Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தொடர் மக்கள் அரங்கம் நிகழ்வுகள் !

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை, சனநாயகபூர்வமாக வெளிப்படுத்தி நிற்கும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் அரங்கம் நிகழ்வு பிரித்தானியாவில் முன்னெடுக்கப்படுகின்றன.

நா.த.அரசாங்கத்தின் சனநாயக செயற்பாடுகள், அதன் வேலைத் திட்டங்கள் குறித்து, மக்களுக்கு விபரிப்பதோடு, மக்களுடைய கேள்விகளுக்கு விளக்கமளிக்கின்ற வகையில், நாடுகள் தோறும் மக்கள் அரங்கம் கலந்தாய்வு நிகழ்வுகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நா.த.அரசாங்கத்துக்கு வலுச்சேர்க்கும் நோக்கில், லண்டனில் உருவாக்கம் பெற்றுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான உறுதுணைக் குழுவின் ஏற்பாட்டில், கடந்த ஞாயிற்றுக்கிழமை லண்டன் HARROW பகுதியில் மக்கள் அரங்கம் நிகழவொன்று இடம்பெற்றுள்ளது.

நா.த.அரசாங்கத்தின் அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சக செயலர்கள் பலரும் பங்கெடுத்திருந்தனர்.

நா.த.அரசாங்கத்தின் தோற்றம், விடுதலைப் போராட்டத்தில் அது வகிக்கின்ற பாத்திரம் ஆகிய விடயங்கள் நிகழ்வின் தொடக்கத்தில் மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

பின்னர், ஒவ்வொரு அமைசர்களும் தங்களது அமைச்சகங்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டதோடு, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் செயலர்களும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்வின் முக்கிய பகுதியாக உள்ள, மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விடயம் பிரதான இடத்தைப் பிடித்திருந்தது.

நிறைவாக, நா.த.அரசாங்கத்துக்கு வலுவூட்டும் நோக்கில் லண்டன்-உறுதுணைக் குழுவில் இணைந்து

பணியாற்ற பலரும் முன்வந்தமை குறிப்பிடதக்க ஒன்றாக அமைந்தது.

லண்டன்-உறுதுணைக் குழுவின் மக்கள் தொடர்பாளர் சிவா, நாதம் ஊடகசேவைக்கு கருத்துரைக்கையில், முள்ளிவாய்க்காலின் பின்னரான ஈழவிடுதலைக்கான அரசியலின் சனநாயக ஆயுதமாக விளங்குகின்ற, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை வலுப்படுத்துவதும் அதன் பின்னால் அணிதிரள்வதும் எங்கள் முன்னுள்ள கடமை. அந்தவைகயில் உருவாக்கம் பெற்றுள்ள உறுதுணைக்குழுவில் பலரும் இணைந்து வருகின்றமை நம்பிக்கை தருகின்றது என்றார்.

அத்தோடு லண்டனில் சகல பிராந்தியங்களிலும் மக்கள் அரங்கம் நிகழ்வு தொடர்சியாக முன்னெடுக்கப்படவுள்ளதாவும் தெரிவித்தார்.

எதிர்வரும் யூலை 24ம் திகதி SIVAYOGAM HALL,180 UPPER TOOTING ROAD,SW17 7EJ இடத்தில் மாலை 5 மணிக்கும், யூலை 31ம் திகதி SERVICEMENS CLUB,657-659 FOLESHILL ROAD,COVENTRY CV6 5JQ இடத்தில் மாலை மணிக்கும் மக்கள் அரசங்கம் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதில் அனைவரையும் பங்கெடுக்குமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான லண்டன்-உறுதுணைக்குழு வேண்டியுள்ளது.

நாதம் ஊடகசேவைeelamwebsite.com

  • கருத்துக்கள உறவுகள்

தொடரட்டும் தங்கள் பணி

வாழ்த்துக்கள்

இது போன்ற ஒரு ஒன்று கூடல் சில மாதங்களுக்கு முன் பிரான்சிலும் நடந்தது.

நானும் சென்றிருந்தேன்.

பல முயற்சிகளுக்காக ஆட்களைச்சேர்த்தார்கள். நல்லதொரு வழி.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி! வெற்றி பெற வாழ்த்துக்கள்!

மக்களுக்கு தெளிந்த அறிவை ஊட்டுவதன் மூலம், சந்தேகம் என்ற பேயை விரட்டி, இலக்கை நோக்கிய பயணத்தைத் தொடர்வோம்!

:o

பிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தொடர் மக்கள் அரங்கம் நிகழ்வுகள் !

அரங்கம் எனும் சொல்லின் வேறு பதங்கள்... மேடை நாடகமா??? ... உந்த நாடகம் ஹரோவில் நடந்ததா???? ... ஓஓஓ ... அங்குதான் MOT Center இருக்கிறது! :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.