Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகை வசீகரிக்கும் பாகிஸ்தான் அமைச்சர்

Featured Replies

hina-rabbani-7.jpg

பாகிஸ்தான் அயலுறவுத் துறை அமைச்சராக ஹினா ரப்பனி கர் நியமிக்கப்பட்டு ஒரு வார காலம்தான் ஆகிறது. அதற்குள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துவிட்டார் ஹினா. அவரது புகைபடங்களை பிரசுரிப்பதிலும், அவர் தொடர்பான வீடியோ கிளிப்பிங்குளை ஒளிபரப்பவும் சர்வதேச ஊடகங்கள் போட்டிபோடுகின்றன.

இதுவரை "பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பாகிஸ்தான் அக்கறை காண்பிப்பதில்லை; தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் திகழ்கிறது..." என்றெல்லாம் பாகிஸ்தான் குறித்து எதிர்மறை கருத்துக்களையும், அது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டு வந்த உலகின் முன்னணி நாளிதழ்கள் மற்றும் வார சஞ்சிகைகளெல்லாம், தற்போது மாடல் அழகி போன்ற வசீகர தோற்றமும், அறிவு திறனும் கொண்ட இளம் பெண் ஒருவரை அயலுறவுத் துறை அமைச்சராக நியமித்து, பாகிஸ்தான் தற்போது சந்தித்து வரும் நெருக்கடியை விவேகமாக எதிர்கொள்ள தொடங்கி உள்ளதாக புகழாரம் சூட்டிக்கொண்டிருக்கின்றன.

அல் காய்தா தலைவர் ஒஸாமா பின்லேடன் பாகிஸ்தானில் வைத்து அமெரிக்க படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதன் மூலம், பாகிஸ்தானின் இமேஜ் உலக நாடுகளில் அதல பாதாளத்திற்கு சரிந்தது.

பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பதாக பாகிஸ்தான் மீது எப்போதும் இருந்துவரும் குற்றச்சாட்டை, பின்லேடனின் பதுங்கல் நிரூபிக்கும் விதமாக அமைந்துவிட்டதால் பாகிஸ்தான், உலக நாடுகளிடம் அம்பலப்பட்டு போனது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவிடமிருந்து பாகிஸ்தானுக்கு சமீப காலமாக கடுமையான நெருக்கடிகள் வந்தன. குறிப்பாக பாகிஸ்தான் இராணுவத்திலும், உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யிலும் தீவிரவாதிகளுக்கு ஆதரவான சக்திகள் உள்ளதாக, அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ குற்றம்சாட்டியது.

ஆனால் பாகிஸ்தான் அதற்கு கடுமையாக மறுப்பு தெரிவித்து, ஆதாரமில்லாமல் குற்றம்சாட்ட வேண்டாம் என்று கூறவே, சிஐஏ-வின் தலைவர் விமானத்தை பிடித்து நேரடியாக இஸ்லாமாபாத் வந்திறங்கினார்.

அங்கு அவர் பாகிஸ்தான் இராணுவ மற்றும் உளவுத் துறை அதிகாரிகளை சந்தித்து, அமெரிக்காவின் குற்றச்சாட்டை நிரூபிக்கும் வீடியோ ஆதாரம் ஒன்றை காட்டியதாகவும், அதனை பார்த்து பாகிஸ்தான் அதிகாரிகள் வாயடைத்துபோய் தலையை தொங்கப்போட்டுக்கொண்டதாகவும் கூறப்பட்டது.

இந்த சூழ்நிலையில்தான் மும்பையில் அண்மையில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவம் பாகிஸ்தான் மீது மீண்டும் உலக நாடுகளின் பார்வையை திருப்பவே, அந்நாடு வெகுவாகவே அவஸ்தைக்குள்ளானது.

இதனையடுத்தே தனது அயலுறவு நடவடிக்கைகள் மற்றும் தோற்றத்தை மாற்றுவதற்கான வியூகத்தை வகுத்தது. அதன் ஒரு அம்சமாகவே திறமையும், புத்திசாலித்தனமும் கொண்டவர் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டால் எதிர் தரப்பின் கடுமையை குறைக்க முடியும் என்றெண்ணி, வசீகரிக்கும் அழகு கொண்ட ஹினா ரப்பானி கர் என்ற 34 வயது அழகு பெண்ணை தனது அயலுறவுத் துறை அமைச்சராக கடந்த 20 ஆம் தேதி நியமித்தது பாகிஸ்தான்.

பாகிஸ்தான் வரலாற்றில் அதன் அயலுறவுத் துறை அமைச்சராக பெண் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவை நினைவுபடுத்தும் இந்த அழகு அமைச்சரும், பாரம்பரிய அரசியல் குடும்ப பின்னணி கொண்டவர்தான்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முல்டான் என்ற இடத்த்ல் 1977 ஆம் ஆண்டு ஜனவரி 19ல் பிறந்த ஹினாவின் குடும்பம், செல்வ செழிப்பு மிக்க குடும்பமும் கூட. ஹினா குடும்பத்தினருக்கு சொந்தமாக ஏராளமான மீன் பிடி படகுகள் கொண்ட மீன் பிடித் தொழிலும், மாந்தோப்புகளும், கரும்பு வயல்கள் உள்ளிட்ட ஏராளமான விவசாய தொழில்களும் உள்ளன.

லாகூர் பல்கலைக்கழகத்தில் நிர்வாக அறிவியலில் பி. எஸ்சி பட்டம்பெற்ற ஹினா, அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பில் எம். எஸ்சி பட்ட மேற்படிப்பு பயின்றுள்ளார்.

இவரது தந்தை குலாம் ரப்பானி, பஞ்சாப் மாகாணத்தின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவர். இவரது மாமாதான் பஞ்சாப் மாகாண முதலமைச்சர்.

ஃபெரோஷ் குல்சார் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டுள்ள ஹினாவுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள்.

தந்தையும், மாமாவும் அரசியலில் இருக்க ஹினாவுக்கு அந்த ஆசை வராமல் போகுமா என்ன? 2002 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் நாடாளுமனற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹினாவுக்கு, அரசியலில் அப்போது முதல் ஏறுமுகம்தான்.

2008 தேர்தலில் ஹினாவுக்கு பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி தேர்தலில் போட்டியிட டிக்கெட் கொடுக்க மறுக்கவே, பாகிஸ்தான் மக்கள் கட்சியில் சேர்ந்து போட்டியிட்டு 84, 000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று மீண்டும் எம். பியானார்.

தொடர்ந்து பிரதமர் யூசுப் ரஸா கிலானி தலைமையிலான அமைச்சரவையில் பொருளாதார மற்றும் புள்ளியியல் துறை இணையமைச்சராக பணியாற்றிய அவர், 2011 பிப்ரவரியில் அயலுறவுத் துறை இணையமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் அயலுறவுத் துறை அமைச்சராக பதவி வகித்த ஷா முகமத் குரேஷி அப்பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதும், 2011 பிப்ரவரி 13 ல் அயலுறவுத் துறையின் தற்காலிக அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்துதான் கடந்த 20 ஆம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக பாகிஸ்தான் அயலுறவுத் துறையின் கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டார் ஹினா. அப்போதே உலக நாடுகளை, குறிப்பாக மேற்குலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தார்.

இவர் அயலுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டதை வெகுவாக புகழ்ந்து எழுதும் "பாகிஸ்தான் அப்சர்வர்" போன்ற அந்நாட்டு ஆங்கில ஏடுகள், அண்மையில் ஹிலாரி கிளின்டனுடன் ஹினா நடத்திய பேச்சுவார்த்தையின் போது, அவரது தைரியமான பேச்சும், அணுகுமுறையும், பாடி லேங்வேஜ் எனப்படும் உடம் மொழியும் ஹிலாரியை வெகுவாகவே கவர்ந்ததாகவும், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தானும் ஏகப்பட்ட இழப்புகளை சந்தித்துள்ளதாக புள்ளி விவரங்களுடன் அவர் முன்வைத்த வாதத்தை பார்த்து ஹிலாரி அசந்துபோனதாகவும் புகழாராம் சூட்டுகின்றன.

இந்த நிலையில்தான் இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நேற்று டெல்லி வந்தார் ஹினா.

வழக்கமாக பாகிஸ்தான் அயலுறவுத் துறை அமைச்சர் டெல்லி வந்தால், விமான நிலையத்தில் வந்திறங்குவதை படம் பிடித்து சம்பிரதாய செய்தியாக வெளியிடுவது இந்திய ஊடகங்களின் வழக்கம்.

ஆனால் வசீகரமும், மாடல் அழகி போன்ற தோற்றத்துடனும் பாகிஸ்தான் அயலுறவுத் துறை அமைச்சராக ஒருவர் வந்திறங்குவார் என்று தொலைக்காட்சி கேமராமேன்களும், பத்திரிகை புகைப்படக்காரர்களும் எதிர்பார்க்கவே இல்லை.

ஆங்கிலத்தில் "Stunning beauty" என்று சொல்வார்களே அதுமாதிரி அசர அடிக்கிற அழகுடன் வந்திறங்கிய ஹினாவை நமது பத்திரிகை புகைப்படக்காரர்களும், தொலைக்காட்சி கேமராமேன்களும் வளைத்து வளைத்து படம்பிடித்ததை பார்த்து, ஹினா சற்று வெட்கப்பட்டுதான் போனார்.

இந்த நிலையில்தான் இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் இன்று இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளார் ஹினா.

இப்பேச்சுவார்த்தையில் பெரிய அளவில் முடிவுகள் எதுவும் எட்டப்படாது என்று முன்னரே கூறப்பட்டபோதிலும், பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்ததாக ஹினா செய்தியாளர்களிடம் கூறினார்.

அதே சமயம் கடந்த காலங்களைப் போன்றல்லாமல் இந்த முறை இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தை இறுக்கமாக அல்லாமல், உற்சாகமான சூழலில் நடந்ததாகவும், இத்ற்கு ஹினா முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல என்றும் கூறுகின்றனர் நமது அயலுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள்.

பாகிஸ்தானில் பெனாசிர் பூட்டோவுக்கு பின்னர் ஒரு வசீகரமான, வலிமையான, விவேகமான ஒரு தலைவர் இல்லாமல் இருந்த நிலையில், ஹினா ரப்பானி அந்த இடத்தை பூர்த்தி செய்வார் என்றும், எதிர்காலத்தில் பாகிஸ்தான் பிரதமர் பதவியில் ஹினா அமரப்போவது நிச்சயம் என்றும் அடித்துக் கூறுகின்றன பாகிஸ்தான் ஊடகங்கள்.

எப்படியோ இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவில் ஒரு புதிய நல்லத்தியாயம் மலர, ஹினா போன்ற இளம் தலைவர்கள் இருநாடுகளிலும் நிறைய பேர் உருவாகட்டும்!

http://www.pathivu.com/news/17722/57/.aspx

Edited by மல்லையூரான்

பீரிசின் வேலைக்கும் ஆப்போ தெரியவில்லை :)

  • தொடங்கியவர்

நாம வாறவங்க அவசரம போகவேணுமின்ணா தலதா மாளிகைப்பக்கம் கூடிட்டு போகல்லாம்.

எதுக்கும் பீரிசு அந்த பொண்ணு மூஞ்சியை ஒரு தடவை நல்லா பார்த்துட்டார் என்னா தேவைப்படும் போது அப்படி ஒரு சறுக்கிற மொட்டாக்கு போட்டுக்கல்லாம்.

இந்த நிலையில்தான் இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நேற்று டெல்லி வந்தார் ஹினா.

சிங்களத்திகளிடம் மயங்கிப் போய் இருக்கும் மேனன், நாராயணன், நம்பியார், அடங்கிய காட்டுமிராண்டி ஜனநாயகப் பயங்கரவாதிகளின் கும்பல் இனி அடிக்கடி பாகிஸ்தானுக்கும் பிச்சைப் பாத்திரத்துடன் ஓடப்போகுதுகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

“தொடைகளுக்கு நடுவே ஒளிந்திருக்கும் நரகம்”

hina-rabbani-khar-meets-sm-krishna.jpg

ரவிவர்மாவின் அந்தக்கால அல்ட்ரா மாடர்ன் பட்டுடை உடுத்திய காளிதேவி போன்ற ஷேப்பில் இருக்கும் பாரதமாதாவை பார்த்திருக்கிறீர்களா? இல்லையென்றால் ஆர்.எஸ்.எஸ் அம்பிகளின் வீடுகளுக்குச் சென்றால் தவறாமல் தரிசிக்கலாம். கோவில் சிலைகளில் அம்மணத்தை ஆடையாகக் கொண்டு ஆடிய பழங்குடியான காளி, பாரதமாதாவான கதை தனிக்கதை! ஆனால் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பாரதமாதாவை, பர்தா போட்டு வந்த ஒரு பாகிஸ்தான் தேவதை வென்றுவிட்டாள்! பாரத் மாதா கி நகி! பாக் அழகி கி ஜெய்!

34 வயதானா ஹீனா ரப்பானி கார் எனும் பாகிஸ்தானின் முதல் பெண் வெளியுறவு அமைச்சர், டெல்லி விமானப்படை தளத்தில் (சரி, இந்திய விமானப்படைத் தளத்தில் பாக் விமானம் இறங்கினால் எல்லா இரகசியங்களையும் செல்போனில் சுட்டுவிடுவார்களே என்று யாரும் ஏன் கேட்கவில்லை) இறங்கி வந்து ஒரு பேஷன் ஷோ மங்கை போல கைப்பையை தூக்கிக் கொண்டு நடந்து வந்தாரா…… அவ்வளவுதான் முழு இந்தியாவும் அதன் மனசாட்சியுமான இந்திய ஊடகங்களும் அவுட்! மூன்றாவது அம்பையர், டி.ஆர்.எஸ் இதிலெல்லாம் சோசோதித்தறிய தேவையில்லாத கிளீன் போல்டு! தேசபக்தியை வீழ்த்திக் காட்டிய அழகு!

தமிழ்ப் பதிவுலகம் நன்கறிந்த ஜொள்ளர்களெல்லாம் சினிமா நடிகைகளை ஜொள்ளுவதையெல்லாம் கிண்டலடித்து வந்த ”ஹை கிளாஸ்” அம்பிகளெல்லாம் ஹீனா ஜன்னி பிடித்து சமூக வலைத்தளங்களை பிராண்டுகிறார்கள். டிவிட்டரில் இரண்டு நாட்களாக ஹீனாதான் பேரரசியாக கோலேச்சுகிறார். கசாப்பை தூக்கில் போடு, அப்சல் குருவை சுட்டுப்போடு என்று டெம்பிளேட் தேசபக்தி முழக்கங்களை காப்பி அடித்துப் போடும் இந்திய டவிட்டர்கள் இன்று ஹீனாவை மாய்ந்து மாய்ந்து உருகுகிறார்கள். “இந்தியா – பாக் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் பேச்சுவார்த்தையில் எந்தப் பிரச்சினையையும் பேசித் தீர்க்க முடியாது, ஏனெனில் ஹீனா என்றொரு அழகான பிரச்சினை இருக்கும் போது வேறு எதைப்பற்றி பேசுவது?” இது ஒரு டிவிட். எனில் மற்ற ஜொள் (டிவிட்டு) களைப் பற்றி விளக்கத் தேவையில்லை.

“பாகிஸ்தான் தனது அழகான முகத்தை இறக்கியிருக்கிறது” – இது டைம்ஸ் ஆப் இந்தியா.

“மாடல் நடிகையைப் போன்ற அமைச்சரால் இந்தியாவே வேர்த்துக் கிடக்கிறது” – இது இந்தி நாளிதழான நவபாரத் டைம்ஸ்.

“அனைவரது விழிகளும் அந்த கவர்ச்சியான பாக் அமைச்சர் மேல், அழகும்-சிந்தனையும் கச்சிதமாக கலந்தவள்தான் அந்தப் பெண் என்பது மட்டும் நிச்சயம்” இது ரீடிப் இணையத்தளம்.

“காலநிலைக்கு பொருத்தமான நீலநிற உடையில் அந்த 34 வயது அமைச்சர் டெல்லி விமான நிலையத்தை அடைந்தபோதே, ஆடை அலங்காரப் பிரிவில் முழு மதிப்பெண்களையும் பெற்றுவிட்டார் என்றே சொல்ல வேண்டும்” – இது மெயில் டுடே.

புதன்கிழமை காலையில் டெல்லியில் பெய்த மழையைப் போன்று ஹீனாவுக்கான கவரேஜூம் இருந்தது என்று கூறுகிறார், பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சீமா கோஸ்வாமி.

“ரசிக்கத்தக்க உபகரணங்கள், ரோபெர்ட்டோ கவாலி சன்கிளாஸ், பெரிய எர்மெஸ் பிர்கின் பை, பாரம்பரிய முத்து மாலை – எல்லாம் சேர்ந்து அவளது கவர்ச்சிக்கு மெருகூட்டுகிறது” – இது ஒரு பத்திரிகை செய்தி.

என்னதான் கசாபின் மண்ணிலிருந்து வந்தவரென்றாலும் இந்த அழகு தேவதையை ஆராதிக்கவில்லை என்றால் யூத் உலகோடு இடைவெளி வந்துவிடும் என்பதாலோ என்னமோ பா.ஜ.க தலைவர் அத்வானியும் அழகான ஒரு பொக்கேயை கொடுத்து போட்டோ எடுத்துக் கொண்டார். இந்தியா – பாக் நாடுகளின் சண்டை வரலாற்றை கிண்டல் செய்யும் வண்ணம், ” இந்தியாவில் இறங்கிய பாக் குண்டு” என்று குறிப்பிட்டது, மும்பையின் மிரர் பத்திரிகை.

79 வயது வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தனது விலையுயர்ந்த டிசைனர் கோட்டு சூட்டுடன் பெருமையாக உலா வந்தாலும், ஹீனாவுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்கப்பட்ட போதெல்லாம் அவரால் மற்றவர் கவனத்தை கவர்ந்திழுக்க முடியவில்லையாம்.

இப்படியாக ஹீனா ரப்பானி காரின் சௌந்தரிய புராண விளக்கத்தை இந்திய ஊடகங்கள் விதவிதமாக வருணித்து அதையும் தலைப்பு செய்தியாக வெளியிட்டிருக்கின்றன. பாக்கிற்கு எதிரான இந்திய வெத்துவேட்டு தேசபக்திக் கூச்சலை ஒரு இயக்கமாக பரப்புகின்ற டைம்ஸ் ஆப் இந்தியாதான் இந்த அலங்கார வருணணைகளை தொகுத்து அளித்திருக்கிறது! தேசபக்தி நாணயத்தின் மறுபக்கம் அள்ள அள்ளக் குறையாத ஜொள்ளு! இது நகை முரணல்ல, இயல்பான உள்ளத்தைக் காட்டும் கண்ணாடி!

இரு குழந்தைகளுக்குத் தாயான ஹீனா ஒரு உலக அழகி போல ரசிக்கப்படுவார் என்று தெரிந்துதான் பாக் அரசு அனுப்பியிருக்கிறதோ என்னமோ! பெனாசீர் பூட்டோ போல பாக்கின் பஞ்சாப் மாநிலத்தின் செல்வாக்கு மிக்க நிலவுடமை குடும்பத்தைச் சேர்ந்தவர் ஹீனா. இந்தியாவைப் போல பாக்கிலும் இத்தகைய பாரம்பரிய பணக்காரக் குடும்பங்களே அரசியலிலும், தொழிற்துறையிலும் கோலேச்சுகின்றன.

அந்த வகையில் ஹீனாவின் வருகை ஒன்றும் அதிசயமல்ல. ஆனால் அவர் அமைச்சராக்கப்பட்ட நேரம்தான் முக்கியமானது. பின்லேடன் மரண நாடகத்திற்குப் பிறகு பொதுவெளியில் அமெரிக்க – பாக் உறவு எள்ளும் கொள்ளும் வெடிப்பதான பாவனையில் இருக்கும்போது உலக மகா ஜொள்ளர்களான அமெரிக்கர்களை குஷப்படுத்துவதற்கும், அப்படியே உள்ளூர் ஜொள்ளர்களான இந்தியர்களின் பேச்சை மாற்றுவதற்கும் கூட ஹீனா பயன்படவேண்டுமென்று பாக் ஆளும் வர்க்கம் நினைத்திருக்கலாம்.

இருந்தாலும் ஒரு உண்மையை ஒத்துக் கொள்ளவேண்டும். பாக்கிலிருந்து யார் வந்தாலும் அது முஷராப்போ, ஜர்தாரியோ, நவாஸ் ஷெரிப் என்று யாராக இருந்தாலும் அவர்களது ஆளுமை, பேச்சு, வாதம் எல்லாம் இந்திய அம்பிகளை விட மேம்பட்டே இருக்கிறது. டைம்ஸ் நௌவின் அம்பி ஆர்னாப் கோஸ்வாமி உள்ளூர் அரசியல்வாதிகளையெல்லாம் டி.டி.எஸ் அலறில் கடித்துக் குதறுவார். அப்படிப்பட்ட அம்பியே பின்லேடன் மரணம் தொடர்பாக முஷராப்புடன் பேசும் போது அடிபட்ட பாம்பு போல அடங்கிக் கிடந்தார். எதிர்த்துக் கேட்க ஆளில்லாத மேடையில் மட்டும்தான் இந்திய திறமை பளிச்சிடும் என்பதை ஜனநாயகம் வளராத பாக்கின் தலைவர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.

சரி பாக், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அப்படி என்ன பேசி சாதிக்கப் போகிறார்கள்? வந்த செய்திகளைப் பார்க்கும் போது “இதுவரை பேச்சு வார்த்தை திருப்தி அளிக்கிறது, இனி தொடர்ந்து பேசுவதற்கு ஊக்கமூட்டுகிறது” இதுதான் அந்த சாதனையின் சிகரம். பேசுனோம், பேசிகிட்டு இருக்கோம், பேசுவோம் என்பதுதான் சாதனை என்றால் அர்த்தமில்லாமல் வளவளவென்று பேசும் எப்.எம் ரேடியோ ஜாக்கிகளையே அமைச்சராக்கலாமே?

தீவிரவாதத்தை எதிர்க்க இருநாடுகளும் இணைந்து பணிபுரிய பேசுவார்களாம். பணிபுரிவது இருக்கட்டும், மும்பை 26/11 தாக்குதலுக்காக பாக்கில் உள்ள குற்றவாளிகளை ஒப்படைக்க வேண்டுமென்று இந்தியா கேட்டால், சம்ஜூத்தா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பிற்கான இந்திய குற்றவாளிகளை பாக் கேட்கிறது. மும்பையில் கொல்லப்ப்பட்டது இந்தியக் குடிமகன்களென்றால், சம்ஜூத்தாவில் கொல்லப்பட்டது பாக் குடிமகன்கள். அடுத்து காஷமீர் பிரச்சினை குறித்து இந்தியா ஏதாவது வாயைத் திறந்தால் மாட்டிக் கொள்ளும். முழு காஷ்மீரத்து மக்களும் ஏகோபித்த நிலையில் இந்திய ஆக்கிரமிப்பை எதிர்க்கும் போது அங்கும் பாக்கின் கையே ஓங்கி நிற்கிறது. தற்போது காஷ்மீர் மக்கள் இயக்க பிரதிநிதிகளை ஹீனா சந்தித்ததை இந்திய அரசு கண்டித்திருப்பதாக செய்தி வந்திருக்கிறது. காஷ்மீர் மக்கள் பிரதிநிதிகளை பிரிவினைவாதிகள் என்று சொல்லும் இந்திய ஊடகங்கள் இதனாலொன்றும் ஹீனாவை அவ்வளவாக கண்டித்து விடவில்லை. மேலும் இந்தியா வந்து காஷ்மீர் போராட்டக்காரர்களை சந்திப்பதற்கு ஒரு தில் வேண்டுமே?

ஆக இறுதியில் என்னதான் பேசினார்கள்? இரண்டு காஷ்மீர்களிலிருந்தும் மக்கள் வணிக, பக்தி சுற்றுலாவிற்கு வந்து போகலாம், பஸ் விடலாம், வர்த்தகத்தை அதிகப்படுத்தலாம் என்பதைத்தான் பேசியிருக்கிறார்கள். இவையெல்லாம் நல்ல விடயங்கள்தான். ஆனால் மக்கள் வந்து போகும் இந்த விசயத்தைக் கூட செய்ய முடியாதபடி இந்திய தேசபக்தி வெறி அவ்வப்போது சாமியாடுகிறதே? அதைத் தீர்ப்பது எப்படி? பாக்கும் கூட காஷ்மீரின் தோழன் என்று தனது உள்நாட்டு பிரச்சினைகளை திசை திருப்புவதற்கு பயன்படுத்துகிறது, அதை யார் கேட்பது? மதச்சார்பற்ற முறையில் போராடிய காஷ்மீர் மக்களை மதம் சார்ந்து திணித்த பாவத்தை இருநாடுகளும் குறைவில்லாமல் செய்திருக்கின்றன.

ஒன்று மட்டும் உண்மை. இந்திய பாக் கவுரவப் பிரச்சினைகள் இருநாட்டு ஆளும் வர்க்கங்களுக்கும் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம். அதை வைத்து மக்களை திசைதிருப்புவதற்கு அவர்களுக்கு கிடைத்திருக்கும் அழியாத சாக்கு. அதனால்தான் நேற்று வரை பாக் காஷ்மீரில் குண்டு போட்டு அழிக்க வேண்டும் என்று சாமியாடிய இந்திய ஊடகங்கள் இன்று பாக்கிலிருந்து வந்திருக்கும் தேவதையை ஆராதிக்கின்றன. அந்த வகையில் இந்த பேச்சு வார்த்தையில் முழு வெற்றி அடைந்திருப்பது பாகிஸ்தான்தான்.

இந்திர பதவிக்கு ஆப்பு வைத்த மாமுனிவர்களின் தவத்தை கலைத்த ரம்பா, ஊர்வசி, மேனகை என உலகின் முதல் ஜெள்ளாயுத்தை தயாரித்த இந்த புண்ணிய பூமிக்கு இது வெட்கக்கேடல்லவா? அவர்களில் ஒருவர் யாராவது வெளியுறவு அமைச்சராக இருந்தால் இந்தியாவும் பேச்சு வார்த்தையில் வெற்றி வாகை சூடலாமே? அப்படி ஒன்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பணி என்பது கஷ்டமானதில்லையே? ஐ.நா சபையில் பக்கத்து சீட்டில் இருந்து வேறு ஒரு நாட்டு பிரதிநிதியின் உரையை எடுத்து படித்தவர்தானே நம்ம எஸ்.எம். கிருஷ்ணா? இந்த ஈயடிச்சான் காப்பி வேலையை பாலிவுட், கோலிவுட், டோலிவுட் முதலிய இந்திய வுட்களின் நடிகைகள் யாராவது செய்ய முடியாதா என்ன?

கமான் இந்தியா, கமான்… ஒரு அழகு தேவதையை தேர்ந்தெடு, உலக அழகி போட்டிகளிலெல்லாம் வென்று காட்டிய உன் நாட்டில் அழகிகளுக்கா பஞ்சம்? அழகியை அமைச்சராக்கு, பாக்கை வென்று காட்டு! ஜொள் ஹிந்த்!

http://www.vinavu.com

  • தொடங்கியவர்

மனமோகன் சிங்கே எழுதி கொடுத்ததைதான் படிகிறார். நம்ம "ஸ்கிரிப்ட் அக்சிடென்ரலா" தொலைஞ்சிட்டென்னா வேறேயென்ன திருதிரு என்று விளிக்கிறதா? சும்மாதான் ஒருக்க "பொரோ" பண்ணி நன்னாத்தான் எழுதியிருகிறானுகளா என்று படிச்சு பார்த்தா, அதுக்கெல்லாம் போய் இந்தமாதியா கிண்டல் பண்ணுவாங்க.

ஐ.நா சபையில் பக்கத்து சீட்டில் இருந்து வேறு ஒரு நாட்டு பிரதிநிதியின் உரையை எடுத்து படித்தவர்தானே நம்ம எஸ்.எம். கிருஷ்ணா? இந்த ஈயடிச்சான் காப்பி வேலையை பாலிவுட், கோலிவுட், டோலிவுட் முதலிய இந்திய வுட்களின் நடிகைகள் யாராவது செய்ய முடியாதா என்ன?

கமான் இந்தியா, கமான்… ஒரு அழகு தேவதையை தேர்ந்தெடு, உலக அழகி போட்டிகளிலெல்லாம் வென்று காட்டிய உன் நாட்டில் அழகிகளுக்கா பஞ்சம்? அழகியை அமைச்சராக்கு, பாக்கை வென்று காட்டு! ஜொள் ஹிந்த்!

  • கருத்துக்கள உறவுகள்

கிருசுனா நீயுமா என்று கேல்வி கேட்க மாட்டோம்

இந்தியன் என்றால்... அப்படித்தான்... இருக்க வேண்டும், மொள்ளைமாரி.

நான் என்ன அலங்கார பொம்மையா?- கடுப்பில் பாக் அமைச்சர் ஹினா ரப்பானி கர்நான் என்ன அலங்கார பொம்மையா?- கடுப்பில் பாக் அமைச்சர் ஹினா ரப்பானி கர்

இந்திய பத்தரிக்கைகள் தன் ஆடை, அலங்காரத்தைப் பற்றி அதிகம் எழுதியதால் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர் கடுப்பாகியுள்ளார்.

பாகிஸ்தானின் முதல் பெண் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர். அந்நாட்டின் பணம் படைத்த, சக்திவாய்ந்த அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் பதவியேற்ற சில நாட்களில் இந்தியாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இந்தியாவுக்கு பேச்சுவார்த்தை நடத்த வந்த அவர் என்ன பேசப் போகிறார், என்ன பேசினார் என்பதை விட அவரது உடையலங்காரம், ஸ்டைல் ஆகியவை குறித்து தான் இந்திய ஊடகங்கள் அதிகமாக செய்திகள் வெளியிட்டன. அவர் வகை வகையான சுடிதார்கள், வைரக் கம்மல், முத்துமாலை, டிசைனர் கண்ணாடி, டிசைனர் பேக், விலை உயர்ந்த கோட் அணிந்து வலம் வந்தார். இதுதான் பெரிதாக பேசப்பட்டது, எழுதப்பட்டது, பார்க்கப்பட்டது.

பேச்சுவார்த்தையை மறந்துவிட்டு அலங்காரத்தைப் பற்றி செய்திகள் வெளியிட்டதால் இந்திய ஊடகங்கள் மீது கர் கோபம் கொண்டுள்ளார். டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு லாகூர் திரும்பிய அவரை செய்தியாளர்கள் விமான நிலையத்தில் சந்தித்தபோது தனது எரிச்சலை வெளியிட்டார். நிருபர்களைப் பார்த்த அவர் எரிச்சலுடன் எங்கு போனாலும் பத்திரிக்கையாளர்கள்தான் மொய்க்கிறார்கள். நீங்கள் இது போன்ற காரியங்களைச் செய்யக் கூடாது என்று கூறிவிட்டு விருட்டென்று இஸ்லாமாபாத் புறப்பட்டுப் போய் விட்டார்.

http://thatstamil.oneindia.in/news/2011/07/29/hina-rabbani-unhappy-over-her-depiction-as-fashion-icon-aid0128.html

  • தொடங்கியவர்

நல்ல முடிவு!

பத்திரிகைகள் வம்பளப்பது புதிதல்ல. இப்பொதெல்லாம் மேலை நாடுகளில் கூட மித்திரன் மாதிரி (tabloids) பத்திரிகைகள் தான் அதிகம். இந்தியாவில் பல மொழிகள், ஒரே மவுதான் வேறுவேறு ஆட்டுக்கல்கலில். சற்று தேவைக்கு அதிகமான பத்திரிகைகள் என்று கூடகூறலாம். அங்கே பத்திரிகைகள் வம்பளப்பது சர்வ சாதரணம். இது இலங்கை, சீனா, பாகிஸ்தான் சம்பத்தபடுமாயின் நாமும் அதில் பங்கு போட்டு கொள்கிறோம். ஆனால் பத்திரிகைகள் ஜனநாயகத்தின் ஆனி வேர் என்பதை இலங்கையுடன் இணைந்திருக்கும் நம்மை தவிர யாரும் முழுமையாக உணர்ந்திருக்க முடியாது. 1970 களில் “Lake House” அரசுடமையாக்கப்பட்டதுமுதல் உதன் ஆசிரியர் வைத்தியசாலையில் படுத்திருப்பதுவரை நாம் எத்தனையொ பத்திரிகை எதிர்ப்பு நடவடிகைகளைப் பார்த்துவிட்டோம். தமிழர்களின் இன்னல்களை மட்டுமல்ல, பத்திரிகைகளின் அடக்குமுறைகளையும் சர்வதேசம் கையைக்கட்டி பார்த்து நின்றதினால்த்தான் இலங்கை இன்றைக்கு சர்வதேசத்திற்கும் ஒரு பிரச்சனையானது. இந்தியா பத்திரிகை சுதந்திரத்தில் முன்னணியில் உள்ள ஒரு நாடாகாவிட்டாலும் அங்கே பத்திரிகைகள் தாம் விரும்பியவற்றை எழுதத்தான் செய்கின்றன.

பாகிஸ்தானிய அமைச்சர் பற்றிய இந்திய பத்திரிகைகளின் செய்திகள் வம்பு என்ற வரம்புக்கு மேல் எத்தனையோ காததூரம் சென்றிருந்தன என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அவற்றின் சுதந்திரமான இயக்கம்தான் அவை எதை செய்ய வேண்டுமோ அதை இந்த விடயத்திலும் சரியாய் செய்திருக்கின்றன.

பாகிஸ்தான் அயல்நாட்டு உறவுகளில் படும் கஸ்டங்களும் ஏதும் ஒருவரும் அறியாத இரகசியங்கள் அல்ல. அத்தோடு அந்த நாட்டிலும் எத்தனையோ திறமைசாலிகள் எல்லாவையிலும் முடக்கபட்டிருகிறர்கள். இந்த நிலையில் அயல்நாட்டு உறவு அரசியலில் அனுபவம் இல்லாத, பணமும் அழகும் உள்ள ஒரு பெண்ணை, திறமையென்ற கிஜாப்புக்குள் மறைத்து கபட நாடகம் ஆட முயன்றது பாகிஸ்தான். தனது தந்திரத்தை தானே சோதித்து பார்க்க அந்த ஏமாற்று பொமையை இந்தியாவுக்கு அனுப்பியும் வைத்தது பாகிஸ்தான். அப்போது எல்லோர் கண்களிலும் பட்டது இந்திய கிசுகிசு பத்திரிகைகள் பாய்ந்து அடித்துகொண்டு போய் அந்த பெண்ணை படம் எடுத்தது மட்டுமே. ஆனால் அவர்கள் இந்த பெண்ணை பாகிஸ்தான் இந்தியா மீது ஏவிய ஆயுதம் என்று வர்ணித்ததோ அல்லது அவர் சந்திக்க இருந்த அரசியல் வாதிகள் மீது ஒருகாவல் கண் வைத்திருந்தையோ எல்லோரும் அவதானித்திருந்திருக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் பணத்திற்கும், சுகத்திற்கும் சோடைபோவதில் யாருக்கும் கெளித்தவர்கள் அல்ல. இலங்கை வந்துபோகும் ஒப்பந்தப்பேச்சு அரசியல் அதிகாரிகள் என்ன பேரம் பேசி மாதம் ஒருமுறை இலங்கை வருபவர்கள் என்பது எல்லோருக்குமே ஒரு சந்தேகம். அந்த மாதிரி இந்திய அரசியல் வாதிகளை வெற்றி கண்ட இலங்கையின் புத்தபோதனைகளை நம்பித்தான் இஸ்லாமிய நாடான பாகிஸ்தான் கிஜாப்பு போட்டு இப்படி ஒரு விசப்பரீச்சையில் இறங்கி பார்த்ததா என்பது அடுத்த கேள்விக்குறி..

ஆனால் நல்ல முடிவு. இந்த கிசுகிசு பத்திரிகைகள் கிருஸ்ணா, அத்வானி போறோர் மீது வைத்தகண் வாங்காத்தினால், இந்தியா இந்தமுறை எதையும் இழக்கவில்லை. ஆடை அலங்காரத்தை காட்ட வந்த பெண் இந்திய பத்திரிகைகள் தன் உடையைத்தான் பார்க்கின்றன என்று கோபித்துகொண்டு போய்விடார். வந்த காரியம் கைகூடவில்லைப்போலிருக்கு.

இஸ்லாமியமதம், ஆண்கள் பார்க்காமல் இருக்க பெண்கள் பேர்க்க போடவேண்டும் என்று வற்புறுத்துகின்றது. கபடமின்றி நடக்க விரும்பியிருந்தால், இந்த இஸ்லாமிய நாட்டுப்பெண் இந்தியாவிற்கு வரும்போது பேர்க்கா அனிந்து வந்திருக்கலாம். அந்த இஸ்லாமிய நாட்டு அரசியல் வாதிகளும் அதை இவருக்கு அறிவுறித்தியிருந்திருக்கலாம். அப்போது இவரின் ஆடை அலங்காரங்களை இந்திய கிசுகிசு பத்திரிகைகள் பார்த்தால் அது இஸ்லாமிய வழமை என்றுவிட்டு போயிருந்திருப்பார்கள்.

அது சரி, இந்திய அரசியல் வாதிகள் இலங்கை வரும்போது இந்த பத்திரிகைகளையும் அழத்துவர ஏதாவது வழியுண்டா?

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.