Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காப் பொருட்களை புறக்கணிக்குக!

Featured Replies

சிறிலங்காப் பொருட்களை புறக்கணிக்குக!

- நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிப் பிரதமர் வேண்டுகோள்!

சிறிலங்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை புறக்கணிக்குமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிப் பிரதமர் கலாநிதி ராம் சிவலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் எதிர்வரும் ஐப்பசி மாதம் முதலாம் திகதி முதல் சிறிலங்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை புறக்கணிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:'நாம் எடுக்கும் அரசியல்ப் போர் இறுதிப் போராக அமைய வேண்டுமானால், எமக்குக் கிடைத்த இறுதிச் சந்தர்ப்பத்தை நழுவவிடாது வெற்றியடைய வேண்டுமானால் எமது அரசியல் போர் பலமுனைப் போராட்டமாக மாறவேண்டும்.

மக்களின் ஒத்துழைப்பும், பங்களிப்பும் பல மடங்கால் அதிகரிக்கப்பட வேண்டும். இது ஓர் மக்கள் போராட்டமாக உலகெலாம் உருவெடுக்க வேண்டும்.திடகாத்திரமான, சாமர்த்தியமான எமது செயல்கள் யாவும் சிங்கள தேசத்தை திணற வைக்கவேண்டும். ஜனநாயக நாட்டின் சர்வாதிகாரி என்ன செய்வது,ஏது செய்வதென்று தெரியாது தடுமாறவேண்டும். எமது ஒவ்வொரு முன்னெடுப்பும் சிங்கள அரசுக்குப் பின்னடைவைத் தரவேண்டும். நீதி வேண்டும் உலகம் எமக்கு நீதி பெற்றுத் தரவேண்டும். அழிக்கப்படும் எம்மினம் அயர்ந்து தூங்க வேண்டும்.இவையெல்லம் நிறைவுபெற, எமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் நாம் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.

பதுங்கி வாழ்ந்த சிங்களத் தலைமை மீண்டும் பயந்து வாழ வேண்டும். பயத்தைக் கொடுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசை அழிக்க முயலும் சிங்கள அரசும், அதே கொள்கையுடன் இயங்கும் தமிழ் அமைப்புக்களும் தக்கபாடம் படிக்கவேண்டும். நாடுகடந்த தமிழீழ அரசின் செயற்பாட்டில் ஒன்றுதான் சிறிலங்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களை புறக்கணிப்பது. இந்தப் புறக்கணிப்பு காலதாமதமின்றி நிறைவேற்றப்பட வேண்டும். இப்பொருட்களை வாங்கி எம் உடன்பிற்ப்புகளின் அழிவுக்கு நாமும் பாத்திரமாகலாமா? குறிப்பாக, சனல் 4 காட்சிகளைக் கண்டபின்பும் நாம் சிறிலங்கா பொருட்களை வாங்குவது தப்பல்லவா?இறக்குமதி செய்யும் பொருட்களால் பெறப்படும் அந்நியச் செலாவணியில் கிடைக்கும் பணத்தால் வாங்கிய ஆயுதங்களைக் கொண்டுதானே நிராயுதபாணியான எம் இனத்தை, உயிரிலும் மேலான எம் உறவுகளை காட்டு விலங்குகள் போல் வேட்டையாடி விளையாடுகிறார்கள் அந்தக் கோழையர்கள். நாம் அப்பொருட்களை வாங்குவதை நிறுத்துவதோடு நிற்காமல், மாற்றாருக்கும் சிங்கள அரசால் நடாத்தப்படும் அநீதிகளை எடுத்துக்காட்டி. எம் வேதனையை விளக்கி, எம் துன்பங்களை எடுத்துரைத்து அவர்களையும் சிறிலங்கா பொருட்களை வாங்காது தடுக்க வேண்டும்.

சிறிலங்காவில் இருந்து இறக்குமதி செய்யும் வியாபாரிகள் அங்கிருந்து இறக்குமதி செய்வதை உடனடியாக நிறுத்தி, மாற்று நாடுகளிலிருந்து அதே பொருட்களைக் குறைந்த விலையில் கொள்வனவு செய்து, அதை வியாபார நிலையங்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். இறக்குமதி செய்பவர்களின் திறமையிலும், ஒத்துழைப்பிலும்தான் இந்த மாற்றத்தை சுமூகமாகவும், துரிதமாக்வும், வெற்றிகரமாகவும் நிறைவுசெய்ய முடியும்.இதுவரை, சிறிலங்காவில் இருந்து இறக்குமதி செய்த பொருட்களை விற்கும் வியாபார நிலையங்கள் அப்பொருட்களை தமது கடைகளில் விற்பதை நிறுத்தவேண்டும். மாற்று நாடுகளிலிருந்து இறக்குமதி செய்த பொருட்களை மட்டுமே விற்கவேண்டும். சிங்கள நாட்டுப் பொருட்களை நாம் விற்பனை செய்வதாதால் நாமே எம் இனத்தை அழிக்க உதவுவதாக அமைந்துவிடுமல்லவா?

விற்பனையாளர்களே! இருக்கும் பொருட்களை விற்பதற்கான காலம் இவ்வாண்டு ஐப்பசி மாதம் முதலாம் திகதி. தொடக்கம் சிறிலங்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை கொள்வனவு செய்வதைதை நிறுத்திவிடுங்கள். மாற்று நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களையே வாங்கி விற்குமாறு, அழிக்கப்படும் உறவுகள் சார்பில், உங்களை அன்புடன் வேண்டுகிறோம்.

எம் இனிய உறவுகளே! சிறீலங்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களை வாங்குவதை உடனடியாக நிறுத்துங்கள். ஐப்பசி மாதம் முதலாம் திகதிக்குப் பிறகு சிறிலங்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை வாங்கமாட்டோம் என்று இன்றே சபதமெடுத்துச் செயற்படுங்கள். அதற்குப் பிறகும் தொடர்ந்து விற்பனை செய்யும் வியாபார நிலையங்களைப் புறக்கணியுங்கள். மழையான உங்கள் உறவுகளை நிலமான நீங்கள்தானே ஏந்தவேண்டும்.சிறிலங்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களை முற்றாகப் புறக்கணிக்கும் நாளான ஐப்பசி மாதம் முதலாம் திகதி உலகளாவிய ரீதியில் ஓர் சரித்திரநிகழ்வாக அமைய வேண்டுமென, வாய்பேசா உறவுகள் சார்பில், உங்களை உரிமையுடன் வேண்டுகிறோம்.

கனடா நாட்டில் தொண்டர்களாகச் சேர விரும்புவோர் தொடர்பு கொள்வதற்கான விபரங்களையும், அன்பளிப்புச் செய்ய விரும்புவோருக்கான வங்கி விபரத்தையும் கீழே தருகிறோம்.

மற்ற நாடுகளில் வாழ்பவர்கள், அந்த நாட்டு நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகளுடன் தொடர்புகொண்டு தமது பங்களிப்பைத் தவறாது செலுத்துமாறு அன்புடன் வேண்டுகிறோம்' என இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புக்கான தொலைபேசி இல: 416 291 7474 அல்லது 416 829 1362 அல்லது 514 400 6970

தொடர்புக்கான மின்னஞ்சல்:

mailto:r.sivalingam@tgte.org; sivalingam@tgte.org; tgtequebec@live.ca

கனடா நாட்டில் அன்பளிப்புச் செய்ய விருபுவோருக்கான வங்கி விபரம்:

TD CANADA TRUST (Kennedy & Eglington), 2428 Eglington Ave. East, Scarborough, ON M1K 2P7 BRANCH NO: 01488 ACCOUNT NO: 5222923

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.