Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதிப் போர் தொடர்பில் இலங்கை ஆழமாக ஆராய வேண்டும் – இந்தியா தெரிவிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிப் போர் தொடர்பில் இலங்கை ஆழமாக ஆராய வேண்டும் – இந்தியா தெரிவிப்பு!

Published on July 16, 2011-9:48 am

வன்னியில் நடைபெற்ற இறுதிப் போரில் நடந்தவை என்ன என்பது குறித்துத் தெளிவில்லாத நிலை இருப்பதால் அது குறித்து இலங்கை அரசு ஆழமாக ஆராய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி உள்ளது.

அதேசமயம் போர் முடிவடைந்துள்ள சூழலைப் பயன்படுத்தி தமிழர் பிரச்சினைக்கு உண்மையான பொருத்தமான தீர்வு காணவும் புதுடில்லி வலியுறுத்தி உள்ளது.இறுதிப் போரின் போது போர்க் குற் றங்கள் இடம்பெற்றதாக நிரூபிக்கும் சனல்4 தொலைக்காட்சியின் சிறிலங்காவின் கொலைக்களம் ஆவணப் படம் கடந்த வார இறுதியில் இந்தியாவில் ஒளிபரப்பாகியது.

ஹெட் லைன்ஸ் ருடே என்ற தொலைக்காட்சி அதனை ஒளிபரப்பியது. அதன் பின்னரும் இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்காமல் புதுடில்லி நீண்ட மௌனம் காத்து வந்தது. அதன் பின்னர் இந்தியா முதற்தடவையாக நேற்றுக் கருத்துத் தெரிவித்துள்ளது.

இலங்கை இறுதிப் போரில் நடந்த நிகழ்வுகள் தொடர்பாக அனைத்துலக சமூ கத்தால் தெரிவிக்கப்படும் கவலைகள் குறித்து இலங்கை அரசு விரிவாக ஆய்வு செய்யவேண்டும் என்று இந்திய வெளி யுறவுத் துறை அமைச்சின் பேச்சாளர் விஷ்ணு பிரகாஷ் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் பேசும் சிறுபான்மையினரின் நலன் மற்றும் நல்வாழ்வில் இந்தியா அக்கறை கொண்டுள்ளது. அவர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் விரைவாக செயல்படுத்த வேண்டும் என இலங்கை அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்” என்று அந்த அறிக்கை கூறுகின்றது.

இலங்கையில் 20 சதவீதமாக உள்ள தமிழர்களுக்கு தமிழகத்திலும் இந்திய வின் மற்றைய பாகங்களிலும் உறவினர் களும் நண்பர்களும் இருக்கும் நிலை யில் அவர்களது நலன்களில் இந்தியா அக்கறை கொள்வது இயற்கையானது என்று விஷ்ணு பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

போர் முடிவடைந்ததால் கிடைத்திருக்கும் வரலாற்றுச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சிறுபான்மையினரின் அர சியல் பிரச்சினைக்கு பொருத்தமான, உண்மையான அரசியல் தீர்வு ஒன்று காணப்படவேண்டியது மிக மிக முக்கியம் என்று இந்தியா அந்த அறிக்கையில் வலியுறுத்தி உள்ளது.

போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், அந்த அறிக்கை தொடர்பாக இன்னும் பல கேள்விகள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. ஆனால் அது என்ன கேள்விகள் என்பதை அந்த அறிக்கை தெளிவுபடுத்தவில்லை.

ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை தொடர்பில், இலங்கை வெளியுறவு அமைச்சர் இந்தியா வந்திருந்த நேரத்திலும், கடந்த மாதம் கொழும்பல் நடந்த ஒரு மாநாட் டின் போதும் இலங்கை அரசின் கருத்துக்களை இந்தியா கேட்டறிந்திருப்பதாக விஷ்ணு பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

http://www.saritham.com/?p=26272

இறுதிப்போர் சம்பவங்கள் பற்றி ஆராய வேண்டும் _

வீரகேசரி நாளேடு 7/16/2011 12:31:24 PM Share

இலங்கை இறுதிப்போரில் நடந்த சம்பவங்கள் தொடர்பாகத் தெரிவிக்கப்பட்ட கவலைகள் குறித்து இலங்கை அரசு விரிவாக ஆராய வேண்டும் என்று இந்திய அரசு கருத்துத் தெரிவித்துள்ளது.

இலங்கைப் போரின் இறுதிக்கட்ட சம்பவங்கள் தொடர்பாக சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான காட்சிகள் தொடர்பாகவும், அந்தப் போர் தொடர்பாக ஐ.நா. தலைமைச் செயலரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாகவும் இந்தியா முதல் முறையாகக் கருத்துத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பி.பி.சி.யில் வெளியான செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மேற்படி விவகாரங்கள் தொடர்பில் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் விஷ்ணுபிரகாஷ் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

சனல் 4 வெளியிட்ட இறுதிப்போர் தொடர்பான காட்சிகள் , இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பில் தெளிவில்லாத நிலைமையே காணப்படுகின்றது. இவைத்தொடர்பில் இலங்கை இன்னும் ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும் என்பதுடன் அவைத்தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ள கவலைகள் குறித்து ஆராயப்பட வேண்டும் .

இந்தியாவைப் பொறுத்தவரை,வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் பேசும் சிறுபான்மையினரின் நலன் மற்றும் நல்வாழ்வில் அக்கறை கொண்டுள்ளது. அவர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் விரைவாக செயல்படுத்த வேண்டும் என இலங்கை அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் .இலங்கையில் உள்ள சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். போர் முடிவடைந்த நல்ல சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்துகிறது .

போரின் இறுதிக்கட்டத்தில் நடந்தாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சு அந்த அறிக்கை தொடர்பாக இன்னும் பல கேள்விகள் இருகின்றன என்றும் தெரிவித்திருந்தது. ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையைப் பொறுத்தவரை, இலங்கை வெளியுறவு அமைச்சர் இந்தியா வந்திருந்த நேரத்திலும், கடந்த மாதம் கொழும்பில் நடந்த ஒரு மாநாட்டின் போதும் இலங்கை அரசின் கருத்துக்களை இந்தியா கேட்டறிந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=32712

  • கருத்துக்கள உறவுகள்

எதற்காக இந்தியா, குற்றவாளியையே நீதிபதியாக வற்புறுத்துகின்றது?

கனிமொழி விவகாரத்தில், கருணாநிதியிடம் அபிப்பிராயம் கேட்பது போலத்தான் இது இருக்கின்றது!!! :wub:

அடுத்த கட்டத்திற்கு போர்குற்ற விசாரணைகளை நகர்த்த இந்த இந்தியாவின் கூற்று உதவும்.

செப்டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமை தொடரில் பிரேணை கொண்டுவரப்பட்டால் இந்தியா அதை எதிர்க்காமல் விடும் என்றால் அது பாரிய வெற்றி.

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிப் போர் தொடர்பில் இலங்கை ஆழமாக ஆராய வேண்டும் – இந்தியா தெரிவிப்பு!

பழைய மக்கிய உயிரனங்கள்தான் பெட்ரோல் ஆக மாறுவதாக அறிவியல் பெரியவா பேசி கொள்றாக... :rolleyes: அலோ ஐயம் டோட்டலி கன்பூசன் பெட்ரோல் எதாவது இலங்கையில் இருக்கா? இவன் ஏன் கட்டளை போட்டிட்டு இருக்கான் ரொம்ப நோண்டினா தண்ணிதான் வரும்... <_<

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.