Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் அமைதியான தீர்வு உருவாவதை அப்போதே எதிர்த்தது இந்தியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் அமைதியான தீர்வு உருவாவதை அப்போதே எதிர்த்தது இந்தியா

Saturday, July 16, 2011, 18:01சிறீலங்கா

இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கு அமைதியான ஒரு தீர்வை எட்டும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் 2007ம் ஆண்டு தமிழ்நாடு சிவில் சமூக அமைப்பை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியதாக புதிய தகவல் கிளம்பியுள்ளது.

சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த இரகசிய விடயம் குறித்த செய்தியை சர்வதேச செய்தித் தளமொன்று வெளியிட்டுள்ளது.

எனினும் அவ்வாறானதொரு அமைதியான தீர்வுக்கு வருவதை இந்திய அரசாங்கம் எதிர்த்ததாக தமிழ்நாடு சிவில் சமூக அமைப்பின் ஏற்பாட்டாளராக செயற்பட்ட முன்னாள் நிர்வாக அதிகாரியும் சமூக ஆர்வளருமான எம்.ஜீ.தேவசகாயம் தெரிவித்துள்ளார்.

தான் ஏற்பாட்டாளராக செயற்பட்ட குறித்த சிவில் சமூகக் குழுவில் ஓய்வுபெற்ற சிவில் சேவையாளர்கள், சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் மற்றும் சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் எனப்பலர் உள்ளடங்கியிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சிவில் சமூகக் குழுவின் முதல் அமர்வு ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் ஒருவர் தலைமையில் சென்னையில் 2007ம் ஆண்டு மே மாதம் 28ம் திகதி இடம்பெற்றதாகவும் இனப்பிரச்சனைக்கான ஒரே தீர்வு அரசியல் தீர்வு என அக்கூட்டத்தில் ஏகமனதாக ஒப்புக்கொள்ளப்பட்டதாகவும் எம்.ஜீ.தேவசகாயம் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த விடயம் குறித்து 2007ம் ஆண்டு ஜூலை 17ம் திகதி ஜனாதிபதி உள்ளிட்ட அரசின் முக்கிய அதிகாரிகளை தமது சிவில் சமூக அமைப்பு சந்தித்து கலந்துரையாடியதாகவும் அவர் காலங்கடந்து கூறியுள்ளார்.

http://www.tamilthai.com/?p=21904

இந்திய கொள்கை வகுப்பாளர்களின் இந்த கொள்கையை (தீர்வு வரக்கூடாது), சிங்கள தலைவர்கள் முகவும் துல்லியமாக அறிந்து வைத்துள்ளதுடன், அந்த சிந்தனையை தக்கவும் வைத்து வருகின்றனர்.

அதேவேளை இந்த கொள்கை ஊடாக ஏற்பட்ட இடைவெளியை பயன்படுத்தி சீன உறவை பெரிதாக வளர்த்துள்ளது.

நிலைமையை உணர்ந்து இந்தியா தனது கொள்கையை மாற்றுமா?, இல்லை தனது வரட்டு கௌரவத்தை தொடர்ந்தும் பேணுமா? என்பதே இந்திய இறைமையையும் இருப்பையும் கூட முடிவெடுக்கும் காரணிகளாக மாற்றக்கூடும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாதான் ஈழப்போராளிகளுக்கு முதலில் ஆயுதப்பயிற்சி வழங்கியது பின்னர் அவர்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி மோதவிட்டு வேடிக்கை பார்த்தார்கள் பின்பு எல்லாவற்றுக்கும் மேலாக ஈழத்தமிழரின் காவலராக இருந்த தமிழ் ஈழ விடுதலை புலிகள் அமைப்புக்குள் பிளவுகள் ஏற்படுத்தியது பின்பு அவர்களை அழிக்க சிறிலங்காவுக்கு முழு உதவிகளும் வழங்கியமை என்று இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

என்னைபொறுத்தவரையில் ஈழ தமிழர்களுக்கு ஒருபோதும் எந்த ஒரு நலனும் கிடைபதர்க்கு இந்தியா உதவாது என்பது உறுதி

Edited by தமிழ் அரசு

அரசியலில் எதுவுமே ஒரே கோட்டில் பயணிப்பதில்லை. எமது பொருளாதார பலம் ஊடாகவும் இந்திய. உலக பொருளாதார நலன்களுக்கு நாம் துணையானவர்கள் என்பது கூறப்படல் வேண்டும்.

எமது விடுதலைக்கான திறவுக்கோல் கூட இந்தியாவின் கைகளிலேயே அதிகளவு உள்ளது, முழுவதுமாக என்றில்லை. இந்தியாவுக்கு கூடிய அழுத்தத்தை சிங்களமும் அதன் சீனாவுடனான உறவுமே. அடுத்து தமிழக மக்கள், மனித உரிமைகள் சம்பந்த்தப்படோரால். மேற்குலகும் ஊடாகவும் அழுத்தம் தரப்படல் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் அகூதா பல சமயங்களில் நன்றாக பதில் அளிக்கிறார்.. ஆனால் இதெல்லாம் கொஞ்சம் ஓவர் இந்திய இறையாண்மை தமிழ்நாட்டை விட்டு கேரளம் மற்றும் ஆந்திரவை சிங்களவனோ அல்லது சீனாக்காரனோ அல்லது வேறு எவனோ டச்சு பண்ணும் போதுதான் லைட்டா அதுவும் கட்டெரும்பு கடிச்ச கதையாக சிஆர்பிஎப் எதாவது ஒரு பட்டாலியன்(ராணுவ குழுவினர்) அதுவும் சீனாக்காரனை விரட்டுறம் அல்லது சிங்களன விரட்டுறம் என்று தாங்கள் வந்துள்ள பகுதியில் உள்ள கடைகளில் திரோசஸ் டீ .. பன்னு... பிஸ்கெட்டு வாங்கி சாப்புட்டுவிட்டு போய்விடுவார்கள்.. இவனுங்க வந்து போறதுல நன்மை இருக்கோ என்னவோ ஆங்காங்கே பாலியல் வல்லுறவுகள் கொலை கொள்ளை அதெல்லாம் கட்டாயம் நடக்கும். போக தமிழர்களை வைத்துதான்(ஈழமோ தமிழ்நாடோ) இறைமை கேள்விக்கு உள்ளாகும் என்பதெல்லாம் டூ மச்... <_<

டிஸ்கி:

காரம் கொஞ்சம் தூக்கலாக சாப்பிடால் ரோசம் வருமென்பது உண்மையா? நான் நம்ம ஆந்திரா லட்சுமி மெஸ்ஸு ஓனருக்குத்தான் எனது கல்யாண கேட்டரிங் வேலை குடுத்தன் :)

  • கருத்துக்கள உறவுகள்

தேவ சாகாயம் ஐ.ஏ.எஸ் ஒய்வு பெற்ற ஒருவர் தனி ட்ரூப்பு வைத்து கொண்டு போராடுகிறார். கிந்திகாரன் கொடுப்பது சப் கலெக்கடர் இல்லையென்றால் ஏதாவது உப்பு சப்புல்லாதை ஆணையர் பதவி லாஜிக் ஈசி கூட்டி கொடுக்கும் பழக்கம் தமிழர்களுக்கு இல்லையாதாலால் டெல்லியில் கோலச்சமுடியவில்லை(வெளியுறவு கொள்கை இத்தியாதி இதியாதி) மற்ற ஓய்வு பெற்றவன்கள் என்ன செய்கிறார்கள்? ஐ.ஏஸ் தேர்வில் வெற்றி பெறுவது எப்படி? அல்லயன்சு பதிப்பகம் 2 பதிப்பு புதிய கேள்வி பதில்களுடன்!! நேர்முக பயிற்சியும் உண்டு அணுகுவீர் முக்கு தெரு நெம்பர்420 மூணாவது சந்து திருடம்பாக்கம் சென்னை -007 :)

டிஸ்கி:

தேவ சாகாயம் ஐ.ஏ.எஸ் ...இந்த மாறி ஆட்களை வெளிநாட்டுக்கு வரவழைத்து ஈழ தமிழர்கள் அமைப்புகள் ஏதாவது நாலு வார்த்தை என்ன சிக்கல் என்ன பண்ணனும் என்று பேசி அனுப்பங்கபா.. :rolleyes: ரிட்டையர் ஆகிட்டாலும் கொஞ்சம் நஞ்சம் அதிகாரமட்டத்தில் காண்ரெக்ட் இருக்குமோண்ணோ!!..அதைவிடுத்து சினிமாகாரன்கள் மைக்கை உடைக்கும் அளவுக்கு பேசும் பெருமக்களை கூப்பிட்டால் நயாபைசா கூட புண்ணியம் பெறாது ... <_< <_<

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

சனல் நாலின் ஆவணப்படம் காட்டப்பட்டதால் இந்தியா முதல்முதலாக திருவாய்மலர்ந்தருளி உள்ளது. மேலைத்தேய நாடுகளில் தாயக விடுதலை வேண்டி அரசியல் வேலைசெய்பவர்களுக்கு இது ஒரு நல்ல ஊக்கத்தை தந்துள்ளது.

மேலைத்தேய இராசதந்திரிகள் சிறிலங்கா மீது அழுத்தம் கோரும் பொழுது அவர்கள் கூறுவது : 'புதுடெல்லியில் ஒரு மாற்றத்தை கொண்டுவாருங்கள்' என்று. தாங்கள் புதுடெல்லியை எதிர்த்து செல்ல அவர்கள் தயாரில்லை என்பதே பொருள்.

எனவே புதுடெல்லியில் ஆயிரம் ஆத்திரம் எங்களுக்கு இருந்தாலும் இன்று மனத்தை கல்லாக்கி சிரித்து புதுடெல்லியில் ஒரு மாற்றத்தை கொண்டுவர வேண்டிய தேவை உள்ளது.

காட்டுமிராண்டிகளான அவர்கள் மனிதப் படுகொலைகளை ஊக்கிவிப்பதொடு, நல்ல நகர்வுகளையும் குழப்பும் மனப் பாங்கும் உடையவர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.