Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெற்றியை கொச்சைப்படுத்துவது அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்! விக்கிரமபாகு எச்சரிக்கை

Featured Replies

வியாழக்கிழமை, 28 யூலை 2011, 03:09.46 AM GMT

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியை கொச்சைப்படுத்துவதால் அரசுக்கு சர்வதேச அழுத்தம் ஏற்படும் என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன எச்சரிக்கின்றார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்தவை வருமாறு:

நடைபெற்ற உள்ளூராட்சி சபைத்தேர்தல்களில் எப்படியாவது தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்துடனேயே அரசு செயற்பட்டது. இதற்காக ஜனாதிபதி, அமைச்சர்கள், அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் வடக்குக்குப் படையெடுத்துச் சென்றனர்.

அங்கு சென்று அப்பட்டமாகத் தேர்தல் விதிகளை மீறி செயற்பட்டனர். அதுமட்டுமன்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகத் திட்டமிட்டபடி வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டனர்.

இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கில் 26 சபைகளில் போட்டியிட்டு 20 சபைகளைக் கைப்பற்றி அமோக வெற்றியீட்டியது. இதனை சாதாரண வெற்றி எனக் கருதிவிட முடியாது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாகும்.

தமிழ் மக்கள் தாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னாலேயே நிற்கின்றோம் என்றும் அவர்களே தங்களின் ஏகப் பிரதிநிதிகள் என்றும் இந்தத் தேர்தலில் முழு உலகத்துக்கும் எடுத்துக் காட்டியுள்ளனர்.

ஆனால், அரசோ இன்னும் பழைய நிலைப்பாட்டிலேயே உள்ளது. கூட்டமைப்பினர்தான் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது. வடக்கில் தமக்கு ஏற்பட்ட படுதோல்வியை அப்படியே மூடி மறைக்க ஜனாதிபதியும், அரச தரப்பினரும் முனைகின்றனர். இதற்காகக் கூட்டமைப்பினரின் வெற்றியை கொச்சைப்படுத்துகின்றனர்.

அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இடையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் பொருட்டு நடை பெற்றுவரும் பேச்சுகளை இழுத்தடிப்பதற்கான அரசின் சதிகளில் இதுவும் ஒன்றாகும்.

எனவே, அரசு சர்வதேசத்துக்கு அளித்துள்ள உறுதிமொழிகளின்படி தமிழ் மக்களுக்கு விரைவில் அரசியல் தீர்வை வழங்க முன்வரவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரூடாகவே அத்தீர்வு தங்களுக்கு வழங்கப்படவேண்டும் என்பதை தமிழ் மக்கள் தேர்தல்களில் வெளிப்படுத்தியுள்ளனர். இதுவே சர்வதேசத்தின் எதிர்பார்ப்புகளாகும்.

இந்நிலையில், தமிழ் மக்களின் உணர்வுகளுக்கும், சர்வதேசத்தின் கருத்துகளுக்கும் மதிப்பளித்து அரசு, தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை வழங்க முன்வரவேண்டும். மாறாக கூட்டமைப்பினரின் வெற்றியைக் கொச்சைப்படுத்தி அரசியல் தீர்வு வழங்குவதற்கு காலத்தை இழுத்தடித்தால் சர்வதேச அழுத்தம் அரசுக்கு அதிகரிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

http://www.tamilwin.com/view.php?22Gp7bc3BI34eE29303jQKdd3Qjb20N923e4GLLcb2pGu2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.