Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் வெல்லப்போவது யார், அரசா தமிழ்த்தேசிய கூட்டமைப்பா? – செ.சிறிதரன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் வெல்லப்போவது யார், அரசா தமிழ்த்தேசிய கூட்டமைப்பா? – செ.சிறிதரன்!

Published on July 19, 2011-4:17 am

இருபத்து மூன்றாம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான வாக்களிப்புக்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலைமையில் வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தீவிரமடைந்திருக்கின்றன.

தேர்தல் பிரசாரங்களின்போது, எதிரணியினரைத் திட்டித் தீர்ப்பதும், வாக்குறுதிகளை அள்ளி வீசுவதுமே வழமையான நடவடிக்கைகளாகும். ஆனால் வடக்கில் இம்முறை அன்பளிப்புகளை வழங்குவது, விருந்தோம்புவது, நிவாரணப் பொதிகளை வழங்குவது, சேலைகள், வேட்டிகளை வழங்குவது போன்ற புதிய நடவடிக்கைகளை குறிப்பாக அரச சார்பு கட்சியினர் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.

மதுபானத்தோடு விருந்தோம்புவதுடன், ரொக்கப்பணத்தை அள்ளி வீசி வாக்காளர்களைத் தம் பக்கம் திசை திருப்பும் நடவடிக்கைகள் வாக்களிப்பிற்கு முதல் நாள் நடைபெறுவதே வழக்கமான தேர்தல் பிரசார உத்தியாகும். ஆனால் இம்முறை இந்த உத்தி வாக்களிப்பிற்கு ஒரு வாரகாலம் இருக்கும்போதே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக வாக்காளர்கள் பலரும் தெரிவிக்கின்றனர். இந்த கைங்கரியத்தில் அரச சார்பான கட்சிகளே தீவிரமாக ஈடுபட்டிருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றார்கள்.

வன்னிப்பிரதேசத்தில் உள்ள வாக்காளர்களை கவர்வதற்காக அங்கு எல்லா ,இடங்களிலும் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதையும் அவர்கள் சுட்டிகாட்டியுள்ளார்கள். வடக்கைப் பொருத்தமட்டில் தேர்தல் களத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும், அந்த முன்னணியை ஆதரித்துப் போட்டியிடுகின்ற ஈபிடிபி கட்சியினருக்கும் இடையிலேயே கடும் போட்டி நிலவுகின்றது.

இனப்பிரச்சினைக்கு கௌரவமான ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் இடம்பெயர்ந்திருந்த மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு வரத்தக்க வகையில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற அடிப்படையில் செயற்பட்டு வருகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டைப் பேணி பாதுகாப்பது அவசியம் என வலியுறுத்தியிருக்கின்றது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில், தமிழ் பேசும் மக்களின் தாயகப் பிரதேசத்தில் தம்மைத்தாமே ஆளும் அடிப்படை உரிமையைப் பிரயோகித்து தன்னாட்சியை நிறுவவும், அதனை நிலைநாட்டிப் பாதுகாப்பதற்ககாகவும், தமிழ் மக்கள் கொண்டுள்ள திடசங்கற்பத்தை இந்த உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலிலும் நிரூபிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலின் மூலம் நீண்டகாலம் நடைமுறையற்றிருந்த ஜனநாயக விழுமியங்களை மீளப் பேணவும், உள்ளுர் அரசியல் தலைமைத்துவத்தை அத்திபாரத்திலிருந்து கட்டியெழுப்பவும், உள்ளுர் அபிவிருத்தி நடவடிக்கைகளை இந்த சபைகளின் ஊடாக முன்னெடுப்பதற்குத் தேவையான அரசியல் ஜனநாயக அதிகாரத்தையும், உரிமையையும் தமிழ் பேசும் மக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையையும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிட்டிருக்கின்றது. உணர்வும், அறிவும் சார்ந்த ஓர் அரசியல் நிலைப்பாட்டில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எதிர்பார்ப்புகளை வெளியிட்டு இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதற்குக் களமிறங்கியிருக்கின்றது.

அதேவேளை, நீண்டதோர் போர்ச்சூழலில் சிக்கி அனைத்தையும் இழந்து வெறும் கைகளுடன் சொந்தக் கிராமங்களுக்குத் திரும்பியுள்ள தமிழ் மக்களின் கையறு நிலைமையப் பயன்படுத்தி அன்பளிப்புகளையும் நிவாரண பொதிகளையும் வழங்கி அதன் மூலம் அவர்களைத் தனவசப்படுத்துவதற்கான அரசியல் நடவடிக்கைகளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இறங்கியிருக்கின்றது.

அத்துடன் போரினாலும் நீண்டகால நிர்வாகப் பராமரிப்பின்றியும் பாழடைந்துள்ள வன்னிப்பிரதேசத்தையும் யாழ் குடாநாட்டின் பல பகுதிகளையும் பாரிய அளவில் அபிவிருத்தி செய்து வருவதாகக் கூறி அரச தரப்பு ஆதரவாளர்கள், வேட்பளார்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அமைச்சர்களும், தமிழ் மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்கான எத்தனிப்புகளில் ஈடுபட்டிருக்கின்றார்கள்.

தேர்தல் பிரசாரங்கள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், அன்பளிப்புக்கள், நிவாரணம் என்ற போர்வையில் வழங்கப்படுகின்ற உதவிகள், தேர்தல் பிரசாரத்திற்கு வலுசேர்க்கத்தக்க அபிவிருத்தி தொடர்பான பொது வைபவங்கள் செயற்பாடுகள் என்பவற்றை எவரும் மேற்கொள்ளல் ஆகாது என்று தேர்தல் திணைக்களம் கூறுகின்றது.

ஆனால் இதற்கு எதிர்மாறாக யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும் அரச தரப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகத் தேர்தல் கண்காணிப்பாளர்களும், எதிர்க்கட்சிகளும் குற்றம் சுமத்தி வருகின்றன. ஆயினும் இவற்றைத் தடுத்து நிறுத்ததுவதற்கான நடவடிக்கைகள் எதுவும் அதிகார தரப்பினரால் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடித்து, அவர்களை உள்ளுரில் அழித்துள்ள அரசாங்கம்,இறுதி யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்ட போதிலும், வடக்கில் இருந்து இராணுவத்தினரை இன்னும் மீளப் பெறவில்லை. மாறாக இராணுவத்தினரை நிரந்தரமாக நிலைநிறுத்தி, அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மட்டுமன்றி, அவர்களின் நிரந்தர இருப்புக்கான பாரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

நவீன வசதிகளுடன் கூடிய அடிப்படைக் கட்டுமாணங்களைக் கொண்டதாக மாவட்டங்கள் தோறும், ஏன் பிரதேச செயலகப் பிரிவுகள் தோறும் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் அமைக்கப்பட்டு வருகின்றன.

பயங்கரவாதமும், பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டிருந்த விடுதலைப்புலிகளும் நாட்டிலிருந்து ஒழிக்கப்பட்டு விட்டதாகப் பெரிய அளவில் பிரசாரம் செய்தும் தம்பட்டமடித்தும் வருகின்ற அரசாங்கம், வடக்கில் தமிழ் மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் இயல்பு நிலைமை ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாகச் செயற்பட்டு வருவதைக் கண்கூடாகக் காணமுடிகின்றது.

இறுதி யுத்தம் முடிவடைந்ததன் வன்னியிலும், யாழ் குடாநாட்டிலும், போரினால் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள பிரதேசங்களின் எல்லா பகுதிகளிலும் இராணுவத்தினர் நிலைகொண்டிருக்கின்றார்கள். கிராமங்களுக்குச் செல்லுகின்ற பிரதான சந்திகள் அனைத்திலும் இராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டு, கிராமங்களுக்குள் செல்பவர்கள் நிறுத்தப்பட்டு விளக்கம் கேட்கப்படுகின்றார்கள்.

இராணுவத்திற்குத் தெரியாமல் அல்லது அவர்களின் அனுமதியின்றி எவரும் கிராங்களில் மக்களைச் சென்று சந்திக்க முடியாது. தேர்தல் பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டதையடுத்து, இராணுவத்தினரின் இந்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கிராமங்களுக்குள் தேர்தல் பிரசாரத்திற்காகச் செல்பவர்களை நோக்கி வெற்றிலையா, வீடா என வினவுகின்ற இராணுவத்தினர் வீட்டுச் சின்னத்திற்காகப் பிரசாரம் செய்வதற்காகச் செல்பவர்களை அச்சுறுத்துவதுடன், அவர்களுக்குப் பல இடங்களில் உள்ளே செல்வதற்கு அனுமதி வழங்காமல் திருப்பி அனுப்பியுள்ளார்கள். இது குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, ஜேவிபி போன்ற அரசியல் கட்சிகள் தமது ஆட்சேபணையைத் தெரிவித்திருக்கின்றன.

அத்துடன் கிளிநொச்சி பிரதேசத்தில் இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களை வற்புறுத்தி வருவதாகவும் அங்குள்ளவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள். இராணுவத்தினரின் இந்த அரசியல் நடவடிக்கையானது, அந்த மக்கள் மத்தியில் பெரும் அச்சநிலைமையையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியாக அங்கு நிலைகொண்டுள்ள ,ராணுவத்தினர் தேர்தல் முடிவடைந்த பின்னர், அரச கட்சிகளுக்கு வாக்களிக்கப்படாத பிரதேசங்களில் தங்களை எவ்வாறு நடத்துவார்கள் என்பதையிட்டு அவர்க்ள இப்போதே கவலையும் அச்சமும் கொண்டவர்களாகக் காணப்படுகின்றார்கள். இராணுவத்தினரின் இத்தகைய அரசியல் செயற்பாடு குறித்தும் எதிர்க்கட்சிகள் உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்கள்.

ஜனநாயகத்தின் உயிர் நாடியாகிய தேர்தல் மற்றும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையானது சுதந்திரமாகவும் நீதியாகவும் நேர்மையாகவும், நியாயமாகவும், அச்சமற்ற நிலையிலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜனநாயகக் கோட்பாடுகள் வலியுறுத்தியிருக்கின்றன. இந்த அடிப்படை அம்சம் கைக்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்காகவே பக்கசார்பற்ற நிலையிலான தேர்தல் கண்காணிப்பாளர்கள் தேர்தல் காலத்தில் களத்தில் கடமையில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இலங்கையைப் பொருத்த மட்டில், சிஎம்விஈ. பெவ்ரல் ஆகிய இரண்டு தேர்தலைக் கண்காணிக்கும் அமைப்புக்களுக்குத் தேர்தல் திணைக்களம் அனுமதி வழங்கியிருக்கின்றது. இந்த அமைப்புக்களைச் சேர்ந்த தொண்டர்கள், அதிகாரிகள் தேர்தல் வாக்குச்சாவடிகளுக்குள்ளேயும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.இதற்கு மேலதிகமாக கபே எனப்படும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவசியம் ஏற்பட்டால் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குத் தேர்தல் திணைக்களம் அனுமதியை வழங்கும் என தேர்தல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.

உள்ளுராட்சி சபைகளுக்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது முதல் நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருகின்ற தேர்தல் கண்காணிப்பாளர்கள் இந்தத் தேர்தலில் பிரசார காலத்தில் இதுவரையில் வழமையாக ஏற்படுகின்ற மோசமான வன்முறைச் சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும், அவை தொடர்பான முறைப்பாடுகள் தங்களால் பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவித்திருக்கின்றனர். இதனைக் கேட்பவர்களுக்கு ,து ஒரு நல்ல செய்தியாக, மனதுக்கு ஆறுதலளிக்கும் நிலைமையாக இருக்கலாம். ஆனால் மோசமான வன்முறைச் சம்பவங்கள் இல்லையென்ற சூட்டோடு கபே என்ற நீதியானதும், நியாயமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராகிய கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ள கருத்து பெரும் கவலையையும் துக்கத்தையும் ஏற்படுத்துவதாக இருக்கின்றது.

‘யாழ் குடாநாட்டிலும், வன்னிப்பிரதேசத்திலும் தேர்தல்காலத்தில் ,ருக்க வேண்டிய பேச்சுச் சுதந்திரம் அங்கு காணப்படவில்லை. தேர்தல் பிரசாரத்தின்போது பிரசாரத்தில் ஈடுபடுபவர்களுக்குப் இருக்க வேண்டிய பேச்சுச் சுதந்திரம் அங்கு உறுதிப்படுத்தப்பட்டிருக்கவில்லை. தேர்தல் பிரசாரத்திற்கே உரிய அம்சங்களையும் அங்கு வெளிப்படையாகக் காண முடியவில்லை. ஆளும் கட்சியாகிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரசாரக் கூட்டங்களே பெருமளவில் அங்கு இடம்பெற்று வருகின்றன. ஏனைய கட்சிகளின் கூட்டச் செயற்பாடுகள் குறிப்பிட்டுக் கூறத்தக்க அளவில் இடம்பெறவில்லை. இதற்கு அங்கு நிலவுகின்ற அச்சுறுத்தல் செயற்பாடுகளே முக்கிய காரணமாகும். இந்த அச்சுறுத்தல்கள் அரச தரப்பு அரசியல்வாதிகளினாலும், அவர்களது ஆதரவாளர்களினாலும், பல்வேறு வடிவங்களில் எதிரணியினர் மீது பிரயோகிக்கப்பட்டுள்ளன’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தேர்தல் வன்முறைகள் தொடர்பாக எட்டு முறைப்பாடுகளைச் தமது அமைப்பிடம் செய்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள கீர்த்தி தென்னக்கோன் யாழ் மாவட்டத்து மக்கள் மத்தியில் அச்சுறுத்தல்கள் அதிகமாக ,ருப்பதையும், சில கட்சிகள் நன்கு திட்டமிட்ட வகையில் இதனை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறியிருக்கின்றார்.

‘தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் அளவெட்டியில் நடைபெற்றபோது, அங்கு தாக்குதல் நடத்தப்பட்டு குழப்பப்பட்டதை எமது அமைப்பினர் கண்டுள்ளனர். அந்தக் கூட்டமைப்பின் மூன்றாவது நான்காவது தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நடைபெற ஏற்பாடாகியிருந்த இடங்களில் இராணுவத்தினரும் பொலிசாரும் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்ததனால் அந்தக் கூட்டங்கள் வெற்றியளிக்கவில்லை’ என்றும் கீர்த்தி தென்னக்கோன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் பிரசாரத்தின்போது, பொலிசார் பாரபட்சமாக நடந்து கொள்வதாகக் குற்றம் சுமத்தியுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் தீவுப்பகுதியில் தமது கட்சியினர் தேர்தல் பிரசாரத்திற்குச் செல்ல முடியாதவாறு பொலிசார் தடைகளை ஏற்படுத்திருப்பதாக யாழ் மாவட்டத்து தேர்தல் வன்முறைகள் மற்றும் தேர்தல் கால நிலைமைகள் தொடர்பாக தேர்தல் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் எம்.மொகமட் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டத்திலான முக்கிய கூட்டத்தில் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியிருந்தனர்.

அத்துடன், இந்தக் கூட்டத்திற்கு சமூகமளித்திருந்த யாழ்ப்பாணம் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நெவில் பத்மதேவவிடம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் பாதுகாப்பான முறையில் தீவகப்பகுதிக்குச் செல்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் கேட்டுக் கொண்டனர்.

அத்துடன், தீவகப்பகுதிக்கு அரசாங்கக் கட்சிகளின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாகமுன்னாள் கடற்படைத் தளபதியும், கிழக்கு மாகாணத்தின் ஆளுனருமாகிய மொஹான் விஜயவிக்கிரம அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டு எதிரணியினரின் தேர்தல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்தக் கூட்டத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

முழுவீச்சில் அரச தரப்பினர் இந்தத் தேர்தலில் களமிறக்கப்பட்டு பெரும் எண்ணிக்கையிலான அமைச்சர்களும் வடக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.இதில் முக்கியமாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் புதல்வருமாகிய நாமல் ராஜபக்ச ஆகியோர் வடக்கிலே பல நாட்களாகத் தங்கியிருந்து பல்வேறு நடவடிக்கைகளின் மூலமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கின்றார்கள்.

எந்த வகையிலும் இம்முறை வடபிரதேசத்து உள்ளுராட்சி சபைகளில் அதிகூடிய பிரதிநித்துவத்தைப்பெற்றுவிட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு முறைதலையற்ற வகையில் அரச தரப்பினர் செயற்பட்டு வருவதாக எதிரணியினர் குற்றம் சுமத்தியிருக்கின்றனர். அரசாங்கத்தின் இந்தப் பகீரதப் பிரயத்தனத்தைத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் எந்த வகையில் முறியடித்து வெற்றிவாகை சூடப் போகின்றார்கள் என்பது தெரியவில்லை.

http://www.saritham.com/?p=26684

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களப் பேரினவாதக் கட்சிகள்.. சிங்களப் படைகளையும் தமக்கு ஆதரவான தமிழ் ஆயுதக் கும்பல்களையும் வைத்துக் கொண்டு தமிழர்களின் வாக்குகளை அச்சுறுத்தி பறிக்கும் கைங்கரியத்தை இன்று நேற்றல்ல.. இந்தியப் படைகளின் வரவோடு செய்ய ஆரம்பித்தன. இதனை விடுதலைப்புலிகள் எதிர்கொண்ட பாணி தனித்துவமானது. ஆனால் இன்று சூழல் வேறுபட்டிருக்கும் நிலையில்.. தமிழ் தேசியக் கூட்டமைப்பு.. பலமான இளைஞர் அணிகளை கிராமம் தோறும் உருவாக்கி அவற்றின் மூலம் இவர்களின் சவால்களை எதிர்கொள்ளவும் மக்களோடு 24/7 தொடர்பில் இருக்கவும்.. மக்களின் பாதுகாப்பை தேவைகளை சதா உறுதிப்படுத்தவும் வேண்டும். அப்போதுதான் மக்கள் அச்சமின்றி.. மனப் பயமின்றி.. தங்கள் வாக்குகளை பிரயோகிக்க வழி பிறக்கும்.

சர்வதேச மட்டத்திற்கு இந்தப் பிரச்சனையைக் கொண்டு வந்து.. சிறீலங்காவில் இராணுவ மயப்படுத்தப்பட்ட சர்வாதிகாரமே.. ஜனநாயகமாகக் காட்டப்படும்... கொடூரத்தை வெளிக்காட்டி.. தமிழ் மக்களுக்கு இந்த ஜனநாயக விரோத சூழலில் இருந்து உலகம் விடுதலையும் உரிமையும் பெற்றுக் கொடுக்க உதவி செய்யக் கோர வேண்டும்.

செய்வார்களா.. தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்..???! அல்லது அவர்களும் தேர்தல் முடிந்ததோடு.. கொழும்புக்கு மூட்டை முடிச்சுக் கட்ட வெளிக்கிட்டிடுவார்களா..???! :rolleyes::unsure: :unsure: :o:(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களப் பேரினவாதக் கட்சிகள்.. சிங்களப் படைகளையும் தமக்கு ஆதரவான தமிழ் ஆயுதக் கும்பல்களையும் வைத்துக் கொண்டு தமிழர்களின் வாக்குகளை அச்சுறுத்தி பறிக்கும் கைங்கரியத்தை இன்று நேற்றல்ல.. இந்தியப் படைகளின் வரவோடு செய்ய ஆரம்பித்தன. இதனை விடுதலைப்புலிகள் எதிர்கொண்ட பாணி தனித்துவமானது. ஆனால் இன்று சூழல் வேறுபட்டிருக்கும் நிலையில்.. தமிழ் தேசியக் கூட்டமைப்பு.. பலமான இளைஞர் அணிகளை கிராமம் தோறும் உருவாக்கி அவற்றின் மூலம் இவர்களின் சவால்களை எதிர்கொள்ளவும் மக்களோடு 24/7 தொடர்பில் இருக்கவும்.. மக்களின் பாதுகாப்பை தேவைகளை சதா உறுதிப்படுத்தவும் வேண்டும். அப்போதுதான் மக்கள் அச்சமின்றி.. மனப் பயமின்றி.. தங்கள் வாக்குகளை பிரயோகிக்க வழி பிறக்கும்.

சர்வதேச மட்டத்திற்கு இந்தப் பிரச்சனையைக் கொண்டு வந்து.. சிறீலங்காவில் இராணுவ மயப்படுத்தப்பட்ட சர்வாதிகாரமே.. ஜனநாயகமாகக் காட்டப்படும்... கொடூரத்தை வெளிக்காட்டி.. தமிழ் மக்களுக்கு இந்த ஜனநாயக விரோத சூழலில் இருந்து உலகம் விடுதலையும் உரிமையும் பெற்றுக் கொடுக்க உதவி செய்யக் கோர வேண்டும்.

செய்வார்களா.. தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்..???! அல்லது அவர்களும் தேர்தல் முடிந்ததோடு.. கொழும்புக்கு மூட்டை முடிச்சுக் கட்ட வெளிக்கிட்டிடுவார்களா..???! :rolleyes::unsure: :unsure: :o:(

நெடுக்காலபோவான் அவர்களின் கூற்று மிகவும் சரியானது. தடைகளை கடத்தல் என்பது மக்களை ஒன்றிணைத்தல், நம்பிக்கையையும் பாதுகாப்பையும் ஏற்படுத்துதல் என்பவற்றிலேயே தங்கியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

ளைஞர் சக்தியே மாபெரும் சக்தி.ஒவ்வொரு ஊருக்கும் 10 செயற்பாட்டுத்திறன் மிக்க நாவன்மை மிக்க இளைஞர்களைத் தேர்ந் தெடுத்து வீடு வீடாகச் சென்று அரசியல் விளக்கம் அளிக்கப்பட வேண்டும்.முற்றிலும் இராணுவம் சூழ்ந்த நிலையில் நடைமுறையில் சிக்கலாக இருந்தாலும் மறைமுகமான முறையிலாவது விளக்கங்கள் கொடுக்கப்பட வேண்டும்.ததேகூட்டமைப்பினர் அங்கு பேசு;சுத் சுதந்திரம் இல்லை சுதந்திரமான தேர்தல் இடம்பெற வாய்ப்;பில்லை என்பதை குறிப்பாக அமெரிக்க பிரித்தானிய தூதரகங்கள் ஊடாக உலகுக்கு அறிவிக்க வேண்டும்.வழக்கம் பேhல இந்தியாவிடம் முறையிட்டால் ஒரு பலனும் கிடைக்காது.

Edited by புலவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.