Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

"உங்களில் பாவமில்லாதவன் எங்கள்மேல் கண்டனம் விடக் கடவன்"

Featured Replies

சிறிலங்காவின் ஆங்கிலப் பத்திரிகைகளில் ஒன்றான டெய்லி மிரர் பத்திரிகையிலே ஒரு செய்தி - மிகவும் சர்வ சாதாரணமாக - போகிறபோக்கிலே சொல்லிவிட்டுப்போவது போல எழுதப்பட்டிருந்தமையானது எமது கவனத்தை ஈர்த்தது.

அதாவது மன்னார் பேசாலைப் பகுதியில் 13 கடற்படையினர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து மன்னார் காவற்துறைத் தலைமையகத்தின் கண்காணிப்பாளர் சுட்த்டாத் அஸ்மட்தல்லா (Sudath Asmadala) சொன்ன கருத்தாக அந்தச் செய்தி வரையப்பட்டிருந்தது.

"இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் உலகளவில் தடைசெய்யப்பட்ட "தேமோபாரிக்" ஆயுதத்தினைப் பாவித்திருக்கிறார்கள் என நாம் உறுதியாக நம்புகிறோம். இந்த ஆயுதங்கள் உலகளாவிய ரீதியில் தடைசெய்யப்பட்டிருப்பதால் நாங்கள் அரசாங்க பகுப்பாய்வாளர்களிடம் இந்த விடயம் தொடர்பாக விசேட புலன்விசாரணையை நடத்துமாறு கேட்டிருக்கிறோம்" "(we strongly believe that the attackers had used the world banned 'thermoberic' weapon. we have asked the Government Analyst to carry out a special investigation into the matter as this type of weapons are banned all over the world" - நன்றி டெய்லி மிரர் 26-12-2005)

திருமகள் எழுதிய இக்கட்டுரையை முழுமையாகப் பார்வையிட

http://www.yarl.com/m_eelam/article_1055.shtml

  • கருத்துக்கள உறவுகள்

ஓஓஒ... "தேமோபாரிக்" இந்தளவு விசயம் இருக்கா... அப்ப அல்ஹைடா போன்ற தீவிரவாதிகள் அமெரிக்கா போன்ற வலசரசுகளுக்கு பெரும் சவாலா இருப்பதில் என்ன தவறு? இப்படி ஒரு நாட்டின் மேல் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்கா ஏகாபத்தியம் மற்றைய நாடுகளை கண்டிப்பது வேடிக்கையாக இருக்கின்றது,,, :evil: :evil: :evil:

நன்றி திருமகள் & மோகன்... :idea:

இன்னும் கொஞ்ச நாளைல அமெரிக்க எவ் பி ஐ அதிகாரிகள் பகிரங்கமாகவே சிறீலங்கா போய் இலங்கை ஆயுதக்குழுக்களுக்கும் தாங்கள் தேடி அழிக்கும் ( எங்க அழிக்கினம்- இவைதான் தினமும் அழியினம்..அப்பாவிப் பொதுமக்களையும் அழிக்கினம்) சர்வதேச பயங்கரவாதிகளுக்கும் இடையில் தொடர்பிருக்கோ என்று பகிரங்கமாக ஆராயப்போகினமாம். அப்படி தொடர்பிருக்கு என்று ஒரு அறிக்கை ஏற்கனவே செற் பண்ணிட்டினமோ தெரியல்ல. அதுக்கு வலுச்சேர்க்க சதாம் குசைன் அணு ஆயுதம் வைச்சிருக்கிறார்..அது ஆபத்து என்று கூறி ஈராக்கை ஆக்கிரமிச்சது போல.. புலிகள் பேரழிவு ஆயுதங்கள் வைச்சிருக்கினம் என்று அமெரிக்கா ஏவுகணைகளை சி ஐ ஏயை விட்டு ஏவப் போகுதோ இல்ல தங்கட வழமையான பன்னாட்டு படையை அனுப்பி பேரழிவு ஆயுதங்களைக் கைப்பற்றப் போகினமோ தெரியல்ல...!

இந்த தேமோபரிக் (thermobaric) குண்டுகள் உலகில் தடைசெய்யப்பட்டிருந்தால் ஆப்கனில் ஈராக்கில் அமெரிக்கப் படைகளும் செச்சினியாவில் ரஷ்சியப்படைகளும் எப்படிப் பாவிக்க முடியும். :?: :idea:

_1854371_thermo_bomb3_inf300.gif

தேமோபரிக் வெடிக்கும் முறை..! படம் பிபிசி..!

இந்த தேமோபரிக் குண்டுகள் வெடிக்கும் போது வளியில் உள்ள ஒக்ஷிசனை உறிஞ்சி எரிந்து கொண்டு அதிக வெப்பத்தையும் வளியில் மிக உயர் அழுத்ததையும் (pressure) உண்டாக்குகின்றன. இதனால் அதன் வெடிப்பு எல்லைக்குள் உள்ளவர்களின் நுரையீரல்களைச் செயலிழக்கச் செய்யும் திறனும் இவற்றிற்கு உண்டு. அமெரிக்கப் படைகள் புகமுடியாத இடங்களில் ( மலைப்பகுதிகளில்..பங்கர்களில்

இத்தகைய குண்டுகளைப் பாவித்து தாக்குதல் நடந்துகின்றன..!

தமிழர்களின் போராட்ட விடயத்தில் அமெரிக்கா எப்பவுமே நேரடியாக சிறீலங்கா அரச பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்து வருவது குறிப்பிடத்தக்கது..! :idea: :idea:

அருமையான கட்டுரை, நன்றி திருமகள்.

சிறீலங்கா செய்ய முனையும் பிரச்சாரம் அடிப்படை அற்ற தாகவே இருக்கிறது.

கட்டடங்கள் பதுங்கு குழி மீது தாக்குதல் நடத்தப்படவில்லை, சாதாரண வீதியில் (சுரங்க பாதையும் இல்லை) வைத்து ஒரு மென் (இலகுரக) வாகனத்தின் மீது thermobaric ஆயுதத்தால் தாக்க வேண்டிய தேவை, நியாயம் என்ன?

கொக்குச் சுட 50 கலிபர் பாவித்த கதையா எல்லோ இருக்கு.

இது தான் இலங்கை இராணுவத்தின் அறிவு அவர்களையும் குறைகூறமுடியுமா அரசியல் செல்வாக்கில் வந்தவர்களுக்கு இராணுவ அறிவு எங்கிருக்கப்பேகிறது (இலங்கை இராணுவத்தின் படிப்பறிவு 5ம் வகுப்பு)

அப்படி thermobaric ஆயுதம் பயன்படுத்தப்பட்டால் ஏன் டேறா கடலில் முழ்கிது அதை தரையில் பயன்படுத்தி இன்னும் பாரிய அழிவை ஏற்படுத்தலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மோகன் அண்ணா,

திருமகளின் அருமையான கட்டுரையை

இணைத்தமைக்கு நன்றிகள்....

திருமகள்,

நல்லதொரு விடயத்தை எடுத்து,

ஆதாரபூர்வமாக அலசி எழுதியிருக்கிறீர்கள்;

அருமை;நிறையத் தகவல்கள் /பார்வைகள்

அறியத் தந்தீர்கள்...

மிக்க நன்றிகள்...

(தாயகத்துக்கு வருவதான உங்கள் மடலை

கருத்துக் களத்தில் நேற்றுத்தான் பார்த்தேன்....)

இவ்வாறான விடயங்களை

நிறைய நிறைவாகத் தாருங்கள்...

திருமகளின் அருமையான கட்டுரையை

இணைத்தமைக்கு நன்றிகள்....

சரியான நேரத்தில் வெளியாகியுள்ள கட்டுரை

நன்றி திருமகள் & மோகன்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதோர் கட்டுரை. நன்றி திருமகள் மற்றும் மோகன் அவாகட்கு.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களப் பத்திரிகைளில் தான் மற்றவர்களை முட்டாளாக்க நினைக்கும் இப்படிப்பட்ட ஆக்கங்கள் வருவதுண்டு. ஆனால் ஆங்கிலப்பத்திரிகைகளும் சளைத்தவர்கள் அல்ல என்பதை அடையாளப்படுத்துகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.