Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உண்மையில் இந்தச் சம்பவத்தில் நான் கொல்லப்பட்டிருக்க வேண்டும்' - நோர்வே தாக்குதலில் தப்பிய ஈழத்தமிழ் பெண்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'உண்மையில் இந்தச் சம்பவத்தில் நான் கொல்லப்பட்டிருக்க வேண்டும்' - நோர்வே தாக்குதலில் தப்பிய ஈழத்தமிழ் பெண்

[ திங்கட்கிழமை, 25 யூலை 2011, 09:51 GMT ] [ நித்தியபாரதி ]

நோர்வேயில் இடம்பெற்ற கோடைகால முகாம் மீது துப்பாக்கிதாரி ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது சிறிலங்காவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட கம்சாயினி குணரட்ணம் [Khamshajiny Gunaratnam] என்ற இந்தப் பெண் 2004-2007 வரையான காலப்பகுதியில் ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியைப் பெற்றுக் கொண்டதுடன், இவர் 2007ல் இருந்து தொழிலாளர் கட்சி இளைஞர் அணியின் ஒஸ்லோ பொதுச் சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

அவ்வகையில், வெள்ளியன்று இடம்பெற்ற தொழிற்கட்சியின் இளையோர் அணிக்கான கோடைகால மாநாட்டில் இவரும் கலந்துகொண்டிருந்தார். இவரும் பிறிதொரு அரசியல்வாதியும் துப்பாக்கிப் பிரயோகத் தாக்குதலிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பியதாகவும் சம்பவம் இடம்பெற்ற தீவிலிருந்து படகொன்றின் மூலம் தாம் பாதுகாப்பான இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் கம்சாயினி குணரட்ணம் தனது Facebook தகவலில் குறிப்பிட்டுள்ளார்.

Khamshajiny Gunaratnam

"நான் இப்பொழுதும் அதிர்ச்சியிலிருந்து விடுபடவில்லை. என்னால் இத்தாக்குதல் சம்பவத்தை நம்ப முடியாமல் உள்ளது. உண்மையில் இந்தச் சம்பவத்தின் போது நான் கொல்லப்பட்டிருக்க வேண்டும்" என அவர் தனது செய்தில் குறிப்பிட்டுள்ளார்.

"ஒஸ்லோவில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாகக் கேள்வியுற்ற பெரும்பாலான இளையோர்கள் பெரிதும் கவலையடைந்தனர். நோர்வேத் தலைநகரான ஒஸ்லோவில் உள்ள தமது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஏனைய உறவுகளுடன் தொடர்பை ஏற்படுத்த அவர்கள் முயற்சி செய்தனர்" எனவும் கம்சாயினி தெரிவித்துள்ளார்.

"இந்த அழிவிற்கு யார் காரணம் என நாம் நினைத்தோம். திடீரென அங்கிருந்த எல்லா இளையோரும் ஓடினார்கள். எம்மையும் ஒளிந்து கொள்ளுமாறு கூறினார்கள். பிரதான கட்டடத்தை நோக்கி ஓடினார்கள். நான் AUF [Labour parti Youth wing] கடைக்கு அருகிலிருந்த கழிப்பறைக்குள் ஒளிந்து கொண்டேன்.

துப்பாக்கிச் சூடு மிகக் கிட்ட நெருங்கிக் கொண்டிருந்தது. இது ஒரு 'வேடிக்கை விளையாட்டு' என்றே நான் நினைத்து இருந்தேன். ஆனால் ஒருவர் எந்த விடயத்தையும் நிச்சயித்துக் கொள்ள முடியாது என்பதே உண்மையானதாகும்.இதனை எமது நாளாந்த வாழ்க்கை உறுதிப்படுத்துகின்றது" என தனது அனுபவத்தை கம்சாயினி குறிப்பிட்டுள்ளார்.

"இறுதியாக எனது நண்பர்கள் சிலரின் குரல்கள் எனது காதுகளுக்குக் கேட்டது. நான் உடனே வெளியே வந்தேன். ஆனால் அப்போதும் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்தது. நாங்கள் பெரிய பாறைகள் மற்றும் புதர்களுக்குள் விழுந்தெழும்பினோம். எனது உடலிலும் சில காயங்கள் ஏற்பட்டன. நான் மிகவும் குழப்ப நிலை அடைந்தேன். நாங்கள் ஓடிக்கொண்டேயிருந்தோம். எம்மை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர் காவற்துறையினரின் உடையில் இருந்துள்ளார் என்பது எம்மை மிகவும் அதிர்ச்சியில் உறைய வைத்தது" என கம்சாயினி எழுதியுள்ளார்.

"கம்சி நீங்கள் திரும்பிப் பார்க்க வேண்டாம். நீங்கள் நேரே பாருங்கள் முன்னோக்கிச் செல்வது மட்டுமே உங்களது இலக்காக இருக்க வேண்டும்" என கம்சாயின் நண்பர் ஒருவர் இவர்கள் தீவில் இடம்பெற்ற தாக்குதலில் அகப்பட்டுக் கொண்டபோது கம்சாயினையைத் தைரியப்படுத்துவதற்காக அனுப்பிய தகவலாகும். இவர்களைக் காப்பற்றுவதற்காக படகுகள் வந்துகொண்டிருந்தன. அவர்களைச் சுற்றி துப்பாக்கிச்கூடு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டது.

இந்தத் துன்பகரமான சம்பவத்திலிருந்து தப்பிப் பிழைத்து நகருக்குள் வந்த முதலாவது குழுவினருள் கம்சாயினியும் அவரது நண்பர்களும் இருந்தார்கள்.

இவர்கள் நகருக்குள் வந்ததன் பின்னர் மருத்துவப் பணியாளர்களால் பராமரிக்கப்பட்டனர். மாற்றுவதற்கான உடைகளும் சூடான குடிபானமும் தாக்குதலிலிருந்து தப்பி வந்தவர்களுக்கு வழங்கப்பட்டது.

"நான் இப்போதும் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறேன். இவ்வாறான சம்பவங்கள் ஏன் மேற்கொள்ளப்பட்டது? ஒஸ்லோவிலிருந்த பிரதான கட்டடங்கள் மீது தாக்குதலை நடாத்தியதுடன், Utøya என்ற சிறு தீவில் இடம்பெற்ற கோடை கால மாநாட்டில் கலந்து கொண்டிருந்த எதிர்கால தொழிற்கட்சி அரசியல்வாதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். நாங்கள் செய்த பிழைதான் என்ன? துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட அந்த மனிதன் எனது நண்பர்களை ஏன் கொலை செய்தான்? இத்தாக்குதல் சம்பவமானது மிகவும் கொடூரமானது. என்னால் இதனை விளங்கிக் கொள்ள முடியாமல் உள்ளது" என கம்சாயினி குணரட்னம் தெரிவித்துள்ளார்.

"முதலில் குடும்ப உறுப்பினர்கள் எல்லோரிடமும் எனது நினைவுகள் சென்றன. தற்போது நாம் அனைவரும் ஒருவருடன் ஒருவர் துணையாய் இருக்க வேண்டும். நாங்கள் வெறும் இளம் பருவத்தினர் மட்டுமே. நாங்கள் அரசியிலில் பங்குகொண்டுள்ளோம். நாங்கள் இந்த உலகை நல்லதோர் இடத்திற்குக் கொண்டு செல்வோம். இன்று Utøya வில் இழந்த ஒவ்வொரு உறவுகளையும் நாம் நினைவு கூறுகின்றோம்" என கம்சாயினி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

[நோர்வே தொழிற்கட்சியின் இளையோர் அணிக்கான கோடைகால முகாமில் கம்சாயினி குணரட்ணத்துடன் வேறு மூன்று ஈழத்தமிழ் இளைஞர் கலந்து கொண்டனர் என்பதும் அவர்களும் உயிர்தப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது]

செய்தி வழிமூலம்: Sunday Times

மொழியாக்கம்: நித்தியபாரதி

http://www.puthinappalakai.com/view.php?20110725104351

பொருளாதார ரீதியாக சரிந்துவரும் மேற்குலகில் பல்லினகலாச்சாரம் குறிவைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான தாக்குதல்கள் வரும் காலங்களில் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

வலதுசாரி கிறித்துவ அமைப்புக்களைப் பயங்கரவாத அமைப்புக்களாக அறிவிக்க வேண்டும்..! :wub:

செய்வார்கள்.. எனக்கு நம்பிக்கை இருக்கு..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட கம்சாயினி குணரட்ணம் [Khamshajiny Gunaratnam] என்ற இந்தப் பெண் 2004-2007 வரையான காலப்பகுதியில் ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியைப் பெற்றுக் கொண்டதுடன், இவர் 2007ல் இருந்து தொழிலாளர் கட்சி இளைஞர் அணியின் ஒஸ்லோ பொதுச் சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.