Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெருசலத்தை தலைநகராகக் கொண்டு பலஸ்தீன இராச்சியம் உருவாக்கப்படுவதற்கு பூரண ஆதரவளிக்கப்படுமாம்! பலஸ்தீனர்கள் மீது திடீர் பரிவுகாட்டும் ஜீ.எல்.பீரிஸ்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெருசலத்தை தலைநகராகக் கொண்டு பலஸ்தீன இராச்சியம் உருவாக்கப்படுவதற்கு பூரண ஆதரவளிக்கப்படுமாம்! பலஸ்தீனர்கள் மீது திடீர் பரிவுகாட்டும் ஜீ.எல்.பீரிஸ்.

[Tuesday, 2011-08-09 11:02:30]

UN மனித உரிமைப் பேரவையில் தனி நாடாக அங்கீகரிக்குமாறு பலஸ்தீனம், ஐக்கிய நாடுகள் அமைப்பில் கோரிக்கை விடுக்கவுள்ளது. பலஸ்தீனம் ஓர் தனிநாடாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பில் உறுப்புரிமை பெற்றுக் கொள்வதற்கு பலஸ்தீனம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் தனி நாடாக அங்கீகரிக்குமாறு பலஸ்தீனம், ஐக்கிய நாடுகள் அமைப்பில் கோரிக்கை விடுக்கவுள்ளது.

இலங்கை மற்றும் மாலைதீவிற்கான பலஸ்தீன தூதுவர் அன்வர் அல் அஃஹாவுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜெருசலத்தை தலைநகராகக் கொண்டு பலஸ்தீன இராச்சியம் உருவாக்கப்படுவதற்கு பூரண ஆதரவளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் அஃஹா, அமைச்சர் பீரிஸிற்கு விளக்கம் அளித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=47982&category=TamilNews&language=tamil

- வருகின்ற மாதத்தில் நடக்கவுள்ள மனித உரிமைகள் கூட்டத்தில் இஸ்லாமிய அரபு நாடுகளின் ஆதரவை பெற இந்த முயற்சி.

- கிட்டத்தட்ட பத்து பில்லியன்கள் தேவையாக உள்ளது நாட்டை அமைக்க

- இஸ்ரேல் எப்படியாவது பாலஸ்தீனம் உருவாவதை தடை செய்ய முனைகின்றது.

  • 1 month later...

அமெரிக்கா தனது வீட்டோ உரிமையை பாவித்து பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுப்போம் எனக்கூறியுள்ளது

இதைத்தான் சொறிநாய் சூரியனைப் பார்த்து குறைக்கிறது என்பார்களோ?

இந்தக் காட்டுமிராண்டிகளுக்கு உதவின இஸ்ரேல் நாட்டுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்.

பாலஸ்தீன் அரசுக்கான அந்தஸ்து 'முழுமையானது': அப்பாஸ்

பாலஸ்தீன் அதிபர் மஹ்முத் அப்பாஸ் தமது மக்களுக்கான ‘முழுமையான அரசு’ அந்தஸ்தினைக் கோரி ஐநாவில் விண்ணப்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

பாலஸ்தீன அரசுக்கான அந்தஸ்தை இன்னும் ஒருவாரத்தில் ஐநா சபையில் கோருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையிலேயே தனது மக்களுக்காக ரமல்லாவில் நிகழ்த்திய உரையில் அப்பாஸ் இதனை தெரிவித்துள்ளார்.

கிழக்கு ஜெருசலேத்தை தலை நகராகக் கொண்டு, 1967 இல் இருந்த எல்லைகளின்படியான பிராந்தியத்தை பாலஸ்தீன அரசாக அங்கீகரிக்குமாறு பாதுகாப்பு கவுண்சிலுக்கு அப்பாஸ் விண்ணப்பிக்கவுள்ளார்.

மேற்குக் கரை, காசா, கிழக்கு ஜெருசலேம் மற்றும் 1967இல் இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட எல்லா நிலப்பரப்புகளையும் உள்ளடக்கியதாக இந்த எல்லை அமைந்துள்ளது.

அமெரிக்கா

இதேவேளை மஹ்முத் அப்பாஸின் இந்த அறிவிப்பு இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் எதிர்ப்பினை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாலஸ்தீன் முழுமையான அரசொன்றுக்கான அந்தஸ்தை பெறுவதைத் தடுப்பதற்கு பாதுகாப்பு கவுண்சிலில் தனது வீட்டோ (மறுப்பாணை) அதிகாரத்தை பிரயோகிக்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

பாலஸ்தீனியர்கள், ஐநாவில் மேற்கொள்ளவிருக்கின்ற முயற்சியிலிருந்து ஒதுங்குமாறு அவர்களை நிர்ப்பந்திக்கும் பணியிலும் அமெரிக்கா ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

இதே சந்தர்ப்பத்தில், நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலியப் படையினருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

126க்கும் மேற்பட்ட நாடுகள் பாலஸ்தீனை அரசொன்றாக அங்கீகரித்துள்ள நிலையில், பாலஸ்தீனிய மக்கள் பொறுமையிழந்திருப்பதாக அபாஸ் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

http://www.bbc.co.uk...tineabbas.shtml

Edited by akootha

பலஸ்தீன சுதந்திர போருக்கு எதிராக நாம் போகபோவதில்லை. அனுராதபுரத்தில் பொலிஸ் பாதுகாப்பு போட்டு சரியாவை உடைத்த அரசு, அரபிய நாடுகளுக்கு சென்று பலஸ்தீன்கட்ட தூண் நிறுத்துவது, அங்கே நிறைய நாடுகள் ஐ.நாவில் அங்கத்தவர்களாக இருப்பதே. தங்கள் தொப்பிகளை சரியாக போட்டார்களானால் முஸ்லீம் மந்திரிகள், பிளேக்கை குறை கூறாமல், இந்த நாடுகளை வைத்து தமது சுதந்திரத்தை நிலை நாட்டமுடியும்.

Edited by மல்லையூரான்

லிபிய போராளிகளுக்கு ஐ.நாவில் உறுப்புரிமை கிடைத்தது

இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு ஐரோப்பிய அரங்கில் ஆதரவான காற்று மெல்ல மெல்ல வீச ஆரம்பித்துள்ளது. உயிர் கொடுத்த போராளிகளின் தியாகங்கள் வீண்போவதில்லை என்ற வரலாறு கண் முன் நிதர்சனமாகிக் கொண்டிருக்கிறது.

சிறீலங்காவின் நண்பனான கேணல் கடாபிக்கு எதிராக விடுதலைப் புலிகளைப் போல போராடிய போராளிகளுக்கு ஐ.நாவில் உறுப்புரிமை கிடைத்துள்ளது. மொத்தம் 114 நாடுகள் ஆதரவு வழங்கியுள்ளன, வெறும் 17 நாடுகள் மட்டுமே எதிர்த்து வாக்களித்துள்ளன. இதில் அதிகமானவை சர்வாதிகாரிகள் ஆட்சி செய்யும் லத்தீன் அமெரிக்க நாடுகளாகும். சீனா, ரஸ்யா ஆகிய நாடுகள் வீட்டோ அதிகாரத்தைப் பாவிக்கவில்லை.

ஐ.நாவின் லிபியாவுக்கான ஆசனத்தில் போராளிகள் தரப்பில் இருந்து புதிய பிரதிநிதிகளாக அப்துல்ரகுமான் சல்காம் அமரவுள்ளார். போராட்டக்குழுவான ரீ.என்.ஏயின் பிரதிநிதி ஐ.நாவில் அமர்வது போராட்டத்தை நடாத்திய ஈழத் தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகும். லிபிய போராளிகளான ரீ.என்.ஏ போலவே விடுதலைப் புலிகளும் ஐ.நாவால் அங்கீகரிக்கப்படும் போராட்டக்குழுவாக வரும் நாள் மெல்ல உருவாகிறது. இதன் ஓரங்கம் போல வரும் 23 ம் திகதி பாலஸ்தீனத்திற்கு ஐ.நாவில் நிரந்தர அங்கத்துவம் வழங்கும் பிரேரணை வருகிறது. பாலஸ்தீனத்திற்கு உறுப்புரிமை கிடைத்தால் அதற்கு அடுத்த உறுப்புரிமை ஈழத் தமிழருக்கே என்பதில் மறுபேச்சுக்கும் இடமுண்டோ..?

இது இவ்விதமிருக்க கேணல் கடாபி தொடர்ந்து போரை நடாத்துவார், நீண்ட போர் ஒன்றுக்கு தமது படையணிகள் தயாராவதாக கடாபியின் இராணுவப்பிரிவை சேர்ந்த மூஸா இப்ரகீம் தெரிவித்தார். நேற்று கடாபியின் சொந்த நகரான பானி வலீட்டில் நடைபெற்ற கடும் போரில் வெல்ல முடியாது போராளிகள் பின்வாங்கிய பின்னர் மேற்கண்ட தெனாவட்டு கருத்து வெளியாகியுள்ளது.

http://www.alaikal.com/news/?p=82545

வெள்ளி ஐ.நா உறுப்புரிமைக்கு விண்ணப்பக் கடிதம்

பாலஸ்தீன அதிபர் முகமட் அபாஸ் பாலஸ்தீனத்திற்கு ஐ.நாவில் உரிமை கோரும் விண்ணப்பத்தைத் தயாரித்து முடித்துள்ளார். வரும் வெள்ளி ஐ.நா செயலர் பான் கீ மூனிடம் இந்த விண்ணப்பப்படிவம் வழங்கப்படவுள்ளது.

இந்தப் பிரேரணை வாக்கெடுப்பிற்கு வரும்போது அமெரிக்கா வீட்டோவை பாவித்து தடுக்காமல் இருந்தால் இஸ்ரேல் – அமெரிக்காவிடையே பாரிய கருத்து முரண்பாடு வரும். தற்போதய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கறுப்பராக இருப்பதாலும், தகப்பன் வழியில் இஸ்லாமிய தொடர்புடையவராக இருப்பதாலும் இஸ்ரேல் அவர் வருவதை முன்னரே விரும்பவில்லை.

மேலும் தமது நாட்டுக்கு பாதகமான முடிவை எடுப்பார் என்றும் இஸ்ரேல் முன்னரே கூறியிருந்தது.

பாலஸ்தீனத்திற்கு ஐ.நாவில் உறுப்புரிமை வழங்கினால் மத்திய கிழக்கில் பாரிய சிக்கல் ஏற்படும் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இப்போது அமெரிக்கா பாலஸ்தீன உறுப்புரிமை மீது வீட்டோவை பாவிக்காவிட்டால் இஸ்ரேல் மோசமான இடத்திற்கு போக வாய்ப்புள்ளது.

இது இவ்விதமிருந்தாலும் இன்று திங்கள் பான் கீ மூனை சந்தித்து தனது எண்ணத்தை வெளிப்படுத்துகிறார் அதிபர் அபாஸ். அமெரிக்கா, ரஸ்யா, ஐரோப்பிய ஒன்றியம் இந்தப் பிரேரணை ஐ.நா வாக்கெடுப்பிற்கு வரும்போது கலந்து கொள்ளாமல் வெளியில் நிற்கலாம் என்றே கருதப்படுகிறது. முன்னதாக இன்று பாலஸ்தீன பிரதமர் சலாம் அயாட், இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் எகுட் பராக்குடன் பேசியுள்ளார்.

http://www.alaikal.com/news/?p=82813

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.