Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தொலைபேசி ஒட்டுக் கேட்பு: மூடப்படும் பிரிட்டிஷ் பத்திரிக்கை!

Featured Replies

1. நாங்கள் கூட எமது default கடவுச்சொல்லை மாற்றவேண்டிய தேவை உள்ளது.

இரண்டு தொலைபேசி மூலம் ஒரு இணைப்பை அழைத்து இதை செய்துள்ளனர். சாதாரணமாக default கடவுச்சொல்லு 1234 , இதை பாவித்தே இந்த நிகழ்வு நடந்துள்ளது.

2. இந்த வாரஇறுதி நாளுடன் இந்த பத்திரிகை மூடப்படுகின்றது

Second newsroom searched, ex-Cameron aide arrested in U.K. hacking scandal

Prime Minister David Cameron's former communications chief and a former royals reporter for the News of the World tabloid were arrested Friday, the latest to be swept up by Britain's rapidly evolving media scandal over phone hacking and bribing police.

Rupert Murdoch's media empire on Thursday shut down the 168-year-old muckraking tabloid, which has been engulfed by allegations its journalists paid police for information and hacked into the phone messages of celebrities, young murder victims and even the grieving families of dead soldiers. The revelations horrified both ordinary Britons and advertisers, who pulled their ads en masse.

http://www.theglobeandmail.com/news/world/europe/second-newsroom-searched-ex-cameron-aide-arrested-in-uk-hacking-scandal/article2090771/

தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம்

பிரிட்டனின் மிகப் பெரிய வாரப் பத்திரிகையான, நியூஸ் ஒப் த வோர்ல்ட் , அரசியல்வாதிகள், பிரபலமானவர்கள் மற்றும் பொதுமக்களின் தொலைபேசிச் செய்திகளை ஒட்டுக்கேட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து மூடப்படுவதாக அந்தப் பத்திரிகையை நடத்தும் நியூஸ் இண்டர்னேஷனல் நிறுவனத்தின் தலைவர் ஜேம்ஸ் முர்டாக் வியாழக்கிழமை அறிவித்திருந்தார்.

இப் பத்திரிகை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் முன்னாள் ஆசிரியராக இருந்தவரும், சில மாதங்கள் முன்பு வரை , பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரனின் மக்கள் தொடர்புத் துறை இயக்குநராக இருந்து பின்னர் பதவி விலகியவருமான, ஆண்டி கூல்சன் இன்று வெள்ளிக்கிழமை, இந்த தொலைபேசி ஒட்டுக்கேட்புகள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.

168 ஆண்டுகளாக பிரிட்டனில் ஞாயிற்றுக்கிழமை இதழாக வெளிவரும், இந்தப் பத்திரிகை, பரபரப்பூட்டும், புலனாய்வுச் செய்திகளையும், பொதுப் பிரச்சினைகள் குறித்த பிரச்சார ரீதியிலான செய்தி இயக்கங்களையும் நடத்திப் பிரபலமானது.

சர்வதேச அளவில் ஊடகச் சக்ரவர்த்தி என்ற அளவில் பெயர்பெற்றுள்ள , ஆஸ்திரேலியாவில் பிறந்த , ருபர்ட் முர்டாகின் நியூஸ் கார்ப் நிறுவனத்தின் கிளை நிறுவனம் தான் இந்த பிரிட்டனில் இயங்கும் நியூஸ் இண்டர்னேஷனல்.

இந்த குழுமத்திலிருந்து , லண்டனின் டைம்ஸ் நாளிதழ், சன் பத்திரிகை, மற்றும் ஸ்கை தொலைக்காட்சி நிறுவனம் ஆகியவை நடத்தப்பட்டு வருகின்றன.

நியூஸ் ஒப் த வோர்ல்ட் இதழின் முன்னாள் ஆசிரியர் ஆண்டி கூல்சன் , தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் மற்றும் போலிசாருக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பான விசாரணைகளிலேயே தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

டேவிட் கேமரன் விளக்கம்

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன், இதில் பல காலமாக அலட்சியப்படுத்தப்பட்டுவந்த ஒரு பரந்து பட்ட பிரச்சினை இருப்பதைத் தான் புரிந்து கொண்டிருப்பதாகக் கூறினார்.

தான் இதில் ஒரு பிரச்சினை இருக்கிறது என்பதை புரிந்து கொண்டது மட்டுமல்லாமல், அது குறித்து இரண்டு விசாரணைகளை அறிவிப்பதன் மூலம், தான் நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் கேமரன் கூறினார்.

ஆனால், ஆண்டி கூல்சனை தனது மக்கள் தொடர்பு இயக்குநராக நியமிக்க எடுத்த முடிவுக்கு வருத்தம் தெரிவிப்பதைத் தவிர்த்தார் கேமரன்.

அவரை நியமிப்பதற்கு முன்னர், அவரிடம் இந்த சம்பவங்கள் குறித்து உறுதிமொழிகளைத் தான் கோரியதாக மட்டும் அவர் கூறினார்.

பரபரப்பு

ருபர்ட் முர்டோக்கின் ஊடக சாம்ராஜ்யத்துடன் எல்லா அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களும் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தாலும், இந்த விவகாரத்தில் ஒரு நல்ல சந்தர்ப்பம் தனக்கு வாய்த்திருப்பதாகவே தற்போதைய எதிர்க்கட்சியான,தொழிற்கட்சியின் தலைவர் எட் மிலிபாண்ட் நினைக்கிறார்.

இந்த விவகாரத்தை பிரதமர் சரியாகப் புரிந்துகொள்ளவேயில்லை என்று கூறும் மிலிபாண்ட் இந்த விவகாரத்தின் விளைவாக ஒரு பெரும் மாற்றம் விளைந்திருக்கிறது என்கிறார்.

பிரபலங்கள் மட்டுமல்லாமல், மிகவும் வருத்தத்திலிருந்த , மிகவும் பலவீனமான நிலையில் இருந்த சாதாரண பொதுமக்களின் தொலைபேசிகளும் ஒட்டுக்கேட்கப்பட்டன என்ற உண்மை தெரிய வந்த கடந்த வாரத்தில்,இந்த விவகாரத்தில் பரபரப்பான திருப்பங்கள் ஏற்பட்டன . ஆனால் இந்த கதை இன்னும் முடிந்துவிடவில்லை.

போலிஸ் விசாரணைகள் மிகவும் உச்சகட்டத்தில் இருப்பதையே இந்த சமீபத்திய கைதுகள் காட்டுகின்றன. நீண்ட இரண்டு விசாரணைகள் நடக்க இருக்கின்றன. முர்டோக்கின் ஊடக சாம்ராஜ்யத்தின் எதிர்காலம் குறித்து ஏராளமான விவாதம் நடக்க இருக்கிறது.

http://www.bbc.co.uk/tamil/news/story/2011/07/110708_now.shtml

  • 2 weeks later...

பிரித்தானிய செய்திதாளின் உரிமையாளர் மன்னிப்பு கோரியுள்ளார்

பெரும் ஊடக நிறுவனங்களுக்குச் சொந்தக்காரரான ரூப்பர்ட் முடொக்(Rupert Murdoch), பிரிட்டனில் அவரது செய்தித்தாளான நிவ்ஸ் ஒஃப் த வேர்ல்ட்(news of the world) புரிந்துள்ள தவறுகளுக்காக பிரிட்டிஷ் மக்களிடம் மன்னிப்புக் கோரினார்;.

தம்மால் இழைக்கப்பட்ட தவறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மன்னிப்பு கோருவவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று வெளியான செய்தி நாளிதழ்களில் ‘We are Sorry’ என்ற தலைப்பில் தனது கையொப்பத்துடன், வெளியான தொடர் அறிவிப்புகள் மூலம் ரூப்பர்ட் முடொக்(Rupert Murdoch) தமது மன்னிப்பை கோரினார்.

பிரிட்டனில் அதிகம் விற்பனையாகும் செய்திப்பத்திரிகையான அவரது நிவ்ஸ் ஒஃப் த வேர்ல்ட், ஆயிரக்கணக்கான மக்களின் தொலைபேசித் தகவல்களை சட்டவிரோதமாக ஒட்டுக்கேட்டுள்ளதாக தெரியவந்துள்ளது

இதன் காரணமாகவே அவர் இந்த மன்னிப்பை கோரினார். இதேவேளை பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் செலவின ஊழல் விவகாரங்களை வெளிக்கொணர்ந்ததற்காக பழிவாங்கும் விதமாகவே நிவ்ஸ் ஒஃப் த வேர்ல்ட் செய்திதாள் விடயம் அமைந்துள்ளதாக ஃபைனான்ஷியல் டைம்ஸ்(the financial times ) செய்திதாள் குறிப்பிட்டுள்ளது

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=8621

  • தொடங்கியவர்

... யாழில் சிலர், சிலரது தொலைபேசி உரையாடல்களை, அவர்கள் அனுமதி அற்று(?) ஒலிப்பதிவு செய்து, அவர்களின் அனுமதி அற்று இணையத்தளங்களில் ஏற்றி மிரட்டினார்கள்! ... இதில் யாழும் உடந்தையானதா??? .... இவைகளுக்கு மன்னிப்பு கேட்கும்படி யாழ் கேட்டுக் கொள்ளுமா? இல்லை இந்த கிறிமினல் வேலைகளை செய்தவர்கள் மன்னிப்பு கேட்பார்களா????????????????????

உருளும் தலைகள் - பறிபோகுமா பிரதமர் பதவி?

- பாராளுமன்றத்தில் அவசர விவாதம்

- எதிர்க்கட்சியினர் அழுத்தம்

1. ஸ்கொண்ட்லாந்து யார்ட் உதவிப்பணிப்பாளர் இராஜினாமா

2. ஸ்கொண்ட்லாந்து யார்ட் பணிப்பாளர் இராஜினாமா

3. ஊடகங்களின் பொறுப்பாளர் ரெபக்கா புரூக்ஸ் கைதாகி பிணையில் விடுதலை

Scotland Yard's Yates resigns amid intensifying Murdoch scandal

London Mayor Boris Johnson said Monday that Scotland Yard's assistant commissioner resigned after being told he'd be suspended, in the second high-profile police department casualty over the quickly spreading phone hacking scandal in as many days.

Mr. Yates' boss, police commissioner Paul Stephenson, resigned Sunday over his ties to Neil Wallis, a former News of the World executive editor who has been arrested over the scandal.

http://www.theglobeandmail.com/news/world/europe/scotland-yards-yates-resigns-amid-intensifying-murdoch-scandal/article2100532/

http://www.theglobeandmail.com/news/world/europe/rebekah-brooks-plunges-from-power-monger-to-pariah/article2100129/

ஒரு தற்கொலை, 10 - கைதுகள் 4 - இராஜினாமாக்கள்

தொடரும் சர்ச்சையில், இந்த பிரச்னையை வெளியில் சொன்னவர்களில், அவர்கள் இருவர், ஒரு ஊடகவியலாளர் தற்கொலை செய்துள்ளார்.

முர்டோக் மீது திடீர் தாக்குதல்: பார்லி‌.யில் பரபரப்பு

தொலை பேசி ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக இங்கிலாந்து பார்லி.கமிட்டி முன்பு ஆஜராகியிருந்த நியூஸ் ஆப்திவோல்டு செய்தி நிறுவனஉரிமையாளர் முர்டோக்(79) மீது ஆசாமி ஒருவர் திடீர் தாக்குதல் நடத்தியதால் பார்லிமென்டில் பரபரப்பு ஏற்பட்டது.

பிரிட்டனில், பல்வேறு தொலைபேசி ஒட்டுக் கேட்பு குற்றச்சாட்டில் சிக்கிய "நியூஸ் ஆப் தி வேர்ல்டு' பத்திரிகை சமீபத்தில் மூடப்பட்டது. இது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுதலையாயினர். இந்நிலையில் நேற்று, பிரிட்டன் பார்லிமென்ட் எம்.பி.,க்கள் கொண்ட தேர்வு கமிட்டி முன்பு "நியூஸ் கார்ப்பரேஷன்' தலைமை நிர்வாக அதிகாரி ரூபர்ட் முர்டோக், இவரது மகன் ஜேம்ஸ் முர்டோக் மற்றும் "நியூஸ் இன்டர்நேஷனல்' முன்னாள் தலைவர் ரெபெக்கா புரூக்ஸ் ஆஜராகி பதிலளித்தனர்.

அப்போது டுவீட்டர் இணையதள ஆர்வலர் ஒருவர் திடீரென முர்டோக்கை நோக்கி வேகமாக வந்து அவர் மீது ஷேவிங் கிரீமை எடுத்து மேல் ‌ஊற்றி தாக்கினார். இதனால் பார்லிமென்டில் பரபரப்பு ஏற்பட்டது.உடனே பார்லிமென்ட் பாதுகாவலர்கள் அவனை மடக்கி பிடித்து கைது செய்தனர் .விசாரணையில் அவன் பெயர் ஜானிமார்பில்ஸ் என்ற ஜோனாதன் (44) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=279091

இங்கிலாந்து பிரதமர் கேமரூனிடம் நாடாளுமன்ற குழு விசாரணை

இங்கிலாந்தை உலுக்கியுள்ள தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரத்தில் பிரதமர் டேவிட் கேமரூனிடம் நாடாளுமன்ற குழு விசாரணை நடத்தியது.

இங்கிலாந்தின் பழம்பெரும் பத்திரிகையான ‘நியூஸ் ஆப் தி வேர்ல்டு’, அந்நாட்டு அரசு அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்து பிரபலங்களின் தொலைபேசிகளை ஒட்டு கேட்டதாக புயல் வீசி வருகிறது. குற்றச்சாட்டு வெளியானதும் 168 ஆண்டு கால பத்திரிகையை அதன் நிறுவனரான ராபர்ட் முர்டோக் மூடி விட்டார். எனினும், ஒட்டு கேட்பு விவகாரம், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. இதையடுத்து, விரிவான விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

முர்டோச் நடத்தும் நியூஸ் கார்ப்பரேஷன் குழுமத்தை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு அரசு அதிகாரிகளுடன் இருந்த தொடர்பு பற்றி தீவிர விசாரணை நடக்கிறது. இதுதொடர்பாக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற குழு முன்பு முர்டோக் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், ஆப்ரிக்காவில் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் டேவிட் கேமரூன் அவசரமாக லண்டன் திரும்பினார். நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் ஆண்டி கவுசனை அரசு பதவியில் அமர்த்தியதால் தொலைபேசி ஒட்டுக் கேட்பு நடந்திருக்கலாம் என்று கேமரூன் மீதும் புகார் எழுந்துள்ளது. இதுபற்றி கேமரூனிடம் நாடாளுமன்ற குழு நேற்று விசாரணை நடத்தியது. அப்போது இந்த விஷயத்தில் தவறு நடக்கவில்லை என்று கேமரூன் மறுத்தார்.

http://www.dinakaran.com/News_detail_2011.asp?Nid=1717

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.