Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்-ஹில்லாரி கிளிண்டன் வலியுறுத்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்-ஹில்லாரி கிளிண்டன் வலியுறுத்தல்

20-hillary-clinton-300.jpg

சென்னை: இலங்கையில் வாழும் தமிழர்களுக்கும், மற்ற இனத்தவரைப் போல சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று சென்னை வந்துள்ள அமெரி்க்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் நேற்று முன்தினம் டெல்லி வந்திறங்கினார். நேற்று அவர் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணாவை சந்தித்து பேசினார்.

பயங்கரவாதத் தாக்குதல்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கும் அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும் என்று அவர் உறுதியளித்தார்.

இன்று அவர் தனி விமானம் மூலம் சென்னை வந்திறங்கினார். அவர் சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தில் மாணவர்களை சந்தி்த்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, நாங்கள் இந்திய மாணவர்களை மனதார வரவேற்கிறோம்.

இந்தியா-அமெரி்ககா இடையேயான உறவு பலமாக உள்ளது. இந்தியாவும், அமெரிக்காவும் சேர்ந்து தீவிரவாதத்தை அழிக்கப் பாடுபடுவோம்.

இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை:

தமிழகத்தில் தமிழர்கள் அரசியலில் ஆர்வமுடன் பங்கேற்பது பாராட்டுக்குரியது. இலங்கையில் வாழும் தமிழர்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.

கடந்த 18 ஆண்டுகளில் இந்தியா அடைந்த வளர்ச்சி மிகப் பெரியது. வாய்ப்பு தேடி அமெரிக்கர்கள் இந்தியாவைத் தேடி வரும் சூழல் வந்துள்ளது.

பருவ நிலை மாற்றம், சுற்றுச்சூழல் ஆகிய விவகாரங்களில் நாங்கள் இந்தியாவுடன் சேர்ந்து செயல்படுவோம். உலக அரங்கில் இந்தியா ஒரு சக்தி வாய்ந்த நாடாக உருவாகி வருகிறது.

இந்தியா தேர்தல் நடத்துவதில் மிகவும் புகழ் பெற்றது. இந்திய தேர்தல் ஆணையத்தி்ன் பங்கு மிகப் பெரியது. இதேபோன்று எகிப்து, ஈராக் நாடுகளில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்திட இந்தியா உதவ வேண்டும்.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரி்கக அதிபர் ஒபாமா ஆதரவாக உள்ளார். உலக அளவில் அணு ஆயுத பரவலைத் தடுக்கும் முக்கிய பங்கு இந்தியாவுக்கு உண்டு என்றார்.

http://thatstamil.oneindia.in/news/2011/07/20/hillary-clinton-welcomes-indian-students-to-us-aid0128.html

தமிழகத்தில் தமிழர்கள் அரசியலில் ஆர்வமுடன் பங்கேற்பது பாராட்டுக்குரியது. இலங்கையில் வாழும் தமிழர்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.

கடந்த 18 ஆண்டுகளில் இந்தியா அடைந்த வளர்ச்சி மிகப் பெரியது. வாய்ப்பு தேடி அமெரிக்கர்கள் இந்தியாவைத் தேடி வரும் சூழல் வந்துள்ளது.

டெல்லியின் அழுத்தத்தை மீறி ஹிலரி இவ்வாறு கூறியிருப்பது தமிழர் தரப்புக்கு நம்பிக்கை தருவதாக உள்ளது. டெல்லியும் சிங்களத்திற்கு எதிராக ஒரு அரசியல் தீர்வு வேண்டி ஆக்கபூர்வமாக நடவடிக்கை எடுக்கும் காலம் வந்துள்ளது.

எமது பொருளாதார பலம் எமது இனத்தின் பெறுமதியை கூட்டும்.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரி்கக அதிபர் ஒபாமா ஆதரவாக உள்ளார். உலக அளவில் அணு ஆயுத பரவலைத் தடுக்கும் முக்கிய பங்கு இந்தியாவுக்கு உண்டு என்றார்.

தனது அண்டை நாடான இலங்கையில் முதலில் பிரச்னையை தீர்த்து தனது இயலாமை என்ற களங்கத்தை அகற்றவேண்டும்.

மாடு - நாராயணனும், குதிரை - நிருபம்மாவும் போய்விட்டன. ஆனால் இந்த களுதை சிவஷங்கருக்கு மாற்றீடு இல்லையா?.

எங்கே கெடுத்து விடுவானோ என்று கவலைப்பட்டேன்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்கா வர ஜெ.,க்கு ஹிலாரி அழைப்பு; இலங்கை பிரச்னையில் நடவடிக்கை: ஜெ., கோரிக்கை

சென்னை: அமெரிக்கா வர வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அழைப்பு விடுத்துள்ளார். இலங்கை பிரச்னையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ‌ஹிலாரியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் நேற்று டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா, காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா ஆகியோரை சந்தித்து பேசினார். இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஹிலாரி கிளிண்டன் சென்னை வந்தார். தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார்.

சந்திப்பின் போது ஹிலாரி கிளிண்டன், அப்போது அவர் ஜெ., அமெரிக்கா வருமாறு அழைப்பு விடுத்தார். ஜெயலலிதா அமெரிக்கா வருவதன் மூலம் தமிழகத்தின் சாதனைகளை அமெரிக்கர்கள் அறிந்து கொள்ள முடியும் என்று கூறினார்.

ஹிலாரியிடம் ஜெயலலிதா, இலங்கையில் தமிழர்கள் இன்னும் முகாம்களில் வசித்து வருவதாகவும், இன்னும்அவர்கள் சொந்தமான இடங்களுக்கு திரும்பவில்லை எனவும், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

முன்னதாக ஹிலாரி கிளிண்டன், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மாணவர்கள் மத்தியில் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், இந்தியாவின் மிகப்பெரிய நூலகத்தில் பேசுவதில் பெருமையடைகிறேன். தொழில் மற்றும் கல்வித்துறைகளில் வளர்ந்த சென்னை நகருக்கு வந்ததில் பெருமிதம். 21ம் நூற்றாண்டை வடிவமைப்பதில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு உண்டு. ஆசியாவின் எதிர்காலத்தை இந்தியா நிர்ணயிக்கும். இந்தியாவின் வளர்ச்சியை பெருமையுடன் பார்க்கின்றோம். இந்தியா அமெரிக்கா இடையிலான உறவு உலக அரங்கில் முக்கியமானதாகும். ஐ.நா.,வில் நிரந்தர உறுப்பினர் பதவி பெற இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்று அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதே இருநாடுகளுக்கும் இலக்காகும். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் மற்றும் பாதுகாப்புத்துறையில் இந்தியாவுடன் உறவை மேம்படுத்த வேண்டும் பொருளாதார உறவை விரிவுபடுத்த வேண்டும். சந்தைகளை திறந்து விடுவதன் மூலம் இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவின் பொருளாதாரம் மேம்படும். நாம் வெவ்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ளோம். நம்மிடையே கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு இன்றியமையாதது. இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே பலமான உறவு முக்கியமானதாகும்.

இந்திய தேர்தல் ஆணையம் உலக அளவில் சிறந்ததாக உள்ளது. ஈராக் மற்றும் எகிப்து நாடுகளில் தேர்தல் நடத்த உதவ வேண்டும் சர்வதேச அளவிலான பிரச்னைகளை தீர்ப்பதில் அமெரிக்கா மற்றும் அமெரிக்காவின் முன்னெடுத்து செல்ல வேண்டும். மத்திய கிழக்கு மற்றும்வடக்கு ஆப்ரிக்காவில் ஜனநாயக நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் மியான்மரில் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய இந்தியா அந்நாட்டு அரசுடன் ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும்.

இலங்கையில் அரசியல் பொருளாதர நடவடிக்கைகளில் தமிழ் மக்களின் பங்கேற்பு குறிப்பிடத்தக்கது. இலங்கையில் தமிழக மக்களுக்கு அரசியல் அதிகாரம் அளிக்க வேண்டும். டர்பனில் நடக்கவுள்ள உலக வெப்பமய மாநாடு வெற்றி பெற இந்தியா உதவ வேண்டும். ஈரானில் அணு ஆயுதங்களை தடுக்க வேண்டும். அணு ஆயுதங்கள் பரவலை தடுப்பதில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு உண்டு என கூறினார்.

முதல்வர் ஜெ.,வுடன் சந்திப்பு: பி்ன்னர் மாலையில் தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். அப்போது தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜெயலலிதாவுக்கு ஹிலாரி வாழ்த்து தெரிவித்தார். சென்னை வந்த ஹிலாரிக்கு முதல்வர் வரவேற்பு தெரிவித்தார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=279125

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.