Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் 2006

Featured Replies

1வது டெஸ்ட் போட்டி

நேன்று லாகூரில் நடந்து முடிந்த பாகிஸ்தான் இந்தியா அணிகளுக்கிடையிலான 1வது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது காலநிலை சரியில்லாத காரணத்தால் 4ம் 5ம் நாள் ஆட்டங்கள் தடைப்பட்டிருந்தன

நாணய சுழச்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது 1வது இன்னிங்ஸ்சில் மிகப் பெரியதொரு ஓட்ட இலக்காக 679க்கு 7விக்கட்டுக்கள் என்ற நிலையில் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது மிகவும் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியில்

Youns khan - 199 Mohd Yosuf -163 Afridi - 103 Akmal - 102 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்கள் அடுத்து களம் இறங்கிய இந்திய அணி நாங்களும் துடுப்பாட்டத்தில் சளைத்தவர்கள் இல்லை எண்டதை நிரூபித்தார்கள் இறுதி நாள் முடிவில் 1 விக்கட் இழப்புக்கு 410ஓட்டங்களை பெற்றது.

V Sehwag - 254

*R Dravid -128

பாகிஸ்தானை பொறுத்தமட்டில் ஆடுகளங்கள் பொதுவாக பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமைக்கப்படுவதே வழக்கம் (சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை தன்னகத்தே கொண்ட ஒரு அணி) ஆனால் ஏனோ தெரியவில்லை இந்த போட்டி நடந்த ஆடுகளம் துடுப்பாட்டத்துக்கு இரு அணியினருக்;கும் சாதகமாக அமைந்து விட்டதால் போட்டி அவ்வளவு விறுவிறுப்பாக அமையவில்லை. . . .

ஸ்கோர் விபரம்(1வது இன்னிங்ஸ்)

பாகிஸ்தான் - 679/7 dec

இந்தியா - 410/1

http://usa.cricinfo.com/db/ARCHIVE/2005-06...T1_13-17JAN2006

ஆட்ட நாயகன் -V Sehwag - 254runs

58060.jpg

Naved-ul-Hasan dismissed Virender Sehwag just 4 runs short of a world record partnership,

  • Replies 53
  • Views 10.1k
  • Created
  • Last Reply

முதல் விக்கெட்டுக்கு இன்னும் 4 ரன்கள் அதிகமாக எடுத்திருந்தால் அது 50 வருட உலக சாதனையை முறியடித்திருக்கும்....

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்த்தான் VS. இந்தியா 2வது ரெஸ்ற் போட்டியை நேரடியாக வின்னம்பிளேயர் (winamp player) மூலம் கண்டுகளிக்கலாம்.

Winamp :arrow: View :arrow: Media Library :arrow: SHOUTcast tv :arrow: and then search "cri ".. Enjoy :wink: :P :P

  • தொடங்கியவர்

2வது டெஸ்ட் போட்டி

இன்று Faisalabad.நடந்து முடிந்த பாகிஸ்தான் இந்தியா அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் போட்டியும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது

நாணய சுழச்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது 1வது இன்னிங்ஸ்சில் சென்ற முறையைப் போல பெரியதொரு இலக்கான 588 ஓட்டங்களை எடுத்து அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது சிறப்பாக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியில் Afridi - 156 Inzam haq - 103 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்கள் அடுத்து களம் இறங்கிய இந்திய அணியும் சிறப்பாக விளையாடி 603 என்ற பெரிய இலக்கை அடைந்தனர் இந்திய அணி சார்பில்

Rahul Dravid -103 Dhoni -148 Luxman -90 pathan -90 வெறும் 15ஓட்டங்கள் முன்னிலையில் இந்தியா இருக்க பாகிஸ்தான் தமது 2வது இன்னிங்சை தொடங்கியது துடுப்பாட்டத்துக்கு எற்ற களம் எண்ட படியாலை வீரர்களில் துடுப்பாட்டத்தில் தொடர்ந்து பிரகாசித்தார்கள் முடிவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 490ஓட்டங்களை பாகிஸ்தான் பெற்றது அணி சார்பாக Younis Khan -194 Mohammad Yousuf -126 அடுத்து இருந்த 14 ஓவர்களில் இந்தியா விக்கட் இழப்பின்றி 21 ஓட்டங்களைப் பெற்றது

இந்த ஆடுகளமும் துடுப்பாட்டக்காரருக்கு சாதகமாக இருந்தபடியாலை ஆட்டம் பெரிதாக வரவேற்பை பெற்றிருக்கவில்லை வீரர்கள் தங்களுக்கு நல்ல துடுப்பாட்ட பயிற்சியாக எடுத்துக் கொண்டார்கள்

ஸ்கோர் விபரம்

பாகிஸ்தான் - 588 மற்றும் 490

இந்தியா - 603 மற்றும் 21/0

http://usa.cricinfo.com/db/NEW/LIVE/frames...-25JAN2006.html

58370.jpg

Younis Khan 83 and 194

3வது டெஸ்ட் போட்டி பரபரப்பாக இருக்கும் என நினைக்கின்றேன்....பார்ப்போம்....

:lol:

இந்திய அணியினரின் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

cri44yz.jpg

கராச்சி அருகே ஒரு உணவு விடுதியில், சச்சின், அவரது மனைவி அஞ்சலி, மகள் சாரா, மகன் அர்ஜூன்

cri23nk.jpg

ஆழ்ந்த யோசனையில் சவுரவ் கங்குலி. அருகில் சச்சின்

cri51az.jpg

தங்கள் குடும்பத்தினருடன் சச்சின், சவுரவ்

படங்கள் நன்றி - தினமணி

  • கருத்துக்கள உறவுகள்

21 வயதான இர்பான் பதான் உலக சாதனை..

Pak vs IND 3வது ரெஸ்ற் மச்சில் முதலவது ஆட்ட நாள் தொடக்கமான இன்று இந்திய அணியின் வேகப்பந்து & ஓப்பினர் போலர் இர்பான் பதான் ஹட் ரிக் உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார், அதுவும் முதலாவது ஓவரிலேயே 3 விக்கட்டுக்களை விழ்த்தியது இதுவே முதல் தடவை..

3வதும் கடைசியுமான ரெஸ்ற் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்குமென அனைவரும் எதிர்பார்த்தபடி தற்பொழுது நிகழ்ந்து வருகிறது, இந்த ரெஸ்ரில் பாகிஸ்த்தான் அணித்தலைவர் இன்சமாமுல் ஹக் விளையாடவில்லை, யுனிஸ்கானே கப்டன்,

இன்று ஆரம்பமான 3வது ரெஸ்ற் போட்டில், இந்திய அணி டொஸ்ஸில் வெற்றி பெற்று, முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது, பாகிஸ்த்தானின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக சல்மான் புற் மற்றும் இம்ரான் Fஅறற் களம் இறங்கினர், வழமையான இந்திய ஆரம்ப பந்துவீச்சாளர் இர்பான் பதான் பந்தை வீசினார், அவரின் முதலாவது ஒவரில் 4வது பந்தில் (அதாவது 0.4) சல்மான் புற் எதுவித ஓட்டங்களையும் பெறாமல் ராவிட்டிடம் பிடிகொடுத்து டக்கில் ஆட்டமிழந்தார், அதனைதொடர்ந்து வந்தார் அணித்தலைவர் யுனிஸ் கான் LBW முறையில் பதானின் அடுத்தபந்தில் (0.5) வெளியேறினார், அதன் பிறகு வந்த அனுபவம் வாய்ந்த வீரர் என பாகிஸ்த்தான் நம்பி இருந்த முகமட் யூசும் (முதலில் யுசவ் யூகானா என்று கிறிஸ்தவ சமயத்தை சார்ந்திருந்த இவர் பின்னர் இஸ்லாம் சமயத்துக்கு மாறி முகமட் யுசவ் என்று மாற்றிக்கொண்டார்) 0.6 பத்தானிபந்தில் கிளின் போல்ட் ஆகினார், இர்பான் பதான் உலக சாதனையை (அதாவது முதலாவது ஓவரில் 3 விக்கட்களை வீழ்த்தியது) படைத்தார்,, :idea:

584742tf.jpg

ஹட் ரிக் விக்கட் {முகமட் யுசவ் கிளின் போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழக்கிறார்}

584756kp.jpg

இந்திய அணியின் ஒல்ரவுண்டர் இர்பான் பதான், உலக சாதனை படைத்த வெற்றிக்களிப்பில்..

இந்த ஹட் ரிக் சாதனை மிக முக்கியமானது, ஏனெனில் ரெஸ்ற் போட்டியில், அதுவும் முதலாவது ஓவரில் அதுவும் அனுபவம் வாய்ந்த யுனிஸ்கான், யூசவ் முகமட் ஆகியோரை வீழ்த்தியது இர்பாபன் பதானுக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி, :idea:

இர்பான் பதானுக்கு வாழ்த்துக்கள்... :idea:

  • தொடங்கியவர்

மிக நாட்களுக்குப்பின் இந்தியஅணிக்கு ஒரு சகலதுறை ஆட்டக்காரன இர்பான் பத்தான் கிடைத்தது ஒரு கொடை..... .2வது ரெஸ்டில் துடுப்பாட்ட திறமையை காட்டிய இவர் இந்த போட்டியில் முதல் ஓவரில் ஹட்ரிக் மூலம் பந்து வீச்சில் உலக சாதனை ஏற்படுத்தியுள்ளார் ஆங்கிலேயரின் ஆதிக்கமான கிரிக்கெட் விளையாட்டில் ஆசிய வீரர்கள் சாதனைகளை ஏற்படுத்துவது எமக்கு பெருமைதானே............

இர்பான் பத்தானுக்கு வாழ்த்துக்கள்

இந்தியாவுக்கும் ஒரு வாசிம் அக்கிரம் வந்தாச்சு என்றீங்கள்.. பர்தானுக்கு வாழ்த்துக்கள். இந்த வேகத்திலேயே சென்றால் நிச்சயம் அவருக்கு சிறப்பான எதிர்காலம் உண்டு..! :P :idea:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா மிகவும் ஆபரமாக பாகிஸ்த்தானிடம் 341 ஓட்டங்களால் மண்ணை கவ்வியது,,, :P :(:lol: இதன் மூலம் பாகிஸ்த்தான் இந்தியாவின் மண்டையில் "நச்" எண்டு கடப்பாறையால் ஓங்கி போட்டமாதிரி மிகப்பெரிய வெற்றியையும், வெற்றித்தொடரையும் தனதாக்கிக்கொண்டது,,,, :P :P :P

I am VERY VERY HAPPY

  • தொடங்கியவர்

3வது டெஸ்ட் போட்டி

பாகிஸ்தான் 341 ஓட்டங்களால் வெற்றி

இன்று கராச்சியில் நடந்து முடிந்த பாகிஸ்தான் இந்தியா அணிகளுக்கிடையிலான 3வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் 341 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடர் கிண்ணத்தை கைப்பற்றியது ஏற்கனவே நடந்த 2போட்டிகளும் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது எல்லோருக்கும் தெரியும் 5நாட்கள் கொண்ட போட்டி இந்திய வீரர்களின் சகிக்கமுடியாத விளையாட்டால் 4கு நாட்களிலேயே முடிவுக்கு வந்தது

இனி 3வது டெஸ்ட் போட்டி பற்றிய சிறு விபரணம்

நாணய சுழச்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது

1ம் நாள்

1வது இன்னிங்ஸ்சில் முதல் நாளிலேயே சகல விக்கட்டுகளையும் இழந்து 245ஓட்டங்களை மட்டுமே பெற்றது முதல் ஓவரிலேயே இர்பான் பதானிடம் ஹட்ரிக் முறையில் 3விக்கட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணிக்கு Akmalபெற்ற 109 ஓட்டங்கள் மூலம் இந்த இலக்கையாவது அடைய முடிந்தது அடுத்து களம் இறங்கிய இந்திய அணியும் அடுத்தடுத்து விக்கட்டுகளை இழந்தது முதல்நாள் ஆட்டமுடிவில் 4 விக்கட்டுகளை இழந்து 74ஓட்டங்களை மாத்திரமே பெற்றது

2ம் நாள்

தொடர்ந்து விளையாடிய இந்திய அணி குறிப்பிட்ட இடைவெளிகளில் சகல விக்கட்டுகளையும் இழந்து இறுதியில் 238ஒட்டங்களை மாத்திரமே பெற்றது அணி சார்பாக Yuvaraj singh -46 Irfan Pathan -40 Ganguly - 34 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர் அடுத்து 2வது இன்னிங்சை தொடர்ந்த பாகிஸ்தான் அணி மிகவும் நிதானமாக விளையாடியது ஆட்ட நேர முடிவில் 2 விக்கட்டுகள் இழப்புக்கு 174ஓட்டங்களைப் பெற்றிருந்தது

3ம் நாள்

முதலாவது இன்னிங்சில் முதல் பந்திலேயே அவுட் ஆன Youns Khan(77) Mohamed YousufT(97) மிகவும் சிறப்பாக விளையாடினர் இருவராலும் சதம் அடிக்கமுடியாமல் போனது துர்அதிஷ்டமே அதன் பிறகு வந்த Faisal Iqbal (139) Afridi(60) Abdul razaq (90)தங்கள் பங்குக்கு சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்த வழி செய்தார்கள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் 5விக்கட் இழப்புக்கு 511ஓட்டங்களைப் பெற்றிருந்தார்கள் ஆட்டமிழந்த ஜந்த வீரர்களும் 50 ரண்களுக்க மேலே அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது

4ம் நாள்

இன்றும் பாகிஸ்தான் நிதானத்துடன் விளையாடியது Faisal Iqbal(136) சதத்தினை புர்த்தி செய்ய Abdul razaq (90) 10 ஓட்டங்களால் அந்த வாய்ப்பை தவற விட்டார் மதிய இடைவேளைக்கு சற்று முன்னதாக 7 விக்கட்டுகளுக்கு 599ஓட்டங்களை எடுத்திருந்த போது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது கிட்டத்தட்ட 600க்கு மேலை ஓட்டத்தை எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸ் போலவே அடுத்தடுத்து விக்கட்டுகளை இழந்தது குறிப்பாக Yuvaj singh(122) தவிர வேறு எவருமே சரியாக ஆடாததால் இந்தியா அணி சகல விக்கட்டுகளையும் இழந்து ஓட்டங்களை மாத்திரமே பெற்றது

இதன் மூலம் 3 டெஸ்ட்களை கொண்ட தொடரில் பாகிஸ்தான் 1 : 0 என்ற நிலையில் டெஸ்ட் தொடருக்குரிய கிண்ணத்தை கைப்பற்றியது

ஸ்கோர் விபரம்

பாகிஸ்தான் - 245 மற்றும் 599/7 dec

இந்தியா - 238 மற்றும் 265

http://usa.cricinfo.com/db/NEW/LIVE/frames...-02FEB2006.html

Man of the Match: Kamran Akmal

Player of the Series: Younis Khan

58520.jpg58613.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இந்த 3வது ரெஸ்ட் போட்டி மிகவும் முக்கியமான போட்டி என்று தெரிந்துகூட இந்திய பந்து வீச்சாளர்களின் அசட்டைத்தனமோ அல்லது இயலாமைத்தனமோ இந்தியாவை படு தோல்வி அடையச்செய்துவிட்டது,,

உண்மையில் இந்திய பாகிஸ்த்தான் அணிகள் விளையாடினால் இரு அணிகளும் மற்றைய உலக அணிகளுடன் விளையாடுவதைப்போல் இல்லாமல் மிகவும் மூர்க்கத்தனமாக விளையாடுவார்கள், காரணம் தென் ஆசிய பிராந்தியத்தில் இந்தியா பாகிஸ்த்தான் நாடுகளுக்கிடையில் எரிச்சல் பொறாமை..

இந்த 3வது ரெஸ்ரில் 2வது இன்னிங்க்சை பார்த்தபொழுது சிரிப்புத்தான் வந்தது, ஏனெண்டால் இந்திய அணியினரின் அனுபவம் வாய்ந்த துடுப்பாட்ட வீரர்கள் (என்ற நினைப்புள்ள வீரர்கள்) சேவாக், லக்ஷ்மன், சச்சின் ரெண்டுல்கார் ஆகியோர் முகமட் அசிவின் பந்தில் கிளீன் போல்டாகி வெளியேறியதுதான்,, அதைவிட தோனி, பதான் போன்ற வீரர்கள் தங்களின் நாடுகளி வைத்து தூள் பறத்தினது போல பாகிஸ்த்தானில் வைத்து அப்படி செய்யலாமென்று நினைத்தது தவடுபொடியாகிவிட்டது, இன்றைய போட்டியில் இந்திய அணி மிகவும் திணறியது என்று சொல்லவேண்டும்,, இன்றை போட்டியில் சதம் அடித்த யுவராஜ் சிங்க் உட்பட அனைவரும் பாகிஸ்த்தான் வேகப்பந்து வீச்சாளர்களிடம் தோற்றுவிட்டனர்,,, :P கிட்டத்தட்ட 2 நாட்கள் 600 ஓட்டங்களை எடுக்கவேண்டும், சுலபமானதும் கூட ஏனெனில் பல போட்டிகளில் இந்திய பட்ஸ்மெங்கள் பாகிஸ்த்தனை வாங்கு வாங்கு என்று வாங்கினார்கள், ஆனால் இறுதியும், முக்கியமானதுமான போட்டியில் கோட்டை விட்டுவிட்டார்கள்,,, :oops: :( :P

முகமட் அசீவ், அப்துல் ராசாக், கம்ரன் அக்மால், டனிஸ் கனேரியா, சஹித் அப்ரிடி, போன்றவர்கள் அசத்தலான விளையாட்டின் மூலம் மிகவும் ஒரு கெளரவமான வெற்றியை பாகிஸ்த்தான் அணி பெற்றுள்ளது என்று சொன்னா மிகையாகாது,,, :idea: :idea:

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள ஒரு அணி கூட மரண அடி வாங்கி கொண்டிருக்கிறதாமே? திரும்பி வரும் போது குற்றுயிரும், குலை உயிருமாக தான் வரும் என்று பேசிக் கொள்கிறார்களே?

  • தொடங்கியவர்

விளையாட்டை விளையாட்டாகப் பாக்கவேணும் அரசியலுக்கு அப்பாற்பட்டதுகள் இவை..............இந்தியாவை பொறுத்தமட்டில் தலைக்கனம் கூடின ஆட்டக்காரரே அணியில் இருகிறார்கள் இதுக்கு காரணமும் இந்தியா மக்கள்தான் சினிமா ஹீரோவை தூக்கி வைப்பது போல கிரிக்கெட் அட்டக்காரராயும் ஹீரோவாக்கிப் பாக்கிறார்கள் இவ்வளவு அனுபவமுள்ள ஆட்டக்காரர் இருந்தும் கூட இந்திய அணியால் இந்த தோல்வியை தடுக்க முடியவில்லையே பாகிஸ்தானை பொறுத்த மட்டில் அணித்தலைவர் விளையாட நிலையிலும் (இன்சாம் ஹக்) அவர்களின் அசத்தலான விளையாட்டுக்கு எந்த கிரிகெட் ரசிகனும் தனது பாராட்டை தெரிவிப்பதில் தப்பில்லை...........

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள ஒரு அணி கூட மரண அடி வாங்கி கொண்டிருக்கிறதாமே? திரும்பி வரும் போது குற்றுயிரும், குலை உயிருமாக தான் வரும் என்று பேசிக் கொள்கிறார்களே?

நல்ல செய்தி!! :P :P :P

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள ஒரு அணி கூட மரண அடி வாங்கி கொண்டிருக்கிறதாமே? திரும்பி வரும் போது குற்றுயிரும், குலை உயிருமாக தான் வரும் என்று பேசிக் கொள்கிறார்களே?

உண்மைதானப்பா,, எனக்கு பயங்கர கவலை,, பின்ன 2 போட்டிகளில் இலங்கை அணி வென்றுவிட்டது, இந்தியாவிடம், நியுசிலாந்திடம் அடிவாங்கினமாதிரி இந்த வி.பி போட்டிகளிலும் பயங்கரமா அடிவாங்கும் இலங்கை எண்டு நினைச்சன்,,, சா,,,, :oops: :(:lol:

2007 உலககிண்ணப்போட்டிக்கு பிறகு இலங்கை அணி சிம்ப்பாவே, கென்யா அணிகளுடன் போட்டி போடவே கஸ்ரப்படும்,, அப்படி ஆகனும் என்றுறதுதான் என்னுடைய ஆசை,,, :wink: :P

வெற்றி தொல்விகளெல்லாம் விளையாட்டில் சகஜம்தானே.....

நம்மை நாமே தேற்றிக்கொள்ள வேண்டியதுதான். :(

பெரிய இலக்கு நோக்கி நிதானமாக முன்னேறி இருக்க வேண்டிய இந்திய அணியின் நிதானமில்லாத துடுப்பாட்டமும்.. பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான களத்தை இரண்டாவது இன்னிங்ஸில் சரியாகப் பயன்படுத்தாமையுமே தோல்விக்கு காரணம்..!

பாகிஸ்தான் மேலே சொன்ன இரண்டையும் தமக்குரிய வகையில் செய்து வெற்றியைத் தமதாக்கிக் கொண்டனர்.

பாகிஸ்தான் அணிக்கு எமது வாழ்த்துக்கள்..!

அப்படியே போட்டித் தொடரை முழுமையாக கிரமமாக இங்கு பதிந்த முகத்தாருக்கு சிறப்பு நன்றிகள்..! :P

பெரிய இலக்கு நோக்கி நிதானமாக முன்னேறி இருக்க வேண்டிய இந்திய அணியின் நிதானமில்லாத துடுப்பாட்டமும்.. பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான களத்தை இரண்டாவது இன்னிங்ஸில் சரியாகப் பயன்படுத்தாமையுமே தோல்விக்கு காரணம்..!

பாகிஸ்தான் மேலே சொன்ன இரண்டையும் தமக்குரிய வகையில் செய்து வெற்றியைத் தமதாக்கிக் கொண்டனர்.

பாகிஸ்தான் அணிக்கு எமது வாழ்த்துக்கள்..!

அப்படியே போட்டித் தொடரை முழுமையாக கிரமமாக இங்கு பதிந்த முகத்தாருக்கு சிறப்பு நன்றிகள்..! :P

நம்மட வாழ்த்தையும் பாகிஸ்தான் அணிக்கு சொல்லுங்கோ பிள்ளையள்

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

_41281764_pkngal1.jpg

போட்டியின் போது Virender Sehwag க்கின் மிடில் ஸ்ரம் Mohammad Asif இன் பந்துவீச்சில் புடுங்கி வீசப்படும் காட்சி...!

இதைத்தான் யாழ்ப்பாண நகர வழக்கில்.. "போடுறா மச்சான் பொல்லுப் பறக்க" என்பார்கள்..! :wink: :P

நன்றி - படம் பிபிசி.கொம்

தயவு செய்து விளையாட்டில் அரசியலை கலக்காமல் நட்புணர்வுடன் விளையாட்டு செய்திகளை பகிர்ந்துகொண்டு கலந்துரையாடுங்கள்.

தயவு செய்து விளையாட்டில் அரசியலை கலக்காமல் நட்புணர்வுடன் விளையாட்டு செய்திகளை பகிர்ந்துகொண்டு கலந்துரையாடுங்கள்.

நீங்கள் சொல்லவ்து சரி தான் எனக்கு என்ன தான் நடந்தாலும் இந்தியா Cricketல் தோல்வி அடைந்த கஸ்டமாக இருக்கும் சின்ன வயதில் இருந்து சப்போர்ட் செய்ததால :):lol: அதுவும் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தால் சொல்லவே வேண்டாம் :twisted:

  • கருத்துக்கள உறவுகள்

3வது ரெஸ்ரில் தோல்வி அடைந்த இந்திய கிரிக்கட் அணி மேல் இந்திய ரசிகர்கள் கொதிப்பில் இருக்கிறார்கள் என அறியமுடிகிறது, லக்கியின் வாயில் மண்ணை போட்டுவிட்டார்கள்,, :oops: :)

சச்சின் மேல் வெறுப்பு ஏற்படுவதாக பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள், காரணம் அவர் இப்பொழுது சரியாக ஆடுவதில்லை என்றும், இருந்து இருந்துவிட்டு சுமார ஆடிவிட்டு போகிறார்கள் என்று இந்திய ரசிகர்கள் புலம்புகிறார்கள்,, இக்கட்டான நேரத்தில் போட்டியை றோவில் முடிக்கலாம் என்று சச்சினை நம்பி இருந்த நேரத்தில் கிளின் போல்டாகி போனது இந்திய ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாத்ததை ஏற்படுத்தி உள்ளது,, :idea:

ராவிட்டை ஒரு இரும்பு திரை என வர்ணித்தார்கள் வாயை பாகிஸ்த்தான் வேக பந்துவீச்சாளர்கள் அடைத்துவீட்டார்கள்.. :lol:

இந்த நிலையில் பாகிஸ்த்தான் அணியின் வேகபந்துவீச்சாளர் ( மணிக்கு 151 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் ஒரே ஒரு வீரர்) சோகிப் அக்தர் மீது ஒரு புகார் எழுதுந்துள்ளது, அதாவது அவர் பந்தை எறிவதாக அந்த புகாரை இந்திய அணியின் பயிற்சியாளர் தனியார் தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார், 3வது ரெஸ்ற் 2வது இன்னிங்க்ஸில் சோகிப் அக்தர் வீசிய புயல் பந்து சச்சினின் ஹெல் மட்டை பலமாக தாக்கியது, அவர் அக்தர் பந்து வீசிய முறையை ரீவியில் பலமுறை பரிசிலித்தபொழுது அக்தரின் எல்போ வளைவதாக தெரிவித்துள்ளனர், ஏற்கனவே 3 முறை குற்றம்சாட்டப்பட்டு ஐ.சி.சி யினால் பரிசோதனைக்கு உட்படுத்தி தவறில்லை என்று தீர்ப்பு கூறிய பின் மீண்டும் இந்தியா பயிற்சியாளர் புகார் கூறியிருப்பது மீண்டு பாகிஸ்த்தான் இந்திய அணிகளிடயே சர்ச்சயை உருவாக்கி உள்ளது,, :oops:

நானும் பார்த்தேன் (ரீவியில்), அக்தர் சில வேளைகளில் பந்தை எறிவது போலத்தா தெரிகிறது, 151கி,மி வேகத்தை தாண்டி பந்து வரும்பொழுது அவரின் கை மடிவதாக நேற்று ரிவியில் காண்பித்தார்கள்.. :idea: :roll:

அவுஸ்திரேலிய அணிக்கு இருந்த வியாதி இந்திய அணிக்கும் வந்திட்டுதோ...தெரியல்ல..! முரளியைப் போட்டு படாதபாடு படுத்தினாங்க..கடைசியில என்ன ஆச்சு..??! :P :wink: :idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.