Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்டவிரோத குடியேறிகள் : கனடா

Featured Replies

சட்டவிரோத குடியேறிகள், அரசாங்கத்தின் சுகாதார நலத் திட்டத்தின் ஊடாக நன்மை அடைய முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத குடியேறிகள், அரசாங்கத்தின் சுகாதார நலத் திட்டத்தின் ஊடாக நன்மை அடைய முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் யுனிவர்சல் ஹெல்த் கெயார் (Universal Health Care) திட்டத்தின் கீழ் தமக்கு மருத்து செலவுகளை வழங்க வேண்டுமென சட்டவிரோத குடியேறியொருவர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகளை விசாரணை செய்த நீதிமன்றம் குறித்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது. இரண்டு தடவைகள் மேன்முறையீடு செய்த போதிலும் குறித்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கிரான்டானைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு மேன்முறையீடு செய்துள்ளார்.

1999ம் ஆண்டு கனடாவிற்குள் பிரவேசித்த குறித்த பெண், புகலிடம் வழங்குமாறு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றார். நெல் டொசாயின்ட் என்ற பெண் நீண்ட காலமாக சிறுநீரக மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் நோய்க்காக பல்வேறு சிகிச்சைகளைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் சிகிச்சை அளிப்பதற்காக செலவான தொகையை மனிதாபிமான அடிப்படையில் அரசாங்கம் வழங்க வேண்டுமெனவும் கனேடிய நீதிமன்றில் வழக்குத் தொடுத்துள்ளார். எனினும் புகலிட அந்தஸ்து வழங்கப்படாத காரணத்தினால் மருத்துவ செலவுகளை வழங்க முடியாது என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புகலிடக் கோரிக்கைக்கான விண்ணப்பப் படிவங்களுக்குக் கூட குறித்த பெண் பணம் செலுத்தவில்லை எனவே அவருக்கு மருத்தவ வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியாது எனவும் நீதவான் டேவிட் ஸ்ட்ராஸ் தெரிவித்துள்ளார்.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=8520

Illegal immigrant has no right to government health care, court rules

http://www.theglobeandmail.com/news/national/illegal-immigrant-has-no-right-to-government-health-care-court-rules/article2092249/

  • தொடங்கியவர்

- கனடாவில் கிட்டத்தட்ட 40000 - 100000 சட்டவிரோத குடியேறிகள் உள்ளதாக சொல்லப்படுகின்றது

- டொராண்டோ பெரும்பான்மை உட்பட்ட பகுதியில் உள்ள 1000-1500 கிரிமினல்கள், போர்குற்றவாளிகளை அகற்றும் திட்டம் ஒன்று நிறைவேற்றப்படவுள்ளது.

- சட்டவிரோத குடியேறிகள் பலரும் அரசுக்கு தெரியவே வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அதனால் அரசும் பயன் பெறுகின்றது. இவர்கள் வரியும் செலுத்துவதில்லை.

- ஒண்டாரியோ மாநில மக்கள் செலுத்தும் வரியில் கிட்டத்தட்ட 40 வீதம் மருத்துவ செலவுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றது. அத்துடன் ஒவ்வொரு வருடமும் அதிகரித்து செல்லுகின்றது

- உறவுகளை சந்திக்க வரும் புலம்பெயர் உறவுகளும் ஒரு மருத்துவ காப்புறுதியுடன் வருவது நல்லது

சொல்கிறவனும் ஒரு சட்ட விரோத குடியேறிதான்.காரணம் கனடா செவ்விந்தியர்களுக்கு சொந்தமான நாடு.இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு விசித்திரம்.ஒன்ராறியோமாகாணத்தின் கிழக்கு எல்லைகிராமம் கோண்வால் இக்கிராமத்தை தாண்டினால் கியூபெக் மா நிலம்.இந்த கோண்வால் நகரில் அமெரிக்கா செல்வதற்கு வழியுண்டு.அதிலும் செவ்விந்தியர்களுக்கு தனிவழி அவர்களை யாரும் நிறுத்தமாட்டார்கள்.அமெரிக்கா எல்லையுடன் கியூபெக்கில் இருந்து ஒன்ராறியோவரை INDIAN RESERVE இங்கு செவ்விந்தியரின் உற்பத்திகள் உண்டு முக்கியமாக பணம்புரழும்சிகரட்,ஆயுதம்,ஆட்கடத்தல்,எலக்ரோனிக் பொருட்கள் அடங்கும்.இது சிறிய கிராமமாகவிருந்தாலும் பணம் அதிகமாக புரளும் கிராமம்.இதை கட்டுபடுத்த கோண்வால் நகர பொலிஸால் முடியாதவிடத்தில் RCMP ரோயல் மவுண்ட் பொலிஸார் பெருமெடுப்பில் பல பில்லியன்களை செலவழித்து நிலகீழ் பல அடுக்கு மாடிகளை கொண்ட கட்டிடத்தை அமைத்து தங்கள் வேலைகளை ஆரம்பித்தார்கள்.உடனேயே செயலில் இறங்கிய செவிந்தியர் அமைப்பு வெறும் பதினைந்து நாட்களில் தங்கள் பகுதிக்குள் அமைந்திருந்த கனடிய குடிவரவு எல்லை நிலையத்தை தங்கள் பகுதியிலிருந்து வெளியேற்றினார்கள்.விளைவு அவர்களின் அந்த வர்த்தகம் தொடர்ந்து நடைபெறுகிறது.ஆகவே கனடாவில் எல்லாரும் கள்ள தோணி அல்லது கள்ள விமானி தான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.