Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலம்பெயர் தமிழ் மக்கள் தமது செயற்பாடுகளில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் – லண்டனில் சுமந்திரன்! (Video in))

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழ் மக்கள் தமது செயற்பாடுகளில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் – லண்டனில் சுமந்திரன்! (Video in))

Monday, July 25, 2011, 6:48உலகம், காணொளி, தமிழீழம்

லண்டனில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானியக் கிளை ஒழுங்கு செய்திருந்த கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் தேசியப் பட்டியல் மூலம் நுழைந்த சுமந்திரன் உரையாற்றினார்.

புலம்பெயர் தமிழ் மக்களின் செயற்பாடுகளை தான் பிரித்தானியாவிலும் வேறு இடங்களிலும் சந்தித்த இராஜதந்திரிகள் விமர்சித்ததாகவும், புலம்பெயர் தமிழ் மக்களின் செயற்பாடுகளை தாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என இராஜதந்திரிகள் தெரிவித்ததாக சுமந்திரன் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், இலங்கையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் போது, அது பெரும்பான்மை சிங்கள சிங்கள மக்களால் ஏற்கக் கூடிய தீர்வாக அமைய வேண்டும் தனது உரையில் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசு பேச்சுவார்த்தையில் இறுதியாக நடைபெற்ற 3 பேச்சுவார்த்தையில் குறிப்பிடப்பட்ட முன்னேற்றங்களை இருப்பதாகவும் தெரிவித்தார்.

புலம்பெயர் தமிழ் மக்களின் செயற்பாடுகளில் மாற்றம் வேண்டும் என அவர் கூறியபோது அக்கூட்டத்தில் கலந்துகொண்டோர் கைதட்டினர். இக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் சில கேள்விகளுக்கு சுமந்திரன் அவர்கள் பதிலளிக்கவில்லை. அதற்கான காரணத்தை சுமந்திரனிடம் கேட்டபோது கூட்டத்திற்கு தலைமை தாங்கிய இரத்தினசிங்கம் என்பவர் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டாம் எனக் கூறியதாக சுமந்திரன் தெரிவித்தார்.

புலம்பெயர் தமிழ் மக்கள் தமது செயற்பாடுகளில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என சுமந்திரன் தெரிவித்த கருத்தும் தமிழர் தேசியப்பிரச்சினைக்கு பெரும்பான்மை மக்கள் ஏற்றுக் கொள்ளும் தீர்வே பொருத்தமானது எனக் கூறிய கருத்துக்கள் தமிழ் தேசியத்திற்கு எதிராக காணப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். புலம்பெயர் நாடுகளில் தமிழ் மக்களின் செயற்பாடுகளை பிரித்தானிய தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை, நாடு கடந்த அரசு மற்றும் பல அமைப்புக்கள் வழிநடாத்திச் செல்கின்றன.

புலம் பெயர் தமிழ் மக்கள் மற்றும் அமைப்புக்களின் செயற்பாடுகளே இன்று தமிழினப் படுகொலை போர்க்குற்றம் வரை சென்றுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இதை சுமந்திரன் அறிந்திருப்பாரா என்பது கேள்விக்குறியே.இக் கூட்டத்தில் நூற்றிற்கும் குறைவானவர்களே கலந்து கொண்டனர்.

http://youtu.be/LBaEK_j8ET4

http://www.tamilthai.com/?p=22595

Edited by தமிழ் அரசு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்த கருத்துகளை வெறும் அரசியல் கெளரவ பிரச்சினையாக்காது அதை கூட்டமைப்பின் கருத்தாக ஏற்றுக்கொண்டாக வேண்டும். அவர்கள் ஊடாக அவர்கள் அடையக்கூடிய உயர்ந்த பட்ச அரசியல் திர்வை பெற அவர்களை முழு அளவில் இலங்கைக்குள்ளும் சர்வதேச அளவிலும் தமிழ் அரசியல் தளத்தைப் உபயோகிக்க புலம்பெயர்ந்த நாம் அனுமதி அளிக்க வேண்டியது மிக முக்கியமாகும்.

2002ல் உருவாகிய அரசியல் சூழல்போல் அல்லாது தற்போது மிக பலவீனமாக நிலையில் ஈழத்தமிழர் எமது அரசியல் தலைமைத்துவம் உள்ளது. அதனை கருத்தில் கொண்டு தற்போது கூட்டமைப்பு அடைக்கூடிய அதிஉயர் அரசியல் தீர்வை பெறுதலே முதற் சுற்றில் நாம் அடைய வேண்டிய இலக்கு. ஆகவே பிரித்தானிய தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை, நாடு கடந்த தமிழீழம் அரசு என்பன சற்று பின்வாங்கி கூட்டமைப்பின் மூலம் முதல் சுற்றை ஓடி முடிக்க வேண்டும்.

மகிந்த அரசுக்கு எதிரான சர்வதேச சூழல் கூட்டமைப்பு அரசு பேச்சு வார்த்தையில் ஒரு சம வலுவான காட்சியை ஈழத்தமிழருக்கு காலம் சிறிது காலம் தந்துள்ளது. ஆகவே காலத்தே பயிர் செய்வதே சாலச் சிறந்தது.

நிச்சயம் கூட்டமைப்பினரே தீர்வை பேசி பெறல் வேண்டும். அதை சிங்களம் ஏற்றாலே அந்த தீர்வு நிலைக்கும்.

ஆனால், சிங்களம் மனமுவந்து தமிழர் பிரச்சனையை ஏற்று ஒரு தீர்வும் தரப்போவதில்லை என்பது கடந்த ஒன்பது சுற்றுக்களும் நிரூபித்துள்ளன. புற அழுத்தம் மூலமே அது சாத்தியம்.

இங்கே முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம் எதை சுமந்திரன் அவர்கள் சொல்லவில்லை என்பதே. அவர் ஒரு இலங்கை பிரசை, அதிலும் பாரளுமன்ற தமிழ் உறுப்பினர். அவரால் பல விடயங்களை வெளிப்படையாக சொல்லவும் முடியாது, செய்யவும் முடியாது.

தமிழர் அமைப்புக்கள் பல வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அதன் மூலம் மகிந்த கூட்டத்திற்கு அழுத்தம் கொடுக்கின்றனர். அப்படிப்பட்ட சந்திப்புக்களை கூட்டமைப்பினர் ஏற்படுத்த முடியாது. அதிகூடிய சந்திப்பாக அவர்களால் டெல்லிக்கும் சென்னைக்கும் போகவே முடியும். அதையும் சிங்கள அனுமதியுடன், அவர்களின் கணிசமான நிகழ்ச்சி நிரலுடன்.

எனவே தீர்வுக்கும், கூட்டமைப்பு அரசியல் தீர்வை எட்டவும் புலம்பெயர் அமைப்புக்களின் பங்களிப்பு தேவை.

ஒன்று ஒன்றிற்கு ஒத்தாசையாக இருக்க வேண்டும், தடையாக அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழ் மக்களின் செயற்பாடுகளை தான் பிரித்தானியாவிலும் வேறு இடங்களிலும் சந்தித்த இராஜதந்திரிகள் விமர்சித்ததாகவும், புலம்பெயர் தமிழ் மக்களின் செயற்பாடுகளை தாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என இராஜதந்திரிகள் தெரிவித்ததாக சுமந்திரன் தெரிவித்தார்.

புலம்பெயர் தமிழ் மக்களின் செயற்பாடுகளில் மாற்றம் வேண்டும் என அவர் கூறியபோது அக்கூட்டத்தில் கலந்துகொண்டோர் கைதட்டினர்.

புலம்பெயர்ந்த தமிழர்களின் செயற்பாடுகளும், தாயகத் தமிழர்களின் செயற்பாடுகளும் ஒத்ததன்மையுடையவை என்று சுமந்திரனுக்குத் தெரியாதா? :rolleyes:

மாற்றம் வேண்டும் என்று "எல்லாம்" தெரிந்தவர்களுக்கு கூறி அவர்களின் கோபத்தை சம்பாதித்து என்ன பிரயோசனம்? :blink: இவருக்கு எப்படி பொறுப்பாக புலம்பெயர் தமிழருடன் கதைக்கவேண்டும் என்று எவரும் வகுப்பு எடுக்கவில்லைப் போலுள்ளது :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://tamilnet.com/art.html?catid=79&artid=34225

Non-TNA Tamil national circles in the island allege that there is a secret negotiation between New Delhi and the TNA for the latter to drop the war crimes charges in favour of New Delhi and Colombo implementing the meaningless 13th Amendment, perhaps with a new nametag.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.