Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னையில் சிங்களவருக்கு அடி உதை – சிங்களவரின் உடைகள் சாலையில் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு நல்ல சந்தோசம்.விசா எடுத்து வந்தவனுக்கு அடிச்சா விளக்கம் கொடுக்க வேணும் எணடு பயப்படற ஆட்களுக்கு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு சிங்களவன் அடிச்சுப்போட்டு விளக்கம் குடுத்தமாதிரித்தான் இதுவும் என்று சொல்ல விரும்புறன்.

எனக்கு நல்ல சந்தோசம்.விசா எடுத்து வந்தவனுக்கு அடிச்சா விளக்கம் கொடுக்க வேணும் எணடு பயப்படற ஆட்களுக்கு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு சிங்களவன் அடிச்சுப்போட்டு விளக்கம் குடுத்தமாதிரித்தான் இதுவும் என்று சொல்ல விரும்புறன்.

பலே அப்படி போடுங்க நன்னா ஒன்னு அவங்க முதுகிலை!

ஆடிக்கறக்கிறமாட்டை ஆடிக்கறக்கவேணும்

பாடிக்கறக்கிற மாட்டை பாடிக்கறக்க வேணும்.

தமிழக சட்ட ஒழுங்கை கெடுக்க சிங்களம் முயற்சி

சிங்களம் அடிபட்ட “பாம்பை” போல இப்போது உணர்கிறது. நாலாவது வன்னிப் போர் நடக்கும் போதுகூட, தமிழ்நாட்டில் மற்றும் இந்தியாவில் தங்களுக்கு “எதிரான” குரல் எழுப்பப்பட வில்லை என்று “இறுமாந்திருந்த” வேளையில் எல்லாமே இப்போது தங்களுக்கு எதிராக நடப்பதாக “சிங்களம்” கணக்கு போடுகிறார்கள். ” புலிகளை பயங்கரவாதிகள்” என்று முத்திரை குத்தியபோது, உலகம் ஒத்துழைத்தது. “அப்பாவி மக்களும் புலிகளுடன் சேர்ந்த போராளிகள்தான்” என்று சிங்களம் முத்திரை குத்திய போதும், உலகம் கண்டுகொள்ளவில்லை. “வெள்ளைக் கொடியுடன் சரனைந்த புலிகளை” படுகொலை செய்தபோதும், உலகம் “பெரிதாக கண்டுகொள்ளவில்லை”. இப்போது என்ன வந்துவிட்டது? “தமிழக சட்டமன்றமும், இந்திய நாடாளுமன்றமும்” சிங்களத்திற்கு எதிராக முனு, முணுக்கின்றன? இதுதான் சிங்களம் இன்று கேட்கும் கேள்வி.

உண்மைதான். அப்பாவி ஈழத் தமிழர் கொல்லப்பட்டபோதும், பகிரங்க இன அழிப்பு நடந்தபோத்யும், புலிகளை எதிர்த்து “ரசாயனக் குண்டுகளையும், கொத்துக் குண்டுகளையும்” பயோன்படுத்திய போதும, தமிழக மக்களை அடக்கி ஆள ஒரு கருணாநிதி முதல்வராக இருந்தார். அந்த சூழலின் “மௌனத்தை” உடைக்க “முத்துக் குமார்” என்ற தம்பி “உயிராயுதமாக” தன்னைத்தானே ஆக்கிக்கொண்டு, பெரும் “தீப்பொறியை” கிளப்பி விட முயன்றான். அதயும் அடக்க “ஜாபர் சேட்” போன்றோர் முயன்று வெற்றி பெற்றனர். இப்போது “பீனிக்ஸ் பறவை” போல மீண்டும் தமிழன்” எழுகிறான்.இந்த முறை “ஜெயலலிதா” முகம் “தமிழ் முகமாக” மாறி, “தமிழர் எழுச்சிக்கு” பயன்படுகிறது. இது அடுக்குமா? என்று சிங்களம் அலறுகிறது. “எத்தனையோ தேசிய இனப் பிரச்சனைகளை” எதிர்கொண்டு சமாளித்தவர்கள் நாங்கள். எங்களிடமே இந்த தமிழினம் விளையாடுகிறதா?”" என்று மத்திய உளவு நிறுவனமான “ரா’ வேலை செய்கிறது. திட்டம் தீட்டுகிறது. சூழ்ச்சி செய்கிறது.

அதன் விளைவே “திடீரென சிங்கள எம்.பி.களை ” நாடாளுமனரதிற்கு அழைப்பதும், அவர்களுக்கு “எதிர்ப்பு” கொடுத்தால், அதற்காக ” வந்தவர்களிடம் “மன்னிப்பு” கேட்பதும் , அதன்மூலம் “இந்தியாவின் மானத்தை கப்பலேட்டிரிவிடுவதும்” வட இந்திய நாடாளுமன்ற முறைகளாக இருக்கலாம். அதுவும் “திட்டமிட்டு” நடத்தப்பட்டதாக தெரிகிறது. “டில்லிக்கு சொல்லாமல் தமிழக சட்டப்பேரவை போர்க்குற்றவாளி, மற்றும் பொருளாதார தடை” என்று “தீர்மானம்” போட்டதை , மத்திய அரசும், பிரதமர் அலுவலகமும், வெளிவிவகாரத் துறையும், “ரசிக்கவில்லை”. அந்த “தீர்மானங்களை” வைத்து ஹிலாறி கிளிண்டன், முதல்வர் ஜெயலலிதாவை சந்த்தித்தையும், அவர்கள் வரவேற்கவில்லை. இலங்கை எம்.பி.கள் “நாடாளுமன்றம் வந்தபோது, அதிமுக உறப்பினர்கள் எதிர்ப்பு முழக்கம் இட்டதையும்” டில்லி வெறுப்பாகவே பார்க்கத் தொடங்கி உள்ளது. அவற்றிற்கு எல்லாம் பதில் கொடுக்க டில்லி நினைக்கிறது.

தமிழ்நாட்டில் “ஈழப்ப் பிரச்சனையை”‘ ஒட்டி சட்ட-ஒழுங்கை குலைத்தால், தானாகவே அதிமுக அரசு தனது ” சட்ட-ஒழுங்கை ‘பாதுகாக்க ” தமிழின உணர்வாளர்கள்” மீது “நடவடிக்கை” எடுப்பார்கள் என்று டில்லிக்கு கொழும்பு ஆலோசனை கூறியுள்ளது. இது “பழைய” அதிகாரிகள் சிலர் மூலமும் உறுதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது. அதை ஒட்டி, கொழும்பு தனது உளவுத் துறையான “என்.ஐ.பி.” மூலம் “ஐம்பது சிங்கள இளைஞர்களை” இந்தியா வந்திருப்பவர்களை சென்னைக்கு அனுப்பி, அவர்களை “பகிரங்க ஊர்வலமாக” வெளியே தெரியும்படி “பவனி வர” ஏற்பாடு செய்தது. புதன்கிழமை காலை அந்த திட்டம் செயலுக்கு வந்தது. சென்றல் ரயில் நிலையத்திலிருந்து “ஐம்பது சிங்கள இளைஞர்கள் சிங்கள எழுத்துக்கள் கொண்ட பனியன்களை மாட்டிக்கொண்டு” ஊர்வலம் போல நடந்துவந்தனர். அவர்களது கைகளில் “சிறிய சிங்களக் கொடிகளை” பிடித்துக் கொண்டு வந்தனர். அத்தகைய ஊர்வலத்திற்கு காவல்துறை இங்குள்ள “தமிழர்களுக்கே கூட” அனுமதி கொடுப்பதில்லை. அப்படி “காவலர் அனுமதி இல்லாமல்” அந்த சிங்கள படையெடுப்பு சென்னை நகரில் பகிரங்கமாக நடந்தது.

அந்த சிங்கள ஊர்வலம் நேராக “புரசவாக்கத்தை: அடைந்து “ஏ.ஜே.விடுதி” என்ற வட இந்தியர் விடுதிக்கு போய் சேர்ந்தது. சிங்களமும் டில்லியும் சேர்ந்து போட்ட “சதி” நடைபெறாமல், அந்த “சிங்களப் பொடியன்களுக்கு” உள்ளேயே “ஜே.வி.பி. என்றும், ராஜபக்சே ஆள்” என்றும் சண்டை அவ்ந்துவிட்டது. அந்த சண்டை “புரசைவாக்கம் கடைவீதியை” அசிங்கப்ப்டுத்தியது. அதுகண்ட “தமிழ் இளைஞர்கள்” எங்கள் ஊருக்கு வந்து என் சட்ட-ஒழுங்கை குலைகிறீர்கள் என்று கேள்வி கேட்டார்கள். கேள்வி கேட்டது குற்றமாகிப் போனதால், செய்தி அறிந்த “கொழும்பு” தலையிட்டு, “டில்லியை” உசுப்பி விட்டு, அதமூலம் “தமிழ் இளைஞர்களை” கைது செய்ய வைத்திருகிறார்கள். இது “அந்நிய சதியால்” தமிழக சட்ட’-ஒழுங்கை கெடுக்க” எடுக்க[ப்பட்ட முயற்சியே. வம்பு செய்த “சிங்கள இளைஞர்கள்” ஏன் வந்தார்கள்?, என்று வந்தார்கள்?, எதற்கு வந்தார்கள்?, என “காவல்துறை” புலனாய்வு செய்து, “தூண்டிவிட்ட” அந்நிய உளவுப்படை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

http://meenakam.com/2011/08/04/32409.html

Edited by மல்லையூரான்

அறிவிலி,

பத்து சிங்களவன் சேர்ந்து ஒரு தமிழனுக்கு அடித்தால், நமக்கு ஏன் வீண் வம்பு என்போம்.

பத்து தமிழன் சேர்ந்து ஒரு சிங்களவக்கு அடித்தால், அது பிழை என்போம்.

உங்கள் கருத்தில் பொதுவான ஒரு நியாயம் இருந்தாலும் இதில் தமிழக மக்களின் உணர்வுகள் இந்திய மத்திய அரசால் உதாசீனம் செய்யப்படுவதே சொல்லப்பட்ட செய்தி.

இன்று சனல் நாலின் தாக்கம், வஞ்சிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 140,000 க்கும் மேற்பட்ட மக்கள், தொடரும் படுகொலைகள், மறுக்கப்படும் நீதி - இவற்றை பார்த்தும், தெரிந்தும் எதையும் செய்ய மறுக்கும் புதுடெல்லி, மக்களை மௌனமாக இரு என்றால் முடியுமா?

உலகில் வேறு எந்த இனம் கூட இவ்வளவு பொறுமையை கடைப்பிடித்து இருக்காது.

ஆக்சிடென்ற் ஆயிச்சுதுனா, ஆம்புலன்ஸ்ல ஆஸ்பத்திரிக்கு போவலாம்... ஆம்புலன்ஸே ..ஆக்சிடென்ற் ஆனா எதுல போவலாம் ?

எங்கிற்மாதிரி ஆச்சு அகூதா உங்களோட கமெண்ட் படிச்சப்புறம்!

வெறும் உணர்ச்சிகளுக்கு இடம்கொடாமல், ஆக்கபூர்வமாக ஏதும் செய்ய... இப்போது நம்முன்னால் உள்ளவழி என்ன என்று அல்லும் பகலும், தகவல்களை விரல் நுனியில் வைத்திருந்து ,பிறரை ஊக்குவிக்கும் ஒரே ஒரு கருத்தாளன் &விடாமுயற்சியாளரான, உங்க வாயில இருந்தா இந்த கருத்து?

நம்பவே முடியல!

அகூத சொல்வது மிக எளிய விடயம். குட்ட குட்ட ................குட்டு வேண்டுகிறவனும் மடையன் என்பது தான் அவர் சொல்லும் வாதம். அவர் சொல்வது சிங்களவன் 140,000 தமிழ்ச்சனத்தை ஒருஇடத்தில்வைத்து சிதைத்தால் அதேமாதிரி தமிழனும் 140,000 சிங்களவரை பழிக்கு பழியாக ஒரு இடத்தில் வைத்து சிதைக்க வேண்டும் என்பதல்ல. சோனியா தமிழரை பழி வாங்க ஈழத்தில் எவ்வளவோ செய்தா. நாம் பார்த்துக்கொண்டுதான் இருந்தோம். எம்மால் எதுவும் செயமுடியவில்லை. தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பார்கள். அதுதான் தமிழ்நாட்டு சொந்தரத்தங்கள் துள்ளி எழ பார்த்தார்கள். அவ அதை அடக்கியிருந்திருக்கலாம். அப்படி நடந்திருந்தால் அது அவங்கள் நாட்டு பிரச்சனை என்றுபோய் முடிந்திருக்கும். கருணாநிதி மக்கள் பணத்தை உறிஞ்சினார். அவர் முறைப்படி கருணாந்தியை தண்டித்திருந்திருகலாம். அப்படி தண்டித்திருந்தால் சோனியா இன்று ஊழலிற்கு எதிரான காங்கிரஸ் தலைவி என்று பெயர் எடுத்திருந்திருப்பா. ஆனால் அவ கருணாநிதியை முறைப்படி தண்டிக்கவில்லை. அவவுக்கு அந்த திருட்டில் பங்குண்டு. அதை அவ மூடி மறைக்க கருணாந்தியிற்கு உதவி புரிந்திருக்கலாம். அது அவர்கள் ஒத்தாசை கள்ளர்கள் என்று போய்முடிந்திருக்கும். அவ அதை செய்யவில்லை. ஏன்? இதெல்லாம் சாதாரண கொள்ளைகும்பல் அரசியல் வாதிகள் செய்யும் களவு. அவவுக்கு இதைவிட மேலாக எதாவது செய்ய வேண்டும். தான் கருணாநிதி மாதிரி சாதாரண திருடியல்ல, மிருகக்கொலைவெறி பிடித்த அரக்கி என்று காட்ட நினைத்தா. கருணைகடல் காந்தியிருந்த கதிரையிலேயே அதே பெயரை வைத்து பசுத்தோல் போர்த்து கொண்டிருக்கும் முசோலினியின் பேத்தி, இந்தமாதிரி எல்லாம் அலுவல்கள் சின்னன் சிறிதாக போய்முடிய விரும்பவில்லை. களவில் மாட்டி கொண்ட கருணாநிதியின் களுத்தில் சுருக்கு கயிற்றை எறிந்தா. சுண்டி சுண்டி இழுத்தா. உன் சொந்தங்களின் களுத்தில் நீ கையை போட்டு திருகி கொல். இல்லையேல் நான் என்கையால் உன்னை திருகி விடுவேன் என்று மிரட்டினா. அதனால்த்தான் ஆயிரமாயிரமாய் ஈழத்தில் சொந்தங்கள் பலி விழும் பொது கையை கட்டிகொண்டு மனதிற்குள் விக்கி விக்கி விம்மிப்போட்டு சும்ம நின்றார்கள் தமிழ்நாட்டு உறவுகள். தமிழரை கொன்றொழித்தாயிற்று. சரி கூடபோன கொலைகாரன் கருணநிதியைத் தன்னும் போகவிட்டாவா. அது எப்படி முடியும் அவவால். அவதான் முசோலினியின் பேத்தியாயிற்றே.

215 க்கு மேலான சட்டசபையில் 210 யும் போகவிட்டு ஆக 5 மட்டும் பிடிக்கும் எந்த முட்டளுக்கும் தெரியவேணும் தமிழ்நாட்டு மக்களின் சினமும், ஆத்திரமும் எங்கே நிற்கிறதென்பது இதற்கு மேலும் ஏன் சீண்டுகிறா. சாரை பாம்பு கூட தொடர்ந்து சீண்டினால் ஒருக்கால் கடித்துதானாகும்.

பரம ஞானி பரமகம்சர் சீடர்களுக்கு ஒரு கதை சொன்னார். ஒரு குரு தடியொன்றை துணைக்கு கொடுத்து சீடனை காட்டு வழியே ஒரு அலுவலிற்கு அனுப்பி வைத்தார். அன்றுதான் குரு சீடர்களுக்கு ஜீவகாருண்யம் பற்றி போத்தித்திருந்தார். காட்டுப்பாதையில் சீடனை கொடிய புடையன் தீண்ட வந்தது. தடியை வைத்துக்கொண்டு சீடன் செய்வதறியாது தடுமாறும் போது புடையன் முந்தி விட்டது. வழிப்போக்கர்கள் பாதையில் மயங்கிவிழுத சீடனைச்சுமந்துவந்து குருவின் முன் போட்டார்கள். மூலிகைகளால் சீடனை மயக்கம் தெளியவைத்த குரு, உன்னிடமிருந்த தடியால் நீ ஏன் பாம்பை அடிக்கவில்லை என்று கேட்டார். அதற்கு சீடன் உங்கள் போதனை தானே குரு பாம்பை அடிப்பது ஜீவகாருண்ணியமாகாதென்பது என்றான். நான் உன்னை தெருவில் போகும் பாம்பத்தான் அடிக்கதே என்றேன். உன்னை பாதுகாத்து கொள்ள, கடிகவரும் பம்பை அடிகாதே என்று சொல்லவில்லையே என்றார். பரமகம்சரே துறவிகளாய் மாறியிருந்த சீடர்களுக்கு அகிம்சையும் ஜீவகாரூண்ணியமும் ஒரு தூரம்வரை தான் போகுமென்று போதித்திருக்கிறார்.

தென்கிழக்காசியாவின் "டெட்றோயிட்" என்று வர்ணிக்கப்படுகிறது தமிழ்நாடு. அமெரிக்கா, சேர்மனி, ஃப்ரான்ஸ், யப்பான், கொறியா என்று அகில உலக கோடீஸ்வரர்களும் படையெடுக்கிறார்கள் அங்கே முதலிட. என்ன அடித்தா விரட்டுகிறார்கள் தமிழர்கள். படிப்பறிவிலாத பீகாரிகள் கூலிவேலை தேடிவர, மராட்டியரும் கன்னடர்களும் அடித்து விரட்டுகிறார்கள். அவர்களைத்தன்னும் அடித்து விரட்டுகிறார்களா தமிழர்கள். ஈழத்தில் இந்து கோவில்களை இடித்து புத்த கோவில்கள் கட்டிவிட்டு, மத்திய அரசைக்கொண்டு நிர்ப்பந்தித்து தமிழ்நாட்டு அரசிடம் காணிகளை அபகரித்து அங்கேயும் புத்த கோவில்களை கட்டிவிட்டு, இந்திய அரசின் ஆதரவுடன் நடக்கும் பேசுவார்தைகளை குழப்பவேண்டும் என்ற நோக்கத்தோடு அந்த புத்தகோவில்களுக்கு ஆர்ப்பாட்ட ஊர்வலம் போகவெளிக்கிட்ட கூட்டத்தை தமிழ்நாட்டு தமிழர்கள் என்ன வெற்றிலை வைத்தா வரவேற்க வேண்டும் என்கிறீகள். இவர்களுக்கு மாலை போட்டு வரவேற்கவா 210:5 என்று வாக்கு போட்டு காங்கிரசை டெல்கி வரை துரத்தி சென்றார்கள் சீமான் போன்றோர்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு மல்லையூரான். உங்களுக்கு ஒரு பச்சை. :)

நல்ல பதிவு மல்லையூரான். உங்களுக்கு ஒரு பச்சை. :)

அப்போ நம்ம பதிவெல்லாம் ரொம்ப கேவலமா? <_<

திரும்ப திரும்ப சொல்றன் அண்ணாச்சிகளா...

எமது போராட்டத்துக்கு எதிரானவர்களை பழிவாங்க ...தமிழகம் ஒரு களமாக இருப்பதை நாங்களே ஏற்ககூடாது!!

ஒருதடவை எம்மால்தான் நடந்தது என்று இந்தியம் நம்பும் ராஜீவ் கொலையால்...

தமிழகம் எமக்கான ஆதரவை மெளனித்ததும் . இனி எத்தன ஜென்மம் நாங்க எடுத்தாலும், கிடைக்காத தலைமையும் ,தேசத்தை தவிர வேற எந்த சுகமுமே ,விரும்பியிருந்திராத போராளிகளும்........எம் கண்முன்னாலே அழிந்து போயினர்!

அண்ணாச்சி மல்லையூரான் ஓவரா உணர்ச்சி வசபடுறாரு...!

உள்நாட்டு முதலீடுகளயும் , அந்த நாட்டின் அரசியல் எல்லைக்குள்ள எங்கபோயும் எவரும் வேலை செய்யலாம் எங்கிறதயும் போட்டு குழப்பிக்கிறாரு!

அவருக்கு ஒண்ணை சொல்லிக்கிறேன் நானு!...

மராட்டி...கன்னடா குஜராத்தி... அப்டி என்ன என்னலாமோ சொன்னிங்க... இந்தியா பலவாய் சிதறிகிடக்கும் மாநிலமானாலும்... இந்தியாவுக்கு ஒண்ணு எனும்போது எல்லாரும், ஒண்ணா வந்து ஆப்படிப்பாங்க மக்கா!

இன்றும்கூட...எமக்காய் இவ்வளவு ஆதரவுதரும் தமிழக சாமான்யன் ...ராஜீவ் கொலைன்னு யாரும் கிளறிவிட்டால்...எங்க பிரச்சினையை இரண்டாவதாய் தள்ளிவைப்பான்!

அதுதான் இந்தியா!

உலகம் சேர்ந்து எங்களை அழிச்சது என்று சும்மா நாங்க சொன்னாலும் ...புலிகளுக்கு மட்டும் இந்தியாவில் தடை இல்லாது போயிருந்தால்...தமிழகம் எங்கபக்கம் நின்று உலகுக்கே ஆப்படிச்சிருக்கும்!

ஆக... நைனாக்களா ஏதோ ...கடைசில அரசியல் ரீதியாக ஆவது தமிழகம் கொஞ்சம் எம்பக்கம் நீண்டநாளின் பின் திரும்புவதை ஆரம்பத்திலேயே ,குழப்பும் நடவடிக்கைகள் எந்தபக்கம் இருந்து வந்தாலும் அது தப்புன்னு நான் சொன்னா.புரிஞ்சுக்கவே மாடேங்கிறீங்க!

எதுக்கு வம்பு... ஆளுக்கு ஒரு பச்சை குத்திக்குறேன்.... சும்மா ஜமாய்ங்க சிறி&மல்லை!

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ நம்ம பதிவெல்லாம் ரொம்ப கேவலமா? <_<

உங்கடை பதிவும் சூப்பர் அறிவிலி. :D

அறிவிலி, தமிழ் சிறி, உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. நீங்கள் காட்டிய பாதையில் சென்று இருவர் கருத்துகளுக்கும் பச்சை குத்தியுள்ளேன்.

அறிவிலி:

"எமது போராட்டத்துக்கு எதிரானவர்களை பழிவாங்க ...தமிழகம் ஒரு களமாக இருப்பதை நாங்களே ஏற்ககூடாது!! என்கிறீர்கள்.

தமிழகம் எதிரிகள் கையில் இருந்தது. தமிழகத்தை, ஈழத்தமிழருக்கு உதவியாய் மாற்றுவதற்கு தானே நெடுமாறன், வைகோ, சீமான்.........., ........., முயல்கிறார்கள். இதில் என்ன தப்பு?. கடிக்க வாற பாம்பை அடிப்பது பழிவாங்கள் என்று நினைத்து உங்களை நீங்கள் ஏன் நோகிறீகள்?.

அவருக்கு ஒண்ணை சொல்லிக்கிறேன் நானு!...

மராட்டி...கன்னடா குஜராத்தி... அப்டி என்ன என்னலாமோ சொன்னிங்க... இந்தியா பலவாய் சிதறிகிடக்கும் மாநிலமானாலும்... இந்தியாவுக்கு ஒண்ணு எனும்போது எல்லாரும், ஒண்ணா வந்து ஆப்படிப்பாங்க மக்கா!

இன்றும்கூட...எமக்காய் இவ்வளவு ஆதரவுதரும் தமிழக சாமான்யன் ...ராஜீவ் கொலைன்னு யாரும் கிளறிவிட்டால்...எங்க பிரச்சினையை இரண்டாவதாய் தள்ளிவைப்பான்!

அதுதான் இந்தியா!

காலங்கள் மாறும் மாறாது என்பவர்கள் தோற்றுபோனதே வரலாறு. அதற்கு இந்தியாவும் விதிவிலக்கு அல்ல.

இரண்டு உதாரணங்களை பார்க்கலாம். ஒன்று உலக வல்லரசாக திகழ்ந்த சோவியத் யூனியன். மற்றையது அரபு நாடுகளின் தலை என வர்ணிக்கப்படும் எகிப்து.

முதலாவது நாடு இந்தியாவை விட ஒற்றுமையான நாடு பல விதத்திலும் பலமாக இருந்த நாடு. ஒரு நாள் பதினைந்து நாடுகளாக உடைந்தது.

அடுத்து முபாரக், முப்பது வருடங்களுக்கு மேலாக இராசாவாக ஆண்டவர் இன்று தூக்கில் தொங்கும் நிலை உள்ளது.

இந்தியாவும் மாறும் அதில் நாம் எமது அரசியல் இலாபங்களை அடையவேண்டும். மாறாது என்றும் ஒன்றும் இல்லை.

அறிவிலி, தமிழ் சிறி, உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. நீங்கள் காட்டிய பாதையில் சென்று இருவர் கருத்துகளுக்கும் பச்சை குத்தியுள்ளேன்.

அறிவிலி:

"எமது போராட்டத்துக்கு எதிரானவர்களை பழிவாங்க ...தமிழகம் ஒரு களமாக இருப்பதை நாங்களே ஏற்ககூடாது!! என்கிறீர்கள்.

தமிழகம் எதிரிகள் கையில் இருந்தது. தமிழகத்தை, ஈழத்தமிழருக்கு உதவியாய் மாற்றுவதற்கு தானே நெடுமாறன், வைகோ, சீமான்.........., ........., முயல்கிறார்கள். இதில் என்ன தப்பு?. கடிக்க வாற பாம்பை அடிப்பது பழிவாங்கள் என்று நினைத்து உங்களை நீங்கள் ஏன் நோகிறீகள்?.

தமிழகத்தில் எமக்கு சார்பாய் சீமான், வை.கோ, ஐயா நெடுமாறன் பயன்படுத்துவது.....

"தளம்" !!

களம் எங்கிறது வேற்!!...

இரண்டுக்கும் உள்ள வித்யாசம் உங்களூக்கு புரியாதா என்ன?

இருந்தாலும்... மல்லை நீங்க நல்லா இருக்கணும் ஓகே.யா? :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.