்பு வார வெளியீட்டில் படித்தேன்.

குறித்த உதவி விரிவுரையாளர்

"மட்டக்களப்பை" ஆய்வுக்களமாகக் கொண்டு எழுதியிருந்தாலும்,

"முழுமையான" தேச விடுதலையை

முனைப்புடன் முன்னெடுக்கும் நாம் அனைவருமே சிந்திக்க வேண்டிய விடையங்கள்தான்....

ஊர் கூடித் தேர் இழுப்போம்....[/

ஊடகங்களின் தாக்கத்தால் மாறிவரும் மட்டக்களப்பு தமிழர் பண்பாடு

சு.சந்திரகுமார்இ உதவி விரிவுரையாளர்

பண்பாடு என்றால் ஆங்கிலத்தில் culture என அழைக்கப்படுகின்றது. பண்பாடு பற்றிப் பல்வேறுபட்ட வரைவிலக்கணங்கள் முன் வைக்கப்பட்ட போதும் பின்வருபவை குறிப்பிடத்தக்கது. ''ஒரு மக்கட் கூட்டம் தமது சமூகஇ வரலாற்று வளர்ச்சியின் அடியாகத் தோற்றுவித்துக் கொண்ட பௌதீக பொருட்கள் மத நடைமுறைகள்இ சமூகப் பெறுமானங்கள் ஆகியவற்றினதும் தொகுதியாகும்’

ஒரு மக்கட் கூட்டத்தின் தொழில்நுட்ப வளர்ச்சிஇ உற்பத்தி முறைமைஇ உற்பத்தி உறவுகள்இ கல்விஇ விஞ்ஞானம்இ இலக்கியம்இ கலைஇ நம்பிக்கைகள் ஆகியவற்றின் தொகுதியாகும்| இவ்வாறு ஒரு சமூகத்தின் வாழ்க்கை முறையின் வெளிப்பாடாகக் காணப்படும் பண்பாடு சமூகத்தில் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களால் கருத்தியல் ரீதியாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது நாமறிந்த விடயமாகும்.

இதனால் எமக்கு ஒரு பக்கப் பண்பாடுதான் தெரிய வருகின்றது. இது ஒரு அபாயமான செயலாக உள்ளது. பண்முகப்பட்ட பார்வையில் பண்பாடு கட்டியமைக்கப்படவில்லை என்றே கூறலாம். பண்முகப்பட்ட ஒரு மக்கட் பண்பாட்டை உருவாக்குவது இக்காலத்தின் தேவையாகும். அப்போதுதான் தெளிவான ஒரு மக்கட் பண்பாட்டைஇ அதன் தனித்துவத்தின் வேரை அறிந்து கொள்ள முடியும் என்பது சமூகவியல் உண்மையாகும்.

அடுத்து மாற்றம் பற்றிய விளக்கத்தை நோக்கும் போது மாற்றம் என்பது வரலாற்று ஓட்டத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. பண்பாட்டின் அனைத்துக் கூறுகளிலும் மாற்றம் நிகழ்கின்றது. ஹெகல் இதனை ''இயங்கியல்'' என்பார். ஒரு இயக்கமானது முரண்பாடுகளின் அடிப்படையில் உருவாகின்றது என்பார். பொருளாதாரத்தில் ஏற்படுகின்ற வளர்ச்சி சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது என்ற மார்க்சியின் கூற்று இங்கு புலனாகின்றது. எனவே மாற்றம் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இதன் மூலம் இரண்டு வகையான தாக்கமுண்டு. ஒன்று நன்மை மற்றது தீமை. இதில் எதைத் தேர்ந்தெடுக்கப் போகின்றோம் என்பதனை ஒரு சமூகத்தின் பண்பாட்டுக் கட்டமைப்பைப் பொறுத்து அமையும்.

இந்நிலையில் மட்டக்களப்புத் தமிழ்ப் பண்பாடு பற்றிப் பார்ப்பது சிறப்பானதாகும். மட்டக்களப்புப் பண்பாடு மாறுவதற்குக் காரணம் பலவுண்டு. ஆனால் அதிகமான மாற்றம் நிகழ்வதற்கும்இ நிகழ்ந்து கொண்டிருப்பதற்குமுள்ள மிக முக்கியமான தற்போதைய காரணம் ஊடகங்களாகும். இந்த ஊடகங்கள் வர்த்தக நோக்குடையதாகவுள்ளது.

இது பற்றி மக்கள் மத்தியில் உள்ள கருத்தியல் ரீதியான கட்டமைப்பு ஆபத்தானது. இது உலகமயமாக்கல் என்ற தொனியில் தொழிற்படுகின்றது. முதலாளித்துவ ஏகாதிபத்திய நாடுகள் ஒரு சமூகத்தைச் சுய சார்பற்றஇ தங்கி வாழ்கின்ற சமூகமாக மாற்றுவதே உலகமயமாக்கலாகும். அதாவது முதலாளித்துவ ஏகாதிபத்திய நாடுகள் தங்களுடைய பண்பாடு சார்ந்த கருத்துக்களை மக்கள் மயப்படுத்த மூன்றாம் மண்டல நாடுகளின் சுய பண்பாடுகளை மழுங்கடிப்பது ஒரு நுகர்வுப் பண்பாடாக உள்ளது. மட்டக்களப்புப் பிரதேசத்தில் இச்செயற்பாடு தீவிரமாக நடந்து கொண்டு வருகின்றது.

அதுவும் சுனாமியின் தாக்கத்திற்குப் பிறகு அதன் உச்சம் தலை விரித்தாடுகின்றது. இதனால் தமிழ்ப் பண்பாட்டில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருவதனைக் காண முடியும். இந்த நிலையில் கலை இலக்கிய விமர்சகர் இந்திரன் கூறியது எனக்கு ஞாபகம் வருகின்றது. ''விரைவில் நாம் கிரகம் தழுவிய பண்பாட்டைச் சந்திக்கப் போகின்றோம். அத்தகைய புதிய பண்பாட்டைக் கட்டித் தழுவி வரவேற்பதற்கு நம்மைச் சுற்றி என்ன நடக்கின்றது என்ற விழிப்புணர்ச்சி தேவைப்படுகின்றது'' என்றார்.

தமிழன் என்று சொல்ல முகம் கூசும் அளவிற்குத் தொழில்நுட்ப ரீதியான தாக்கம் தமிழ் அடையாளங்களை இழக்கச் செய்து பொதுவான பண்பாட்டை எம்மையறியாமலே கட்டியெழுப்பிக் கொண்டிருக்கின்ற இக்காலகட்டத்தில் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியது எமது மிக முக்கியமான கடமையாகும். மீடியாவின் பங்களிப்பு தமிழ் பண்பாட்டின் ஆணி வேரை அதன் அடையாளத்தைச் சிதைக்கின்றது.

சினிமாஇ தொலைக்காட்சிஇ தொலைபேசிஇ வீடியோஇ கணனிஇ இணையம்இ பத்திரிகைஇ வானொலி எனப் பல்வேறுபட்ட தொழில் நுட்ப சாதனங்களின் மூலம் நேரடியாகவும் சமூகத்தில் தாக்கங்களை ஏற்படுத்துவதே மீடியாவின் தாக்கமாகும். மட்டக்களப்புக் கலாசாரத்தில் இதன் பாதிப்பைச் சிறப்பாகக் காண முடிகின்றது. இது உலக சந்தைகளைஇ உலக கலாசாரங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. நாம் விரும்பியோஇ விரும்பாமலோ மீடியாவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். மட்டக்களப்புத் தமிழ்ப் பண்பாடும் மீடியாவின் சூழலில் அகப்பட்டுள்ளது. தமிழர் கலாசாரத்தை மாற்றிவிடும் கருவியாகத் தொழிற்படும் மீடியாவே தமிழர் கலாசாரமாக மாறி விடுமோ என்ற அபாயம் ஏற்படுகின்றது. அடுத்து எவ்வாறான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்பதனை மட்டக்களப்புப் பிரதேசத்தின் தமிழ்ப் பண்பாட்டின் சில கூறுகளை உதாரணமாகக் கொண்டு நோக்குவோம்.

கலைகளில் இதன் தாக்கம் அளப்பெரியதாகும். மட்டக்களப்புக் கலை வடிவங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் உழைத்துக் களைத்த மக்கள் தங்கள் ஓய்வு நேரங்களில் பல கலைகளை நிகழ்த்தியுள்ளனர்.

சுயமாகத் தயாரித்து சமூகத்தோடு உறவு கொண்டு இதனை நிகழ்த்தியுள்ளனர். இங்கு கூத்துஇ கரகாட்டம்இ கோலாட்டம்இ கும்மிஇ காவடியாட்டம்இ வசந்தன் எனப் பல்வேறுபட்ட நிகழ்வுகளை நிகழ்த்தி மக்கள் விடிய விடிய இருந்து பார்த்த மரபு நிலவியதை நாம் அனைவரும் அறிவோம்.

ஆனால் மீடியாவின் தாக்கத்தினால் மட்டக்களப்பில் ஒவ்வொரு குடும்பங்களும்இ தனிமனிதர்களும் மூழ்கியுள்ளனர். இதன் காரணமாக எமது சுயசார் கலைப் படைப்புக்கள்இ எம் தேசிய அடையாளங்கள் அனைத்தையும் மறந்து சினிமாத் திரைப்படத்திலும்இ தொலைக்காட்சி நாடகத்திலும் உறவாடியுள்ளனர்.

குறிப்பாகத் தொலைக்காட்சி நாடகங்களே தமது வாழ்க்கை எனக் கருதி அதில் பின்னிப் பிணைந்துள்ளார்கள். இவர்கள் உடல் உள ரீதியாக ஆரோக்கியம் இழந்த நிலையில் உள்ளனர். பண்பாட்டின் அடியாகக் காணப்படும் கூத்து மறந்து யாருக்கும் தெரியாத நிலையில் இருக்கின்றது. கூத்து கீழ்த்தரமானது என்கின்றனர். இவர்களைப் பார்த்துப் பண்பாட்டு வேர் சிரிப்பது இவர்களுக்குத் தெரியாத ஒன்றாக உள்ளது.

இந்தளவிற்கு எம் தேசிய கலை வடிவம் மறந்து சினிமாவிலும் தொலைக்காட்சி நாடகங்கள்இ சினிமாப் பாடல்களிலும் ஒட்டி உறவாடுகின்றனர். விடிய விடிய தொலைக்காட்சியின் முன்னே இருக்கின்றனர். மீடியா இவர்களை ஆட்கொள்கின்றது என்று தெரியாத அளவிற்கு அது எம்மை முட்டாளாக்கிக் குறுகிய சிந்தனைக்குக் வைத்துள்ளது. இதனால் குடும்பத்தில்இ சமூகத்தில் அதிக பிரச்சினை எழுகின்றன. தமிழர் கலை அழிந்து போகும் கால கட்டத்தில் உள்ளோம். இந்தச் சந்தர்ப்பத்தில்தான் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

அடுத்து தமிழர் வழிபாட்டு மரபிலும் மீடியாவின் தாக்கம் அளப் பெரியதாகும். மட்டக்களப்புத் தமிழருக்கென்று தனித்துவமான வழிபாடு உண்டு. ஆகமம் சாராத சடங்குடன் கூடிய வழிபாடே இங்கு தனித்துவமானது. இச்சடங்கிற்கு உயிரூட்டுவது உடுக்குஇ மத்தளம்இ பறைஇ தாளம் முதலானவைகளாகும்.

ஆனால் இன்று இத்தன்மை மாறி சினிமாச் சாயலால் ஆன பாடல்கள்இ கர்நாடக இசைகள்இ முதலானவையும் சடங்கில் தெய்வத்தை ஆட்டத் தபேலாஇ மேளம் முதலான இசைக் கருவிகள்இ பயன்படுத்தப்படுகின்றன. இதனால் சடங்கின் உயிர்த்தன்மை இல்லாமல் போகின்றது என்பது புலனாகின்றது. இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் எம்மைக் கட்டியெழுப்பத் தயாராக இருக்க வேண்டும்.

மட்டக்களப்புத் தமிழ்ப் பண்பாட்டில் அவர்களுடைய பழக்கவழக்கங்கள் தனித்துவமானவை. உணவுஇ உடைஇ விருந்தோம்பல்இ சோம்பறித்தன்மையற்ற வாழ்க்கை எனப் பலவற்றைக் குறிப்பிடலாம். உதாரணமாக உணவிற்காக குரக்கன்இ சோளம்இ உழுந்துஇ பயற்றைஇ பாசிப்பயறுஇ முதலானவற்றைக் கொண்டு பிட்டுஇ பலகாரவகைஇ இட்லிஇ கொழுக்கட்டைஇ கூழ்இ உருண்டை முதலானவற்றைத் தயாரித்தனர்.

விழாக்களிலும் இதனையே பயன்படுத்தினர். இது உடம்பிற்கும் மனதிற்கும் ஆரோக்கியமான உணவாக இருந்தது. மீடியாவினாலும் அதனால் ஆன விளம்பரங்களினாலும் தமிழர் விழாக்களில் கேக் வகைகள்இ சொக்லட் வகைகள்இ கொக்கோகோலா முதலானவைகளைப் பயன்படுத்துகின்றனர். இது இரசாயனத் தன்மை கலந்தது.

ஆரோக்கியமற்ற வாழ்விற்குத் துணை புரிகின்றது. இவையொரு பெரும் பண்பாட்டு மாற்றமாகும். மட்டக்களப்புச் சமூகம் தமது பண்பாட்டை இழக்கின்ற நிலைக்குச் சென்றுள்ளது. அடுத்து எம் அடையாளத்தைக் காட்டுவதில் துணை நிற்கும் ஒன்றாகக் காணப்படுவது ஆடையணிகலன்களாகும். வேட்டிஇ சால்வை என்பன தமிழ் அடையாளத்தைக் காட்டும் ஒன்றாக உள்ளது.

ஆனால் மீடியாவின் தாக்கத்தால் ஜீன்ஸ்இ ரீசேட்இ கோர்ட் என எமது சூழலுக்கும்இ காலநிலைக்கும் பொருந்தாத ஆடைகளை அணிந்து நோய்களைத் தேடுகின்றனர். எம் அடையாளத்தை இழக்கின்றனர். அதாவது இளைஞர்கள்இ யுவதிகள் அனைவரும் படையப்பா ரவுசர் என்றும்இ ரெட்வெட்டு என்றும்இ ஜோதிகா ளுவலடந என்றும்இ ரம்பா ர்யசை ளுவலடந எனக் கூறிக் கொண்டும் தங்களைத் தாங்களே ஏமாற்றுகின்றனர். இது சிறுவர்களின் மனதையும் பாதிக்கின்றது. இதன் மூலம் நாம் சுயசார்பற்ற சமூகப் பண்பாட்டைக் கண்டியெழுப்புவதைக் காணலாம்.

அத்தோடு மட்டக்களப்புத் தமிழ்ப் பண்பாட்டில் சடங்கு முக்கியம் பெறுகின்றது. இவை சடங்கு பற்றித் தெரிந்த அனுபவம் வாய்ந்த பெரியவரிடம் கேட்டு நல்ல நாள் பார்த்து உயிர்த்துடிப்புடன் நடைபெறுவது வழக்கமாகும். ஆனால் இன்றைய கால கட்டத்தில் வீடியோக்காரனே சடங்கு நிகழ்வதற்கு நாள் குறிப்பவனாகக் காணப்படுகின்றான். அவன் எப்போது விடுமுறையாக இருப்பானோ அன்றைய நாளையே குறிக்கின்றனர்.

இந்த நிலையில் வீடியோவின் ஆதிக்கம் எந்தளவிற்கு உயர்ந்துள்ளது என்றும்இ எம் சமூகத்தில் பெரியோரை மதிக்கும் பண்பு மாறியுள்ளது என்றும் உணர்ந்து கொள்ள முடிகின்றது. அத்தோடு திருமணச் சடங்குஇ பூப்புனித நீராட்டு விழா போன்றவற்றில் அன்றைய கால கட்டத்தில் அச்சடங்குகளுக்கு வந்திருப்போர் அன்றைய கதாநாயக்கர்களை வாய் நிறைய வாழ்த்துவர்.

அது ஆத்ம திருப்தியாக இருந்தது. ஆனால் இன்று அவ்வாறு இல்லாமல் வீடியோவிற்கு முகம் காட்டுபவர்களாகவே இருக்கின்றோம். உள்ளுணர்வாக வாழ்த்திய தன்மை மாறி வீடியோவிற்காகச் செயற்கைத் தனமாக ஆத்ம திருப்தியற்ற தன்மையில் வாழ்த்துகிறோம். பெரியோரை மதிக்கும் நிலையும் இல்லை.

இவ்வாறான செயற்பாடுகளினால் மரபு ரீதியான எம் பண்பாட்டை இழக்கின்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். அந்தஸ்த்துஇ கௌரவம்இ நாகரிகம் என்ற நிலையில் எம் தமிழ்ப் பண்பாடு வணிகப் பண்பாடாக மாறியுள்ளது.

இவ்வாறாக மட்டக்களப்புத் தமிழர் பண்பாடு மீடியாவின் தாக்கத்தால் பாதிப்புறும் தன்மையினை அவதானிக்கலாம். இக்காலகட்டத்தில் நாம் சிந்திப்பவர்களாகஇ போலித்தனமற்றவர்களாக இருக்க வேண்டும். இந்துக் கிரகமயமாதல் கால கட்டத்தில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். தொழில் நுட்ப அறிவியல் யுகத்தில் மட்டக்களப்புத் தமிழ்ப் பண்பாட்டின் தனித்துவமான சுய அடையாளங்கள் மாறிப் போகாமல் காப்பாற்ற வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் எமக்குரிய தமிழ்ப் பண்பாட்டைக் கட்டியெழுப்ப வேண்டியவர்களாக உள்ளோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல ஒரு ஆக்கத்தை இணைத்திருக்கிறீர்கள் நன்றிகள். எல்லாத்தமிழர்களுக்கும் இது பொருந்தும். :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.